Wednesday, February 18, 2009

சுந்தர ராமசாமி, கண்ணதாசன் நூல்கள் நாட்டுடைமை

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், டாக்டர் மு.வரதராசனார், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட 28 தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டு, அவர்கள் மரபுரிமையர்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பு: இதுவரை 95 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன.


இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா, கவியரசு கண்ணதாசன், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், இராய.சொக்கலிங்கனார், டாக்டர் மு.வரதராசனார், முனைவர் ச.அகத்தியலிங்கம், பாவலர் நாரா.நாச்சியப்பன், புலியூர் கேசிகன், எழுத்தாளர் சாண்டில்யன், கோதை நாயகி, சின்ன அண்ணாமலை, பூவை எஸ்.ஆறுமுகம், என்.வி.கலைமணி, கவிஞர் முருகு சுந்தரம், புலைவர் த.கோவேந்தன், எழுத் தாளர் சுந்தர ராமசாமி, திருக்குறள் மணி நவநீத கிருஷ்ணன், லட்சுமி, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜமதக்னி மற்றும் ஜே.ஆர்.ரங்கராஜு ஆகிய 28 தமிழ் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். மேலும், அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையர்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.

()

சுந்தர ராமசாமி நூல்கள் நாட்டுடைமை குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு

"எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அவரது குடும்பத்தினரின் அனுமதி பெறாமல் அறிவிப்பு வெளியிடுவது சட்டவிரோதமானது' என, காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.காலச்சுவடு பதிப்பக பதிப்பாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாக தமிழக அரசு இன்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. சுந்தர ராமசாமியின் படைப்புகளின் காப்புரிமையை அரசு பெறுவது பற்றி அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி பெறாமல் அரசு அறிவிப்பது சட்ட விரோதமானது.சுந்தர ராமசாமியின் படைப்புகளை வெளியிடும் உரிமை தற்போது காலச்சுவடு பதிப்பகத்திற்கு மட்டுமே உள்ளது.


சட்டவிரோதமான அரசு அறிவிப்பின் அடிப்படையில் அவர் படைப்புகளை வெளியிட்டு காப்புரிமை சட்டத்தை மீற வேண்டாமென தமிழ் பதிப்பாளர்களை காலச்சுவடு பதிப்பகம் கேட்டுக்கொள்கிறது.அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழுக்கு பங்களித்து வந்த சுந்தர ராமசாமியை எந்த கட்டத்திலும் அங்கீகரிக்காத தமிழக அரசு இப்போது அவர் மறைந்து மூன்று ஆண்டுகளிலேயே அவசரமாக நாட்டுடைமையாக்கத்தை அனுமதி பெறாமல் அறிவித்திருப்பது அரசின் உள்நோக்கம் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது.


"காலச்சுவடு' இதழுக்கு நூலகத்தில் தடை விதித்திருக்கும் தமிழக அரசு சுந்தர ராமசாமியின் காப்புரிமையை அபகரித்து "காலச்சுவடு' பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்துடனேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது.இவ்வாறு கண்ணன் கூறியுள்ளார்.


கண்ணதாசன் பதிப்பக நிர்வாகி காந்தி கண்ணதாசன் அறிக்கை:தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் 28 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது தொடர்பான பட்டியலில் கவிஞர் கண்ணதாசன் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. கண்ணதாசன் நூல்களை எக்காலத்திற்கும் நாட்டுடைமையாக்குவதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டது இல்லை; ஒப்புக்கொள்ளப் போவதும் இல்லை.


இந்த பட்டியலில் கண்ணதாசன் பெயர் சேர்ப்பது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை எங்கள் குடும்பத்தினரை கலந்து ஆலோசிக்காமல், குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்கு கூட தெரிவிக்காமல் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.கண்ணதாசன் நூல்களை கண்ணதாசன் பதிப்பகமும், வானதி பதிப்பகமும் மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு மிகப் பரவலாக மக்களிடையே எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.


கண்ணதாசனின் குடும்பத்தினர் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டிய நிலையிலும் இல்லை. தமிழ் வளர்ச்சித் துறையின் இந்த தன்னிச்சையான போக்கு தமிழக அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.கண்ணதாசன் புத்தகங்களை எங்களது சொத்தாக வைத்துப் பாதுகாத்து வருகிறோம். இதை தேசியமயமாக்கும் எண்ணம் துளியும் இல்லை. கண்ணதாசன் குடும்பத்தினருக்கு அவரது எழுத்துகளை பாதுகாப்பது எப்படி என்பது தெரியும்; காப்பற்றவும் எங்களால் முடியும். இது தொடர்பாக முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி்: தினமலர்

()

குறிப்பிட்ட தமிழறிஞர்களின் வாரிசுகளிடம் சட்டரீதியான அனுமதி பெறாமலேயே அவர்களின் நூற்களை நாட்டுடைமையாக்கும் முடிவை அரசு எப்படி எடுத்தது, அதுவும் அதை சட்டசபையிலேயே பட்ஜெட்டில் அறிவித்தது எப்படி என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மற்ற நூற்களின் நிலையும் இவ்வாறுதான் இருக்கும் போலிருக்கிறது. இது நிச்சயம் முறையற்ற செயல்.

ஆனால் மற்ற அறிஞர்களைப் போலல்லாமல் சு.ரா.விற்கும் கண்ணதாசனிற்கும் இன்னமும் வணிக மதிப்பு இருப்பதனாலேயே அவர்களின் வாரிசுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இருப்பினும் அவ்வாறு கலந்து ஆலோசிக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து மறுப்புதான் கிடைத்திருக்கும் என்பதை அவர்களே தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் பொதுமக்கள் எல்லோருக்கும் சென்று சேரவேண்டிய படைப்புகளை அனைவரும் எளிதில் எடுத்து பயன்படுத்த ஏதுவாக அரசு நாட்டுடமையாக்க முன் வந்திருப்பதை அவற்றின் வணிக லாபம் கருதி அவர்களின் வாரிசுகள் தங்களுக்குள்ளேயே முடக்கி வைக்க நினைப்பது, தார்மீக ரீதியான நோக்கில் சரியானதா என்பது விவாதத்திற்கு உரியது.

இதனிடையே பெரியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால கோரிக்கையை அரசு ஏன் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் அதனின் அரசியல் காரணங்களை தாண்டி விளக்க வேண்டியதும் அரசின் கடமை. பெரியார் திடலில் இருந்து பெரியாரையே விடுதலை செய்யக் கோரும் நிலை இருப்பது திராவிடக் கலாச்சார அரசியலுக்கு மாபெரும் இழுக்கு.

NEWS UPDATE AT 05.40 PM.

தமிழக அரசு விளக்கம்:

மரபுரிமையாளர்கள் ஒப்புதல் தராவிட்டால் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை ஆகாது.
=================================================

இன்றைய தலைமுறையினரும், எதிர்காலத் தலைமுறையினரும் எந்தவித சிரமமின்றி எளிய முறையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கும் திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இது அரசின் விருப்புரிமை அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. எந்தவிதக் கட்டாயமும் கிடையாது.

நாட்டுடமையாக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்து வரும் 'ராயல்டி' தொகை கிடைக்காமல் போய் வரும் என்பதற்காக ஒப்புதல் தரவில்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டு விடுவதை அரசு வழக்கமாய் பின்பற்றி வருகிறது.

உதாரணமாக மூதறிஞர் ராஜாஜி, உ.வே.சா., அகிலன், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஆகியோரது நூல்களை நாட்டுடமையாக்கிட கடந்த காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள் நாட்டுடமையாக்கிட ஒப்புதல் தரவில்லை என்பதால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.

எனவே தற்போது நிதிநிலை அறிக்கையில் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலிலே உள்ள சில நூலாசிரியர்களின் மரபுரிமையாளர், அவர்களின் நூல்களை நாட்டுடமையாக்க ஒப்புதல் தரவில்லை என்பதால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை இப்போதும் பொருந்தும்.

நன்றி: மாலை மலர்



suresh kannan

46 comments:

ஹரன்பிரசன்னா said...

தார்மீகப் பொறுப்பு என்பது பதிப்பகங்களுக்குத் தேவை என்பதை விட அரசுக்குத் தேவை. முதலில் பெரியாரின் படைப்புகளை நாட்டுடைமையாக்கட்டும். வாரிசுகள் புத்தக உரிமையை நாட்டுடைமையாக்குவதற்கு எதிரிப்பு தெரிக்க சகல உரிமையும் உள்ளது. இதை மீறி நாட்டுடைமையாக்க அரசு முயலுமானால், அது பெரியாரின் படைப்புகளிலிருந்து தொடங்கட்டும்.

Bruno said...

http://twitter.com/spinesurgeon

நான் டிவிட்டரில் எழுதியதை இங்கு வெட்டி ஓட்டியுள்ளேன்.

கோர்வையாக இருக்காது

ஆனால் சொல்ல வருவது புரியும் என்றேன் நினைக்கிறேன்

Bruno said...

அரசுடைமையாக்கப்பட்டால் அரசுபணம் தருவார்கள்.எனது தந்தையின்படைப்புகளைஅரசுடைமையாக்க வேண்டும்என்றகோரிக்கைகள் பல வருடந்தோறும் வரும்...

வழக்கமாக“அரசுடைமையாக்கு” என்றகோரிக்கைதான் கேட்கும்.அதற்குஅரசுசெவிசாய்ப்பதுஅரிது.இந்தமுறை தான் பலருடைய நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன...

நூல்கள் அரசுடைமை என்பது பல (ஏறத்தாழ 99 சதவித எழுத்தாளர்களின்) வாரிசுகளின் ஆவல். சொல்லப்போனால் அந்த எழுத்தாளரின் மகனோ, மகளோ...பதிப்பு தொழிலில் இல்லாத வரை அரசுடைமை என்பதுஅவர்களின் நீண்டகாலகனவாகத்தான் இருக்கும். அரசுடைமையாக்கப்பட்ட நூல்கள் வெகு வேகமாக பரவும்...

