Saturday, January 30, 2010

அக்ரஹாரத்தில் கழுதை


என்னுடைய பதின்மத்தில் வெங்கட்சாமிநாதனின் ஏதோவொரு கட்டுரையில் இத்திரைப்படத்தைப் பற்றி வாசித்த ஞாபகம். பின்புதான் ஜான் ஆப்ரஹாம் என்கிற கலகக்கார படைப்பாளியைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. அப்போதிலிருந்து எனக்கும் ஏழு கழுதை வயதாகும் வரை இத் திரைப்படத்தைப் பார்த்துவிட பல வருடங்களாக முயன்று கொண்டிருக்கிறேன்.  காணக் கிடைக்கவில்லை. 'குறுந்தகடு கிடைப்பதும் மிக அரிது' என்கிற பதிலே நண்பர்கள் வட்டாரத்திலிருந்து கிடைத்தது.

இன்று காலை 'THE HINDU' நாளிதழை புரட்டிக் கொண்டிருக்கும்  போது சந்தோஷ அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்து விட்டேன். ஆம். இன்றிரவு கழுதை தானாகவே வீடு தேடி வரப்போகிறது.

()

லோக்சபா சானலில் இன்றிரவு (30.01.2010) 09.00 மணிக்கு (இந்திய நேரம்) ஜான் ஆப்ரஹாம் இயக்கிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ ஒளிபரப்பாகவுள்ளது.

ஒருவேளை இன்றிரவு காணத் தவறவிட்டாலும் பரவாயில்லை. மறுநாள் (31.01.2010) (ஞாயிறு) மதியம் 02.00 மணிக்கு இதே படம் மறுஒளிபரப்பாகும். ஆங்கில துணையெழுத்துக்களுடன் விளம்பர இடையூறுகள் இல்லாமல் பார்க்க முடியும் என்பது ஒரு சிறப்பு. எழுத்தாளர் வெங்கட்சாமிநாதன் ஜானுடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்.

மிக அரிதாக காணக்கிடைக்கும் திரைப்படம். எனவே பார்க்கத் தவறாதீர்கள். உங்கள் நண்பர்களிடமும் இத்தகவலைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

படத்தைப் பற்றிய விவரம்:

Agraharathil Kazhuthai
Director : John Abraham
1977 / 90 miniutes / Tamil / English Subtitles
Cast: M.B.Sreenivasan, Swati, Sreelalitha & others
National Award for the Best Feature Film, 1978
Uninterrupted viewing
Film Courtesy: NFDC

(Source: The Hindu, Chennai Edition dated 30.01.2010
) )


தொடர்புள்ள பதிவுகள்:

நாகார்ஜுனன் பதிவு: நம் அக்ரஹாரத்தில் ஒரு கழுதை

படம் குறித்து பிரகாஷ் எழுதிய பதிவு

ஜான் ஆப்ரஹாம்  குறித்த ஜெயமோகன் பதிவு

சுகுணா திவாகர் பதிவு

மாரி மகேந்திரன் பதிவு

suresh kannan

22 comments:

ஜெ.ஜெயமார்த்தாண்டன் said...

thanks suresh for this valuable information. I too searching for this movie.

Athisha said...

மிக உருப்படியான பதிவு சகா!

jeyakumar said...

torrent file of this movie is available..

Athisha said...

ஜெயக்குமார் அதன் லிங்க் கிடைக்குமா.. தயவு செய்து உதவுங்களேன்

பிச்சைப்பாத்திரம் said...

jeyakumar

தகவலுக்கு நன்றி. தேடிப்பார்த்தேன். கிடைத்தது.

http://thepiratebay.org/torrent/4927182/Agraharathil_Kazhuthai

ஜீவன்பென்னி said...

http://www.monova.org/details/2768135/AGRAHARATHIL%20KAZUTHAI%09.html

உண்மைத்தமிழன் said...

பார்த்திருவோம். தகவலுக்கு மிக்க நன்றி ஸார்..!

