Monday, December 20, 2010
நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது
தமிழிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்படும் பெரும்பாலான சமயங்களில் அது ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தேர்வுகளின் பின்னேயுள்ள அரசியலை நினைத்து கசப்பையுமே தரும். இங்குள்ள பட்டியலை ஒரு முறை பார்த்து நீங்களும் அதை உணரலாம்.
ஆனால் இந்த முறை அது மகிழ்விற்கான தருணம். அசலானதொரு இலக்கியப் படைப்பாளியான நாஞ்சில் நாடனுக்கு இந்த வருட சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துகள்.
நாஞ்சில் நாடன் இணையத் தளம்
suresh kannan
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
விருதுக்குரியவர்க்கு கிடைத்ததில் மகிழ்ச்சி...
great news...happy news for me as i am from his nearby village.
நாஞ்சிலாருக்கு வாழ்த்துக்கள்
பகிர்ந்த உங்களுக்கும், சுல்தானுக்கும், செல்வேந்திரனுகும் , ஜெயமோஹனுக்கும் நன்றிகள்
எப்போ இந்த விருதை வைரமுத்துவுக்கு குடுத்தாங்களோ அப்ப இருந்து இதையும் ஒரு கலைமாமணி விருதாகத்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
பகிர்விற்கு நன்றி. நேற்று நான் அவரிடம் கையெழுத்து வாங்கியதற்கும் இந்த விருதிற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா:))))
நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துகள்
பாக சந்தோஷங்கா உந்தி :)
'நாஞ்சிலாருக்கு' மனமார்ந்த வாழ்த்துகள்.
நாஞ்சில் நாடன் அய்யாவுக்கு வாழ்த்துக்களும், வந்தனங்களும்
//விருதுக்குரியவர்க்கு கிடைத்ததில் மகிழ்ச்சி...//
Very happy to hear that.. It reached the right hand at last !
அடடா, என்ன சுரேஷ்கண்ணன் இது! உங்களிடமிருந்து இப்படியொரு பதிவை நான் எதிர்பார்க்கவில்லை. “நீங்கள்” இல்லாத இந்தப்பதிவு உங்கள் பதிவு போலவே இல்லை...
“ஆனந்தவிகடன், குமுதம் போன்ற மத்தியவர்க்க மக்களின் முதுகைச் சொறியும் அபத்தங்களை நான் படிப்பதில்லை. த்ரிஷாவின் தொப்புள், கரமைதுனம் நல்லதா, ரஜினியின் பனியன் போன்ற பல அபத்தக்குப்பைகளுக்கு நடுவே வாத்தியாரின் கட்டுரைகள் போன்ற அரிதான சில முத்துகள் மட்டுமே படிக்கக் கிடைத்திருக்கின்றன. அந்த வரிசையில் நான் படித்து ரசித்த சில நாஞ்சில்நாடன் கட்டுரைகளும் தேறும்.
நாஞ்சில்நாடனின் எழுத்துகள் எனக்குப் பிடிக்கும். ஆனால் அத்தனையையும் கொண்டாடுவேன் என்று சொல்லமுடியாது. ஒரே விதமான அலுப்புத்தட்டும் அறச்சீற்றமும், சென்னையைத் தாண்டியிராத என்னைப் போன்றவர்களுக்கு அலுப்பேற்படுத்தும் வட்டாரவழக்குகளும் நிறையவே அவரெழுத்தில் காணக்கிடைக்கின்றன. இத்தகைய சில குறைகளைத் தவிர்த்துப் பார்ப்போமேயாயின் இவர் எழுத்துகள் சிறப்பானவை என்றே சொல்லலாம். இதைப் பற்றி இங்கே ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.
இந்த வருடம் நாஞ்சில்நாடன் சாகித்ய அகாதமி விருது பெறுகிறார். நாற்பதடி உயர கட்டவுட்டுக்குப் பாலாபிஷேகம் செய்வதுதான் தமிழன் தன் அங்கீகாரத்தை வெளிப்படுத்தும் முறை என்ற நிலையில் இப்படிப்பட்ட விருதுகள் ஆறுதலையளிக்கின்றன. ஆனால் விருது பெறுவது என்பது வாழ்த்தப்படக்கூடிய அளவுக்கு முக்கியமான விஷயமா என்பதையும் நாம் யோசிக்கத்தான் வேண்டும். இருந்தாலும், பல சுயசொறிதல் செய்த எழுத்தாளர்களுக்குக் கிடைத்த விருதுகள், மிளகாய்ப்பொடி தூவிய காண்டம் போல எரிச்சல் தந்த வேளையில், நாஞ்சில்நாடனுக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள் நாஞ்சில்.”
இதுவல்லவோ நீங்கள் எழுதியிருக்க வேண்டிய பதிவு?
இப்படிக்கு,
உங்கள் வாசகன்
வாசகன்:
உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன். :)
அன்பிற்குரிய ஐயா நாஞ்சில் நாடன் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
விருதுக்குரியவர்க்கு கிடைத்ததில் மகிழ்ச்சி
கண்டிப்பும் கவனமும் கேலியும் கலந்த தந்தை நிலையில் எழுதும் அவரை எப்படி வாழ்த்துவது!
வாசகன்,
சூப்பர். நல்லா வந்திருக்கு.
நான் டிரை பண்ணினா சுரேஷ் திட்டுவாரு ;)
ராம்கி: :-) அப்படியெல்லாம் இல்லை. வன்மமற்ற ஜாலியான கிண்டல்களை நான் எப்போதும் ரசிக்கவே செய்கிறேன், அது யாரால் எழுதப்பட்டாலும்.
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !
என்னே தீர்க்கதரிசனம்!!
2009-ல் உயிர்மை நடத்திய எஸ்.ரா. புத்தக
வெளியீட்டின்போது, “எனக்கொரு ஆசை. காத்திருப்போர் பட்டியலிலிருந்து
விடுபட்டு, தத்கால், வெயிட்டிங் லிஸ்ட், RAC இல்லாமல் 2010-ம் (வருட)
சீட் நாஞ்சில் நாடனுக்கும், 2011-ம் (வருட) சீட் எஸ். ராமகிருஷ்ணனுக்கும்
2012-ம் (வருட) சீட் ஜெயமோகனுக்கும் சாகித்ய அகாதெமி எக்ஸ்பிரசில் இடம்
கிடைக்கவேண்டும்!” என்று 72 வயதான மகானுபாவன் ஒருவன் சொன்னான். அவன்
வாய்க்கு சர்க்கரை தான் போடவேண்டும்! அந்த மகானுபாவன் நான் தான்! அதில் 33 சதவீதம் பலித்துவிட்டது! மீதியும் பலிக்க ஆண்டவன் அருள வேண்டும்!!
நாஞ்சில் நாடனுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!
பாரதி மணி
Post a Comment