Monday, July 11, 2005

காசியிடம் சில கேள்விகள் கேட்டவருக்கு ..........

மாலன் என்பவர் தமிழ்மணம் திரட்டித் தருகிற (வெளியிடுகிற அல்ல) அவரது சமீபத்திய பதிவில் தமிழ்மண நிர்வாகிகளை நோக்கி சில கேள்விகளை கேட்டுவிட்டு கூடவே நான் முன்னர் எனது பதிவில் எழுதியிருப்பவற்றை (கூடவே என்னையும்) விமர்சித்திருக்கிறார்.

போலிப் பெயரில் வரும் பின்னூட்டங்கள் மற்றும் ஆபாச பின்னூட்டங்களைப் பற்றின தீர்வைப் பற்றி விவாதிக்கவே தேவையில்லை என்று நான் என் பதிவில் எங்குமே கூறவில்லை. இதைப் பற்றி விவாதிப்பதே - என்னைப் பொறுத்தவரை - தேவையற்ற வீணான செயல் என்றுதான் கூறியிருக்கிறேன். இணையம் என்பதே நல்லதும் தீயதும் கலந்ததுமான பெருவெளி என்பதை தெரிந்து வைத்துக் கொண்டுதான் நாம் இதில் நுழைகிறோம். இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோர் நல்லதை எடுத்துக் கொள்வதும், தீயதை ஒதுக்கியும் (அதுவாக நம் வழிக்கு வந்தாலும்) செயல்படுவது இயல்பு. Penis Enlargement மின்மடல்களை எதையும் யோசிக்காமல் நாம் அழிப்பதில்லையா?

ஆக.. வலைப்பதிவுகளை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த விழைபவர்கள்,

(1) தங்கள் பதிவில் இடப்படும் ஆபாச பின்னூட்டங்களை அழித்து விட்டோ அல்லது ஒதுக்கி விட்டோ தங்கள் வேலைகளைத் தொடரலாம். (இவ்வாறு செய்வதாலேயே ஆபாச பின்னூட்டங்களை இடுபவர்கள் சோர்ந்து போய் தங்கள் தீய பழக்கத்தை கைவிடலாம். மாறாக இது குறித்து அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் அவர்கள் உற்சாகமாகி இன்னும் ஜரூராக தங்கள் வேலையைத் தொடர்வார்கள்)

(2) போலி பின்னூட்டங்களைப் பொறுத்த வரை சம்பந்தப்பட்டவரை நாம் ஒரளவு அறிந்திருக்கிறவரை, அது அவரிடமிருந்து வந்தது அல்ல என்பதை உணர்ந்து - தேவையென்றால் சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு தெளிவுபெற்று - அதையும் ஒதுக்கி விடலாம்.

(3) அதிக பின்னூட்டங்கள் பெற சர்ச்சைக்குரிய விஷயங்களை வேண்டுமென்றே எழுதுபவர்களின் பதிவுகளை படிப்பதை தவிர்த்து விடலாம்.

இந்த முறையில்தான் தமிழ்மணத்தை நான் பயன்படுத்துகிறேன். எனவே ஆபாச பின்னூட்டங்கள் குறித்தான பிரச்சினை என்னைப் பொறுத்தவரை மிகைப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. (நன்கு கவனிக்கவும். 'என்னைப் பொறுத்தவரை') நான் இதை பொதுமைப்படுத்தவில்லை. நான் நண்பர்களிடம் பேசியவரை பெரும்பாலோனார் என்னைப் போன்ற நிலையிலேயேதான் இருப்பதாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்படுபவர்களும் மேற்கூறின செயல்பாடுகளை பின்பற்றினால் ஆபாச பின்னூட்டங்களின் உக்கிரத்திலிருந்து பெரும்பாலும் தப்பிக்கலாம்.

()

தமிழ்மணம் என்பது பதியப்படும் வலைப்பதிவுகளை ஒரே கூரையின் கீழ் திரட்ட காசி என்கிற தனிமனிதரின் கடின உழைப்பினால் பொதுநல நோக்கில் உருவாக்கப்பட்டது. பின்னர் சில நண்பர்களின் உதவியோடு இந்த சேவை தொடரப் படுகிறது. நாளாக நாளாக வலைப்பதிவோரின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பயனீட்டாளர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு சிறந்த பதிவுகளை வாசிப்போரே தேர்ந்தெடுத்து அந்தப்பதிவிற்கு முன்னுரிமை தருமாறு ஒட்டுரிமை வசதி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நல்ல நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தை சிலபலர் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தியதால் வீணான குழப்பங்கள் ஏற்பட்டு, சர்ச்சையான பதிவுகளே முன்னுரிமை பெற்று, உருப்படியான பதிவுகள் நீண்டகால கவனம் பெறாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய நிலை.

ஆக.. இந்த நிலையை முறைப்படுத்த அல்லது மாற்றியமைக்க தமிழ்மண நிர்வாகிகளிடம் வேண்டுகோள் ¨வ்க்கலாமே ஒழிய ஆபாச பின்னூட்டங்கள் வருவதை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றே கருதுகிறேன். ஆனால் அதையும் முறைப்படுத்த முடியும் என்றால் கணினி நுட்பவியலில் தேர்ச்சி பெற்றவர்கள் கூடி இதற்கொரு தீர்வு காணச் செய்வதுதான் முறையான செயலாக இருக்குமே ஒழிய, பழகிய அமைப்பை விட்டு விட்டு தடாலென்று இன்னொரு அமைப்பிற்கு - அதுவும் இந்த உப்புப் பெறாத காரணத்திற்காக - மாறுவது சற்று தடுமாறச் செய்வதுடன் தேவையற்ற செயலாகும். எத்தனை தடுப்புக் கோட்டைகளையும் தாண்டிவரும் Hacker-கள் அந்த அமைப்பையும் ஊடுருவ மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?.

()

இனி மாலன் என் கருத்துக்களுக்கு கூறிய எதிர்க்கருத்துகளுக்கு வருகிறேன்.

///இருப்பதிலிருந்து மேம்பட்ட ஒரு இடத்திற்கு மாறிக் கொள்வதில் என்ன அபத்தம் என்று எனக்குப் புரியவில்லை. ///

மாலன் கூறுகிற மேம்பட்ட இடம் என்பதிற்கு காரணங்கள் புரியவில்லை. ஒப்புநோக்கினால் ப்ளாக்கம்.காம்மில் உள்ள பரவலான வசதிகளே இதிலுள்ளன. பின்னூட்டங்கள் என்ற வகையை மட்டும் கருத்தில் கொண்டு பார்த்தால், நீங்கள் விரும்பும் நபர் மட்டுமே உங்கள் பதிவில் பின்னூட்டங்கள் அளிக்குமாறு நீங்கள் ஏற்படுத்த முடியும் என்று தெரிகிறது. (இதையும் ஆபாச பின்னூட்டக்காரர்கள் உடைக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த நிச்சயமுமில்லை) அதாவது ஆபாச பின்னூட்டங்கள் தவிர மாற்றுக்கருத்து கொண்டவர்களின் பின்னூட்டங்களை பார்த்து நீங்கள் சங்கடப்பட வேண்டும். உங்கள் நண்பர்களின் 'ஆஹா ஓஹோ' பாராட்டுக்களை மட்டும் நீங்கள் காது குளிர கேட்டுக் கொண்டு அமர்ந்திருக்கலாம். ஆஹா! ஜனநாயகம் தழைக்க இதுவல்லவா மேம்பட்ட வசதி?