ஜான் said...

ஜெயமோகனின் எண்ணம் , சரிபார்க்கலாம்

ஜான் ஆபிரகாம்:ஒரு கடிதம்
http://www.jeyamohan.in/?p=537

Ayyanar Viswanath said...

சுரேஷ் மற்றும் ஜெயக்குமார்
மிக்க நன்றி.தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறேன்.

லேகா said...

Tnx for Sharing Suresh!!

Much awaited one...

தமிழன் வீதி said...

உங்கள் பதிவை நான் பார்த்த நேரம் இரவு 8.50 படம் தொடங்க இன்னும் சில நிமிடங்களே உள்ளன....!
நன்றி. பார்த்துவிட்டு பதி(வு)கிறேன்.

பிச்சைப்பாத்திரம் said...

படம் பார்த்து விட்டு முடிந்த கையோடு இதை எழுதுகிறேன்.

"இந்தப் படத்தைப் பற்றி ரொம்ப பெரிசா பேசிட்டிருந்தாங்களே. ஆனா ரொம்பச் சுமாராதான் இருக்கு" என்றார் தொலைபேசியில் வந்த எழுத்தாளர் இரா.முருகன். "காமிரா ரொம்பவும் அமெச்சூரா உபயோகப்படுத்தப்பட்டிருக்கு"

படத்தின் பின்னணியில் இருந்த ஒரு சுவாரசியமான தகவலையும் முருகன் பகிர்ந்தார். படம் நிறைவுற்ற பிறகு அந்தக் கழுதைக் குட்டியை என்ன செய்வதென்று தெரியாமல் படக்குழுவிலிருந்த 'ரவி' என்றவரிடம் ஒப்படைத்தார்களாம். அவர் பெயரே இதனால் 'கழுதை ரவி' என ஆனதாம். இந்தக் கழுதையால் பல சிரமங்களுக்கு அவர் உள்ளானாராம்.

()

பிரசன்னா தொலைபேசி "இனிமே எந்தப்படத்தைப் பத்தியாவது எனக்கு எஸஎம்எஸ் அனுப்பிச்சீங்கன்னா வக்கீல் நோட்டீஸ் அனுப்புவேன்" என மிரட்டினார். "என்ன கொடுமைடா சாமி" எனறார் பின்குறிப்பாக.

வெங்கட் சாமிநாதன் பிரசன்னாவிடம் இந்தப் படம் குறித்து ஏற்கெனவே எச்சரித்திருந்தாராம். "படத்தப் பாக்காமயே நெறைய பேரு புகழ்ந்திட்டிருக்காங்க. பாத்தாங்கன்னா செத்தாங்க"

வெங்கட்சாமிநாதன் எழுதின கதை வேறு திசையில் இருக்க ஜான் இதை தன்விருப்பம் போல் வேறு திசைக்கு செலுத்தினாராம்.

()

நான் கூட படத்தைப் பற்றிய அறிவிப்பை பதிவு செய்துவிட்ட காரணத்தால் எப்படியாவது இருக்கிற கொஞ்சம் நல்ல அம்சங்களை வைத்து ஒப்பேத்தி ஒரு ரெவ்யூ போடலாம் என்று படம் பார்க்கும் போது நினைத்துக் கொண்டிருந்தேன். "முடியல".

1977-ல் தயாரிக்கப்பட்டது என்பதை மனதில் இருத்தி வைத்து பார்த்தாலும் பல காட்சிகள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டும் ரொம்பவும் அமெச்சூராகவும் இருந்தன. இதற்கும் முன்னர் வந்த 'பதேர் பாஞ்சாலியை' நினைத்துக் கொண்டேன். (1955). முதல்படத்திலேயே அற்புதத்தை நிகழ்த்தின இயக்குநர் ரே மற்றும் ஒளிப்பதிவாளர் சுப்ரத்தோ மித்ராவின் மேதமையை வியக்க முடிந்தது.

