Tuesday, September 14, 2010
எந்திரன்: மார்க்கெட்டிங் மாயாஜாலமும் பலியாடுகளும்
'எந்திரன்' திரைப்படத்தைப் பற்றிய எந்தவொரு விஷயத்தையும் திரைவெளியீட்டிற்கு முன்னால் எழுதக்கூடாது என்று முடிவு செய்து வைத்திருந்தேன். இந்த முடிவு, முன்னர் எழுதிய 'எந்திரன் இ(ம்)சை-யை குறைகூறியும் பழித்தும் வந்த பின்னூட்டங்களுக்காகவும் பதிவுகளுக்காகவும் அல்ல. இணையப் பெருவெளியில் இம்மாதிரியான அபத்தங்களை சந்திப்பது புதிதல்ல. இதைத் தயாரிக்கும் நிறுவனத்தைப் போன்றே நாமும் இதைப் பற்றி தொடர்ந்து உரையாடி இதற்கு இன்னமுமான கவனக்குவிப்பை ஏற்படுத்த வேண்டுமா என்று தோன்றியது.
என் பதிவுகளை திறந்த மனதுடன் தொடர்ந்து வாசிப்பவர்களுக்குத் தெரியும். நான் வணிக நோக்கில் எடுக்கப்படும் அரைத்த மாவுத் திரைப்படங்களுக்கும் ஓவர்மசாலா குப்பைகளுக்கும் எதிராக தொடர்ந்து எழுதி வருவது. சிலரின் கூப்பாடுகளையும் அறைகூவல்களையும் கருத்தில் கொண்டு இதை நிறுத்தி விடக்கூடாது என்பது என் உறுதியான திடமான நிலைப்பாடு. இது ஒரு வகையான சமர். தூயக் கலைக்கும் தந்திர வணிகத்திற்கும் ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் போர். தொடர்ந்து இப்படி எழுதுவதின் மூலம் 'நல்ல சினிமா' எதுவென்றும் 'மோசமானது' எதுவென்றும் தொடர்ந்து சீண்டிக் கொண்டேயிருப்பதின் மூலம் ஒரே ஒரு வெகுஜன ரசிகனுக்காவது புரிய வைத்து விட முடியாதா என்கிற பொதுநல ஆதங்கம்தான் இத்தனை எதிர்ப்பிற்கிடையிலும் என்னை எழுதச் செய்கிறது. அறிந்தே சாக்கடையில் வீழ்ந்து வீம்புக்காக விவாதிப்பவனை ஒன்றும் செய்ய இயலாது. அவ்வாறான இருப்பைக் கூட உணர்ந்திராதவர்களிடம் சற்றாவது சலனத்தை ஏற்படுத்தி விட முடியுமா என்பதே இவ்வாறான பதிவுகளின் நோக்கம்.
தொடர்ந்து ரஜினியைப் பற்றியே குறிவைத்து எழுதுவதாக சில நண்பர்கள் தங்களின் ஆட்சேபங்களை இதற்கு முன்னர் தெரிவித்திருக்கின்றனர். ஒரு சாதாரணனான எனக்கு இன்றைய தமிழ் சினிமாவின் ராஜாவான ரஜினியின் மீது தனிப்பட்ட துவேஷம் இருப்பதற்கு எவ்வித காரணமும் இருக்க முடியாது.
ரஜினி என்கிற பிம்பம் இன்றைய வணிக சினிமாவின் உச்சநிலைக் குறியீடு. அந்த பிம்பத்தின் மீதுள்ள அசட்டுப் பிரேமையை தகர்ப்பதுதான் என் நோக்கமே ஒழிய ரஜினி என்கிற தனிநபரைத் தாக்குவதல்ல. வருங்காலத்தில் அந்த உச்ச நிலையில் ரஜினிக்கு மாற்றாக இன்னொரு பிம்பம் அமையும் போதும் என் இலக்கு அதன் மீதுதான் இருக்கும்.
சரி பதிவின் தலைப்பு தொடர்பான சமாச்சாரத்திற்கு வருவோம்.
ஒரு திரைப்படத்தின் டிரைய்லர் வெளியீட்டிற்காக இத்தனை பரபரப்பும் ஆரவாரமும் ஏற்படுவது அல்லது 'ஏற்படுத்தப்படுவது' இதுதான் முதன்முறை என நினைக்கிறேன். இது பெருமை கொள்ள வேண்டிய விஷயமல்ல. மாறாக சமூகப் பொறுப்புணர்வுள்ள அனைவருமே வெட்கப்பட வேண்டிய விஷயம். சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம், தம்மிடமுள்ள மிகப் பெரிய பலமான ஊடகங்களின் துணையோடு இந்தப் பரபரப்பை அதிக பட்சமாக ஊதிப் பெருக்குகிறது. ஏற்கெனவே கள் குடித்த குரங்குகளாய் ஆடும் ரசிகப்பட்டாளம், இந்தப் பரபரப்பின் பின்னுள்ள வணிகத் தந்திரங்களை அறியாமல் விட்டில் பூச்சிகளாய் வந்து நெருப்பில் விழுகிறது.