மேலும் ஆபாச பின்னூட்டமிட்டு பிரச்சினையை ஏற்படுத்துபவர் என்று பெரும்பாலோனோர் ஒருவரை வெறுப்புடன் சுட்டிக்காட்ட (அவர்தானா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது) அந்த நபரோ மேம்பட்ட வசதி உள்ள நண்பரின் அமைப்பில் நண்பர்கள் பட்டியலில் பெருமையுடன் வீற்றிருக்கிறார். ஆக.. பூனையை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்க்கிற விந்தையான செயலில் ஈடுபட்டிருப்பவரை என்ன சொல்வது? இவர் மற்றவருக்கு நாள், நட்சத்திரம் குறித்து தரும் ஜோசியர் வேலையில் இறங்கும் போது ந¨க்காமல் இருக்க முடியவில்லை.

///பிறந்து வளர்ந்த இந்தியாவை விட்டு வெளிநாட்டில் போய் வேலை பார்க்கிறோமே அது அபத்தமா?இப்போது இருக்கிற வீட்டில் பழுது ஏற்பட்டால், அந்தப் பழுதை நீக்க முடியவில்லை என்றால். விடு மாறமாட்டோமா? பயன்படுத்திக் கொண்டிருக்கிற வாகனம் பழுதாகிவிட்டால் வேறு வாகனம் வாங்க மாட்டோமா? இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற வேலையை விட நல்லதொரு வேலை கிடைத்தால் மாறமாட்டோமா? விண்டோஸ் 98லிருந்து நாம் xpக்கு மாறவில்லையா? விண்டோசிலிருந்து லினக்சிற்கு மாறவில்லையா? ////

கப்பலில் ஓட்டை விழுந்தால் சக தொழிலாளர்கள் உதவியோடு அதை அடைக்கத்தான் முயற்சி செய்ய வேண்டுமே ஒழிய அதற்குள் கப்பல் முழுகிப் போய்விடுகிறாற் போல் அலறிக் கொண்டு 'நான் தப்பிக்க வழி கிடைத்துவிட்டது. நீங்களும் ஓடிவாருங்கள்' என்று அமைதியாக அமர்ந்திருப்போரையும் பதட்டமடையச் செய்வதுதான் மேம்பட்ட வசதிக்கு அழைத்துச் செல்லும் லட்சணமா என்று புரியவில்லை. (உவமைகளை வைத்துக் கொண்டு தனக்கு சாதகமாக ஒரு விவாதத்தை எவ்வாறு திசைதிருப்ப முடிகிறது, கவனீத்தீர்களா?)

////சுரேஷ் கண்ணன் போன்ற அறிவுஜீவிகளுக்காகத்தான் பாரதியார் எழுதி வைத்திருக்கிறார்: " அப்பன் தோண்டிய கிண்று என்று உப்புத் தண்ணியைக் குடிக்கிறார்கள்" என்று/////

இதைக் கண்டு நகைப்பாக இருக்கிறது. மாலன் போன்ற ஒரிஜினல் அக்மார்க் அறிவுஜீவிகள், பாரதியின் வரிகளை தமக்கு சாதகமாக ஒட்டி, வெட்டி ஜெயகாந்தனை திட்டின அதே பாணியை என் போன்ற சாதாரணர்களுக்கும் அவர் பயன்படுத்தியதைக் கண்டு எனக்கு புல்லரிக்கிறது. (இங்கு அறிவுஜீவி என்பதை அவர் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கிறாரோ, அதே அர்த்தத்தில்தான் நானும் பயன்படுத்தியிருக்கிறேன்) பாரதியின் வார்த்தைகளை வைத்துக் கொண்டு எதிரியிடம் சிலம்பம் விளையாடும் விளையாட்டும் புதுமையாகத்தானிருக்கிறது. பாரதிக்கு ஒருபுறம் மணிமண்டபம் கட்டிக் கொண்டு அவரை தனது அடியாளாக பயன்படுத்தும் ஒரே நபர் இவராகத்தான் இருப்பார் என்று தோன்றுகிறது.

////கட்சிமாறுகிற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். த்லைவன் என்ன செய்தாலும் அதை சிந்தனையற்று, கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் கண்மூடித்தனமான விசுவாசம் கொண்ட தொண்டர்களும் இருக்கிறார்கள்.///

இதை இவர் கூறியதுதான் இன்னும் வேடிக்கை. இன்னும் விவரித்தால் வம்பாகி போகுமென்பதால் தவிர்க்கிறேன்.

/////சுரேஷ் கண்ணன் நம்மையெல்லாம் சிந்தனையற்ற தொண்டர்களாக இருக்கச் சொல்கிறார் போலும்!////

அடடா! ஒரே வார்த்தையில் என்னை தனியாளாய் நிறுத்திவிட்டு மற்றவர்களையெல்லாம் அவர் பக்கமாய் நிற்கிறாற் போலொரு பிரமையை ஏற்படுத்தின சாமர்த்தியத்தை வியக்கிறேன்.

()

மாலன் அவர்களே... இந்த விஷயத்தில்தான் உங்களோடு மாறுபடுகிறேனே ஒழிய, மாலன் என்கிற படைப்பாளியிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன் என்பதையும் உங்கள் மனதின் ஒரத்தில் குறித்துக் கொள்ளவும்.

()

தமிழ்மண வசதியை பயன்படுத்திக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கு,

ஆபாச பின்னூட்டங்களை ஏற்படுத்துகிறவர்கள், அதை வைத்துக் கொண்டு அரசியல் செய்கிறவர்கள் என்று பட்டியலிட்டால் அவர்கள் இரு கை எண்ணிக்கையில் அடங்கிவிடுவர். எனவே அவ்வாறானவர்களுக்காக நாம் இடம்பெறுவது, அவர்களுக்கு பயந்து சென்றாற் போல் ஒரு பிரமையை ஏற்படுத்தி அவர்களை இன்னும் உற்சாகப்படுத்தினாற் போலாகிவிடும். எனவே கண்டும்காணாமல் அவர்களை புறக்கணித்தால் தானாகவே அவர்கள் விலகிவிட வாய்ப்புகள் அதிகம். தொழில்நுட்ப ஓட்டைகள் எல்லா இடத்திலும் உண்டு. வேறுவழியில்லை என்னும் பட்சத்தில் மட்டுமே இடம்பெயர்தல் அவசியம்.
இதை அவரவர் சுய யோசனைக்கும், பரீசீலனைக்கும், முடிவிற்கும் விடுகிறேன்.

29 comments:

Anonymous said...

////கட்சிமாறுகிற அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள். த்லைவன் என்ன செய்தாலும் அதை சிந்தனையற்று, கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளும் கண்மூடித்தனமான விசுவாசம் கொண்ட தொண்டர்களும் இருக்கிறார்கள்.///

super
-Rajinikanth

வானம்பாடி said...

//நான் நண்பர்களிடம் பேசியவரை பெரும்பாலோனார் என்னைப் போன்ற நிலையிலேயேதான் இருப்பதாக தெரிகிறது//
என் நிலையும் அதே.

//உவமைகளை வைத்துக் கொண்டு தனக்கு சாதகமாக ஒரு விவாதத்தை எவ்வாறு திசைதிருப்ப முடிகிறது, கவனீத்தீர்களா?//
:) நன்றாக..



காசிக்கோ, தமிழ்மணத்திற்கோ கேள்வி கேட்க நினைப்பவர்கள் தமிழ்மணம் மன்றத்தில் கேட்கலாமே?