ஒன்றுமறியாத கழுதையின் மேல் எல்லாப்பழியையும் போட்டு சாகடித்துவிட்டு பின்னர் அதற்கு கோவில் கட்ட முனைகிற பிராமணர்களின் மீது வைக்கப்பட்ட மெலிதான விமர்சனத்தைத் தவிர வேறொன்றும் இந்தப் படம் செய்யவில்லை.

படம் பார்த்து நொந்தவர்கள் என்னை மன்னிக்கவும்.

ஆனால் ஜானின் 'அம்ம அறியான்' ஒரு நல்ல படம் என்றிருக்கிறார் இரா.முருகன். அது ஒருவேளை ஒளிபரப்பானால் அப்போது உங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன். :-)

Manikandan AV said...

என்ன ஆனாலும் பார்த்தே தீருவேன்னு அடம் பிடிக்கிறவங்களுக்கு
http://thepiratebay.org/torrent/4927182/Agraharathil_Kazhuthai

Manikandan AV said...

அம்மா அறியான் திரைப்படமும் கிடைக்கிறது
http://thepiratebay.org/torrent/5264854/Amma_Ariyan_[1986]_-_John_Abraham_Malayalam_[Faukka_s]

லேகா said...

சுரேஷ்,

சில குறைகளை நீக்கி பார்த்தால் நல்ல முயற்சியாகவே தோன்றியது.
இத்திரைப்படம் 70களின் பிற்பகுதியில் வெளிவந்த சமயம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதாக
அப்பாவின் மூலம் அறிந்தேன்.

உங்களிடம் தனி பதிவை எதிர்பார்த்தேன்.

Krishnan said...

"படம் பார்த்து நொந்தவர்கள் என்னை மன்னிக்கவும்" :-)))))))) ரொம்பவே நொந்துட்டேன் சுரேஷ் கண்ணன்

ஜான் said...

அப்ப ஜெயமோகன் சொன்னது சரிதானா ?

ஜான் said...

ஜெயமோகன் சொன்னது

கடைசியில் ஜான் இடதுசாரி தீவிரவாத பாவனைகொண்ட சிலர் கைகளில் சென்றுசேர்ந்தார். அவர்களுக்கு ஒரு தெரிந்த முகம் தேவைப்பட்டது. அப்படி உருவானதே ஒடேஸா என்ற அமைப்பு. மக்களிடம் பணம்பெற்று படம் எடுப்பது என்ற கொள்கை கொண்டவர்கள். ஊர் ஊராக அவர்கள் வசூலித்த பணம் அப்போதே சாராயத்தில் செலவாகும். கும்பளா என்ற ஊரில் அவர்கள் திரட்டிய பணத்தை அங்கேயே குடித்துவிட்டு சண்டை போட்டதை நானே கண்டேன். அவ்வப்போது அவர்களில் ஒருவன் சொல்வதுபோல ஏதாவது எடுப்பார்கள். அப்படி உருவான சினிமாதான் ‘அம்ம அறியான்’ அது ஒரு லத்தீனமேரிக்க படத்தை தழுவி உருவாக்கப்பட்டது. காமாசோமாவென எடுக்கப்பட்டதானால் அதை எவரும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஜானின் எல்லா படங்களுமே அப்படிப்பார்த்தால் தழுவல்கள்தான். ஒரு புதிய படத்தை பார்த்தால் அவர் ஏற்கனவெ சொல்லிவந்த கருவை உடனே அதற்கேற்ப மாற்றிக் கொள்வார் ஜான். ஆச்சரியமாக இருக்கும்.சம்பந்தமே இல்லாமல் தாவி விடுவார். பர்க்மானின் வைல்ட் ஸ்டிறாபரிஸ் என்ற படத்தைப்போல நிரஞ்சனாவின் நாவலை எடுப்பதைப்பற்றிச் சொன்னார். வைல்ட் ஸ்டிராபரீஸ் படத்தில்ஒரு வயதானவரும் அவரது உறவுப்பெண்ணும் ஒரு பழைய காரில் சென்றுகொண்டே இருக்கிறார்கள். ஜான் நிரஞ்சனாவின் கதையை இரு வயோதிக தம்பதியினர் மாட்டு வண்டியில் செல்வதுபோல ஆக்கினார். கொடுமை!