டிரைலர் திரையிட்டதை பரபரப்பாக்கி, அதை ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பி அதன் மூலம் விளம்பர வருவாயை நிரப்பிக் கொண்ட அந்த நிறுவனத்தின் வணிகத் திறமையைக் குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அவர்களைக் குறை கூறி பயனில்லை. இயலுமானால் தங்களின் வணிகத் தந்திரங்களின் மூலம் மலத்தைக் கூட அழகான பாக்கிங்கில் இட்டு அதற்கு ஒரு நடிகரை விளம்பரத் தூதுவராக நியமித்து தொடர்ந்த விளம்பரங்களின் மூலம் மூளைச்சலவை செய்து அதை சாப்பிட்டால் தாதுவிருத்தி பெருகும் என்றோ தொப்பை கரையும் என்றோ சிவப்பழகு கூடும் என்றோ கூட நம்பச் செய்து விடுவார்கள். உலகமயமாக்கத்தின் போலி பளபளப்பிற்கிடையில் நுகர்வோர்களாகிய நாம்தான் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறது.
`ஹாலிவுட்' திரைப்படங்களின் தரத்திற்கு நிகராக தயாரிக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு தொடர்பான நிகழ்ச்சியை அவர்களின் தொலைக்காட்சியிலேயே கண்டு மகிழ்ந்தேன். இது போன்ற அபத்தமான பொருளற்ற வாக்கியங்களை ஒருவேளை காண நேரும் ஹாலிவுட் தயாரிப்பாளரோ அல்லது இயக்குநரோ என்ன நினைப்பார் என்பதை யூகிக்க நகைப்பாக இருக்கிறது.
ஒர் அரசியல் குடும்பத்தினரிடம் ஒட்டுமொத்த ஊடகத்துறையும் சிக்கிக் கொள்ள நேர்ந்தால் என்ன நேர வேண்டுமோ அதுவே அந்த விழாவில் நேர்ந்தது. ஒருவர் விடாமல் அனைவருமே இத்திரைப்படத்தை 'வாராது வந்த மாமணி' என்கிற நோக்கில் புகழ்ந்து தள்ளினார்கள். வழக்கமாக இம்மாதிரியான செயற்கையான ஆதாய நோக்கு புகழ் புளகாங்கிதகளுக்கிடையில் 'சற்றாவது அறிவுப்பூர்வமாக பேசுகிறார்' என நான் அவதானித்து வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் பேரரசுவின் திரைப்படங்களைப் போன்று கோமாளிகளின் உச்சமாக நின்றது மிக அவலமாக இருந்தது.
அந்த நிகழ்ச்சியைப் பாராதவர்களுக்காக இதை எழுதுகிறேன்.
'இணையத்தில் வந்த செய்தியாக' இதைக் குறிப்பிட்டு வைரமுத்து பேசினார். நகைச்சுவைத் துணுக்கிற்கும் செய்திக்கும் உள்ள வித்தியாசம் தெரி்ந்தும் மற்றவர்களை விட அதிகமாக புகழ்ந்து கைத்தட்டல் வாங்க விரும்பி விட்ட வைரமுத்து இதிலுள்ள நெருடலை பொருட்படுத்தியிருக்க மாட்டார் என்பது நாம் அறிந்ததுதான்.
அமிதாப்பச்சனும் ரஜினிகாந்த்தும் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு சென்றிருந்தார்களாம். அமிதாப்பை அடையாளம் கண்டுகொள்ளாத அதிபர் ஒபாமா, ரஜினிகாந்த்தை அழைத்து 'வாருங்கள், தேநீர் அருந்தலாம்' என்றாராம். அமிதாப்பிற்கு ஆச்சரியமாய்ப் போயிற்றாம். இது கூட பரவாயில்லையாம். வாடிகன் நகருக்கு இவர்கள் இருவரும் சென்ற போது 'போப்பும்' ரஜினிகாந்த்தை மாத்திரம் மேடைக்கு அழைத்து விசாரித்தாராம். அமிதாப் மயங்கியே விழுந்து விட்டாராம். அவர் மயங்கி விழுந்தததிற்கு காரணம் போப் ரஜனிகாந்த்தை அறிந்து வைத்திருந்தது அல்ல. அமிதாப்பிற்கு பக்கத்திலிருந்த ஒரு நபர் அமிதாப்பிடம் "மேடையில் நின்றிருப்பவர்களில் ஒருவர் ரஜினிகாந்த் என்று தெரிகிறது. மற்றவர் யார்?" என்று கேட்டாராம். பாவம், போப்பை இதை விட நுட்பமாக ஒருவர் அவமானப்படுத்தி விட முடியாது.
இது ஒரு நகைச்சுவைத் துணுக்கு என்பதை வைரமுத்து வெளிப்படுத்தியிருந்தாலாவது மன்னித்துவிடலாம். ஏதோ பிபிசி செய்தி நிறுவனத்தின் இணைய தளத்திலேயே வந்த செய்தி என்கிற நோக்கில் வைரமுத்து கூறியதுதான் மகா எரிச்சலாக இருந்தது. இவரே இப்படி எனும் போது பார்த்திபன், விவேக் உள்ளிட்ட மற்ற கோமாளிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.
மற்றபடி 'இந்த டிரைலரைக் காண காலை ஐந்து மணிக்கே விழித்துக் கொண்டேன்' 'இதைப் பார்க்காமல் கக்கா வராது போலிருக்கிறது' என்கிற சக நடிகர்களின் உற்சாக பொய்களைக் காண நகைச்சுவையாக இருந்தது.