Bruno said...

தற்பொழுது நிதி நிலை அறிக்கையில் நிதி தான் ஓதுக்கியுள்ளார்கள். அரசு ஆணை வர வில்லை. எனவே இருவரது எழுத்துக்களுக்கு பதில் வேறு இரு ஆசிரியர்களின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டு ஆணை வரும் என்றே நினைக்கிறேன்.தமிழில்ராயல்டிமிக குறைவு என்று புலம்பல் இருக்கும் நேரத்தில்...யாராவது அரசுடைமையை எதிர்க்கிறார்கள் என்றால் இரண்டு சாத்தியக்கூறுகள் மட்டும்தான்...

ஓன்று : தமிழ் நூலாசிரியர்கள் மிக அதிகமாக சம்பாதித்து வருடந்தோறும் கோடிக்கணக்காக சம்பாதித்து வருமான வரி கட்டாமல் பொய் சொன்னார்கள்...

சாத்தியக்கூறு 2 : யாரோ சிலர் அவரின் குடும்பத்தினரை தவறாக வழி காட்டுகிறார்கள். சிட்னி ஷெல்டன் அல்லது ஹெரால்ட் ராபின்ஸ் 10 லட்ச நாட்டுமைக்கு...எதிர்ப்பு தெரிவிப்பது வேறு, தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது வேறு !!...

Bruno said...

நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த எதிர்ப்பினால் பயன் படப்போவது வேறு இருவரின் குடும்பமே...

அந்த இரு குடும்பத்தினரும் சம்பந்தப்பட்ட துறை செயலருக்கு ஒரு தபால் எழுதியிருந்தால் போதும். இது ஏன் பொதுவில் வருகிறது ;) :) :)...

A senior government official, however, clarified that the government would write to the family members of all the writers

before issuing the order for nationalisation. “If the family members object to the idea of nationalisation, we will not go ahead with it. ”...

Bruno said...

நாட்டுமையாக்கப்பட்டால் அந்த எழுத்தாளரின் எழுத்துக்கள் மேலும் பரவும் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா இல்லையா...

Bruno said...

Nationalisation will only increase the writers reach. the only point against it will be to 1. curtail the works 2. make money

Bruno said...

understand that the "announcement" is only budget allocation. "Nationalisation was NOT announced"

Bruno said...

After allotment The government will send a formal letter to all the legal heirs and get their consent before "announcement"

Bruno said...

They (இருவரின் மகன்களும்) couldhave simply said "Sorry Since we want to get richer than 10 lakhs we don't want our father's work to be propagated"

But by telling this in public,here after the government will get change the procedure and get permission even for fund allotment

Bruno said...

By this the families of authors who are in poverty will have to wait for 2 more years to get their 5 or 10 lakhs.

Bruno said...

At least here after if either of these two people say that they don't get enough money for their books, we all will know the truth

Bruno said...

By this public expression of "not willingness to share knowledge and money" tamil writers in poverty are going to loose and not these 2

Bruno said...

Your suggestion of getting permission for even fund allocation will lead to a delay of 2years which is hard for those in poverty

Mohandoss said...

//பெரியார் திடலில் இருந்து பெரியாரையே விடுதலை செய்யக் கோரும் நிலை இருப்பது திராவிடக் கலாச்சார அரசியலுக்கு மாபெரும் இழுக்கு.//

இதைப்பற்றி, வீரமணி பேசியிருந்ததைப் படித்திருக்கிறீர்களா???

Unknown said...

பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்க ஆலோசிக்கிறோம் என்று சொன்னால் அடுத்த நாளே வீரமணி ஜெயலலிதாவின் கூடாரத்திற்குள் குடிபுகுந்துவிடுவார் ;-)

Anonymous said...

கலைஞர் படைப்புகளை நாட்டுடமையாக்க அவர் குடும்பத்தினர்
ஏற்பார்களா?. எங்களுக்கு பணம் வேண்டாம், யார் வேண்டுமானாலும்
அவர் நூற்களை வெளியிடலாம் என்று அந்தக் கோடிஸ்வரக் குடும்பங்கள் சொல்லுமா.
அரசுடமை, நாட்டுடமை என்ற
பெயரில் செய்யப்படும் அராஜகம்
இது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் பலர் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதே
பலருக்கு தெரியாது.பதிப்பாளர்களில்
இதில் உள்ளவர்களில் ஒரு சிலரைத்
தவிர பிறர் நூல்களை சீந்த
மாட்டார்கள்.

புருனோ Bruno said...

//வாரிசுகள் புத்தக உரிமையை நாட்டுடைமையாக்குவதற்கு எதிரிப்பு தெரிக்க சகல உரிமையும் உள்ளது. //

ஹரன்பிரசன்னா சார். சகல உரிமையும் உள்ளது எனப்து உண்மைதான்

அதை அவர்கள் முறைப்படி செய்யாமல் இப்படி பொதுவாக செய்து ஏன் “விளம்பரம்” தேடிக்கொள்ள வேண்டும் என்பது கேள்வி 1.

அடுத்ததாக அவர் எழுத்தாளரின் வாரிசாக இந்த எதிர்ப்பை தெரிவிக்கிறாரா அல்லது அந்த எழுத்துக்களின் பதிப்பக உரிமையை பெற்றுள்ள பதிப்பாசிரியராக இந்த எதிர்ப்பை தெரிவிக்கிறாரா என்பது கேள்வி 2

PRABHU RAJADURAI said...

வரவு செலவு உரை (budget proposal) என்பது என்னவென்று புரியாமலேயே அவசரப்பட்டுவிட்டனர். புரூனோ அழகாக விளக்கியுள்ளார். அவர்களுடைய விலை என்னவென்று தெரியாமலேயே, அவர்களுக்கு செய்யும் கவுரவமாகவே அரசு இந்த முடிவினை எடுத்திருக்கலாம்.

பாவம் பெரியார்...அவருக்கும் அரசின் முடிவிற்கும் ஏதும் சம்பந்தமில்லையேனினும் இதற்கும் அவர்தான் பலிகடா!

தமிழ் ஓவியா said...

// KVR said...

பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்க ஆலோசிக்கிறோம் என்று சொன்னால் அடுத்த நாளே வீரமணி ஜெயலலிதாவின் கூடாரத்திற்குள் குடிபுகுந்துவிடுவார் ;-)//

kvr தன்னுடைய மேதாவித்தனத்தை இங்கு காட்ட வேண்டிய அவசியமில்லை.
பெரியார் தன் எழுத்துக்கள் பற்றி ஒரு ஏற்பாடு செய்து வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதற்குள் அந்தக் கூடாரத்திற்கு போய் விடுவார் என்று சொல்லுவது எல்லாம் உங்களின் அதீதக் கற்பனை.

ஜெயலைதாவை அரசியல் ரீதியாக ஆதரித்ததுக்குக் காரணம், தி. மு. க. தனது அடிப்படைக் கொள்கைகளைவிட்டு விட்டு பி.ஜெ.பி.யுடன் கூட்டணி வைத்தது தான்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கருத்து தெரிவித்து தங்களின் மதிப்பைக் குறைத்துக் கொள்ளாதீர்கள் கே.வி.ஆர்

தமிழ் ஓவியா said...

பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டுமா? என்பது பற்றி வீரமணி அவர்கள் தரும் விளக்கம் இதோ: உண்றிப் படித்து உண்மையை உணருங்கள்.



பெரியாரின் நூல்களை
நாட்டுடைமையாக்க வேண்டுமா?

தமிழர் தலைவரின் தர்க்க ரீதியான பதில்



பொங்கல் புத்தாண்டு அன்று (14.1.2009) சென்னை சங்கமம் நிகழ்ச்சியில் சென்னை தியாகராயர் நகர் - தியாகராயர் கலை அரங்கில் என்னை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் மாநாடு போல் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து

சாரு நிவேதிதா சொன்ன ஒரு செய்தி

இறுதியிலே ஒன்று இங்கே சாரு நிவேதிதா அவர்கள் ஒரு கருத்தைக் கடைசியிலே சொன்னார்கள். நான் புத்தகக் கடைக்குப் போனேன். அங்கு ஒரு கடையில்தான் பெரியார் புத்தகம் இருக்கிறது. அதை உடனடியாக நாட்டுடைமையாக்கவேண்டும் என்ற சொன்னார்கள். நாங்கள்தான் அதற்கு உரிமைபெற்றவர்கள் என்றாலும் என்ன, அதற்குத் தடை எங்கே உள்ளது? என்பதை இந்த அறிஞர்கள் கூடியுள்ள இந்த அரங்கம் தெரிந்துகொள்ளவேண்டும். பெரியார் அவர்கள் சமுதாயத்தை எப்படிப் புரட்டிப் போட்டார்கள் என்பதைப்பற்றி அவர்கள் சொன்னார்கள்.

எங்களுக்கு இருக்கின்ற அச்சம்

எனவே, எங்களுக்கு இருக்கின்ற ஓர் அச்சம், தயக்கம் எல்லாம் யார் வேண்டுமானாலும் பெரியார் புத்தகத்தை வெளியிடலாம் என்று சொல்லி அவருடைய சொற்களைப் புரட்டி மாற்றிப் போட்டு விட்டால் இப்பொழுது ராமாயணத்திலே ஒரு பதிப்பிலே வந்ததுகூட, அடுத்த பதிப்பிலே இல்லை - எடுத்து விடுகிறார்களே! அதுபோன்ற நிலை பெரியாருக்கு, பெரியாரின் எழுத்து, பேச்சு நூல்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலைதான் பெரியார் தொண்டர்களாக இருக்கக்கூடிய எங்களுக்கு (பலத்த கைதட்டல்).

எங்களுக்கு இப்பொழுதுகூட பெரியாருடைய நூல்களை நாட்டுடைமையாக்கி, பணம் பெறவேண்டும் என்ற எண்ணம் எல்லாம்கூட ஒன்றும் கிடையாது..

