Sunday, January 03, 2010

புத்தகக் கண்காட்சி ஜனவரி 2010 - நூல் பரிந்துரைகள்
புத்தகக் கண்காட்சிக்கு சென்றிருந்த போது கண்ட, ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்த, நான் வாங்க விரும்பிய நூற்களின் பட்டியலை இங்கே பகிர்ந்து கொள்ளலாமென்று ஒரு உத்தேசம். முழுக்க முழுக்க என் சுயவிருப்பத்தின், ரசனையின் அடிப்படையிலும் கண்காட்சியில் கிடைக்கப் பெற்ற விலைப்பட்டியலின் அடிப்படையிலும் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அறியப்பட்டவை என்பதால் இணைய எழுத்துக்களையும் குறிப்பாக கவிதை நூல்களையும் இதில் பெரும்பாலும் தவிர்த்திருக்கிறேன். கண்காட்சிக்குச் செல்லவிருக்கும் யாருக்காவது உதவலாம் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.க்ரியா பதிப்பகம்

வீடியோ மாரியம்மன் - இமையம்

அடையாளம் பதிப்பகம்

ஈரானிய சினிமாவும் முஸ்லிம் உலகமும் - எம்.எஸ்.எம். அனஸ்
இலங்கையில் சமாதானம் பேசுதல் - கலாநிதி குமார் ரூபசிங்க
வெயிலும் நிழலும் (கட்டுரைகள்) - பிரமிள்
ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியங்கள் - சி.புஸ்பராஜா
அடிப்படைத் தமிழ் இலக்கணம் - எம்.ஏ.நு·மான்
கங்கணம் (நாவல்) - பெருமாள் முருகன்
அஞ்சுவண்ணம் தெரு (நாவல்) தோப்பில் முஹம்மது மீரான்
கு.ப.ரா. கதைகள் (முழுத் தொகுப்பு)
சலூன் நாற்காலியில் சுழன்றபடி (கோணங்கி முதல் 70 சிறுகதைகள்)
பிரமிள் (முழுத் தொகுப்பு) சிறுகதைகள். பதிப்பு: கால சுப்பிரமணியன்
அமெரிக்காவின் மறுபக்கம் - நாகேஸ்வரி அண்ணாமலை
தமிழ் நடைக் கையேடு

விடியல் பதிப்பகம்

ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - ஜான் பெர்க்கின்ஸ்
பெரியார்: சுயமரியாதை தர்மம் - எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா
மாவோ வாழ்க்கை வரலாறு - பிலிப் ஷார்ட்
உலகமயமாக்கம்: அடிமைத்தளையில் இந்தியா - அரவிந்த்
ஜூதான் - எச்சில் - ஓம்பிரகாஷ் வால்மீகி

சந்தியா பதிப்பகம்

யுவான் சுவாங் - இநதியப்பயணம்
மனநோயின் மொழி - லதா ராமகிருஷ்ணன்
தமிழ்நாடு பயணக்கட்டுரை (ஏ.கே.செட்டியார்)

கிழக்கு பதிப்பகம்

நில்லுங்கள் ராஜாவே (நாவல்) - சுஜாதா
வாழ்விலே ஒரு முறை - ஜெயமோகன்
பனிமனிதன் - ஜெயமோகன் (குழந்தைகளுக்கான நாவல்)
நாவல் (கோட்பாடு) - ஜெயமோகன் 
   (நீண்ட வருடங்களுக்குப் பிறகு அச்சில் வரும் மிக முக்கியமான நூல்)
இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - ராமச்சந்திர குஹா
சீனா விலகும் திரை: பல்லவி அய்யர்
சென்னை மறுகண்டுபிடிப்பு - எஸ்.முத்தைய்யா
இலங்கை இறுதி யுத்தம் - நிதின் கோகலே
ராஜீவ் கொலை வழக்கு - ரகோத்தமன்
தி.மு.க. உருவானது ஏன் - மலர்மன்னன்
மாவோயிஸ்ட் - பா.ராகவன்
ஆர்.கே. சண்முகம் செட்டியார் - ஆர்.சுந்தர்ராஜ்
இடிஅமீன்  - ச.ந.கண்ணன்
மகாகவி பாரதி: இலந்தை சு.இராசாமி
லண்டன் டயரி - இரா.முருகன்
கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - மகாதேவன் ரமேஷ்
ஜே.பி.யின் ஜெயில் வாசம். - ஜெ.ராம்கி


உயிர்மை பதிப்பகம்

என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம் - மனுஷ்யபுத்திரன் (உயிர்மை தலையங்கங்கள்)
நரகத்திலிருந்து ஒரு குரல் - சாருநிவேதிதா
தாந்தேயின் சிறுத்தை - சாருநிவேதிதா
சாட்சி மொழி - ஜெயமோகன்
புதிய காலம் - ஜெயமோகன்
முன்சுவடுகள் - ஜெயமோகன்
பேசத் தெரிந்த நிழல்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
வாசக பர்வம் - எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியேற்றம் - யுவன் சந்திரசேகர்
சாந்தாமணியும் இன்னபிற காதல் கதைகளும் - வா.மு.கோமு