வழக்கம் போலவே நடிகரின் ரசிகர்கள் இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். கட்அவுட்களின் மீது பாலாபிஷேகம், டிரைலர் படப்பெட்டிக்கு அம்மன் கோவிலில் பூசை, யானை மேல் ஊர்வலம்.. என்று ஒரே அமர்க்களம்தான். இதற்கு மேல் யோசிக்கத் தெரியாத இவர்கள், இப்போதே இதையெல்லாம் செய்து தீர்த்து விட்டால் படவெளியீட்டின் போது என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் என்னுடைய தற்போதைய கவலை.
suresh kannan
Subscribe to:
Post Comments (Atom)
61 comments:
செம... நிறையப் பேரோட மனப்புழுக்கமும் இதுவே...
இன்னமும் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம். அது கூடத் தப்பில்ல.. அதக் கவரேஜ் பண்ற வீடியோ...தூத்தேறி...
கலாநிதிமாறன் கக்கூஸ் போனாக்கூட லைவ் ரிலே வரும் போல...
இன்னொண்ணு ரஜினிகூட கருணாஸ் ரேஞ்சுக்கு சன் குழுமத்திடம் அடிமையானது போல் இருப்பது இன்னும் வேடிக்கை.
டிரைலர் பாக்கிறதுக்கு டிக்கெட் விக்கிறாங்களாம்.
படம் ப்ரோமோஷனுக்கு ஸ்கூல்,பால்வாடி எல்லாம் போய் ரஜினி ‘ரோபோ மாஸ்க்’ கொடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஷங்கரும்,ரஹ்மானும் கூடவே குச்சி மிட்டாயும்,குருவிரொட்டியும் தரலாம்.
ஒரு படம்தான எடுக்கிறீங்க. என்னமோ தமிழ்நாட்டில வேலையில்லாத் திண்டாட்டத்தையே ஒழிச்ச மாதிரிப் பண்றீங்க...
hahahahaha...உண்மையை அப்பட்டமமாக சொல்லியிருக்கீறீர்கள்.
எல்லாரும் மேடையில் கொடுத்த காசுக்கு மேலயே கூவியதை கண்ணால் பார்க்கமுடிந்தது...
கலாநிதி மாறனை புகழ்து அடுத்த பட சான்ஸ் வாங்குவதில் அனைவரும் குறியாக இருந்தது.. தெரிந்தது...
ஆச்சர்யம் கருனாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது,...
@ஜாக்கி சேகர்...
அநேகமா சன் பிக்சர்ஸோட அடுத்த பட நிகழ்ச்சியை ரஜினி தன் குடும்பத்தோட சேர்த்து தொகுத்து வழங்கலாம்...
இயலுமானால் தங்களின் வணிகத் தந்திரங்களின் மூலம் மலத்தைக் கூட அழகான பாக்கிங்கில் இட்டு அதற்கு ஒரு நடிகரை விளம்பரத் தூதுவராக நியமித்து தொடர்ந்த விளம்பரங்களின் மூலம் மூளைச்சலவை செய்து அதை சாப்பிட்டால் தாதுவிருத்தி பெருகும் என்றோ தொப்பை கரையும் என்றோ சிவப்பழகு கூடும் என்றோ கூட நம்பச் செய்து விடுவார்கள்....சந்தேகமே வேண்டாம் கருணாநிதி குடும்பம் ஒரு மாநிலத்தையே ஏமாற்றி ஆட்சி செய்யும்பொழுது... இதெல்லாம்.. வெகுஎளிதாக செய்துவிடுவார்கள்.
இதை எழுத உங்களுக்கு அசாத்திய துணிவும் நேர்மையும் இருக்கவேண்டும்...
கடந்த பல பதிவுகளும் படிச்சுட்டு வர்றேன்.. என்ன பின்னூட்டமிடுவது என தெரியாமல்...விட்டுவிடுகிறேன்..
தொடர்ந்து விளாசுங்கள்...
அப்புறம் நீங்க வலையுலக ரஜினி ஆகிடுவீங்களோன்னு நெனைக்கிறேன்.. (இது நம்ம பஞ்ச்)
//இதற்கு மேல் யோசிக்கத் தெரியாத இவர்கள்//
Don't ever underestimate the ingenuity of idiots என்று ஒரு சொலவடை உண்டு!
//வழக்கம் போலவே நடிகரின் ரசிகர்கள் இந்த வரலாற்று நிகழ்வை கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். கட்அவுட்களின் மீது பாலாபிஷேகம், டிரைலர் படப்பெட்டிக்கு அம்மன் கோவிலில் பூசை, யானை மேல் ஊர்வலம்.. என்று ஒரே அமர்க்களம்தான். இதற்கு மேல் யோசிக்கத் தெரியாத இவர்கள், இப்போதே இதையெல்லாம் செய்து தீர்த்து விட்டால் படவெளியீட்டின் போது என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் என்னுடைய தற்போதைய கவலை. //
இப்படி ட்ரெயிலர் வெளியீட்டுக் கொண்டாட்டத்தை குறை சொல்பவர்களை போட்டுத் தள்ளி படத்தை துவக்குவார்களோ?
:-)
நல்ல வேளை நான் அந்த நிகழ்ச்சியை பார்க்க வில்லை டி வியில். நண்பர்கள் சொன்னார்கள் வைரமுத்து பொய்யாக என்ன எல்லாமோ பேசுகிறார் என்று.
நல்ல வேளை , சுஜாதா இந்த கூத்துக்களை எல்லாம் பார்க்காமல் தப்பித்து விட்டார்.
***இது ஒரு நகைச்சுவைத் துணுக்கு என்பதை வைரமுத்து வெளிப்படுத்தியிருந்தாலாவது மன்னித்துவிடலாம். ***
So, you are the only one who could figure it out that it is a JOKE! LOL! And sharing/EDUCATING that to the ignorant world?