இரண்டு நிபந்தனைகள்

தாராளமாக ஆக்கலாம். ஆனால் ஒன்று - எந்த அரசாங்கமானாலும் எங்களுடைய இரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டால், நான் பொறுப்பானவன் சொல்லுகின்றேன் - இந்தச் செய்தியை தெளிவாக மற்றவர்கள் அறிந்துகொள்ளட்டும்.

எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி, நாளைக்கே கூட நாங்கள் தயார் - இரண்டு நிபந்தனைகட்கு உட்பட்டு.

பெரியாருடைய நூல்களை நாட்டுடைமையாக்கினால்...

ஒன்று பெரியாருடைய நூல்களை நாட்டுடைமையாக்கிய பிறகு அதிலே இருக்கிற ஒரு சிறு சொல், புள்ளி, கமாவைக்கூட மாற்றக்கூடாது - மாற்றினால் அங்கே பெரியார் இருக்க மாட்டார். திரிபுவாதம் நுழைந்துவிடும் (பலத்த கைதட்டல்).

வேறு கருத்துக்கு உரியார் வந்துவிடுவார். ஆகவே அந்த ஆபத்திலிருந்து பெரியார்தாம் எழுதினதை பாதுகாக்கப்பட வேண்டும்!

இரண்டாவது நாட்டுடைமையாக்கப் படுகின்றபொழுது பெரியார் கொள்கையை ஏற்ற ஒரு அரசாங்கம் இருக்கும் பொழுது எல்லோரும் பெரியார் நூல்களை வெளியிடுவார்கள்.

சமயச் சார்புள்ள அரசாங்கம் வந்தால்...

ஆனால், நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டது என்று சொல்லி நாளைக்கு வேறு ஒரு அரசாங்கம் - சமயச் சார்புள்ள ஒரு அரசாங்கம் காவி நிறம் படைத்த அல்லது வேறு ஒரு நிறம் படைத்த அரசாங்கம் வந்து பெரியார் நூல்களை வெளியிடக் கூடாது என்று அவர்கள் நிறுத்திவிட்டார்களேயானால், அய்யா அவர்களுடைய நூல்களை வெளியிட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.

இப்படிப்பட்ட ஒரு பேரபாயம் உள்ளே பதுங்கி இருக்கிறது. இந்த இரண்டு நிபந்தனைகளையும் ஒப்புக் கொண்டு யாரும் எந்தக் காலத்திலும் இதை வெளியிடாமல் இருக்க முடியாது. அனுமதிபெற்று பலருக்கும் வெளியிடுவதற்கு உரிமை கொடுத் திருக்கின்றோமே! பெரியாரின் கருத்துகளை மாற்றி அரசாங்கம் வெளியிட்டால்கூட அதை நிறுத்த முடியாது.

பார்ப்பான் என்று சொல்ல எத்தனை பேர் தயார்?

ஒரு சிறு உதாரணம் சொல்லுகின்றேன். தந்தை பெரியார் அவர்கள் பார்ப்பான் என்ற சொல்லை மட்டும்தான் பயன்படுத்தியிருப்பார். பார்ப்பானை பிராமணன் என்று அழையாதீர் என்று சொல்லியிருக்கின்றார். அது வெறுப்பினால் அல்ல. ஒருவர் பிராமணன் என்றால் இன்னொருவர் சூத்திரன் என்று ஒப்புக்கொள்கின்றோம் என்று பொருள் என்று சொன்னார். அதற்கு உதாரணம் சொல்லும்பொழுது சொன்னார்.

ஒரு தெருவில் நான்கு வீடுகள் இருக்கின்றன என்றால் ஒரே ஒரு வீட்டுக்கு முன்னால் மட்டும் இது பதிவிரதை வீடு என்று போர்டு எழுதியிருந்தால் பக்கத்து வீட்டுக்காரன் நிலை என்ன?எவன் வேண்டுமானாலும் கதவைத் தட்டமாட்டானா? என்று கேட்டார்கள் (சிரிப்பு).

ஆகவேதான் ஒவ்வொருவருக்கும் மற்ற வீட்டுக்காரிகள் கதவைத் திறந்து - இல்லிங்க, இந்த வீடும் பதிவிரதை வீடு தானுங்க, போர்டு மட்டும் நாங்கள் போடவில்லை என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? என்று கேட்டார்கள் (கைதட்டல்).

தமிழ் இலக்கிய அறிஞர்கள் இங்கே இருக்கின்றீர்கள் . இலக்கியத்தில் எந்த இடத்திலும் பிராமணன் என்றே சொல் கிடையாது. தமிழ் இலக்கியத்திலே.

மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட என்ற பாடல் சிலப்பதிகாரத்தில் உண்டு.

ஏன் பாரதியே கூட பாடியிருக்கின்றாரே!

பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே

சூத்திரனுக்கு ஒரு நீதி; தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறு ஒரு நீதி பாடியவர் பார்ப்பனப் பாரதி!

எனவே அது இலக்கியச் சொல்லே தவிர, கொச்சைப்படுத்தக் கூடிய சொல் அல்ல. பார்ப்பன நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இருந்தாலும் கூட, அதை மேடையிலே இன்றைக்கு பலபேர் பயன்படுத்துகின்ற நிலையிலே கூட, பார்ப்பனரை பார்ப்பனர் என்று அழைக்கக் கூடிய துணிவு எங்களைத் தவிர மற்றவர் களுக்கு வராத நிலையையே நாம் பார்க்கிறோம்!

கடவுள் ராமன் போன்ற கருத்துக்கள் ஆனால் பெரியாருடைய எழுத்துகள் வருகின்ற பொழுது அப்படிப்பட்ட கருத்துகள் - அதுபோலவே கடவுளைப்பற்றி, புராணங்களைப்பற்றி, ராமனைப் பற்றி, அவர் எழுதியிருக்கிற பல செய்திகளை நாங்கள் அதெல்லாம் வெளியிட முடியாத அளவுக்குத் தடுத்துவிடுவோம் என்று சொல்லக்கூடிய சூழ்நிலை அபாயம் அந்த புரட்சிகரமான தலைவருக்கு, சமூகப் புரட்சியாளருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் தொடர்ந்து நாங்கள் தந்தை பெரியார் அவர்களின் நூல்களை அப்படியே மாற்றிடாமல் (களஞ்சியங்களை - கால வரிசைப்படி) வெளியிட்டுக் கொண்டு வருகின்றோம். இன்னும் கேட்டால் அதை வெளியிடுகின்ற நேரத்திலே கூட ஒரு முன்னுரை எழுதி சிலது முரண்பாடுகளாகக் கூடத் தோன்றலாம். உங்களுக்கு எந்தக் காலத்தில் அவர் பேசினார்? எப்பொழுது பேசினார்? என்ற தேதி உட்பட, எந்தச் சூழ்நிலையில் என்பதை எல்லாம் இணைத்து வெளியிட்டிருக்கின்றோம்.

எதிர்காலத்தில் குழப்புவதற்கு ஆளாகக் கூடாது என்பதற்காக! அதற்கு முன்னுரை எழுதியிருக்கின்றோம். பெரியார் களஞ்சியங் கள் இதுவரை 32 பாகங்களுக்கு மேலே வந்திருக்கின்றன. (ஒவ் வொன்றும் 300 பக்கங்கள்). அவருக்கு நாம் நன்றியை செலுத்து கின்றோம்.

அபவாதம் தீரும்

காரணம், இப்படி ஒரு தெளிவை உருவாக்குவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்தாரே! இதைப்பற்றி ஒரு மயக்கம் இனி தீர்ந்து விடும் (கைதட்டல்) என்று நினைக்கிறோம். இதைப்பற்றி சிலர் கூறுகின்ற அபவாதம் தீர்ந்துவிடும் என்று சொல்லி நல்ல வாய்ப்பை அளித்த உங்களுக்கு நன்றி கூறி, காலம் அதிகமாகி விட்ட காரணத்தால் நேரத்தை எடுத்துக்கொண்டதற்காக மன்னிப்பைக் கூறி - வந்த நண்பர்களுக்கு என்னுடைய கருத்து களைச் சொன்னேன். அவர்களைப் புண்படுத்துவதோ, சங்கடப் படுத்துவதோ, என்னுடைய நோக்கமல்ல. அவர்களுடைய கருத்து சிறப்பானது. அவர் அவருடைய கருத்தைச் சொல்ல உரிமை படைத்தவர். நாங்கள் எங்களுடைய கருத்துகளைச் சொல்ல உரிமை படைத்தவர்கள்.

ஆனால் ஒருவருக்கு ஒருவர் பட்டிமன்ற மறுப்புரையாளர்கள் அல்லர். மதிப்புரையாளர்கள் தான். ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையில் மதிக்கக் கூடியவர்கள் தான் என்பதை நான் உறுதிப் படுத்தி மனிதர்கள் மனிதத்தைப் பெற வேண்டும். மனித நேயத்தைப் பெற வேண்டும் என்பதற்குத்தான் புத்தகங்கள் பயன்பட வேண்டும் என்று கூறி முடிக்கின்றேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

------------------நன்றி: -"விடுதலை"3-2-2009

நன்றி கே.வி.ஆர்.

இயலுமானல் மேலும் தகவல் அறிய

http://thamizhoviya.blogspot.com வலைப்பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

Unknown said...

//பெரியாரின் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டுமா? என்பது பற்றி வீரமணி அவர்கள் தரும் விளக்கம் இதோ: உண்றிப் படித்து உண்மையை உணருங்கள்.
//

அன்பு தமிழ் ஓவியா, தகவல்களுக்கு நன்றி. படித்தேன் தெளிந்தேன்.