மேலும், தமிழ்மணம் ஒரு சேவை. நாம் தமிழ்மணத்திற்கென்று எதையுமே அளிக்காமல் இலவசமாகத்தான் இச்சேவையை பெறுகிறோம். அந்த சேவை புரிபவர்களை நோக்கி நான் கேட்பதெற்கெல்லாம் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும், 'தார்மீகப் பொறுப்பு', கடமை, உரிமை என்றெல்லாம் பேசுவது சற்றே அதிகம்.

rajkumar said...

சுரேஸ்,

பெரிய எழுத்தாளர்களுக்கும் நமக்கும் ராசி இல்லன்னு நினைக்கிறேன்.

உங்கள் பதில் மிகவும் பிரமாதம். நல்ல சூடு.

ராஜ்குமார்

P.V.Sri Rangan said...

மாலனை விடுங்கள் சுரேஷ்.அற்புதமான கட்டுரை எழுதியுள்ளீர்கள்! இக்கருத்தோடு நானும் உடன் படுகிறேன்.எனது தளத்தில்(ஜனநாயகம்) இதுகுறித்து விவாதிக்கழைத்தும் எவரும் வரவில்லை.

Anonymous said...

good post Suresh kannan

Anonymous said...

கனவு கான தடையெதுமில்லை என்பது போல இணையத்தில் என்ன வேண்டுமானாலும் வருகின்றது அதை பொருத்படுத்தாமல் இருப்பதே நமது சிந்தனைக்கு நன்மை பயுக்கும்.

இதைதான் அனைவரின் கருத்தும், இதில் திரு. மாலனுக்கு என்ன தவறு?

ஈஸ்வர் கருப்புச்சாமி

Anonymous said...

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று யாரோ சொல்லுவது போல தோன்றுகிறது. வேறென்ன சொல்ல?

வானம்பாடி said...

//உங்களுக்கு நேரம் சரி இல்லை என நினைக்கிறேன்.//
என்ன மாதிரியான பின்னூட்டம் இது..? இனிமேல் உனக்கும் இது போல் நடக்கும் பார் என்று எச்சரிக்கையா?

Anonymous said...

சுதர்சன் அண்ணாச்சி, பார்த்துக்கிட்டே இருங்க, உங்களுக்கும் அதே தான் வரும்! எனக்கென்னவோ இதெல்லாம் நல்லா தெரியலை. ஹிட் லிஸ்ட்டிலே ஆள் ஏறிக்கிட்டே போறீங்க.

Anonymous said...

சுதர்சன் & சுரேஷ் கண்ணன், தயவு செய்து விவாதத்தை வேறு பக்கம் மாற்றிச் செல்லவும். இல்லையெனில் வேறு பக்கம் மாறிவிடும். இந்த வலைப்பூவிலாவது விவாதம் ஆக்கப்பூர்வமாக இருக்கட்டும்.

குமரேஸ் said...

'என்னைப் பொறுத்தவரை' தெரிகிறது.

அதிக பின்னூட்டங்கள் இருப்பதைப் பார்த்து வந்தால், வந்ததே தப்பு என்று அறைவதுபோல் உள்ளன இந்த வரிகள்

"அதிக பின்னூட்டங்கள் பெற சர்ச்சைக்குரிய விஷயங்களை வேண்டுமென்றே எழுதுபவர்களின் பதிவுகளை படிப்பதை தவிர்த்து விடலாம்''

சர்ச்சைக்குரிய விடயங்களை ஆரோக்கியமற்ற ஆபாச வசனங்களுடன் எழுதுவதுதான் தவறு.

ஆரோக்கியமான முறையில் சர்ச்சையான விடயங்களை எழுதுவதில் தவறில்லையே.

சர்ச்சையும் இன்றி, ஆபாசம் இன்றி, ஆரோக்கியமாக எழுதுவது என்றால். இப்படியான பதிவுகள்தான் மிஞ்சும்

"Longhorn இப்பவே"

"ஒலிம்பியா 2012 - 2012 இல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் விளையாட்டுக்கான இடமாக லண்டன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது"

"இது ஒரு சோதனை முயற்சி"

"பின்னூட்ட பேழை வேலை செய்ய வில்லை"

மாலன் said...
This comment has been removed by a blog administrator.
மாலன் said...

அன்புள்ள சுரேஷ் கண்ணன்,

தீர்வைப் பற்றி விவாதிக்க வேண்டாம் என்று நான் பதிவில் எங்குமே கூறவில்லை எனச் சொல்வது முழுப்பூசணியை சோற்றில் மறைக்க முற்படுகிற முயற்சி

"ஆபாச பின்னூட்டங்களை ஒரு பிரச்சினையாக கருதி கூடி விவாதிப்பது என்னைப் பொருத்தவரை ஒரு அவமானமாகரமான காரியமாகவே கருதுகிறேன்."

இது நீங்கள் ஜுலை 8ம் தேதி உங்கள் பதிவில் எழுதியது.

"போலிப் பெயரில் வரும் பின்னூட்டங்கள் மற்றும் ஆபாச பின்னூட்டங்களைப் பற்றின தீர்வைப் பற்றி விவாதிக்கவே தேவையில்லை என்று நான் என் பதிவில் எங்குமே கூறவில்லை"

இது நீங்கள் ஜுலை 11ம் தேதி பதிவில் எழுதியது.

பிரசினையைப் பற்றி விவாதிக்காமல் தீர்வைப் பற்றி எப்படி விவாதிக்க முடியும்? விவரம் அறிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள், defining the problem என்பதுதான் தீர்வைப் பற்றிய விவாதங்களில் மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி (first step). அதுவும் தவிர காசியுடனான சந்திப்பில் தீர்வுகள் பற்றிப் பேசப்பட்டதா, இல்லையா என உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அந்தக் கூட்டத்திற்கு தாமதமாக வந்தீர்கள். கூட்டத்தில் பேசப்பட்டதையும் தள்ளி நின்றதால் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. குறைந்த பட்சம் அதைக் குறித்த என் பதிவையாவது படித்திருக்கலாம்.

"போலிப் பெயரில் வரும் பின்னூட்டங்கள் மற்றும் ஆபாச பின்னூட்டங்களைப் பற்றின தீர்வைப் பற்றி விவாதிக்கவே தேவையில்லை என்று நான் என் பதிவில் எங்குமே கூறவில்லை. இதைப் பற்றி விவாதிப்பதே - என்னைப் பொறுத்தவரை - தேவையற்ற வீணான செயல் என்றுதான் கூறியிருக்கிறேன்"

இங்கு நீங்கள் 'இதை' என்று குறிப்பிடுவது எதை? எதை விவாதிக்க வேண்டாம், எதை விவாதிக்கலாம் எனக் கருதுகிறீர்கள் எனத் தெளிவாக விளக்க முடியுமா?

"கப்பலில் ஓட்டை விழுந்தால் சக தொழிலாளர்கள் உதவியோடு அதை அடைக்கத்தான் முயற்சி செய்ய வேண்டுமே ஒழிய ...."

கப்பலில் ஓட்டை விழுந்திருந்தால் அது சீரியஸான பிரசினை. நீங்கள் சொல்வது போல உப்புப் பெறாத பிரசினை அல்ல.சக தொழிலாளர்களின் உதவியோடு அதை அடைக்க வேண்டுமானால் அதைக் குறித்து மற்றவர்களிடம் விவாதிக்க வேண்டும். அதைத்தான் நான் சொல்கிறேன்.

உங்கள் உவமையில்தான் எத்தனை ஓட்டைகள்!