I wonder who is ignorant here?
***ரஜினி என்கிற பிம்பம் இன்றைய வணிக சினிமாவின் உச்சநிலைக் குறியீடு. அந்த பிம்பத்தின் மீதுள்ள அசட்டுப் பிரேமையை தகர்ப்பதுதான் என் நோக்கமே ***
How far you have succeeded you think? LOL
I feel sorry for you, SK, if you are really serious and not joking! :(
அவசியமான பகிர்வு சுரேஷ் கண்ணன். சன் குழுமத்தின் வியாபார உத்திகளும், பிழைப்புக்காக இந்த நடிகர்களின் உளறல்களும் தாங்க முடியவில்லை. சீக்கிரம் அந்த ’சனியன்’ வந்து தொலையட்டும். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்.
நண்பர் சுரேஷ் கண்ணன் அவர்களுக்கு,
இங்கு யாரும் கோடிக்கணக்கில் முதலீடு செய்து டாகுமெண்டரி படம் எடுக்குவதற்கு வருவதில்லை. னிமா என்பது காய்கறி மார்கெட் மாதிரி பொருளீட்டுவதற்கான சந்தைதான், வந்தோம் போனோம் என்று படமெடுத்த்தால் நிங்களும் நானும் மொய் எழுதி விட்டு இருக்க வேண்டியதாம். ஏதோ திட்ட வேண்டும் என்பதற்காக, மற்ற படங்களை போல எந்திரனை நினைத்துவிடாதீர்கள். அந்த உழைப்பு ஹாலிவுட் படத்தில் கூட இருக்குமா என்பது சந்தேகம். கேள்விபட்டு எழுதுவதென்பது வேறு. உணர்ந்து எழுதுவது என்பது வேறு. யாரோ இப்படி சொன்னார்கள்: அப்படி சொன்னார்கள் என்பதை நம்பி தயவு செய்து எழுதாதீர்கள். 15 வருடம் சினிமாவில் இருக்கிறேன் என்பதால இதை சொல்கிறேன்.
//மிகப் பெரிய பலமான ஊடகங்களின் துணையோடு இந்தப் பரபரப்பை அதிக பட்சமாக ஊதிப் பெருக்குகிறது. ஏற்கெனவே கள் குடித்த குரங்குகளாய் ஆடும் ரசிகப்பட்டாளம்,//
இப்படியொரு அபத்தமான குற்றாச்சாட்டை வைக்கும் முன் நீங்கள் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். இது ஒன்றும் ஹாலிவுட் படமல்ல. ஆனால், ஹாலிவுட்டுக்கு நிகரான படம். இப்படியொரு படத்தை வரவேற்பதை விட்டுவிட்டு குறைசொல்வதையே தொழிலாக வைத்திருக்கும் உங்கள் மீது வெறுப்புதான் வருகி\றது. டைட்டானிக், அவதார் போன்ற படங்களின் வரிசையில் எந்திரன் வரவில்லையென்றால் அப்பொது பேசுங்கள்.
ஆடு அடுக்கும் முன்பே புடுக்கை சுடாதிர்கள்.
தயவு செய்து எதையும் ஆலோசிக்காமல் பதிவு எழுதாதீர்கள், ஞானி மாதிரி.
நட்புடன்
ஆடுமாடு
'தொடர்ந்து ரஜினியையே குறி வைத்து எழுதுகிறீர்களா?' என்னால் அப்படி நினனக்க முடியவில்லை. விஜய் போன்ற ரஜினி க்ளோன்களைப் பற்றி நீங்கள் எழுதும் பொழுது வெளிப்படுத்தும் எள்ளல், ரஜினியைப் பற்றி எழுதும் பொழுது இல்லாததை உணர்ந்திருக்கிறேன். இத்தனைக்கும் ரஜினி நடித்த நல்ல படங்கள் அளவிற்கு விஜயும் நடித்திருக்கிறார்.
இணையத்தில் எந்திரன் மீதான தாக்குதலில் சன் குழுமத்தின் மீதான தாக்குதலே...அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ விஞ்சி நிற்கிறது...
ஏதோ ரஜினியும், சங்கரும் வாயில் விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத குழந்தைகள் போலவும், கலாநிதிதான் அவர்களை கரும்புக்காட்டுக்குள் தூக்கிக்கிட்டு போய் கெடுத்தது போலவும்...(உபயம் கவுண்டமணி)
மலேசியாவில் நடந்த நிகழ்ச்சியை பார்த்தேன். ஆறுதலித்த விடயம், ரஜினியை பின்னுக்குத் தள்ளி கலாநிதிக்கு புகழ்ச்சிகள் சென்றது. இதுவரை ரஜினி, கமல் போன்றவர்கள் கலந்து கொள்ளும் விழாக்களில் அருவெறுக்கத்தக்க வகையில் தனிமனித துதி பாடப்படுவதை கேட்ட வெறுப்பில் ரஜினியே கலாநிதியை புகழ வேண்டிய கட்டாயத்தை பார்த்தது சந்தோஷம்தான்.
இந்தியாவில் கருப்புப் பண ஒழிப்பில் முன்னணியில் நிற்கும் சங்கரும் ரஜினியும் கலாநிதியுடன் அமர்ந்து சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை அடுத்த நாள் பார்த்த பொழுது வேடிக்கையாக இருந்தது.