கலைப்படைப்பு என்பது கவனமில்லாமலோ போகிறபோக்கிலோ உருவாக்கபடும் ஒன்று அல்ல. நாம் சாதாரணமாக அணுகும் எந்த கலைப்படைப்பின் பின்னாலும் கலைஞனின் ஈடிணையற்ற அர்ப்பணிப்பும் தியாகமும் உள்ளது. ஒரு கலைப்படைப்பில் செய்யப்பட்டுள்ள உழைப்பு– வெறும் உடல் உழைப்பாக மட்டுமே பார்த்தால் கூட– வேறு எந்த தொழிலிலும் உள்ள உழைப்பை விட பலமடங்கு அதிகமானது. எந்தக் கலைஞனும் கச்சிதம்,முழுமை என்ற இலட்சியத்தால் ஆள்கொள்ளப்பட்டவனாகவே இருப்பான். சிறு சிறு மேம்படுத்தல்களுக்காக அவன் ரத்தம் சிந்துவான். ஒருபோதும் திருப்தி அடையமாட்டான். அவனுள் இருக்கும் ஒரு இலட்சியக் கலைப்படைப்பை வெளியே உள்ள ஊடகத்தில் நிகழ்த்த அவர் சலியாமல் போராடியாடியே இருப்பான்.

உண்மையில் கலைச்செயல்பாடு என்பது Obsession Neurosis போன்ற மனச்சிக்கலின் எல்லையில் நிற்கிறது. ஒரு ஓவியத்தில் அல்லது நாவலில் நாள் ஒன்றுக்கு பதினெட்டு மணிநேரத்தைச் செலவிடும் கலைஞர்களை இப்படித்தான் புரிந்துகொள்ள முடியும். பெரும் கலகக்காரர்கள் என்று நாம் அறிந்த கலைஞர்கள், உதாரணம் தஸ்தயேவ்ஸ்கி அல்லது வான்கா இப்படித்தான் இருந்துள்ளார்கள். அவர்களை நாம் அவர்களின் அழியாத கலை வழியாகவே அறிகிறோம். அக்கலை அவர்களின் ஆழ்மனத்தில் இருந்த ஒரு வடிவம். எந்த அருவமான கலைக்குப் பின்னாலும் திட்டவட்டமான ஒரு மன எழுச்சி உண்டு.

ஜானின் சினிமாக்கள் அனைத்துமே எந்தவிதமான பொறுப்பும் பிரக்ஞையும் இல்லாமல் கண்டபடி எடுக்கப்பட்டு கண்டபடி தொகுக்கப்பட்டவை. அவற்றுக்கு கலைரீதியாக எவ்வித மதிப்பும் இல்லை. இன்றைய ஜான் உண்மையில் அவரை பல்வேறு நிழலொளி தளங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வழியாகவும் இதழாளர்களின் குறிப்புகள் வழியாகவும் உருவாக்கப்பட்ட ஒரு விருப்பப் பிம்பம் மட்டுமே. உண்மையான ஜானுக்கு அதற்கும் சம்பந்தமே இல்லை. குறிப்பாக ஜான் சற்றும் கலகக்காரர் அல்ல. அவர் அழுத்தமான மரபுவாதி, பலசமயங்களில் பழமைவாதியும்கூட. அவரது கலகம் என்பது தொண்ணூறு சத குடிகாரர்களையும்போல கவன ஈர்ப்புக்காகவும், தன்னை ஒரு குறிப்பிட்ட வகையில் காட்டிக் கொள்வதற்காகவும், அபூர்வமாக ஒரு சுயவதைத்தன்மையுடனும் செய்யப்படும் நாடகம் மட்டுமே.

