Thursday, July 07, 2005
பா.ராகவன் நடிகனாகி விட்டார்........
எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாசிரியர், தொலைக்காட்சி தொடர் கதை-வசனகர்த்தா என்று பல பரிமாணங்களைக் கொண்ட நண்பர் பா.ராகவன், இப்போது அவர் கதை-வசனம் எழுதிக் கொண்டிருக்கும் 'கெட்டி மேளம்' தொலைக்காட்சி தொடரில் 'கோயிஞ்சாமி' என்றொரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நேற்றிலிருந்து நடிக்கத் துவங்கியிருக்கிறார். 'மிகச் சராசரியான ரசனை கொண்ட, அறிவில் சற்று மட்டான' ஆளுமை உடையவர்களை இனி 'கோயிஞ்சாமி' என அழைக்குமளவிற்கு அந்த வார்த்தையை ஒரு icon -ஆகவே மாற்றிவிடுவார் என்று நம்புகிறேன்.
அவ்வப்போது நான் பார்த்து வந்துக் கொண்டிருந்த ஒரே தொலைக்காட்சி தொடரான 'மெட்டி ஒலி' முடிவடைந்தவுடன் செய்திளைத் தவிர வேநெந்த நிகழ்ச்சியையும் அவ்வளவாக கவனித்துப் பார்ப்பதில்லை. இருந்தாலும் நண்பர் பாரா கதை-வசனம் எழுதும் தொடர் என்கிற ஒரே காரணத்திற்காக இந்தத் தொடரை எப்போதாவது பார்ப்பதுண்டு. நான் பார்த்தவரை வசனங்கள் மிக இயல்பாகவே அமைந்திருந்திருந்தன, தொலைக்காட்சி தொடரில் அப்படியன்றும் புரட்சி செய்துவிட முடியாது என்ற அளவில்.
'புதன்கிழமை (6.7.05) முதல் நான் நடித்து வரும் காட்சிகள் ஒளிபரப்பாக போகின்றன' என்று அவர் தெரிவித்ததிலிருந்து, மிக ஆவலாக நேற்றைய தொடரில் அவர் வரும் காட்சிக்காக காத்துக் கொண்டிருந்தேன். தொடரின் ஒரு கதாபாத்திரக்குடும்பம் குடிபோகும் ஒரு வீட்டின் சொந்தக்காரராக, நெற்றியில் விபூதிப் பட்டைகள் துலங்க, அடுத்தவர் விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தில் வந்திருந்தார். 'வந்திருந்தார்' என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்க்கையிலேயே இப்போதுதான் முதன்முறையாக கேமராவை எதிர்நோக்குவதால் ஏற்படுகின்ற இயல்பான தயக்கமும், இயல்பின்மையும் அவர் நடிப்பில் வெளிப்பட்டன.பரவாயில்லை. இப்போது சூப்பர் ஸ்டாராக இருக்கின்றவர்கள் கூட இப்படித்தான் துண்டு துக்கடா வேஷங்களில் கவனிப்பில்லாமல் ஆரம்பத்தில் வந்து போயிருக்கின்றனர். பாராவும் இனிவரும் காட்சிகளில் சிறப்பாக நடித்து கலக்குவார் என்று எதிர்பார்க்கிறேன்.
பா.ராகவன் இன்னும் பல வெற்றி படிகளில் ஏறி உயர என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
Sooper news
வாழ்த்துக்கள்.
அடடே நடிக்கவே ஆரம்பிச்சிட்டாரா? :-))
பா.ராவின் கதை-வசனம் என்பதால் நானும் அவ்வப்போது பார்ப்பதுண்டு. அதில் இன்னொரு நகைச்சுவை கதாப்பாத்திரம் வருமே - மாப்பிள்ளை முறுக்குடன் - "அது மேட்டரு" - என்று உதார் விட்டுக்கொண்டு., 'கோயிஞ்சாமி' அதைவிட கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம். ;)
பாவம் தமிழ்நாட்டு மக்கள்! என்ன பாவம் செய்தார்கள் என்றே தெரியவில்லை!! இப்படி ஆளாளுக்கு அவர்களைப் போட்டுக் கொன்றால் பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? கடவுள்தான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
/ 'மிகச் சராசரியான ரசனை கொண்ட, அறிவில் சற்று மட்டான' ஆளுமை உடையவர்களை இனி 'கோயிஞ்சாமி' என /
கண்டிக்கிறோம். கோயிஞ்சாமி கிளப் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். கோயிஞ்சாமிகளுக்கு எப்போதும் இலக்கணம் கிடையாது. இலக்கணத்தை மீறிய கவிதைகள் அவை.
/கோயிஞ்சாமி நெம்பர் ஒன்/
பா.ரா.வின் எண்ட்ரியே கலக்கல் தான். அதுவும் கோயிஞ்சாமி என்றவுடன் நான் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்ததை பார்த்த என் வீட்டில் அட...உண்மையான கோயிஞ்சாமி இங்கே இருக்கு என்று நினைத்து கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
- ஒரிஜினல் அக்மார்க் மாயவரத்தான்
(போலிகளைக் கண்டு ஏமாறாதீர்)
பாவம், நல்லாத்தாங்க இருந்தாரு. இப்பத்தான் இப்படி ஆயிப் போச்சு;-)
Post a Comment