//ஜெயலைதாவை அரசியல் ரீதியாக ஆதரித்ததுக்குக் காரணம், தி. மு. க. தனது அடிப்படைக் கொள்கைகளைவிட்டு விட்டு பி.ஜெ.பி.யுடன் கூட்டணி வைத்தது தான்.//

நல்ல விளக்கம். எந்த "அடிப்படை கொள்கைகளின்" அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சாமரம் வீசினார் என்பது உங்களுக்கும் வீரமணிக்கும் மட்டுமே வெளிச்சம்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

வீரமணி என்ன உளறினாலும் அதை அப்படியே நம்பி, அதைப் பரப்பும்
தமிழ் ஒவியா போன்ற ‘பகுத்தறிவுவாதிகள்' இருக்கும் வரை வீரமணிக்கு கவலையேயில்லை.நூலை நாட்டுடமையாக்கல் என்றால் அது
அரசுக்குச் சொந்தம் என்று அர்த்தமில்லை. யார் வேண்டுமானாலும் அதை
வெளியிடலாம், ராயல்டி தர
வேண்டாம், யாரிடமும் அனுமதி
பெற வேண்டாம்.வீரமணி தரும்
வினோத விளக்கம் இதை மறைத்து
விட்டு வேறு எதையோ சொல்கிறது.
நாட்டுடமையாக்கபட்ட நூல்,
அரசு தடை செய்துவிடும் அபாயம்
இருக்கிறதாம்.புளுகுகளை அவிழுத்து
விடும் வீரமணியாரே,
தடை செய்வதென்றால், நாட்டுடமையாக்கபடாத நூல்களையும்
தடை செய்ய முடியும் என்பது கூட உமக்குத் தெரியாதா. மொட்டைத்
தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு
போடும் வீரமணி சொல்லும் காரணங்கள் அபத்தம்.

புருனோ Bruno said...

நீங்கள் கூறிய பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு கிடையாது

சில தவறு என்றே கருதுகிறேன்.

இது குறித்த எனது பதிவு
புத்தகங்களும் நாட்டுடைமையும் : பதிவர் லக்கிலூக்கின் புத்தகம் நாட்டுடைமையாக்கப்பட்டால் ???

தமிழ் ஓவியா said...

//நல்ல விளக்கம். எந்த "அடிப்படை கொள்கைகளின்" அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு சாமரம் வீசினார் என்பது உங்களுக்கும் வீரமணிக்கும் மட்டுமே வெளிச்சம்.//

ஊரறிந்த விசயம் கே.வி.ஆர்.

தீர்மானம் போட்டுத்தான் ஆதரித்தோம். ஏன் ஆதரித்தோம் என்று விளக்கமாகவே நூல் வெளியிட்டுள்ளோம்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகளாக அது இப்போதும் கிடைத்துக் கொண்டிருக்கிறது. வாங்கிப் படித்து தெரிந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

//அன்பு தமிழ் ஓவியா, தகவல்களுக்கு நன்றி. படித்தேன் தெளிந்தேன்.//

மிக்க நன்றி. ஆரோக்கியமான விவாதத்தை என்றும் தொடர்வோம்.

நன்றி.

தமிழ் ஓவியா said...

//வீரமணி என்ன உளறினாலும் அதை அப்படியே நம்பி, அதைப் பரப்பும்
தமிழ் ஒவியா போன்ற ‘பகுத்தறிவுவாதிகள்' இருக்கும் வரை வீரமணிக்கு கவலையேயில்லை.//

ரவிசீனிவாஸ் அவர்களே அடிப்படை நாகரிகத்துடன் எழுத வேண்டுகிறேன்.

வீரமணி தனிமனிதரில்லை. பெரியாரின் குறியீடு. 76 வயதில் 67 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். அவரின் ஒவ்வொரு வார்த்தைகளால் எவ்வளவு நன்மைகளை ஒடுக்கப்பட்டோர்கள் பெற்றிருக்கிறார்கள் என்று உங்களுக்கு தெரியவில்லை.

இன்று தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்ப்ட்ட, ஒடுக்கப்பட்டோர் அரசுப் பதவிகளில் இருப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது வீரமணியின் உளறல்தான்.

சங்கராச்சாரிகளின்,பார்ப்பனர்களின் சுயரூபத்தை நாட்டு மக்கள் கண்டு கொண்டு அலட்சியப்படுத்தியது வீரமணியின் உளறளால்தான்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இது பற்றி தனியாக எழுதப்படும்.

அது சரி(18185106603874041862) said...

சு.ரா. இருந்த வரை அவரை தமிழக அரசு என்றாவது அங்கீகாரம் செய்ததா?? இப்ப என்ன திடீர்னு??

சரி பண்றாங்க...ஆனா, இப்ப உரிமை காலச்சுவடு வச்சிருக்க மாதிரி தெரியுது...உரிமை வச்சிருக்கவங்களை கேக்காம எப்படி அறிவிக்கலாம்?? உங்க பேர்ல உங்க வீடு இருக்கு..இப்ப திடீர்னு அது கவர்மெண்ட் எடுத்துக்கும்னு சொன்னா சும்மா விட முடியுமா??

கண்ணதாசன் எழுத்துக்கு இன்னிக்கும் கமர்ஷியம் வேல்யூ இருக்கு...எனக்கு தெரிஞ்சி தன் குடும்பத்துக்கு கவிஞர் விட்டுப் போனது இதுவும், கடனும் தான்...இப்ப அதையும் எடுத்துக்குவோம்னு சொன்னா எப்படி??

காலச்சுவடுக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் பனிப்போர் நடக்கிறதா தெரியுது...காலச்சுவடு கண்ணனுக்கு ஆப்பு வைக்கணும்னே செய்றாங்கன்னு தான் தோணுது...

எல்லா மக்களுக்கும் போய் சேரணும்னா....சன் டிவி கூட தான் நிறைய பேரு பார்க்கறாங்க...அதையும் நாட்டுடைமையாக்க வேண்டியது தான???

மண்குதிரை said...

''வாரிசுகள் புத்தக உரிமையை நாட்டுடைமையாக்குவதற்கு எதிரிப்பு தெரிக்க சகல உரிமையும் உள்ளது. இதை மீறி நாட்டுடைமையாக்க அரசு முயலுமானால், அது பெரியாரின் படைப்புகளிலிருந்து தொடங்கட்டும்.''

ஹரன்பிரசன்னாவை வழிமொழிகிறேன்.

மற்றபடி, தமிழ் ஓவியா கூறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது

Anonymous said...

தமிழ் ஒவியா அவர்களே

1999ல் தான் பிஜேபி உடன் சேர்ந்தார் என நினைக்கின்றேன். ஆனால் நானும் பாப்பாத்திதான் என ஜெ ச்ட்டசபையிலே திமிராகச் சொன்ன 1991-96 கால கட்டத்தில்தான வீரமணி அவருக்கு சமூகநீதி காத்த வீராங்கனை பட்டம் கொடுத்தார் என நினைக்கிறேன். ஒருவேளை பின்னர் நடக்கவிருப்பதை முன்னரே கண்டுபிடித்து தான் அப்படி நடந்து கொண்டாரா...

நிற்க ... எனக்கு ஒன்று புரியவில்லை. ஒரு சாப்ட்வேர் இஞ்சினியர் தான் எழுதின புரோக்கிராம் மேல உரிமை கொண்டாடி முதலாளிகளிடம் சண்டை போட முடியாது. ஆனால் அப்பா எழுதிய கதைக்கு பிள்ளை உரிமை கொண்டாடுவதும் அதனை அரசு எடுக்க முன்வந்தால் தீட்சிதர்கள் போல கோபப்படுவதும் புரியவில்லை.

எனக்கு தெரிந்து பார்ப்பன அல்லது பார்ப்பனிய என்பதற்கு பாப்பு வேலை அதாவது மாமா வேலை பார்ப்பவர்கள் என்றுதான் அர்த்தம்... அதனால்தான பிராமணர்க்ள கோபப்படுகின்றார்கள். ஆனால் அதனை ஒரு இலக்கியச் சொல் எனக்கூறி பாப்பனர்களுக்கு சொறிந்து விடும் வேலையை செய்ய திக அன்பர்களுக்க் மட்டுமே முடியும்.

இட ஒதுக்கீடு கிடைக்க பெரியார் அல்லது திக வின் போராட்டங்கள் மட்டுமே காரணம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. வீரமணிக்கு அதில் பங்கு உள்ளது எனக் கூறுவது உங்களுக்கே அதிகமாகப் படவில்லையா

சுரா அல்லது கண்ணதாசனை நாட்டுடமையாக்க முயன்றதன் மூலம் அந்த செல்லாக் காசுகளை செல்ல வைக்க முயன்ற கலைஞரின் கிச்சன் பாலிட்டிக்ஸ் தான் அருவெருப்பாக உள்ளது. என்னைக் கேட்டால் அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற நூல்களையும் ஜே ஜே சில குறிப்புகள் போன்ற நூல்களையும், பிள்ளை கெடுத்தான விளை அல்லது புளியமரத்தின் கதை என சமூகவிரோதக் கதைகளை எழுதிய சுரா வையோ அல்லது தற்போது இவரது எழுத்துக்களை பிரசுரிப்பவர்களையோ பிசிஆர் ஆக்டில் உள்ளே போட பரிந்துரை செய்வேன்.

அதுதான் பெரியார் பிறந்த மண்ணில் நானும் ஒரு மனிதனாக மீந்திருந்தேன் என்பதற்கான அடையாளம்..

பார்ப்பன என்ற வார்த்தையை இன்றைக்கு திக வை விட மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழர்கள்தான அதிகமாகப் பயன்படுத்துவதாகத் தெரிகின்றது. நீங்கள் பெரியார் திடலுக்கு வெளியில் மக்களை சந்திப்பது இல்லை. பெரியார் சிலை உடைக்கப்பட்ட போது நம்மவா ஆட்சி என திக தலைவர்கள் டெஸக் ஒர்க செய்துகொண்டிருந்த போது, தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் பெரியார் சிலையை உடைத்தால் பார்ப்பனர்களின் தலைவனான ராமனது படத்தை எரிப்போம் என தெருவுக்க வந்து முழங்கினார்கள் அந்த செஞ்சட்டைத் தோழர்கள்.