"(அவர்தானா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது) அந்த நபரோ மேம்பட்ட வசதி உள்ள நண்பரின் அமைப்பில் நண்பர்கள் பட்டியலில் பெருமையுடன் வீற்றிருக்கிறார். "

ஒருவர் தவறு செய்தாரா என நிச்சியமாகத் தெரியாத நிலையில், வெறும் சந்தேகத்தின் பேரில், ஒருவரை ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும்? அது அநீதியானது அல்லவா? அவர் குற்றவாளி எனத் தெரிந்தால் அடுத்த நிமிடமே அவரை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்க யாகூ 360ல் வசதி உண்டு.

"பாரதியின் வரிகளை தமக்கு சாதகமாக ஒட்டி, வெட்டி ஜெயகாந்தனை திட்டின அதே பாணியை என் போன்ற சாதாரணர்களுக்கும் அவர் பயன்படுத்தியதைக் கண்டு எனக்கு புல்லரிக்கிறது"

இது அபாண்டம்!. நான் ஜெயகாந்தனை விமர்சித்து எழுதிய கட்டுரைகளில் பாரதியை வெட்டி ஒட்டி எழுதவில்லை. திசைகள் ஏப்ரல் 2005ல், நான் ஜெயகாந்தனைப் பற்றி எழுதிய கட்டுரை இடம் பெற்றது. அந்த திசைகள் இதழ் இப்போதும் திசைகள் இணையதளத்தில் இருக்கிறது (http://www.thisaigal.com/april05/essay_jk_maalan.html) யார் வேண்டுமானாலும் சென்று பார்த்துக் கொள்ளலாம். ஜெயகாந்தனைப் பற்றி ஆங்கிலத்தில் நான் எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையின் சுட்டி தமிழ்மணத்தில் உள்ள என் ஜன்னலுக்கு வெளியே பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

48 மணி நேரம் அவகாசம் தருகிறேன். நான் ஜெயகாந்தனை தாக்க பாரதியின் வரிகளைப் பயன்படுத்தினேன் என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் மன்னிப்புக் கேட்க வேண்டும். உங்கள் மன்னிப்பைத் தனி ஒரு பதிவாக வெளியிட வேண்டும். இது நடவாத பட்சத்தில் நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பற்றி அபாண்டங்கள் பரப்பப்படுவதை நான் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது.

உங்களுடைய இந்த செயல் நீங்கள் நேர்மையற்றவர் என்பதையும், உங்களுக்கு சாதகமாக எப்படி விஷயங்களைத் திரிப்பீர்கள் என்பதையும் தெளிவாகப் புலப்படுத்துகிறது.

முகமூடி said...

// இணையத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோர் நல்லதை எடுத்துக் கொள்வதும், தீயதை ஒதுக்கியும் (அதுவாக நம் வழிக்கு வந்தாலும்) செயல்படுவது இயல்பு. எனவே கண்டும்காணாமல் அவர்களை புறக்கணித்தால் தானாகவே அவர்கள் விலகிவிட வாய்ப்புகள் அதிகம். // ஆமோதிக்கிறேன்... என் செயல்பாடும் அதுவே...

// அதிக பின்னூட்டங்கள் பெற சர்ச்சைக்குரிய விஷயங்களை வேண்டுமென்றே எழுதுபவர்களின் // இத எப்படி தீர்மானம் பண்றது... பாருங்க உங்க இந்த பதிவே மேற்கண்ட கேட்டகரில இருக்கும் போலருக்கே...

வானம்பாடி said...

//சுரேஷ்கண்ணன் அவர்களே,

உங்களுக்கு நேரம் சரி இல்லை என நினைக்கிறேன்.//
என்பது ஒரு 'Provocative Statement'. , அதிலே ஒரு மிரட்டல் தொனி இருக்கிறது. அதனாலேயே நான் எச்சரிக்கை விடுக்கிறீர்களா என்று கேட்டேன்.

மாயவரத்தான் said...

கஜேந்திர பாலன்... ஒரு வாசகம் சொன்னாலும் திரு வாசகம் சொல்லிருக்கீங்க..'நச்'சுன்னு! கங்கிராட்ஸ்..!

ஆனா, நெஜம்மாவே உங்களுக்கு(ம்) நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன். ;)

Anonymous said...

சுதர்சன் அவர்களே உங்கள் கொடுக்கிப்பிடி கேள்விகளுக்கு எனது நன்றி.

கஜேந்திர பாலன் அவர்களே, உங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மை. நான் யாரை வேண்டுமானாலும் ஏவி அவர் பெயரில் அசிங்கமாக பின்னூட்டச் சொல்லுவேன். அவர் பெயரில் தளம் திறந்து அசிங்கம் அசிங்கமாக திட்டச் சொல்வேன். ஆனால் அதனை யாரும் ஹேக் செய்யக் கூடாது. அப்படி ஒரு வேளை ஹேக் செய்தால் அது ப்ளாக்கர் சொல்லிய விதிமுறைகளுக்கு முரணானது. எனக்கு உதவிய விஜய் அவர்களுக்கும் மாயவரத்தான் அவர்களுக்கும் எனது நன்றி.

மாயவரத்தான் அவர்களே வாலி என்ற பெயரில் வந்து நீங்கள்தான் எழுதிச் சென்றீர்கள் என நான் யாரிடத்திலும் சொல்லவில்லை. நீங்களும் யாரிடமும் சொல்லிவிட வேண்டாம். ரகசியமாக வைத்துக் கொள்ளவும். அவ்வப்போது வந்து கண்ட கண்ட இடங்களில் அசிங்கமாக பேசிச் செல்லவும். வாலி என்ற பெயருக்கான பாஸ்வேர்டை பத்திரமாக வைத்திருக்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அனானிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

Anonymous said...

கஜேந்திரன், தகதிமிதா, மாயவரத்தான், ரஜினிகாந்த், வாலி என்று பல பெயர்களிலும் எழுதிச் சென்று நமது பார்ப்பன இனத்தின் புகழ் பரப்பும் தம்பி ரமேஷ்குமார் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்.

நமது இனத்திற்காக ஓயாமல் குரல் கொடுக்கும் ரமேஷ் குமார் அவர்களை நமது பார்ப்பன இனத்தின் இளைஞர் அணித்தலைவராக நமது சங்க அமாவாசைக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

எனவே மற்றவர்கள் தயங்காது அவருக்கு ஆதரவளிக்குமாறு வேண்டுகிறேன். அவர் நிறைய பெயர்களில் அசிங்க அசிங்கமாக எழுதினாலும் அவரின் ஐப்பி முகவரியினை யாரும் வெளியில் சொல்ல வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இங்கே நானும் எனத்ஹு நண்பர்களும் அவருக்கு ஆதரவளிப்போம்.

Anonymous said...

நீஙகள் கவனித்திருந்தால் தெரியும்.. அவனுடைய பதிவிலோ, அல்லது அவன் பெயரில் வரும் பின்னூட்டங்களிலோ எந்த விஷயத்தை பேசுவானோ அதே விஷயங்கள் அவன் 'அவதூறு' பெயரில் வரும்போதும் வரும் .

உ.தா.. அவன் சிலரை 'கிழவரின் மகன்கள்' என அவன் ப்ளோக்கில் எழுதிய அதே காலக்கட்டத்தில் வந்த பின்னூட்டங்கள் எல்லாம் அதனே ஒத்தே இருக்கும் ..என்ன கெட்ட வார்த்தை ஃபிளேவரோடு .

ஐ பி பற்றி அவன் ப்ளோக்கில் பேசிய நேரத்தில் ஐ பி என்ற விஷயமே 'போலி' பெயரிலும் வந்தது .

