Saturday, June 13, 2009

விருது பெற்ற திரைப்படம் - இன்றிரவு 9.00 மணிக்கு

உலக சினிமாவைப் பற்றி நாம் அறிந்திருப்பதோடு ஒப்பிடும் போது இந்தியாவின் பிற மாநிலங்களில் உருவாக்கப்படும் திரைப்படங்களைக் குறித்து சிறிய சதவீதத்தைக் கூட பெரும்பாலும் நாம் அறிந்திருப்பதில்லை chakde india என்கிற திரைப்படத்தில் "ஜார்கண்ட், உத்தராஞ்சல்" என்றெல்லாம் கூட மாநிலம் இருக்கிறதா?" என்றொருவர் கேட்பார். நம்மில் யாராவது ஒரு அஸ்ஸாமிய திரைப்படத்தையோ மணிப்பூர் திரைப்படத்தையோ பார்த்திருப்போமோ? ஆனால் எங்கேயோ இருக்கும் பிரேசில், சிலி நாட்டுத் திரைப்படங்களை கொண்டாடுவோம்.

Lok Sabha TV Channel ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 09.00 மணிக்கு (இந்திய நேரப்படி) NFDC Weekend Classic Film' என்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் விருது பெற்ற பல மாநில திரைப்படங்களை திரையிடுகிறார்கள். இது மறுநாள் ஞாயிறு அன்று மதியம் 02.00 மணிக்கும் மறுஒளிபரப்பு செய்யப்படுகிறது. எந்த விளம்பர இடையூறுகளும் இல்லாமல் இதை பார்க்க முடிவது ஒரு தனிச்சிறப்பு.

இந்த வரிசையில் இன்று (13.06.09) இரவு 09.00 மணிக்கு கீழ்கண்ட திரைப்படம் ஒளிப்பரப்பாகிறது.



CHUTKAN KI MAHABHARAT
Director : Sankalp Meshram
Year of Production : 2004
Version : Hindi Feature
Duration : 87 mins
with English subtitles


Synopsis

A Nautanki team (a Musical folk theatre) sets up camp in a village and the whole village is abuzz with excitement and the ten year old boy Chutkan is no exception to enjoy the whole myth of Pandavas & Kauravas of Mahabharat.

Agog with images of Nautanki, Chutkan sees a dream in which Shakuni Mama & Duryodhana have a change of heart after deceitfully winning against Yudhistir at the game of chausar. They confess to their villainy and relinquish all claims to the kingdom. The great Mahabharata ends even before it’s begun.

Things take a strange turn when the Nautanki artistes behave exactly as Chutkan had dreampt.

The film then takes a hilarious journey in to the Magical realist genre made richer by the use of folk music, theatre & lyrical passages.

2005-க்கான மத்திய அரசின் சிறந்த 'குழந்தைகள் திரைப்பட விருது' இந்தப் படத்திற்கு கிடைத்திருக்கிறது.

அவசியம் பாருங்கள்.

(தொலைக்காட்சி நேரத்தை முன்னதாக சரிபார்த்துக் கொள்ளவும்)

3 comments:

Bee'morgan said...

ஒளிபரப்பில் subtitles உண்டா? என்னதான் மொழி எல்லைகளைக் கடந்த திரைப்படமாக இருந்தாலும், இதுவும் ஒரு வகையில் அவசியம் தேவைப்படுகிறது..

சுரேஷ் கண்ணன் said...

Bee'morgan:

ஆகா! மிக முக்கியமான விஷயத்தை குறிப்பிட மறந்து விட்டேன். English subtitles - உண்டு. சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்தி விடுகிறேன்.

Dr.Rudhran said...

thanks for the info