அவர்கள்தான பார்ப்பன எதிர்ப்பு மாநாடு கூட நடத்தினார்கள் என நினைக்கிறேன். அப்படி ஒரு தனிச்சிறப்பான மாநாட்டை திக தனது இவ்வளவு கால வரலாற்றில் நடத்தியுள்ளதா என அறிய விரும்புகிறேன்

புருனோ Bruno said...

//விருபா - Viruba said...
நாட்டுடமையாக்கப்பட்டவை பட்டியல்

காலையில் அவசத்தில் இணைப்பு கொடுப்பதில் தவறு //

பட்டியலுக்கு நன்றி

புருனோ Bruno said...

//SanJai காந்தி said...
மிக மிக மிக அற்புதமான பதிவு டாக்டர். கலக்கி இருக்கிங்க. நானெலலம் இவ்ளோ பெரிய பதிவு முழுசா படிக்கிறது அபூர்வம். படிக்க வச்சிட்டிங்க. //

பாராட்டுக்களுக்கு நன்றி சார்

//டாக்டர், நாட்டுடைமை ஆக்கும் படைப்புகளின் ஆசிரியருக்கு அல்லது அவர் குடும்பத்திற்கு ஒவ்வொருப் புத்தகத்திற்கும் தனி தனி ராயல்டி தருவார்களா? அல்லது ஒட்டுமொத்தமாக ஒரு தொகை அரசாங்கள் அளிக்குமா?//

ஒட்டுமொத்தமாக ஒரு தொகை அளிக்கப்படும்.

பொதுவாக நாட்டுடமை என்பது நலிந்த நிலையில் இருக்கும் ஒரு (நல்ல படைப்புகள் படைத்துள்ள) எழுத்தாளரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் அரசு உதவியாகவே பார்க்கப்பட்டது

//லக்கி ஒரு புத்தகம் போட்டிருக்கார். 50 புத்தகம் எழுதி இருந்தால்?//
ஒரே தொகைதான்

புருனோ Bruno said...

//கண்ணதாசன் நூல்கள் நாட்டுடைமையாக்கப் படுவதை காந்தி கண்ணதாசன் எதிர்க்காமலிருந்தால் ‘வனவாசமும்’ நாட்டுடைமையாக்கப் படும் என்பது ஒரு சுவையான விஷயம்.//

தல. இது குறித்து நீங்கள் விரிவாக எழுதலாமே

புருனோ Bruno said...

//சரி பண்றாங்க...ஆனா, இப்ப உரிமை காலச்சுவடு வச்சிருக்க மாதிரி தெரியுது...உரிமை வச்சிருக்கவங்களை கேக்காம எப்படி அறிவிக்கலாம்?? உங்க பேர்ல உங்க வீடு இருக்கு..இப்ப திடீர்னு அது கவர்மெண்ட் எடுத்துக்கும்னு சொன்னா சும்மா விட முடியுமா??//

சார்,

நீங்கள் எழுதியதில் பல கருத்து பிழைகள் இருப்பதாக கருதுகிறேன்

என் பதிவை ஒரு முறை படித்து உங்கள் கருத்தை கூறுங்கள்

Anonymous said...

'நீங்கள் பெரியார் திடலுக்கு வெளியில் மக்களை சந்திப்பது இல்லை'

வீரமணி இரு மாதங்களுக்கு ஒரு முறை மெமோரியல் ஹால் வாசலில்
ஆர்ப்பாட்டம் செய்து காலை 11 மணிக்கு செய்து ‘கைதாகி' மதியம் ‘விடுதலை'யாகிவிடுகிறார்.
அப்போது அவர் மக்களை சந்திக்கிறார்
என்பது மறுக்க முடியாத உண்மை.

பிச்சைப்பாத்திரம் said...

//இரண்டு நிபந்தனைகள்//

வீரமணி முன் வைத்திருக்கும் காரணங்கள் வலுவானவை அல்ல என்றே நான் கருதுகிறேன். உரிமையை தர முடியாது என்று முன்பே முடிவு செய்து விட்டு அதை மறைக்க கூறும் சப்பைக்கட்டு வாதமாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.

காற்புள்ளி மாறினால் கூட அர்த்தம் மாறிவிடும் என்று பூச்சாண்டி காட்டுவதை பெரியாரின் எழுத்தை மாத்திரமல்ல அவரது வாசகர்களை கூட சிறுமைப்படுத்துவதாக உள்ளது. இந்த இடத்தில் காற்புள்ளி விட்டுப் போயிருக்கிறது என்பதை கூட உணராமல் வேறு மாதிரியான அர்த்தத்தை எடுத்துக் கொள்ளுமளவு பெரியாரை வாசிக்க முன்வருபவர்கள் அடிமுட்டாள்களா என்ன?

அடுத்த காரணம் பெரியார் புத்தகங்களின் மீதான தடை.

இம்மாதிரியான ஒரு தடையை எந்தவொரு அரசாங்கமும் ஏற்படுத்தினால் பெரியார் அபிமானிகள் சும்மா இருப்பார்கள் என்றா நினைக்கிறார் வீரமணி? கொளத்தூர் மணி (?) பெரியாரின் நூல்களை பதிப்பிக்க முன்வந்த போது எப்படி வீரமணி அதற்கு தடை உத்தரவு வாங்கினாரோ அதே போல பெரியார் புத்தகங்களின் மீதான தடைக்கும் நீதிமன்றத்தை நாட வழியில்லாமலா போய்விடும்?

இப்படியெல்லாம் வெற்றுக் காரணங்களை அடுக்குவதை விட சு.ரா., கண்ணதாசன் வாரிசுகள் சொன்னதைப் போல் 'தர இயலாது' என்றே வெளிப்படையாக கூறிவிடலாம்.

தமிழ் ஓவியா said...

//Anonymous said...//

கருத்துச் சொல்லக் கூட அனானிமஸ்ஸா வந்து போற உங்களின் வீரத்தை என்ன வென்று சொல்லுவது?

வீரமணி அவர்களின் தொண்டறத்தை தாங்கள் சரியாக தெரிந்து கொள்ளாமல் இருக்கிறீகள் என்பதுதான் உண்மை.

அதற்கு இன்னும் நாங்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது என்பது நன்றாகத் தெரிகிறது.

தமிழ் ஓவியா said...

// Anonymous said...

'நீங்கள் பெரியார் திடலுக்கு வெளியில் மக்களை சந்திப்பது இல்லை'

வீரமணி இரு மாதங்களுக்கு ஒரு முறை மெமோரியல் ஹால் வாசலில்
ஆர்ப்பாட்டம் செய்து காலை 11 மணிக்கு செய்து ‘கைதாகி' மதியம் ‘விடுதலை'யாகிவிடுகிறார்.
அப்போது அவர் மக்களை சந்திக்கிறார்
என்பது மறுக்க முடியாத உண்மை.//


அனானிமஸ் தவறான தகவல்களை சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
ஒரு மாதத்தில் குறந்த பட்சம் 20 நாட்கள் வெளியூர் சுற்றுப் பயணம் செய்யும் ஒரு தலைவர் உண்டென்றால் அது வீரமணி தான்.

விடுதலையில் அவரின் சுற்றுப்பயண நிகழ்சிகள் வருகிறது பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஆதாரங்களுடன் விமர்சிக்கும் போது தான் அந்த விமசனத்திற்கு மதிப்பு என்பதை அருள்கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள்.
நன்றி

தமிழ் ஓவியா said...

நூல்கள் நாட்டுடமையக்குதல் பற்றி முரசொலி வெளியிட்டுள்ள கட்டுரை இது.
அப்படியே இங்கு தரப்படுகிறது.

"காந்தி கண்ணதாசன் - காலச்சுவடு கண்ணனின் கனல் பறக்கும் பேட்டிகளும் - நமது விளக்கமும்!


செவ்வாயன்று (17.2.2009) தமிழக சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பேராசிரியர் அவர்கள்- தமிழக அரசின் 2009 - 2010ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்து சமூகத்தின் சகல பகுதி மக்களையும் திருப்திப்படுத்தும் வகையிலான திட்டங்களை - சலுகைகளை அறிவித்து அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்.

அப்போது 26 தமிழ்ச்சான்றோர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கப்படும் என்று அறிவித்தார். அந்தப் பகுதி வருமாறு:-

"தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழர் மேன்மைக்கும் பாடுபட்டுள்ள தூய தமிழ்ச் சான்றோர்களின் கருத்துகளும், சிந்தனைகளும் இன்று வளரும் தலைமுறைக்கு மட்டுமன்றி வரும் தலைமுறைகளுக்கும் பயனளிக்க வேண்டும் என்னும் விழைவோடு, தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கும் திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வகையில் இதுவரை 95 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இவர் களில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மட்டும் 87 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை யாக்கியுள்ளது.

2006இல் இந்த அரசு பொறுப்பேற்றபின், பரிதிமாற்கலைஞர், புலவர் குழந்தை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், இலக்குவனார், பேராசிரியர் க.வெள்ளைவாரணனார், டாக்டர் ரா.பி.சேதுப்பிள்ளை, வ.சுப.மாணிக்கம் முதலான 65 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக் கப்பட்டு, அவர்களின் மரபுரிமையர்க்குப் பரிவுத் தொகையாக 4 கோடியே 86 இலட்சம் ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா, கவியரசு கண்ண தாசன், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பண்டிதமணி மு.கதிரேசஞ்செட்டியார், மு.இராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், இராய.சொக்க லிங்கனார், டாக்டர் மு.வரதராசனார், முனைவர் ச.அகத்தியலிங்கம், பாவலர் நாரா.நாச்சியப்பன், புலியூர்க் கேசிகன், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி, சின்ன அண்ணாமலை, பூவை. எஸ்.ஆறுமுகம், என்.வி. கலைமணி, கவிஞர் முருகு சுந்தரம், புலவர் த.கோவேந்தன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, திருக்குறள்மணி அ.க.நவநீத கிருட்டிணன், இலட்சுமி, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜமதக்னி மற்றும் ஜெ.ஆர்.ரங்கராஜூ ஆகிய 28 தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக் கப்பட்டு, அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையருக்குப் பரிவுத் தொகை வழங்கப்படும்."