வம்சி பதிப்பகம்

தென்னிந்திய நவீன சிறுகதைகள் - தொகுப்பு: கே.வி. ஷைலஜா
அனுபவங்களின் நிழல் பாதை - ரெங்கைய்யா முருகன்
   (இந்திய பழங்குடி மக்களின் இனவரைவியல்)
ஒரு கலகக்காரனின் கதை - ஜான் ஆப்ரகாம்
ஒற்றை கதவு - மலையாள நவீன சிறுகதைகள் : தமிழில் கே.வி. ஷைலஜா
உலக சிறுவர் சினிமா - விஸ்வாமித்திரன்
எஸ்.இலட்சுமண பெருமாள் சிறுகதைகள்
கனகதுர்கா - பாஸ்கர் சக்தியின் முழுமையான சிறுகதைகள்
உப்புக் கடலைக் குடிக்கும் பூனை - க.சீ.சிவகுமார்
இறுதி சுவாசம் - லூயிபுனுவல் சரித்திரம்
சிதம்பர நினைவுகள் - பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (மறுபதிப்பு)

மதுரை பிரஸ்

ஸ்கூப் - குல்தீப் நய்யார்
இந்தியா காந்தியைக் கொன்றது யார்? - தாரிக் அலி
நிழல் வீரர்கள் -பி.ராமன் (ரா உளவு அமைப்பு குறித்தான நூல்)

காலச்சுவடு பதிப்பகம்


எனது பர்மா குறிப்புகள் - செ.முஹம்மது யூனூஸ்
என் பெயர் சிவப்பு - ஓரான் பாமுக் - தமிழில் ஜி.குப்புசாமி
குமாயுன் புலிகள் - ஜிம் கார்ப்பெட்
கொற்கை - ஜோ.டி.குரூஸ்
ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் - ஆ.சிவசுப்பிரமணியன்

எதிர் வெளியீடு

தமிழிசை வேர்கள் - நா.மம்மது
மேலும் சில ரத்தக்குறிப்புகள் - எஸ்.மகோதேவன்
தலித் அரசியல் - அ.மா¡க்ஸ்
நக்சலைட் அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்

தமிழினி பதிப்பகம்

இன்றைய காந்தி - ஜெயமோகன்
எழுதும் கலை - ஜெயமோகன்

image courtesy: http://www.bapasi.com/

suresh kannan

11 comments:

லேகா said...

Thanks for sharing suresh.

I went to book fair yesterday..what i bought were not in ur list:-))

Will ty to get imp ones u have quoted by next week..

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சுரேஷ் கண்ணன்,

நீங்கள் குறிப்பிட்டதில் சில புத்தகங்கள் போன வருட பு.காட்சியிலேயே கிடைத்தவை (உதா. அஞ்சுவண்ணம் தெரு - தோப்பில்).

பிரமிளின் சிறுகதைத் தொகுப்பை வாங்குவதைத் காட்டிலும் அவரது முழு படைப்புகளை வாங்குவது நல்லது - அதிலேயே சிறுகதைகளும் அடங்கிவிடுகின்றன. அவரது மொழி பெயர்ப்பு புத்தகமொன்று புதிதாக வந்திருக்கிறது - அதைச் சிபாரிசு செய்யலாம்.

நீங்கள் முக்கியமான நூல் என்று சொல்லும் நாவல் கோட்பாடு (ஜெமோ) சரியான மொக்கை :) இதையெல்லாம் படித்தா நீங்கள் நாவலைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள் என வியப்பாய் இருக்கிறது!

இன்னும் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கிறது. பேசாமல் தனிப் பதிவாகவே எழுதி விடுகிறேன்.

உங்களைப் போலவே நானும் டிஸ்கி போட்டு விடுகிறேன் : மேலே குறிப்பிடவை என்னுடைய தனிப்பட்ட விருப்பத் தேர்வே :) :) :)

சென்ஷி said...

நன்றி சுரேஷ் கண்ணன்

கடைக்குட்டி said...

அந்தப் பக்கம் போனா வாங்கப் பாக்குறேங்க. .:-)

அன்பு said...

வந்துட்டாய்ங்கய்யா சாருநிவேதிதா ஜால்ராக்கள்..

சுரேஷ் கண்ணன், புத்தகங்களில் நல்ல தேர்வுகள் செய்திருக்கிறீர்கள்..

பயனுள்ள பதிவு.

அன்பு

செ.சரவணக்குமார் said...

நல்ல தேர்வுகள். பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

பீர் | Peer said...

நன்றி :)

Unknown said...

நல்ல பட்டியல்..

அதிகமும் ஜெமோ மற்றும் சாரு புத்தகங்கள் பட்டியலில் காணப்படுகிறனவே....

குப்பன்.யாஹூ said...

nice and thanks for sharing the books list. we could add narsim, Ayyanaar, madhavraj's books too in the above list.

சங்கர் said...

உங்கள் பட்டியலில் குமாயுன் புலிகள் மட்டும் வாங்கி இருக்கிறேன், அடுத்து வீடியோ மாரியம்மன் மட்டும் வாங்க எண்ணம்,

நான் தான், உங்களையும் சிவராமனையும் நேற்று சந்தித்தேன்,

இது என் பட்டியல்

Rajasurian said...

பகிர்வுக்கு மிக்க நன்றி.