அதை விட சுவராசியம், 42 வயது மாமனாருக்கும் 18 வயது மருமகளுக்கும் உள்ள தகாத உறவைப் பற்றி வந்துள்ள ஒரு படத்தை 'நம்ம கலாச்சாரம் என்னாவது' 'மக்கள் இதனை புறக்கணிக்க வேண்டும்' என்று வாங்கு வாங்கு என்று தினகரனில் போனவாரம் விமர்சனம். கீழே எந்திரன் பட விளம்பரம் ரஜினி ஐஸ்வர்யாவுடன் :-)
SK, அடுத்தவங்களுக்கு உதவியா உருப்படியா இதுவரைக்கும் செய்திருந்தால் அதை பதியுங்கள், பார்த்து படித்து சமூகம் மாறட்டும். அதைவிடுத்து வியாபாரத்தில் அது நொட்டை இது நொட்டைன்னு சொல்லத்தேவை இல்லை.
நீங்கள் செய்யும் வேலை என்ன? அதற்கான சம்பளம் என்ன? வெளியிட்டால் என் அடுத்தக் கேள்வி உமக்கு வரும்.
பலியாடுகளுக்கு ஆழ்ந்த வருத்தங்கள்..
தொடர்ந்து எழுதுங்கள்...பல ரஜினி ரசிகர்களை ரஜினி வெறியர்களாகவும் பல ரஜினி வெறியர்களை தீவிர ரஜினி விசுவாசிகளாகவும் ஆக்கிய பெருமையில் உங்களுக்கும் பங்கு உண்டு.
..ஒர் அரசியல் குடும்பத்தினரிடம் ஒட்டுமொத்த ஊடகத்துறையும் சிக்கிக் கொள்ள நேர்ந்தால் என்ன நேர வேண்டுமோ ...
நிஜமான அரசியல் பத்தி எழுத ஆரம்பிச்சுட்டீங்களோன்னு நினைச்சேன்... நல்லவேளை :-)))
உலகத்தில எதுக்கு வேண்டுமானாலும் மருந்து கண்டுபிடிக்கலாம், ஆனால் முட்டாள்தனத்திற்கு என்னைக்குமே மருந்து கிடையாது!
// "மேடையில் நின்றிருப்பவர்களில் ஒருவர் ரஜினிகாந்த் என்று தெரிகிறது. மற்றவர் யார்?" என்று கேட்டாராம். பாவம், போப்பை இதை விட நுட்பமாக ஒருவர் அவமானப்படுத்தி விட முடியாது//
கத்தோலிக்க கிறித்துவ அமைப்புகள் மற்றும் கத்தோலிக்க கிறித்துவர்கள் பொருமையானவர்கள் போப்பாண்டவரை அவமதித்தாக கொதித்தெழமாட்டார்கள் என்று வைரமுத்து நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் போல :)
வைரமுத்து அதை செய்தி, மிகை செய்தி என்று கூறினாரே ஒழிய, அது நகைச்சுவை என்று சொல்ல வாய் வரவில்லை. சரியான எரிச்சல்.
டிரய்லர் வெளியீட்டு விழாவெல்லாம் நடத்தி எரிச்சலை தன் பங்குக்கு ஏற்படுத்தியது சன் டிவி.
நடிகர்கள் எல்லாம் வரி மாறாமல் புகழ்ந்தார்கள் ரஜினியையும் கலாநிதி மாறனையும். இது இன்னொரு எரிச்சல்.
ரஜினி கலாநிதி மாறனைப் புகழ்வது இன்னொரு எரிச்சல்.
இதற்கு மத்தியில் அந்த டிரய்லர் - கலக்கல். இது பற்றிய உங்கள் தனிப்பதிவை (திட்டித்தான்!) ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
24ம் தேதி எப்ப வரும், படம் எப்ப வரும், ரஜினியை எப்ப பார்ப்போம் என்ற டென்ஷனில் எழுதியது. தனிப்பட்ட தாக்குதல்கள், பிழைகள் இருந்தால் பொறுத்தருளவும். :>
//கத்தோலிக்க கிறித்துவ அமைப்புகள் மற்றும் கத்தோலிக்க கிறித்துவர்கள் பொருமையானவர்கள் போப்பாண்டவரை அவமதித்தாக கொதித்தெழமாட்டார்கள் என்று வைரமுத்து நன்கு தெரிந்து வைத்திருக்கிறார் போல :)//
இது கிறித்துவர்களுக்குத் தெரியுமா?
//அதை விட சுவராசியம், 42 வயது மாமனாருக்கும் 18 வயது மருமகளுக்கும் உள்ள தகாத உறவைப் பற்றி வந்துள்ள ஒரு படத்தை 'நம்ம கலாச்சாரம் என்னாவது' 'மக்கள் இதனை புறக்கணிக்க வேண்டும்' என்று வாங்கு வாங்கு என்று தினகரனில் போனவாரம் விமர்சனம். கீழே எந்திரன் பட விளம்பரம் ரஜினி ஐஸ்வர்யாவுடன் :-)//
இதில் என்ன லாஜிக் இருக்கிறது?
ஹரன்பிரசன்னா..
உமக்கு விவஸ்தையே கிடையாதய்யா.
எங்கே வந்து லாஜிக் பார்க்கிறீர்?
லாஜிக் எல்லாம் பார்த்து தான் இங்கே எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறதாக்கும்.