- என்று அறிவித்தார் பேராசிரியர்.

இன்று (புதன்) காலை வந்த ‘தினமணி’யில் கவிஞர் கண்ணதாசன் அவர்களது மகன் காந்தி கண்ணதாசனும், சுந்தர ராமசாமி அவர்களது மகன் கண்ணனும் அவர்களது விருப்பமின்மையை - வெறுப்புமிழும் சொற்களால் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் - "நாட்டுடைமை ஆக்கவேண்டாம்; நாங்கள் ஒப்புக் கொள்ளமாட்டோம்" என்பதை அனல் பறக்கும் வாசகங்கள் மூலம் அறிவித்திருக்கிறார்கள் அவர்கள்.

இதற்காக அவர்கள் இவ்வளவு கோபம் கொள்ளத்தேவையில்லை.

அரசு - ஒரு படைப்பாளியின் நூல்களை அரசுடைமை ஆக்குகிறது என்றால் -

1. எழுத்தாளர்களின் மரபுரிமையினர் அரசுக்கு வேண்டுகோள் கடிதம் எழுதினால் அதன் அடிப்படையில் - அந்த எழுத்தாளரின் நூல்களை நாட்டுடைமையாக்குவது பற்றிப் பரிசீலித்து அறிவிக்கும் அரசு.

2. சம்பந்தப்பட்ட எழுத்தாளரின் படைப்புகள் மீது அளப்பரிய மதிப்பும் - ஆர்வமும் கொண்ட தமிழ் அமைப்புகள் வேண்டுகோள் கடிதம் எழுதினாலும் அவ்வமைப்புகளின் கோரிக்கையை ஏற்று நாட்டுடைமை பற்றி அறிவிக்கப்படும்.

3. சில சமயங்களில் அரசின் விருப்புரிமை அடிப்படையிலேயே நாட்டுரிமையாக்கும் திட்டம் அறிவிக்கப்படுகிறது.

கண்ணதாசன் மகனும் - சுந்தர ராமசாமியின் மகனும் "தந்தையின் நூல்களை நாட்டுடைமையாக்கவேண்டும் என்று நாங்கள் கேட்டோமா? அறிவிப்பதற்கு முன்பு எங்களைக் கலந்து ஆலோசித்து எங்களது ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டாமா?" என்று கோபம் கொப்பளிக்க தினமணியில் கண்டன முழக்கமிட்டுள்ளார்கள்.

தலைசிறந்த நூலாசிரியர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்குவதில் - அரசு யாரையும் கட்டாயப்படுத்தி

"நாங்கள் அறிவித்துவிட்டோம்; நீங்கள் சம்மதமளித்தே தீரவேண்டும்" என்று மரபுரிமையினரின் இசைவைப் பெறாமல் நாட்டுடைமை ஆக்கி விடுவதில்லை.

உதாரணமாக -

ஒரே ஆண்டில் நாட்டுடைமையாக்கப்படும் நூல்கள் பற்றிய பட்டியலில்,

ராஜாஜியின் நூல்களும்

இருந்தன.

கல்கியின் நூல்களும்

இருந்தன.

ராஜாஜியின் மரபுரிமையினரை அரசு அணுகியபோது அவர்கள் "ராஜாஜியின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை; ஆகவே நாட்டுடைமை ஆக்கவேண்டாம்" என்று மறுத்துவிட்டார்கள். ராஜாஜியின் நூல்களை நாட்டுடைமை ஆக்கும் திட்டத்தை அரசு உடனடியாகக் கைவிட்டுவிட்டது. மாறாகக் கல்கியின் மரபுரிமையினர் ஒப்புதல் அளித்தார்கள். கல்கியின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டன. இதன் விளைவாக - பல்வேறு பதிப்பகத்தினரும் போட்டி போட்டுக் கொண்டு கல்கியின்

- பார்த்திபன் கனவையும்

- சிவகாமியின் சபதத்தையும்

- பொன்னியின் செல்வனையும்

வெளியிட முன் வந்தனர். இன்றும் புத்தகச் சந்தைகளில் கல்கியின் நூல்கள் விற்பனை குறையவில்லை. பலமுறை கல்கியில் தொடராக மறுபிரசுரம் செய்யப்பட்ட பொன்னியின் செல்வனும் - சிவகாமியின் சபதமும் பல்லாயிரக்கணக்கில் விற்பனை ஆகி - விற்பனையில் சாதனை படைத்துக் கொண்டேயிருக்கின்றன. இப்போது கல்கியின் பொன்னியின்செல்வன் இல்லாத வீடுகளே இல்லை என்கிற அளவுக்கு ‘கல்கி’ வீட்டுக்கு வீடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அகிலனின் வாசகர் வட்டம் மிகப்பெரியது. அகிலனின் நூல்களை நாட்டுடைமை ஆக்கப்படும் என்று அரசு அறிவித்தபோது - அவரது மகன் அகிலன் கண்ணன் அதனை அன்போடு மறுத்துவிட்டார். அரசு கட்டாயப்படுத்தவில்லை.

நாட்டுடைமைப் பட்டியலில் வாரியார் சுவாமிகளின் நூல் இடம் பெற்றிருப்பதறிந்து - அவரது சகோதரர் அதனை வேண்டாம் என்று மறுத்துவிட்டார். அரசு ஒன்றும் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை.

தமிழ்ச்சான்றோர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கவேண்டும் என்று அரசு ஆண்டுதோறும் முனைவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு

1. மறைமலையடிகள், திரு.வி.க. போன்றோரின் நூல்கள் வெகுகாலத்திற்குப் பிறகும் மறுபதிப்புச் செய்யப்படாமல் - நூலகங்களில் மட்டுமே காணக்கூடியவைகளாக இருந்த நிலையை மாற்றி - இந்தப் புதிய தலைமுறையினர் அனைவரது கரங்களிலும் திகழச் செய்யவேண்டும் என்பது ஒன்று.

2. மற்றொன்று - மறைந்த சான்றோர்களின் குடும்பங்களுக்கு நாட்டுடைமைத் திட்டம் மூலம் 5 லட்சத்திலிருந்து 20 லட்சம் ரூபாய் வரையில் உதவி - அவர்களது சிரமங்களை ஓரளவாவது குறைக்கலாமே என்ற மனிதநேயம்.

மற்றபடி -

சுந்தர ராமசாமியின் திருமகன் கண்ணன் கூறுவது போல அவர்களுடைய குடும்பத்தின் சொத்துரிமையை அபகரிக்க நினைப்பதல்ல; கண்ணனை ஆசிரியராகக் கொண்ட ‘காலச்சுவடு’ என்ற சிறந்த சிற்றிதழை நூலக ஆணைக் குழுவினரின் நூலகங்களுக்கு வாங்கவில்லை என்ற அவரது கோபம் நியாயமானதாகக்கூட இருக்கலாம். ஆனால் அதற்காக நாட்டுடைமை அறிவிப்பு மூலம் அவரது சொத்தை அரசு அபகரிக்க முயல்வதாக அவர் அபாண்டப்பழி சுமத்த வேண்டிய அவசியமில்லை.

கண்ணன் இன்னொரு தகவலைத் தமது ஆத்திர அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். அது என்ன?

"ஒரு படைப்பாளி இறந்த 60 ஆண்டுகளுக்குப் பிறகே அவரது படைப்புகள் நாட்டுடைமையாகும். ஆனால் சுந்தர ராமசாமி இறந்து மூன்று ஆண்டுகளுக்குள் அவரது படைப்புகளை அனைவருக்கும் சொந்தமாக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது பேரதிர்ச்சியைத் தருகிறது" என்கிறார் கண்ணன்.

"ஒரு நூலாசிரியரின் படைப்புகளுக்கான பதிப்புரிமை அவர் இறந்து 60 ஆண்டுகள் வரையில்தான் - அவரது மரபுரிமையினரின் குடும்பச் சொத்தாக இருக்கும். அதன் பிறகு அவரது நூல்களைப் பதிப்பிக்க யாரிடமும் யாரும் அனுமதி கோரத் தேவையில்லை" என்பதுதான் இன்று வரை பதிப்பக உரிமையாளர்கள் கூறிவரும் விளக்கமாக இருந்து வருகிறது!

தமிழில் முதன்முதலாக நாட்டுடைமையாக்கப் பட்டது பாரதியாரின் கவிதைகளே!

பல்வேறு தமிழ் அமைப்புகளும் - புலவர் பெருமக்களும் போராடியதின் விளைவாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் அரசு - ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரிடமிருந்து அதன் பதிப்புரிமையை வாங்கி நாட்டுடைமை ஆக்கியது.

பாரதியார் இறந்தது 1920களில், அவரது கவிதைகள் நாட்டுடைமையாக்கப்பட்டது 1940களில்.

காலச்சுவடு கண்ணன், கனல் கக்குவது போல காலமான 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நாட்டுடைமை ஆக்கப்படவேண்டும் - என்ற அவரது வாதத்தை முதன் முதலில் நாட்டுடைமையான பாரதியார் கவிதைகளே தகர்த்துத் தரைமட்டமாக்கிவிட்டது.

புதுமைப்பித்தன் நூல்களை கண்ணனின் காலச்சுவடு பதிப்பகம் மட்டுமே மிகமிகச் சிறப்பாக வெளியிட்டு வந்த பெருமை கண்ணனுக்கு உண்டு.

புதுமைப்பித்தன் நூல்களை நாட்டுடைமை யாக்கிட வேண்டும் என்று எழுத்துலகம் ஒருமித்த குரலில் கோரிக்கை வைத்தபோது கண்ணன் அதைக் காதில் போட்டுக் கொள்ளத் தயாராக இல்லாமல் இருந்த காலமும் உண்டு.