ஹேக் பற்றி சிலாகித்தபோது, அதுவே போலி பெயரிலும் வந்தது .. அவன் செய்ததில் எதுவுமே டெக்னிக் விஷயங்களே இல்லை .. சாதாரணமாக ப்ளோக்கை கொஞ்ச நாள் உபயோகித்தால் நம் கவனுத்துக்கு வரும் சாதாரண விஷயஙகளே..

அவனே ஒரு ப்ளொக் கணக்கு தொடங்கி, அதன்மீது கொஞ்ச நாள் கவனத்தை திருப்பி, பின் அவனே, அதன் கண்டென்டை மாற்றி, நான் ஹாக் செய்துவிட்டேன் என சிலாகிக்கிறான், வலைப்பதிவிற்கு வரும் எல்லோரையும் முட்டாள் என நினைத்துவிட்டான் பாவம் அவன் ..முடிந்தால். பார்ப்பண வெறியர் என அவன் கூறும் யாருடைய ப்ளோக்கையாவது ஹேக் பண்ணட்டும் பார்ப்போம் .

வலைப்பதிவரே .. தயவுசெய்து, உங்கள் பாஸ்வேர்டுகளில் மிகவும் பெக்குலியராகவும், நம்பர்களை சேர்த்தும் (Alphanumeric) வைத்துக்கொள்ளுங்கள் .

மாயவரத்தான் said...

நான் இப்பொழுதெல்லாம் ஒரு நாளைக்கு நான்கைந்து முறையாவது எனது பிளாகரின் பாஸ்வேர்டையும், எனது ஜிமெயில்ன் பாஸ்வேர்டையும் மாற்றிக் கொண்டேயிருக்கிறேன். இன்னும் கொஞ்ச நாளில் இந்த 'ஆட்டம்' முடிவுக்கு வருமென்று தெரிகிறது. யார் அநாகரிகமாக பேசுவார்கள் என்றெல்லாம் எல்லாருக்கும் எப்போழுதே தெரிந்து விட்டது. இப்போது சுய வாக்கு மூலமாக வேறு என்ன என்ன தகிடுதத்தங்கள் செய்யப்பட்டன என்றும் வெளி வந்துக் கொண்டிருக்கின்றன. தமிழ் வலைப்பூ வாசகர்களுக்கு இது காமெடி நேரம். என்ன சமயத்தில் அது விரச நேரமாக எல்லை மீறுகிறது.

Anonymous said...

ஏன்டா மாயவரத்தான், இன்னும் எத்தனை பெயர்களில்தான் நீ வருவாய்? அது என்ன பெயர் கஜேந்திர பாலன்? ஏற்கெனவே முகமூடி என்ற பெயரில் எழுதுகிறாய். அதன்பின் மாயவரத்தான். அப்புறம் சிங்கா. அதன்பின் வாலி, அதன்பின் தகதிமிதா, அதன்பின் ரஜினிகாந்த், அதன்பின் விஜயகாந்த், அதன்பின் போலி டோண்டு, அதன்பின் போலி காசி, அதன்பின் போலி அல்வாசிட்டிவிஜய், போலி லாடுலபக்குதாஸ், போலி ரோசாவசந்த், போலி பெயரிலி. இன்னும் எத்தனை பெயர்களில் எழுதுவதாக உத்தேசம்?

வானம்பாடி said...

இங்கே 'திரு.மூர்த்தி அவர்கள்' எழுதியிருந்த பின்னூட்டுகள் எங்கே போயின?

சுரேஷ், நீங்கள் அழித்து விட்டீர்களா அல்லது அவரே அழித்து விட்டாரா?

Anonymous said...

Dear friends,

Most of us are not speaking out or choosing to be anonymous because we cannot stoop down to the level of this crazed person. He needs medical attention.

Let us not waste further precious time on this guy. I think we all know who he is now. Just ignore and move on.

There is much, much more to life.

Anonymous said...

Thagathimitha,

I agree with you 100%. The small community of tamil bloggers know who is behind all this now.

Let us try and move on.

மாயவரத்தான்... said...

கருணாநிதி மஞ்சள் துண்டு போடுகிறார்.

தமிழ்குடிதாங்கி தார் அடிக்கிறார், மரம் வெட்டுகிறார்.

திருமா விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறார், மேலும் அவர் ஒரு தலித்.

வாசன் அவர்கள் நமது சமூகத்தில் பிறந்தவர் இல்லை மேலும் அவர் மூப்பனாரால் அறிமுகப்படுத்தப் பட்ட வாரிசு.

கம்யூனிஸ்ட் கட்சிகள் சரியில்லை., அவை உண்டியல் குலுக்குவதற்குத்தான் ஒத்துவரும்.

காங்கிரசில் சோனியாதான் முதலாக இருக்கிறார். அவர் ஆட்டுவிக்கிறார். பிரதமர் ஆடுகிறார். சோனியா இத்தாலியர். அவர் படிப்புச் சான்றிதழே பொய் என்று எங்கள் சுப்பிரமணிய சாமி அவர்கள் ஆதாரம் காட்டினார்.

ராம்விலாஸ் பாஸ்வான் தலித்து கட்சி

லள்ளுபிரசாத் யாதவ் நம் ஜாதி இல்லை.

சரத் பவார் அரச வம்சத்தைச் சேர்ந்தவர். நமது இனமில்லை.

பாஜக மிக நல்ல கட்சி.

பால்தாக்கரேயை எனக்கு பிடிக்கும்.

RSS ல் நான் சின்ன வயதில் இருந்து உறுப்பினர்.

பஜ்ரங்தள் என் பாட்டனார் கட்சி.

விஸ்வ ஹிந்து பரிஷத்தில் என் அப்பா இருக்கிறார்.

இராமகோபாலன் என்றால் எனக்கு உயிர்.

சோ அவர்களின் அனைத்து கூட்டத்துக்கும் தவறாமல் செல்வேன்.

வாரம்தோறும் துக்ளக் படிப்பேன்.

நாள்தோறும் தினமலர் படிப்பேன். அவர்கள் குடிதாங்கியை கிண்டல் செய்வதை ரசிப்பேன்.

அனுதினமும் ஜேஜே டிவி பார்ப்பேன். சன்டிவி பாக்க மாட்டேன். ஓசியில் கிடைத்தாலும் குங்குமம் படிக்க மாட்டேன்.

ஜெயை ஆதரிப்பதால் எனக்கு ரஸ்னி பிடிக்கும்.

Anonymous said...

அன்புள்ள சுரேஷ் மற்றும் மாலன்

உங்களது சண்டை பிரச்சினையின் மையத்தில் இருந்து கவனத்தை திசை திருப்ப வைக்கிறது. உங்கள் இருவரிடமும் ஒரு சில விஷயங்களில் ஒன்று பட்டும் ஒரு சில விஷயங்களில் வேறு பட்டும் நிற்கிறேன்.

முதலில் மாலன் எடுத்துள்ள நிலை குறித்து. தமிழ் மணத்திற்கு ஆபாச பின்னூட்டங்களைக் கட்டுப் படுத்தும் பொறுப்பும் அதைச் செய்பவர்களின் தடையும், பின்னர் உரிய இடங்களில் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கக் கோரும் பொறுப்பும் இருக்கிறது. நீங்கள் சொல்வது சரியே. தமிழ்மணம் தன்னை வெறும் திரட்டி மட்டுமே என்று அறிவித்துக் கொண்டு தனது பொறுப்பிலிருந்து தப்பித்து விட முடியாது. வெறும் திரட்டி என்றால் ஏன் நட்சட்த்திரக் குறியீடுகள் வழங்குவானேன்? ஏன் ஓட்டுப் பெட்டியை அளிப்பானேன்? ஆகவே தம்ழ்மணம் வெறும் திரட்டி என்ற நிலையில் இருந்து தாண்டி, பதிவர்களை தர அடையாளம் செய்யும் ஒரு இடமாகத் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. ஆகவே ஆபாசப் பின்னூட்டங்களையும் தனி நபர் தாக்குதலையும் தடுக்கும், கட்டுப் படுத்தும் பொறுப்பு காசி முதலானோர்களுக்கு முற்றிலும் உண்டு. இவ்வளவு விவாதம் நடந்த பின்னும் காசி ஒரு விளக்கம் அளிக்காமல் இருப்பதுடன் அவருக்குப் பதிலாக பிறர் அறிக்கைகள் அளிப்பது, ஜெயலலிதா தன் அடிப் பொடிகள் muulam விடும் அறிக்கையை ஒத்திருக்கிறது. மேலும் காசி வலைப்பூவின் நம்பிக்கை நட்சத்திரமாக அறிவித்த 10 பேர்களில் ஒருவர் தான் இந்த ஆபாச யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தும் மூர்த்தி என்ற மிருகமும். ஆக இதுதானா காசி அடையாளம் காட்டிய நம்பிக்கை நட்சத்திரத்தின் லட்சணம்? இதுவரை இந்த முர்த்தியை எதிர்த்து காசி எவ்வித அறிக்கையும் கண்டனமும் தெரிவிக்காத ரகசியம் என்ன? சரி காசிதான் கண்டனம் தெரிவிக்காமல் மொளனம் அனுசரிக்கிறார். அவரிடம் கேள்வி கேட்கும் மாலன் அவர்கள் செய்வது என்ன? மூர்த்தி என்ற ஒரு வெறி பிடித்த மிருகம்தான் இதைச் செய்கிறது என்று ஊருக்கே தெரிந்த பின்பும் ஏதோ இவருக்கு மட்டும் தெரியாதது போலவும், மூர்த்தியும் ஒரு பாதிக்கப் பட்ட நபர் போலவும் கருத்துக் கொண்டும், அந்த ஆபாசத்தை மடியில் கட்டிக் கொண்டு ஆபாசத்தை எத்ர்க்கிறாரம். முதலில் மூர்த்தி என்ற வெறியை கண்டித்த பின்பு இவர் தமிழ் மணத்தைக் கேட்கட்டும் அதுதான் முறையாக இருக்கும். நேரிமையாக நியாயமாக வும் இருக்கும். மாலனுக்கு இதைச் செய்வது மூத்திதானா என்ற சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அவரது நண்பர்களான பிரகாஷ், வெங்கடேஷ், பா ரா போன்றவர்களுக்கு இந்த ஜ்மூர்த்தி என்ற வக்கிரம் பிடித்தவன் அனுப்பிய மின்னஞ்சல்களையும், சாட்களையும் படித்துப் பார்த்து விட்டுக் கண்டனம் தெரிவிக்கட்டும். இனி இந்த விஷயத்தில் மாலன் வேறு எவ்வித கருத்தையும் தெரிவிக்கும் முன் மூர்த்தியை கண்டித்து ஒரு அறிக்கை விஅட வேண்டும் என்று மாலன் மீது பெரிதும் மதிப்பு வைத்துள்ள என்னைப் போன்றவர்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். மாலன் செய்வாரா? மூர்த்தி போன்றவர்களின் நட்பு மாலன் போன்ற பிரபலங்களுக்கு பெருத்த அவமானத்தையும், அசிங்கத்தையும் கொண்டு வரும் என்பது அவருக்குத் தெரியாதா? இது போன்ற நபர்களைக் கண்டிக்காமல் இருப்பது மாலன் போன்றவர்களுக்கு அழகல்ல. இதுவரை இதைச் செய்வது மூர்த்திதான் என்று தெரியாமல் இருக்கும் பட்சத்தில் உடனடியாக புரிந்து கொண்டு,தனது நண்பர்களிடம் கேட்டறிந்து கொண்டு தனது கருத்தை, கண்டணத்தை சற்றும் தயக்கமின்றி சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது மாலன் கூட தன்னைக் கண்டிக்கிறார் என்று இது போன்ற மிருகத்திடம் ஒரு தயக்கத்தை கொணர உதவலாம். அந்த வகையில் மாலன் ஒருவரே கூட இந்த் ஆபாசங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க இயலும். தயங்காமல் இது அசிங்கம், அநாகரீகம் என்பதை அந்தப் பதருக்கு எடுத்தியம்புங்கள் மாலன். Let Malan first condemn the perpertrator of this crime before taking up the matter with Kaasi or Tamilmanam. Malan can well put a fullstop to this lewdness.

அடுத்து சுரேஷ் அவர்களுக்கு. இது நிச்சயம் கண்டு கொள்ளாமல் அலட்சியப் படுத்தப் பட வேண்டிய விஷயமில்லை. இது ஆபாசத்தைன் எல்லையையும் தாண்டி, தனிநபர் அடையாளத் திருட்டும் கூட. இதில் தமிழ் மணத்திற்கும் பொறுப்புகள் உள்ளது. தயவு செய்து அவர்களின் பொறுப்புக்களைத் தட்டிக் கழிக்க உதவாதீர்கள். அந்த விஷயத்தில் பொறுத்தவரை மாலன் சொல்லுவது சரியே. அதே சமயத்தில் மூர்த்தியை மடியுல் கட்டிக் கொண்டு மாலன் அபாசத்தை எதிர்க்கக் கிளம்பியதை நீங்கள் சுட்டிக் காட்டியதும் சரியே. ஒரு வேளை உண்மை தெரியாமல் அவர் அவ்வாறு மூர்த்தியை நம்பியிருப்பார் என்று நம்புவோமாக. நாம் சண்டை போடும் தருணமல்ல. மூர்த்தி போன்ற விஷக் கிருமிகளை எப்படி ஒழிக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்தித்து அவனைக் கோர்ர்ட்டுக்குக் கொண்டு செல்வதை விட்டு விட்டு மாலனும் நீங்களும் கோர்ட் படியேறுவது தேவையற்ற ஒரு சண்டை. மாலனும் இதைப் புரிந்து கொண்டு எல்லோரும் ஒற்றுமையாக இந்தக் நச்சுக் கிருமியை ஒழிக்கப் பாடு பட வருவார் என்று நம்புகிறேன்.

கடைசியாக காசிக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இது போன்ற போக்குகளை கண்டிக்க தடுக்க ஒரு முயற்சியையாவது எடுங்கள், முயலுங்கள். இல்லையேல் தமிழ் மணத்தை இழுத்து மூடிக் கொண்டு செல்வது எல்லோருக்கும் நிம்மதி அளிக்கக் கூடிய ஒரு செயலாக இருக்கும்.


By

A Fan of Vaali who is tirelessly and persistently exposing a brinsick maniac like Moorthi

Muthu said...

ஐயா அனானிமஸ்,

நீங்க எழுதுனத கொஞ்சம் திருப்பி படிச்சுப்பாருங்க...
Moorthi தான் என்று அடித்து பேசும் நீங்களே ஏன் முகம் மறைத்து பேச வேண்டும். இப்போது உள்ள தொழில் நுட்பத்தை வைத்து அந்த அயோக்கியன் யார் என்று 100% உறுதியாக சொல்ல முடியவில்லை. 100% உறுதியா சொல்ல முடியாததாலே தான் நீங்க கூட முகத்தை மூடி இருக்கீங்க. ஏன்னா ஒருவேளை வேறு யாராவது என்று நிருபணமானால் நான் அப்படியெல்லாம் சொல்லலேன்னு தப்பிக்கலாம் தானே? அப்படி இருக்கும் போது அடுத்தவங்கள கைநீட்டிச் சொல்ல உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.
அப்புறம் தமிழ்மணத்தோட தார்மீக உரிமைய பத்தி...
நான் வலைப்பதிவுகள 2 வருஷத்துக்கு மேலா படிச்சுக்கிட்டு வாரேன். தமிழ்மணம் வருவதற்கு முன்னால் நானும் ஒரு RSS திரட்டி ஒன்னு செஞ்சு பயன்படுத்தினேன். அதையே காசி பொதுவுல வச்சுருக்காரு. என்ன... நான் வச்சுருந்தது வெறும் எலும்புக்கூடு(plain core engine). காசி அதுக்கு உயிர் குடுத்து அலங்காரம் எல்லாம் பண்ணி எல்லோரும் பயன்படுத்த பொதுவுல வச்சுருக்கார். இந்த தமிழ்மணம் ஒரு தலைப்புகளையும் சில வரிகளையும்(அதுவும் பதிவிலிருந்து மட்டுமே) திரட்டும் திரட்டி மட்டுமே. பதிவுகள் மீது எந்த உரிமையும் தமிழ்மணத்திற்கு கிடையாதது போலவே பதிவுகளில் நடப்பவற்றிற்கும் தமிழ்மணம் பொறுப்பாக முடியாது.

ஆபாச வலைப்பதிவு ஏதகிலும் தமிழ்மணம் காண்பித்தால் நீங்கள் சொல்வதில் ஏதேனும் அர்தமுண்டு.


ஏங்க இதோட ஆயிரம் பேர் சொல்லியாச்சு இன்னும் பழையபல்லவியே பாடிக்கிட்டு இருந்தா எப்படி...... கொஞ்சம் technical வழிலேயும் யோசிச்சு பாருங்க....

///
இவ்வளவு விவாதம் நடந்த பின்னும் காசி ஒரு விளக்கம் அளிக்காமல் இருப்பதுடன் அவருக்குப் பதிலாக பிறர் அறிக்கைகள் அளிப்பது, ஜெயலலிதா தன் அடிப் பொடிகள் muulam விடும் அறிக்கையை ஒத்திருக்கிறது.
////
இப்படி யோசிக்கும் உங்க அறிவு உலக்கைகொழுந்துதான்னு. அனேகமா ரொம்ப பாதிக்க்க பட்ட வலைப்பதிவர்னு நினைக்கிறேன்.

நீங்க regular வாசகரா என்று தெரியவில்லை. "பிடுங்கி நடப்பட்ட மரம்" போட்டபின் (போடுவதற்கு 1 மாதத்திற்கு முன்பிலிருந்து) அவர் அடிக்கடி வலைக்கு வருவதில்லை என்பது தமிழ்மணத்தில் அடிக்கடி வலம் வருபவர்களுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல காசி எதற்கு விளக்கம் கொடுக்கவேண்டும்.

இது வலைப்பதிவர்களின் பிரச்சனை. தமிழ்மணத்தின் பிரச்சினையல்ல.
இந்த பிரச்சனை உங்கள் வலைப்பதிவில் நடந்தால் அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனையாகத் தான் கருதவேண்டும். உ.த. முன்பு ஒருமுறை ஆங்கில வலைப்பதிவொன்றில் ஒரு நடிகையின் வீடியோவைப் பற்றிய விவாதம் நடந்த போது எவனோ ஒருவன் அந்த வீடியோ இருக்கும் லின்கை பின்னூட்டத்தில் பதிந்துவிட்டான். பின்னூட்டம் இட்டவன் யாரோவாய் இருந்தாலும் அதற்கு வலைப்பதிவரும் பொறுப்பு என்று சொன்னதால் அவர் பதிவு முழுவதையும்மே தூக்கிவிட்டார். to know more about this read IPC for cyber crime.
அதேபோல் ஒரு வலைப்பதிவில் நடக்கும் விவாதத்திற்கு அந்த வலைப்பதிவர் தான் பொறுப்பு. ஆனாலும் அந்த பின்னூட்டக் கழிசடை வலைப்பதிவர் எல்லோரிடமும் கைவரிசையை காண்பிப்பதால் எல்லாரும் சேர்ந்து ஏதேனும் செய்யவேண்டும். அதை விடுத்து தமிழ்மணத்தை கைகாண்பிப்பது உங்கள் தப்பித்துக்கொள்ளும் புத்தியை காண்பிக்கிறது(இங்கு பெயர் போடாதது போல).


அப்புறம் தமிழ்மணத்தை மூட சொல்ல நீங்கள் யார்.............உங்களுக்கு பிடிக்காவிட்டால் நீங்க வெளியே போங்க.... ஏதோ ஒரு நாய் செய்யும் அசிங்கத்திற்க்காக தமிழ்மணத்தையே மூடனுமா??????

அதெல்லாம் சரி..... நான் காசிய கேட்டா நீ யாருடா நடுவுலன்னு நீங்க கேட்டா... மன்னிச்சுக்கோங்க தமிழ்மணம் ஆரம்பிச்சதுலேந்து அதிலேயே கிடக்குறதுனால நீங்க சொல்ற அந்த தார்மீக உரிமையை நானும் கொஞ்சம் எடுத்துக்கிட்டேன். அதுமட்டும் இல்ல இந்த
///////////தமிழ் மணத்தை இழுத்து மூடிக் கொண்டு செல்வது எல்லோருக்கும் நிம்மதி அளிக்கக் கூடிய ஒரு செயலாக இருக்கும்///////////////
வரிய படிச்சுட்டு கொஞ்சம் tension ஆயிட்டேன். அதான் .....

அன்புடன்
சோழநாடன்.

Anonymous said...

என் மீது மிகுந்த அன்பு கொண்ட அனாமதேயருக்கு,

இது எனக்கும் மூர்த்தி என்பவருக்குமான பிரச்னை. எனது கோபம் ஆபாச பின்னூட்டத்தின்மீதுதானே தவிர தனிப்பட்ட ஒருவர்மீது அல்ல. இப்போதும்கூட நான் அவரைக் கைகாட்டுகிறேன் என்றால் ஒரு அனுமானம்தானே தவிர உறுதிபட நான் அவர்தான் என்று எங்கும் கூறவில்லை. உங்களுக்கும் அவருக்கும் ஏதோ பிரச்னை என நினைக்கிறேன். அதனால்தான் என் பெயரைப் பயன்படுத்தி சுகம் காண நினைக்கிறீர்கள்!

விடயத்திற்கு வருவோம்:

// வெறும் திரட்டி என்றால் ஏன் நட்சட்த்திரக் குறியீடுகள் வழங்குவானேன்? ஏன் ஓட்டுப் பெட்டியை அளிப்பானேன்?//

இது ஒரு வலைப்பதிவரை ஊக்கப்படுத்தி மேலும் எழுதச் சொல்வதற்காக மட்டுமே. தமிழ்மணம் நன்றாக எழுதுபவர்களுக்கு பணம்முடிப்போ பாராட்டுப் பத்திரமோ வழங்குவதில்லை. ஊக்கப்படுத்துவதை தவறென்று எப்படிச் சொல்கிறீர்கள்?

//ஆகவே ஆபாசப் பின்னூட்டங்களையும் தனி நபர் தாக்குதலையும் தடுக்கும், கட்டுப் படுத்தும் பொறுப்பு காசி முதலானோர்களுக்கு முற்றிலும் உண்டு.//

அவர் மட்டுமே பொறுப்பேற்க முடியாது. தளத்துக்கான செலவு முழுக்க அவரே ஏற்கிறார். இதில் உங்களின் சொல் கேட்டால் மேற்கொண்டு ஆகும் செலவுகளுக்கு நீங்கள் பங்குதர தயாராக இருக்கிறீர்களா? எனவே அனைவரும் சேர்ந்து கலந்துபேசி முடிவு ஒன்றை எடுக்க வேண்டும். சம்பந்தப் பட்டவர்களுக்கு தனிமடல் அனுப்பி சாந்தமாகப் போகுமாறு ஆலோசனை கூறலாம். அதனை விடுத்து காசி கட்டுப்படுத்த வேண்டும் என நினைப்பது சுத்த அயோக்கியத்தனம். அவர் சொல்லி கேட்கும் நிலையில் யாரும் இங்கே இல்லை. நான் உள்பட.

//இவ்வளவு விவாதம் நடந்த பின்னும் காசி ஒரு விளக்கம் அளிக்காமல் இருப்பதுடன் அவருக்குப் பதிலாக பிறர் அறிக்கைகள் அளிப்பது, ஜெயலலிதா தன் அடிப் பொடிகள் muulam விடும் அறிக்கையை ஒத்திருக்கிறது.//

காசி அன்று கலந்துகொண்ட சென்னை கூட்டத்தில் மிகவும் விளக்கமாகப் பேசினார். அதனை சுரேஷ், மாலன், ரஜினிராம்கி போன்றவர்களின் வலைப்பதிவில் படிக்கலாம். சில ரகசியங்களை மட்டும் இங்கே அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை. அது தொழில்நுட்பம் சார்ந்தது. எனவே இன்னுமொரு அறிக்கையை அவர் விடத் தேவை இல்லை!

// மேலும் காசி வலைப்பூவின் நம்பிக்கை நட்சத்திரமாக அறிவித்த 10 பேர்களில் ஒருவர் தான் இந்த ஆபாச யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தும் மூர்த்தி என்ற மிருகமும்.//

எனக்கும் அவருக்கும் எந்த மன வருத்தமோ சண்டையோ இல்லை. ஆனால் மிருகம் என்ற சொல்லில் இருந்து உன்னை யார் என எனக்குத் தெரிகிறது. சரிவரப் புரிந்து கொள்ளாமல் பேசும் உன்னை நான் மிருகம் என்று ஏன் அழைக்கக் கூடாது? காசி அறிவித்த நம்பிக்கை நட்சத்திரம் என்பது புதுப் பதிவர்களை ஊக்குவிக்க.. அது இவர் இல்லை. இன்னுமொருவர்! மண்டையில் மசாலாவே இல்லாமல் பேச வேண்டாம். தமிழ்மணம்ச் என்று பெயர்களைச் சுட்டி சரிபார்த்துக் கொள்ளவும்.

//முதலில் மூர்த்தி என்ற வெறியை கண்டித்த பின்பு இவர் தமிழ் மணத்தைக் கேட்கட்டும் அதுதான் முறையாக இருக்கும்.//

நீங்கள் யார் எங்கிருந்து பேசுகிறீர்கள் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. ஆனாலும் உங்களுக்கும் பிகேசிவக்குமாருக்குமான நட்பு இங்கே உங்கள் எழுத்துக்களில் பளிச்சிடுகிறது. அதனை உங்களை அறியாமலேயே வெளிக்காட்டி இருக்கிறீர்கள். சிவக்குமாருக்கு ஆதரவளிப்பதாக நினைத்து சுரேஷ் தன் மரியாதையை குறைத்துக் கொண்டார். இப்போது நீங்களூம்.

//மாலனுக்கு இதைச் செய்வது மூத்திதானா என்ற சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அவரது நண்பர்களான பிரகாஷ், வெங்கடேஷ், பா ரா போன்றவர்களுக்கு இந்த மூர்த்தி என்ற வக்கிரம் பிடித்தவன் அனுப்பிய மின்னஞ்சல்களையும், சாட்களையும் படித்துப் பார்த்து விட்டுக் கண்டனம் தெரிவிக்கட்டும்.//

அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் வந்து தகுந்த சான்றுகளோடு பேசட்டுமே. ஏன் நீங்கள் அதனை எல்லாம் சொல்கிறீர்கள்? பாரா அவர்கள் பெயரிலியின் படத்தினைத் திருடி வெங்கடேஷின் நேசமுடன் என்ற புத்தகத்திற்கு அட்டைப் படமாக்கவில்லையா? அது சரியான செயலா? திருட்டுச் செயல்தானே? பெயரிலி என்று தெரிந்தும் அந்த அட்டையை மாற்றாமல் இருந்தது வெங்கடேஷ் தானே? இது அவர் தவறுதானே? பிரகாஷ் பிரச்னை எனக்கு உண்மையில் என்னவென்று தெரியவில்லை. என்றாலும் சம்பந்தப்பட்ட அவர்கள் விளக்குவதுதானே முறை. அதனை விடுத்து நீங்கள் பேசுவது எப்படி முறையாகும்? தவிர அனாமதேயமாக வந்து பேசி செல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

//அது மாலன் கூட தன்னைக் கண்டிக்கிறார் என்று இது போன்ற மிருகத்திடம் ஒரு தயக்கத்தை கொணர உதவலாம். அந்த வகையில் மாலன் ஒருவரே கூட இந்த் ஆபாசங்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க இயலும்.//

மாலன் அவர்கள் பொதுவாக ஒரு கட்டுரை இட்டு இவ்வாறு மாற்றுப் பெயர்களில் பேசுவதைக் கண்டிப்பதை வரவேற்கிறேன். சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்துவார்கள் என நம்புகிறேன். மேலும் விவாதத்தை உண்டாக்கும் பதிவுகளை வலைப்பதிவாளர்கள் தொடங்கக் கூடாது என்று சொல்ல உங்களுக்கு ஏன் மனது வரவில்லை?

//Let Malan first condemn the perpertrator of this crime before taking up the matter with Kaasi or Tamilmanam. Malan can well put a fullstop to this lewdness.//

Yes it is true. I agree with you. But both ends must stop their arguements.


//இல்லையேல் தமிழ் மணத்தை இழுத்து மூடிக் கொண்டு செல்வது எல்லோருக்கும் நிம்மதி அளிக்கக் கூடிய ஒரு செயலாக இருக்கும்.//

தமிழ்மணத்தை மூடச் சொல்ல நீங்கள் யார்? ஏதாவது நீங்கள் பங்குதாரரா? ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் புகுந்து நீங்கள் சுகம் காண நினைக்கிறீர்கள். உங்கள் வாதத்திறமையை வைத்து யாரெனக் கண்டுபிடித்து விட்டேன். எங்களுக்குத் தெரியும். எனவே நீங்கள் பொத்திக் கொண்டு போங்கள்!


//By

A Fan of Vaali who is tirelessly and persistently exposing a brinsick maniac like Moorthi//

ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுததாமே? உங்கள் சண்டையை எங்களின் விவாதத்தோடு இணைக்க வேண்டாம். துணிவிருந்தால் உன் பெயரோடு வந்து எழுது. என் பக்கமாக நீ பேசினாலும் பேசாவிட்டாலும் நீ இங்கு எழுதிச் சென்றதில் துளியும் எனக்கு உடன் பாடு கிடையாது!

Anonymous said...

interesting to read the perversions of bloggers. more interesting than the quarell of writers