// 'எந்திரன்' திரைப்படத்தைப் பற்றிய எந்தவொரு விஷயத்தையும் திரைவெளியீட்டிற்கு முன்னால் எழுதக்கூடாது என்று முடிவு செய்து வைத்திருந்தேன்//
:-)) சுரேஷ் கண்ணன் உங்களுக்கு தான் ரஜினிய திட்டலைனா கை நடுங்க ஆரம்பித்து விடுமே! படம் வரும் முன்னாடியே இரண்டு பதிவு போட்டு காய்ச்சிட்டீங்க ;-) படம் வந்தவுடன் உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்.. உங்களுக்கு கோவி கண்ணன் மாதவராஜ் போன்றோருக்கு!
தெளிவா சில விசயங்கள சொன்னா , லூசு பசங்களுக்கு கசக்கத்தான் செய்யும் ..... என்னைக்கு திருந்துமோ இந்த ஆட்டு மந்தை கூட்டம்!
//இதில் என்ன லாஜிக் இருக்கிறது?//
60 வயது 36 வயது அழகியுடன் சேருதே அதான் லாஜிக்..
சுரேஷ் சார் ,
அன்னைக்கு இரவே நினைதேன் உங்களிடம் இருந்து ஒரு பதிவு வருமென்று ....,மேலும் மாதவராஜ் பின்னூட்டமும் ! ....,
sir inthapadathoda ovvaru framemum english patahhoda appattamana copy than, irobot, terminator 2,matrum pala padangalilirundu suuttuvitu ulagatarathukku inyage endru vetkamillamal sollikurange
அடடா.. உங்கள மாதிரி ஒருத்தர் இல்லையின்னா..இந்த சமுதாயம் என்ன அகும்?.
இந்த வைரமுத்துவைப் பெரிய ஆள் என்று இன்னமும் நீங்கள் எல்லாம் நம்பிக்கொண்டா இருக்கிறீர்கள்? இவர் டிவியில் தோன்றிப் பேச ஆரம்பித்தாலேயே எங்கள் வீட்டுப்பிள்ளைகள் எல்லாம் தலைதெறிக்க ஓட ஆரம்பித்து நீண்ட நாட்கள் ஆகின்றன. தமிழை இவ்வளவு செயற்கையாக உச்சரிப்பவர்கள் யாரும் இல்லை. கவிஞர் கண்ணதாசனுக்கும் தமக்கும் ஏற்பட்ட லடாய்க்காக அந்த வக்கரிப்புக்கு இவரைப் பயன்படுத்திக்கொள்கிறார் கலைஞர். அதனால்தான் கவிப்பேயரசு என்றெல்லாம் பட்டம் வேறு. இவரை சாதாரண பழனிபாரதியும் நா.முத்துக்குமாருமே ஓரம்கட்டிவிட்டார்கள். ஏதோ கலைஞரின் பாதுகாப்பு இருப்பதால் பந்தாவுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். எந்திரன் பேச்சுக்காக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இவரைச் சரியாக அடையாளம் காணத்தான் போகிறார்கள்.
Sun Tv Vilambaram Thollaithaan thangalinna Unga Vilambaraum adhaivida kodumai thaan..
//ரஜினி என்கிற பிம்பம் இன்றைய வணிக சினிமாவின் உச்சநிலைக் குறியீடு//
//வருங்காலத்தில் அந்த உச்ச நிலையில் ரஜினிக்கு மாற்றாக இன்னொரு பிம்பம் அமையும்//
மிகவும் சரி.
இந்த தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதிப்பதற்காக ஒரு பிம்பத்தை உருவாக்கி அதனை வளர்க்கின்றனர்.
இப்போது ரஜினி சன் பிக்சர்ஸின் அடிமை.
தொழிநுட்ப ரீதியாக ஷங்கர் சில நல்ல விஷயங்களை செய்கிறார் என்ற மாயையை ஜென்டில்மன் படத்தில் கௌதமி காதில் நுழையும் அம்பு ஏற்படுத்த ஆரம்பித்தது. பிறகு 'உடம்பே' இல்லாத பிரபு தேவாவின் ஆடை மட்டும் ஆடுவதாக ஒரு முகாபுலா கற்பனை. அப்புறம் கமலும் கபாலியும் சண்டை போடும் இந்தியன் பட சண்டைகாட்சியில் கிட்டத்தட்ட தரையை ஒட்டி கொண்டு சீறும் ரேஸ் காரின் அடியில் கமல் 'படுத்து எந்திரிப்பார்' பாருங்கள் , பார்க்க கண்கொள்ளாது. அவ்வளவு தொழில் நுட்ப அறிவு, ஷங்கருக்கு.
ரஜினி பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை. கிண்டல் செய்யப்படக்கூட அவருக்கு எந்த தகுதியும் இல்லை.
சன் குழும சாக்கடை தனத்தை மூக்கை பொத்திக்கொண்டு கடக்க வேண்டியிருக்கிறது.
சந்தில் சிந்து படும் ஜால்ரா குழு வேறு..
இந்த அபத்தங்களை சரியான சாட்டை கொண்டு விளாசும் சுரேஷ் கண்ணனுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
\\ரஜினி பற்றி எதுவும் சொல்ல தேவை இல்லை. கிண்டல் செய்யப்படக்கூட அவருக்கு எந்த தகுதியும் இல்லை//
அவர் பேசாமல் இருக்கிறார். எல்லோரும் பேசுகிறீர்கள். பிடிக்கவில்லையென்றால் புறக்கணியுங்கள். மற்றபடி சுரேசின் பதிவையும் மாதவராஜின் பின்னூட்டத்தையும் எதிர்பார்த்தேன்.