புதுமைப்பித்தன் நூல்களை நாட்டுடைமையாக்க அவரது மரபுரிமையினர் மனமுவந்து முன் வந்ததின் அடிப்படையில் புதுமைப்பித்தன் நூல்கள் நாட்டுடைமை ஆனதைக் கண்ணன் கண்ணாரக் கண்டதும் உண்டு.

புதுமைப்பித்தன் மறைந்தது 1948ல்! அவரது நூல்களை கண்ணனின் வாதப்படி 60 ஆண்டுகள் கழிந்து 2008ல்தான் நாட்டுடைமையாக்க முடியும். ஆனால் 60 ஆண்டுகள் முடிவதற்கு முன்பே - கண்ணனின் காலச்சுவடுவின் ஏகபோகத்திலிருந்த புதுமைப்பித்தன் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுவிடவில்லையா?

- ‘கல்கி’ 1954ல் மறைந்தார். அவரது நூல்களை கண்ணன் வாதப்படி 2014ல்தான் நாட்டுடைமையாக்க முடியும்! அப்படியா நடந்தது?

- பேரறிஞர் அண்ணா 1969ல் மறைந்தார். கண்ணனின் வாதப்படி 2029ல்தான் அவரது நூல்களை நாட்டுடைமையாக்க முடியும்! அப்படியா நடந்தது?

- பாவேந்தர் பாரதிதாசனார் 1964ல்தான் மறைந்தார். அவரது நூல்களை நாட்டுடைமையாக்க - 60 வருடங்கள் - அதாவது 2024 வரை காத்திருந்ததா அரசு?

- தேவநேயப்பாவாணர் மறைந்தது 1974ல். 60 ஆண்டுகள் கழிந்த பின்னர்தான் நாட்டுடைமையாக்கப்படும் என்றால் 2034ம் ஆண்டில்தான் முடியும். அப்படியா நடந்தது?

- ஆகவே படைப்பாளி காலமாகி 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்க முடியும் என்கிற கண்ணனின் காழ்ப்புணர்ச்சி கொண்ட வாதம் அவரது சொந்தக்கற்பனையே தவிர - உண்மைக்கும் அவரது வாதத்துக்கும் வெகுதூரம் என்பது மேற்கண்ட உதாரணங்களால் நிரூபணமாகிறது.

தமிழக அரசு மீது இன்னொரு குற்றச்சாட்டினை கண்ணன் கூறுகிறார். அது என்ன?

"சுந்தரராமசாமி வாழ்ந்த காலத்தில் அவரது இருப்பை தமிழக அரசு அங்கீகரித்ததில்லை. கௌரவப்படுத்தவுமில்லை. எவ்விதப் பரிசுகளும் வழங்கவுமில்லை"

- என்று குமுறுகிறார் கண்ணன்.

சுந்தரராமசாமி அவர்கள் எழுத்துலகில் தமது ஆரம்ப காலகட்டத்தில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றான ‘தோட்டியின் மகன்’ என்ற நாவலைத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்தார் மிகச்சிறப்பாக! அந்த நூலைப் பதிப்பிக்க அன்று தமிழக அரசு சார்ந்த தமிழ் வளர்ச்சித் துறையே நிதியுதவி செய்தது - தமிழுக்கு தோட்டியின் மகன் என்ற அரிய கலைக் கருவூலம் கிடைத்தது!

மற்றபடி -

தமிழின் தலைசிறந்த அரசியல் விமர்சகரும், அறிஞர் பெருமகனுமான எஸ்.வி.ராஜதுரை அவர்கள் நாட்டுடைமையாக்கும் பட்டியலில் பெரியாருக்கு மட்டும் ஏன் விதிவிலக்கு என்று கேள்வியெழுப்பி இருக்கிறார்.

பெரியார் நூல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமா என்பது பற்றிய வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆகவே அதுபற்றி இப்போது ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு உதாரணத்தை மட்டும் சுட்டிக்காட்டலாம்:-

நாட்டுடைமை ஆக்கப்படும் நூல்களின் பட்டியலில் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் நூல்களும் அறிவிக்கப்பட்டபோது -

அவரது பெயரால் நூலகமும் - அறக்கட்டளை ஒன்றும் நடத்தி வரும் அவரது மரபுரிமையினர்,

"உ.வே.சா. நூல்களை எங்களது அறக்கட்டளையே வெளியிட்டு வருகிறது. மற்றவர்கள் வெளியிட்டால் அதிலே பிழைகள் மலியக்கூடும். ஆகவே உ.வே.சா. நூல்களை பிழையின்றி - திரிபுகள் திருத்தமின்றி - அவர் சொன்னது சொன்னபடி வெளியிட பதிப்புரிமை எங்களிடம் மட்டுமே இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காகவே செயல்படும் அறக்கட்டளை இது. எனவே நாட்டுடைமை ஆக்கவேண்டாம்" என்று மறுப்புத் தெரிவித்தார்.

அதனால் உ.வே.சா.வின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படாமல் கைவிடப்பட்டது.

அதுபோலத்தான் பெரியார் உயிரோடிருந்த காலத்தில் அவரது நூல்களையும் - இயக்கப் பிரச்சார நூல்களையும் வெளியிடுவதற்காக ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தை அவர் தொடங்கினார். அவரது நூல்கள் அனைத்தும் 1920களிலிருந்து அவர் ஆற்றிய பேருரைகள் - எழுதிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமே தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான நூல்களை அது வெளியிட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல; அவரது நூல்களையும் அவர் கண்ட இயக்கத்தின் பகுத்தறிவு நூல்களையும் நகர்வுப் பத்தகக் காட்சி அமைத்து - ஆண்டு முழுவதும் தமிழகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று மக்களிடம் சேர்ப்பித்து வருகிறோம்’ என்கிறார்கள் பெரியார் கண்ட திராவிடர் கழகத்தின் கறுஞ்சட்டைப் படையினர்!

எது எப்படி இருப்பினும் -

காந்தி கண்ணதாசன், காலச்சுவடு கண்ணன் போன்றவர்கள் கனல் கக்க வேண்டியதில்லை; அனல் பறக்கும் பேட்டிகள் அளிக்கவேண்டிய அவசியமில்லை.

படைப்பாளிகளுக்கு அஞ்சல் தலை வெளியிடவேண்டும்; திருவுருவச் சிலை திறக்கவேண்டும்; அவர்களது நூல்களை நூலகங்களில் வைக்கவேண்டும் - அவர்களுக்கு சாகித்ய அகாடமிப் பரிசு, கலைமாமணி விருது - அரசு விருதுகள் போன்றவற்றை வழங்க வேண்டும்.

- என்று அரசிடம் விரும்புகிற - வேண்டுகோள் விடுகிற- பதிப்புலக நண்பர்கள் -

"சிறந்த நூலாசிரியர்களின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படும்" என்று அறிவித்தால் கோபம் கொள்ளலாமா? கொந்தளிக்கலாமா?

நூலக ஆணைக்குழு நீங்கள் வெளியிடும் புத்தகங்களை ஆயிரம் பிரதிகள் வாங்கவேண்டும் என்று அரசிடம் எதிர்ப்பார்க்க உங்களுக்கு உரிமை உண்டு.

ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு உங்கள் பதிப்பகங்களுக்கு ‘ஆர்டர்’ வழங்கும் அரசுக்கு உங்களைக் கேட்காமல் உங்கள் பதிப்பக நூல்கள் நாட்டுடைமை என்று அறிவிக்க உரிமை இல்லையா? ஒரு கண்ணுக்கு வெண்ணெய்; இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பா?"

PRABHU RAJADURAI said...

"அது சரி said...
உங்க பேர்ல உங்க வீடு இருக்கு..இப்ப திடீர்னு அது கவர்மெண்ட் எடுத்துக்கும்னு சொன்னா சும்மா விட முடியுமா??"

ஒரு தகவலுக்காக,
சும்மா விட முடியாது. ஆனால் விட்டுத்தானாக வேண்டும். அதற்கு வேண்டிய நஷ்ட ஈட்டினை வாங்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த compulsory acquisitionக்கு சட்டத்தில் வழியுள்ளது.
http://marchoflaw.blogspot.com/2007/05/blog-post_7270.html

http://marchoflaw.blogspot.com/2006/07/blog-post_01.html

புத்தகங்களுக்கும் அப்படி ஒரு சட்டம் இயற்றினால்...

PRABHU RAJADURAI said...

முரசொலி விளக்கத்தினை படித்தேன். சட்டத்தினையே quote செய்திருக்கலாம். காப்பிரைட் சட்டப்படி எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகள் வரைதான் உரிமை. எனவே அறுபது ஆண்டுகள் கழித்து சட்டரீதியில், எவ்வித பரிவுத் தொகையும் இன்றி தன்னாலேயே பொதுவுடமை ஆகி விடும்.

புருனோ Bruno said...

//"அது சரி said...
உங்க பேர்ல உங்க வீடு இருக்கு..இப்ப திடீர்னு அது கவர்மெண்ட் எடுத்துக்கும்னு சொன்னா சும்மா விட முடியுமா??"//

ultimate comedy

வீடு, நிலம் போன்றவற்றை அரசு எடுத்துக்கொள்வதற்கும் இதற்கு உள்ள வேறுபாடு கூட தெரியாதா

இந்த படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டால் அதன் பின்னர் யார் வேண்டுமானாலும், அந்த எழுத்தாளரின் வாரிசுகள் உட்பட அந்த நூற்களை பதிப்பிக்கலாம்.

அப்படியிருக்கும் போது நூல்களின் நாட்டுடைமையையும் சாலைகளை விரிவுபடுத்த நிலங்களை ஆர்ஜிதம் செய்வதையும் ஒன்றாக கருதி வரும் மறுமொழியை பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை

http://www.payanangal.in/2009/02/blog-post_18.html இடுகையில் விரிவாகவே எழுதியுள்ளேன்.

சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க தயார். அந்த பதிவில் மறுமொழியாக உங்களது சந்தேகங்களை கேட்கலாம்

புருனோ Bruno said...