ஜானின் படங்களை வைத்து அவரை நாம் மதிப்பிடலாம். போலி அறிவுஜீவிகள் அவரைப்பற்றி உருவாக்கும் பிம்பங்களை வைத்து அல்ல. இந்தப்போலிகளுக்கு எந்தக் கலைப்படைப்¨ப்பம் ரசிக்கவும் மதிப்பிடவும் சக்தி கிடையாது. பிறர் போட்டுவிட்டுப்போவதை பொறுக்கி சட்டைப்பைக்குள் வைத்துக்கொள்ள மட்டுமே அறிந்தவர்கள். மற்ற எந்த மொழியைவிடவும் கேரளத்தில் போலிப்புரட்சியாளர்கள் போலி கலகக்காரர்கள் அதிகம். இன்றைய ஜான் அவர்களின் பதாகை ஒரு நல்ல கலைப்படைப்பை ரசித்த எவருமே ஜான் ஒரு கலைப்படைப்பை உருவாக்கினார் என்று சொல்ல மாட்டார்கள்.

http://www.jeyamohan.in/?p=537

கானகம் said...

இந்த ஹரன்பிரசன்னாவும், மறுமொழியில் இருக்கும் ஜானும் மொதலிலேயே சொல்லியிருந்தால் அறிவுஜீவி சுரேஷ் கண்ணன் இவ்வளவு பில்டப் குடுத்திருக்க மாட்டார்..:-)

வெங்கட்சாமிநாதன் அவர்களை பாராட்டியே ஆகவேண்டும். எவ்வளவு தெளிவாய் சொல்லி இருக்கிறார்..

படம் பாத்தாங்கன்னா செத்தாங்க..
:-)

சுகுணா திவாகர் பதிவுகூட படத்தைப் பாக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது எனக்கு..

சரி,சரி அடுத்த படஅறிவிப்பும் சொல்லிட்டீங்க..

நடத்துங்க..

மதி.இண்டியா said...

படமே பார்க்காமல் உச்சி சிலிர்த்து உள்ளம் குளிந்து , பொறி பறக்க ஒரு அறிவுஜீவி (?) எழுதிய விமர்ச்சனம் ,

“”
ஜான், நீ உயிரோடிருந்தால் உன்னோடு மதுவருந்தி உனை முத்தமிட்டிருக்கலாம் ஜான். ஆனால் இப்போது நீயோ ஒரு புத்தகமாகச் சுருங்கிவிட்டாய். இப்போது மிஞ்சுவதெல்லாம் கண்ணீரும் உன் மீதான இனம் புரியாத பிரியமும், பெருமூச்சும்,

உன் 'அக்கிரகாரத்தில் கழுதை' என்கிற மாபெரும் கலைப்படைப்பு வெளியான

அதே 1978ம் ஆண்டில்தான் நான் பிறந்தேன் என்கிற மகிழ்ச்சிப் பெருமிதமும்தான், ஜான்””

அறிவுஜீவிகள் வாழ்க ...

http://sugunadiwakar.blogspot.com/2007/01/blog-post_14.html

Anonymous said...

I had not seen the film.I had read the film script by Venkat Swaminathan and it was a mediocre script.The problem was it had neither an interesting story that could sustain the film nor could be read as a philosophical text where characters symbolically represent some ideas/social forces.
I lost interest in seeing that after reading the script.Making a better movie from that would have been easier and making a terrible movie from that was perhaps more easier.If this was what Venkat Swaminathan could produce after spending so many years in watching films, theatre, and reading so much fiction it spoke about his capacity as a writer.There was nothing unusual in that.But venturing to make a film from that was unthinkable, at least to me.

Anonymous said...

Had it been screened in Doordharshan and had it been widely available in CD/DVD/video format people who would have watched and would have formed an opinion about it.But since that did not happen a hype was created.