//அவர் பேசாமல் இருக்கிறார். எல்லோரும் பேசுகிறீர்கள். பிடிக்கவில்லையென்றால் புறக்கணியுங்கள். மற்றபடி சுரேசின் பதிவையும் மாதவராஜின் பின்னூட்டத்தையும் எதிர்பார்த்தேன்.//
நீங்கள் எதிர்பார்த்தீர்களோ இல்லையோ நான் இந்த வாக்கியத்தை எழுதும்போதே உங்களை போன்றவர்களின் 'எதிர்ப்புணர்வை' எதிர்பார்த்தேன். ரஜினி பேசாமல் இருக்கிறாரா? அவர் போடும் மேக்கப் இல்லா வேடங்களில் இதுவும் ஒன்று என்பதை நீங்கள் உணர நல்ல பார்வையும், அதற்கான அவகாசமும் தேவை.
இது ஒரு ஹாலிவுட் தர படம் என்று பெருமைகொள்ளும் நண்பர்களுக்கு , ஹாலிவுட் ஒரு பெரிய அளவீடு இல்லை. தவிர தொழில்நுட்பத்தை அடிப்படை அறிவில்லாமல் பயன்படுத்தும் ஷங்கரை 'இன்னுமா இந்த ஒலகம் நம்புது ?'
\\அவர் போடும் மேக்கப் இல்லா வேடங்களில் இதுவும் ஒன்று என்பதை நீங்கள் உணர நல்ல பார்வையும், அதற்கான அவகாசமும் தேவை//
OK. If so, he is doing his job. Whats your problem?
நண்பரே .. உங்களை தனிப்பட்ட முறையில் தாக்கவில்லை.. இப்படி விசயம் புரியாமல் கோபப்படும் அனைவரையும் தான் சொன்னேன். பொதுவான தளத்தில் எப்படி பேச வேண்டும் என்பதையாவது கொஞ்சம் கற்றுக்கொள்ளுங்கள். ரஜினியை சொன்னதற்கு என் மேல் பாய்கிறீர்கள். உங்களுக்காக அனுதாபப்படுகிறேன். என் வேலையை நான் பார்த்துகொண்டு தான் இருக்கிறேன். அறிவுறுத்தியதற்கு மிக்க நன்றி..
//'சற்றாவது அறிவுப்பூர்வமாக பேசுகிறார்' என நான் அவதானித்து வைத்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்து, //
உங்கள் நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்ப பிடித்திருக்கு நண்பரே!
Sariyana Mokakai. Nenga Enna Solla Varrenganne Puriyala. Tamil Theriyuma!
நீங்கள் சொல்வது சரி தான் நண்பரே! ஆனால் இது ரஜினியின் ஒவ்வொரு படத்திற்கும் நடப்பது தான், ஒவ்வொரு முறையும் நீங்கள் சொல்வது போல், யாரவது (புத்தி) சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள், ஆனால் இந்த ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் அதிகமாகிறதே தவிர குறையவில்லை. பாருங்கள் நீங்களும் முழு நிகழ்ச்சியை பார்த்திருகிறீர்கள், நானும் (நான் ரசிகன் என்ற ஆவலில் பார்த்தேன்). பிடிக்குதோ இல்லையோ அனைவரையும் பார்க்க வைப்பது எது? படம் வெளியானாலும் இதே கதை தான், படத்தை பற்றி குறை கூறவாவது அனைவரும் பார்ப்பார்கள் :). நீங்களும் ஒரு வகையில் இப்படத்திற்கு விளம்பரம் செயகிறீர்கள்.
ஹரன்பிரசன்னா,
அதில் லாஜிக் இல்லை என்பதை நானும் அறிவேன். ஆனால், சிந்துசமவெளி படத்துக்கான விமர்சனத்திற்கு, பெரிய கலாச்சார காவலர்களாக தினகரன் வேஷமிட்டது வெறுப்படைய வைத்தது. பலசமயங்களில் இந்தப் பத்திரிக்கையில் வரும் தலையங்கமும் வெறுப்பை இப்படித்தான் வெறுப்பை ஏற்ப்படுத்தும்.
எந்திரன் விளம்பரத்தோடு இணைத்தது ரஜினியை தனது மகள் வயது ஒத்த ஒரு பெண்ணோடு (நண்பரின் மருமகளோடு) ஆட விட்டு படமெடுப்பது இவர்களுக்கு கலாச்சாரமாக இருப்பது போல, சிந்து சமவெளி இயக்குஞருக்கு அது கலாச்சாரமாக தெரிகிறது.
இது என்ன சினிமாவில் நடிப்பதை இப்படி அணுக வேண்டுமா என்றால்...கபர்தார் :-)
இதை படிக்கும் போதே தல சுத்துது, கருமத்த பாத்து தொலைச்சிருந்தா ,வாந்தி பேதி புடிங்கிட்டு அடிச்சிருகும்போல.....
நல்ல வேல தப்பிச்சிட்டேன்!!,
அப்பாவி ரசிகனின் 100 ரூவாகாசை அபேஸ்
செய்யத்துடிக்கும் சூப்பர் சொம்புகளை நசுக்கியமைக்கு
பாராட்டுக்கள்
அருமையான பதிவு... இப்பெல்லாம் கலாநிதி மாறனைப் பார்த்தால் செம கோபம் மட்டுமே வருகிறது.... எந்திரனின் இரண்டு விழாக்களையும் பார்த்த பின் ஒரு கேள்வி மட்டுமே என் மனதில் வந்தது.... ஒரு வேலை கலாநிதி மாறன் வாயில் எடுத்து வைத்திருந்தால் கூட இவர்கள் ஏதும் சொல்லியிருக்க மாட்டாங்களோ??