//காப்பிரைட் சட்டப்படி எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகள் வரைதான் உரிமை. எனவே அறுபது ஆண்டுகள் கழித்து சட்டரீதியில், எவ்வித பரிவுத் தொகையும் இன்றி தன்னாலேயே பொதுவுடமை ஆகி விடும்.//

நாட்டுடைமை என்பதே அறுபது வருடங்களுக்கு முன்னர் அந்த எழுத்தாளரின் குடும்பத்திற்கு சில தொகையை அளித்து அந்த உரிமத்தை பொதுவாக ஆக்குவது தான்.

உதாரணமாக கல்கியின் எழுத்துக்களை 2014க்கு பிறகு யார் வேண்டுமென்றாலும் பதிப்பிக்க முடியும். அது நாட்டுடமையாக்கப்பட்டாலும், படாவிட்டாலும்

ஆனால் அரசு பரிவு தொகை அளித்ததே அதற்கு முன்னர் கல்கியின் எழுத்துக்கள் அனைவரையும் போய் சேர வேண்டும் என்பதற்காகத்தான்

அது போல் இன்னமும் 32 வருடங்கள் கழித்து (2041 முதல்) யார் வேண்டுமென்றாலும் கண்ணதாசனின் நூல்களை அச்சிட்டு வெளியிடலாம்

அது சரி(18185106603874041862) said...

//
புருனோ Bruno said...
//"அது சரி said...
உங்க பேர்ல உங்க வீடு இருக்கு..இப்ப திடீர்னு அது கவர்மெண்ட் எடுத்துக்கும்னு சொன்னா சும்மா விட முடியுமா??"//

ultimate comedy

வீடு, நிலம் போன்றவற்றை அரசு எடுத்துக்கொள்வதற்கும் இதற்கு உள்ள வேறுபாடு கூட தெரியாதா

இந்த படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டால் அதன் பின்னர் யார் வேண்டுமானாலும், அந்த எழுத்தாளரின் வாரிசுகள் உட்பட அந்த நூற்களை பதிப்பிக்கலாம்.

அப்படியிருக்கும் போது நூல்களின் நாட்டுடைமையையும் சாலைகளை விரிவுபடுத்த நிலங்களை ஆர்ஜிதம் செய்வதையும் ஒன்றாக கருதி வரும் மறுமொழியை பார்த்து அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை

http://www.payanangal.in/2009/02/blog-post_18.html இடுகையில் விரிவாகவே எழுதியுள்ளேன்.

சந்தேகங்களுக்கு விளக்கமளிக்க தயார். அந்த பதிவில் மறுமொழியாக உங்களது சந்தேகங்களை கேட்கலாம்
//

ஆமா, காமெடி தான்...

சட்டம் என்ன சொல்கிறது என்பது பற்றி நான் பேசவில்லை...சட்டத்திற்கும் நியாயத்திற்கும் அதிக வித்தியாசம் உண்டு...எல்லா இடங்களிலும் சட்டம் நியாயமாக நடக்கும் என்று சொல்ல முடியாது...

ஒருவர் எழுதுவதற்கு சட்டம் என்ன விதமாக உதவிகளை செய்கிறது? கண்ணதாசன் எழுத்து அரசு உத்தரவின் பேரில், அரசின் நிதி உதவியின் பேரில் எழுதப்பட்டதா? இல்லை சுந்தர ராமசாமியை வாழ்நாள் முழுதும் அரசு பேணிக்காத்து வாழ வைத்ததா?

அவர்கள் எழுதியது அவர்கள் உழைப்பு...உங்கள் வீடு எப்படி உங்கள் உழைப்பால் வந்ததோ அது போல் அவர்கள் எழுத்து அவர்கள் உழைப்பு...அவர்கள் இறந்தாலும் அது அவர்கள் உழைப்பு தான்...செத்து 60 வருசம் ஆயிடுச்சி என்று நாட்டுடைமையாக்கும் சட்டம் ஒருவரது உழைப்பை திருடும் சட்டம் தான்! டாடாவோ, பிர்லாவோ இறந்து பல வருடம் ஆகிவிட்டது என்று அரசு அவர்களது வீடு, தொழில் நிறுவனங்களை நாட்டுடைமையாக்குமா?? அதெல்லாம் நடக்காது, ஆனால், எழுதுபவர்கள் மட்டும் தெருச் சரக்கு???

கண்ணதாசன், சு.ரா. எழுத்தைப் பொறுத்தவரை, கண்ண தாசன் இறந்து அறுபது வருடம் ஆகிவிட்டதா?? சு.ரா இறந்து?? அப்படி இருக்கையில், இப்பொழுது உரிமை வைத்திருப்பவர்களை ஏதும் ஆலோசிக்காமல் நாட்டுடைமையாக்குகிறோம் என்று சொல்வது திருட்டா இல்லையா?? இது பகல் கொள்ளை!

உங்களின் விளக்கத்தை நேரமிருந்தால் படிக்கிறேன்...

நன்றி!

Anonymous said...

பிறருக்கு உபதேசம் செய்கிற திமுகவினர் கலைஞர் எழுத்துக்களை ஏன் நாட்டுடமையாக்கவில்லை.அண்ணா மறைந்தது 1969ல் நாட்டுடமை 2008ல்.
1969ல் முதல்வரான கலைஞர் ஏன் அப்போதே அண்ணாவின் எழுத்துக்களை நாட்டுடமையாக்கவில்லை.கல்கியின்
குடும்பத்தினர் நாட்டுடமையாக்க ஒத்துக்கொண்டனர்.கொடுக்கப்பட்ட
தொகை 25 லட்சம், அவர்கள்
பதிப்பகம் நடத்தவில்லை.பதிப்பகம்
நடத்தும் கண்ணதாசன்,சு.ரா வாரிசுகளை கேட்காமல் எதற்கு
அவர்கள் நூல்களை நாட்டுடமையாக்க
திட்டமிட வேண்டும்.பாரதியின் எழுத்துக்களை நாட்டுடமையாக்க எழுத்தாளர்கள் அன்று
கோரினர்.அவர் வாரிசுகளின், குடும்பத்திற்கு கிடைத்தது
அன்று 10 ஆயிரம் ரூபாய்.
'ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு உங்கள் பதிப்பகங்களுக்கு ‘ஆர்டர்’ வழங்கும் அரசுக்கு உங்களைக் கேட்காமல் உங்கள் பதிப்பக நூல்கள் நாட்டுடைமை என்று அறிவிக்க உரிமை இல்லையா?'

இல்லை.இந்த வாதம் அபத்தம்.பதிப்புரிமை சட்டம் நூலக
ஆணை தருவதால் நாட்டுடமையாக்கலாம் என்று கூறவில்லை. மீறி நாட்டுடமையாக்கினால் இடைக்கால
தடை பெற முடியும்.வீரமணிக்கு
ஒரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்று
அரசு முடிவு செய்யலாம்,சட்டம்
அவ்வாறு செய்யாது.

மருத்துவ நுழைவுத்தேர்வு நூல் எழுதி பிழைத்து வரும் புருனோ என்ற
பேர்வழி பதிப்புரிமை இல்லை,
அவற்றை யார் வேண்டுமானாலும்
வெளியிடலாம் என்று அரசுக்கு
தன் நூல்கள் மீதான உரிமையை
விட்டுக் கொடுத்துவிட்டு நியாயம்
பேசட்டும்.அவருக்கு ஒரு இழவும்
புரியவில்லை என்பதற்கு
அவர் நீட்டி முழக்கி எழுதியிருக்கும்
இடுகையே சான்று.

புருனோ Bruno said...

//உழைப்பால் வந்ததோ அது போல் அவர்கள் எழுத்து அவர்கள் உழைப்பு...அவர்கள் இறந்தாலும் அது அவர்கள் உழைப்பு தான்...செத்து 60 வருசம் ஆயிடுச்சி என்று நாட்டுடைமையாக்கும் சட்டம் ஒருவரது உழைப்பை திருடும் சட்டம் தான்! //

இது தமிழகத்திற்கு மட்டும் உரிய சட்டம் அல்ல.

//உங்களின் விளக்கத்தை நேரமிருந்தால் படிக்கிறேன்...//
படித்தால் தானே என்ன கூறவருகிறேன் என்று தெரியும்

புருனோ Bruno said...

//மருத்துவ நுழைவுத்தேர்வு நூல் எழுதி பிழைத்து வரும் புருனோ என்ற
பேர்வழி பதிப்புரிமை இல்லை,
அவற்றை யார் வேண்டுமானாலும்
வெளியிடலாம் என்று அரசுக்கு
தன் நூல்கள் மீதான உரிமையை
விட்டுக் கொடுத்துவிட்டு நியாயம்
பேசட்டும்.//

மிக்க நன்றி
எனது அனைத்து நூல்களின் முழு ஆக்கங்களும் எனது இணையதளத்தில் இருக்கிறது. http://targetpg.com/exams/aipg/2003
தரவிறக்கி கொள்ளலாம்.
http://targetpg.com/exams/aipg/2004/

இதற்காக அரசு எனக்கு 25 லட்சம் அளித்தால் மகிழ்ச்சியே எனது புத்தகங்களை நாட்டுடைமையாக்கி எனக்கு 25 லட்சம் தர நீங்கள் அரசிற்கு ஒரு கோரிக்கை எழுதலாமே

உங்களுக்கு இந்த விஷயத்தில் எவ்வளவு புரிதல் இருக்கிறது என்பதற்கு இந்த மறுமொழியே சாட்சி

//அவருக்கு ஒரு இழவும்
புரியவில்லை என்பதற்கு
அவர் நீட்டி முழக்கி எழுதியிருக்கும்
இடுகையே சான்று.//

நான் எழுதியதில் சந்தேகம் இருந்தால் கேட்கலாம். விளக்க தயார். அது தவிர உங்களது முந்தைய அபத்த குற்றச்சாட்டிலிருந்தே உங்களை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது