Tuesday, July 12, 2005

ஒரு பின்னூட்டமும் அதற்கான பதிலும்

எனது முந்தைய பதிவின் ஒரு பகுதிக்கு மாலன் எழுதியிருக்கிற பின்னூட்டத்தின் சம்பந்தப்பட்ட பகுதியை கீழே கொடுத்திருக்கிறேன்.

"பாரதியின் வரிகளை தமக்கு சாதகமாக ஒட்டி, வெட்டி ஜெயகாந்தனை திட்டின அதே பாணியை என் போன்ற சாதாரணர்களுக்கும் அவர் பயன்படுத்தியதைக் கண்டு எனக்கு புல்லரிக்கிறது"

இது அபாண்டம்!. நான் ஜெயகாந்தனை விமர்சித்து எழுதிய கட்டுரைகளில் பாரதியை வெட்டி ஒட்டி எழுதவில்லை. திசைகள் ஏப்ரல் 2005ல், நான் ஜெயகாந்தனைப் பற்றி எழுதிய கட்டுரை இடம் பெற்றது. அந்த திசைகள் இதழ் இப்போதும் திசைகள் இணையதளத்தில் இருக்கிறது (http://www.thisaigal.com/april05/essay_jk_maalan.html) யார் வேண்டுமானாலும் சென்று பார்த்துக் கொள்ளலாம். ஜெயகாந்தனைப் பற்றி ஆங்கிலத்தில் நான் எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையின் சுட்டி தமிழ்மணத்தில் உள்ள என் ஜன்னலுக்கு வெளியே பதிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 48 மணி நேரம் அவகாசம் தருகிறேன். நான் ஜெயகாந்தனை தாக்க பாரதியின் வரிகளைப் பயன்படுத்தினேன் என்பதை நிரூபிக்க வேண்டும். அப்படி உங்களால் நிரூபிக்க முடியவில்லை என்றால் மன்னிப்புக் கேட்க வேண்டும். உங்கள் மன்னிப்பைத் தனி ஒரு பதிவாக வெளியிட வேண்டும். இது நடவாத பட்சத்தில் நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பற்றி அபாண்டங்கள் பரப்பப்படுவதை நான் தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது.

என்னுடைய பதில்:

மே 2005 திசைகள் இதழில் 'முகங்கள்' என்கிற தலைப்பில் வெளியாகியிருக்கிற இந்த பக்கத்தைப் பாருங்கள்.

Image hosted by Photobucket.com

Link: http://www.thisaigal.com/may05/muhangkal.html

இவை தனித்தனித் துண்டு செய்திகள்தான் என்று மாலன் வாதிடக்கூடும். ஆனால் ஒன்றன்பின் ஒன்றான உள்நோக்கத்துடன் வரிசைப்படுத்தப்பட்டிருக்கிற இந்த செய்திகளை மேம்பாக்காக பார்க்கிறவர்களுக்காக கூட இந்த செய்தியின் அர்த்தமும் உள்நோக்கமும் எளிதில் விளங்கிவிடும். பத்திரிகையில் வெளியாகிற அனைத்திற்கும் ஆசிரியரே பொறுப்பு என்கிற வகையில் மாலனே இதற்குப் பொறுப்பாகிறார். அந்த வகையில்தான் நான் எனது பதிவில் இதைப்பற்றி குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.

()

என்னை நேர்மையற்றவர் என்று குறிப்பிட்டிருக்கிற மாலனின் நேர்மையை சில பழைய ஆதாரங்கள் கொண்டு என்னால் விளக்க முடியும். ஆனால் வேண்டாமென்று தவிர்க்கிறேன்.

இனிமேலும் இதைப் பற்றி பேசி என் நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. 'வேண்டுமென்றே சர்ச்சையான விஷயங்களை எழுதுகிறவர்களுடைய பதிவுகளை படிக்காமல் தவிர்ப்பது நல்லது' என்று எழுதி விட்டு நீங்களே அந்த மாதிரியானதொரு பதிவை எழுதியிருக்கிறீர்களே என்று சில நண்பர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் கூற்றிலும் சில சதவீத உண்மை உள்ளது. எனவே இந்த தலைப்பை நான் தொடரப் போவதில்லை. நண்பர்களும் இந்தப் பதிவிற்கு எந்தப் பின்னூட்டமும் அளிக்காமல் இருந்தால் நல்லதாக இருக்கும்.

ஆனால்... இதிலிருந்து நான் சில பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்றுக் கொடுத்தவர்களுக்கு நன்றி.

14 comments:

ROSAVASANTH said...

//இந்த செய்திகளை மேம்பாக்காக பார்க்கிறவர்களுக்காக கூட இந்த செய்தியின் அர்த்தமும் உள்நோக்கமும் எளிதில் விளங்கிவிடும். பத்திரிகையில் வெளியாகிற அனைத்திற்கும் ஆசிரியரே பொறுப்பு என்கிற வகையில் மாலனே இதற்குப் பொறுப்பாகிறார். //

பாரதியின் வரி எதையும் மாலன் திரித்ததாகவோ தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டதாகவோ இதிலிருந்து மாலனின் பரம எதிரியால் கூட முடிவுக்கு வரமுடியாது என்றுதான் தோன்றுகிறது. ஒருவேளை ஏதாவது மெடாரீடிங் செய்ய வேண்டுமோ தெரியவில்லை. அப்படி செய்தாலும் கூட ஜெயகாந்தனின் பச்சையான ஒரு வாக்கியத்தை எதிர்க்க பாரதியே தேவையில்லை.ஒரு வேளை அதையும் நேரடியாய் வாசித்தால் திரித்தல் என்பதாகிவிடுமோ என்று புரியவில்லை.

ROSAVASANTH said...

புதிய இலக்கிய வடிவம் எப்படி உருவாகும் என்று இப்போது புரிகிறது.

மாயவரத்தான் said...

இந்தப் பதிவிற்கான பின்னூடமிடும் வசதியினை செயலிழக்கச் செய்யும் படி சுரேஷை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Anonymous said...

போடா சுரேஷ் நாயே... பாப்பார நாயே.. சுரேஷ் கண்ணனையும் உங்கள் பார்ப்பன கூட்டத்தில் சேர்க்க முயற்சியா?

Anonymous said...

போடா ரமேஷ் நாயே... பாப்பார நாயே.. சுரேஷ் கண்ணனையும் உங்கள் பார்ப்பன கூட்டத்தில் சேர்க்க முயற்சியா?

Anonymous said...

Suresh Kannan,

You have exhibited the valuable evidence for your argument and revealed the maalan's original face.

Donot worry. If he take any action against you (literally he cannot do) we are all here to help you out.

Continue your work without any fear.

- Sivarajan

Anonymous said...

Thiru. Suresh,

As you are aware, i am a regular reader of your blog.

As far as the last 2 posts concerned, you are wasting your energy for the wrong things.

Please come to your regular style. Don't waste your time on the stupid things.

- Siva

enRenRum-anbudan.BALA said...

Suresh Kannan,
With all due respect to maalan and you, this is really not taking anything / anybody anywhere.

The original subject was related to resolution of controlling vulgar comments posted anonymously and in names of other bloggers !

ரவி ஸ்ரீநிவாஸ் said...

ஜெயகாந்தன் தான் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்திருந்தாலும் கூட நீங்கள் மதனைத்தான் குற்றம் சாட்ட முடியும்.மாலன் எடுத்து இட்டுள்ள அந்த ஒரு ஒரு வரி அந்தப் பாடலின் பிற வரிகளுடன் அர்த்த ரீதியாக பொருந்துகிறது. ஒரு வேளை அந்த வரியின் பொருளை நிராகரிக்கிற பிற வரிகள் அந்தப் பாடலில் இருந்தால் அல்லது வேறெங்காவது பாரதி ஜாதியைப் பற்றி ஜெயகாந்தன் கூறியது போல் எழுதியிருந்தால் நீங்கள் மாலனை குறை கூறலாம்.கொஞ்சம் யோசித்தால் உங்கள் வாதம் ஏன் சரியில்லை என்பது உங்களுக்குப் புரியும்.

-/பெயரிலி. said...

ரோஸாவசந்தும் ரவி ஸ்ரீனிவாஸும் சொல்வது சரிபோலவே தோன்றுகின்றது.

Anonymous said...

//"பாரதியின் வரிகளை தமக்கு சாதகமாக ஒட்டி, வெட்டி ஜெயகாந்தனை திட்டின அதே பாணியை என் போன்ற சாதாரணர்களுக்கும் அவர் பயன்படுத்தியதைக் கண்டு எனக்கு புல்லரிக்கிறது"//.

இதற்கு உங்கள் விளக்கம்தான் புல்லரிக்கச் செய்கிறது., வெட்டி, ஒட்டி எங்கேயப்பா திட்டியிருக்கிறார்?... மாலனுக்கே இந்தக் கதியா?...
"வானரம் மழைதனில் நனைய... தூக்கணம் தானொரு நெறிசொலத்
தண்டிப் பிய்த்திடும்-". மாலன் அவர்களே உங்களுக்கு ஆக்கப் பூர்வமான அநேக வேலைகள் இருக்கிறது. ஞானமும், கல்வியும் தக்கோருக்கு தாருங்கள்.

ஈழநாதன்(Eelanathan) said...

சுரேஷ் மாலன் ஜெகாந்தன் சாதி பற்றிச் சொன்னதற்கு எதிர்க்கருத்தாக பாரதியின் பாடலை எடுத்துப் போட்டிருப்பது வேண்டுமென்றே செய்த ஒன்றாக இருந்தாற்கூட அதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.பாரதி சொன்னதாக அவர் சொல்லாத ஒன்றைச் சொல்வதுதான் திரிப்பு.அவர் பாடிய பாடலை அப்படியே போடுவதில் எங்குள்ளது திரிப்பு.

Anonymous said...

Suresh,
I think, asking not to comment for a post is not a good approch.

Anonymous said...

மாலன் எழுதியதில் பாரதியை திரித்திருந்ததாக நான் நினைக்கவில்லை. பாரதியை சமீபகாலங்களில் அதிகம் திரிப்பதும், சிதைப்பதும் ஜெயகாந்தந்தானே அன்றி வேறு எவருமில்லை.