இன்னும் sun pictures -இன் எந்த ஒரு படத்தையும் DVD -லையோ theatre -லையோ பார்த்ததில்லை.... By the Way, லேட்டா பார்த்தாலும பரவால்ல.. நான் padatha DVD-லையே பாத்துக்கறேன்....
வீட்டுக்கு பொருளுடன் ஆட்டோ வரும் என்று தெரிந்தும் தில்லக எழுதிய SKக்கு வாழ்த்துக்கள்.
இருப்பினும் சினிமா வணிகம் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டது என்பதை நியாபகத்தில் கொள்ளவும்.
இன்று முதல் படபிடிப்பு....இன்று முதல் இசை........இன்று முதல் trailer அவள்ளவு தான் .(ஆனாலும் பால் அபிஷேகம்,..........எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்)
ஹாலிவுட்க்கு நிகராக என்று கூறுவது பிரமாண்டமாக உள்ளதை நினைவு படுத்தவே.
சினிமா நட்சத்திரங்கள் ஜால்ரா அடிப்பது அனைத்தும் பயம் கலந்த வரும் காலத்தை நினைத்து, உண்மை அல்ல.
--ரஜினி என்ற பிம்பத்தை பற்றி பேசுவதில் இருந்து, நிங்கள் சுஜாதாவின் "என் இனிய இயந்திர" படித்து விட்டீர்கள் என்று புரிகிறது--
.
.
.
.
60/35 வயது எல்லாம் சொன்னாலும், ரஜினி ரஜினி தான்ங்க. (கதை மாரினாலும், களம் மாரினாலும்...துப்பாகிய தூக்கிட்டு வர james bondஎ ஆஆ பாத்ததுவுங்க தான நீங்க. வெயிட் பண்ணுங்க சாமீ முதல் வரட்டும்........ Be Carefull என்ன சொன்ன.
நிறைய பேருக்கு சன் டிவி மேலும் மாறன் மேலும் உள்ள பொச்சரிப்பு தான் தெரிகிறது. நண்பர் பிரபு ராஜதுரை சொன்னது சரிதான். அம்பானி செய்தால் பிசினஸ் அதுவே மாறன் செய்தால் அசிங்கமா? என்னங்க சார் இது?
பெண்களின் அடிப்படை குணங்கள்
http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post_17.html
Mr Suresh kannan,
I have read ur comments abt endhiran marketing.I'll accept that still some of our indian fans are mad abt their stars.But i dont think there is pblm in the marketing startegy.Nowadays in india evry1 started to give their reviews/comments without having any idea abt wat it is?do u hav any expereince in making/producing/acting movies.Ok let me tel u 1thing,if u open a shop/restaurant u will sell the item within less than mkt price and without pamplet/adv u will run ur shop.marketing s the media to take the product to the ppl.nothing wrong n that.if u like it, buy it otherwise dont go for it.
who the hell r u to comment abt the guy who achieved lot in his life?ok u hav made any marks n ur life?r u hav done any grt job in past.dont thk that iam dye hard rajini fan.i used to watch his movie only in TV.simply just to create fame u hav taken ths subject.that tooo....ur way explanation especially shit....may be u will eat that....but most of us we hav a brain to thk wat it is?
we hav lot of issues to debate or make chg n ths country.plz look & write those issues instead of concentrate on ths.then thr s no diff between politicians and u.
stop make comments on ths.use ur ability towards right cause.
dont delete ths comment.u'll be right critics only if u accept the -ve comments also.so post this comment in ur blog after ur approval.
with regards,
sakthi
//
http://www.youtube.com/watch?v=cATS0HMq_Hw
//
இதை சிலர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருக்கிறார்கள். தமிழர்கள் மானம் ஃபேஸ்புக்கில் எல்லாம் பறக்கிறது.
என்னதான் நான் ஒரு ரஜினி ரசிகன் என்றாலும் இந்த படம் தமிழகத்தின் மிகப்பெரிய ஃபிளாப் ஆனால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். கலாநிதிமாறன் மேல் அவ்வளவு வெறுப்பு வருகிறது.
கலாநிதி மாறனுக்கு ஆதரவாகப் பேசும் அறிவிலிகளே.... தயவு செய்து இதை படியுங்கள்...
http://www.vinavu.com/2010/09/17/boycott-endhiran/
... Thayavu seithu solgiren.... Manasatchi endru onru irunthal Sun Picture-in entha oru padathaiyum theatre-il parkka vendam........
இதற்கு மேல் யோசிக்கத் தெரியாத இவர்கள், இப்போதே இதையெல்லாம் செய்து தீர்த்து விட்டால் படவெளியீட்டின் போது என்ன செய்யப் போகிறார்கள் என்பதுதான் என்னுடைய தற்போதைய கவலை/////////
Same to You....
You reserve for the release.....
I understand your intention, you will be noticed only if you criticize Rajini....
If you have any concern about the society, leave film industry and start pinpointing the stinking areas in the society....
Else you stink.....
அருமை நண்பா!! எமது மன உணர்வுகளைப் பளிச்சென எழுதியமைக்கு நன்றி!! ரஜினியை பிடிக்கும் என்ற போதிலும் இப்படம் தோல்வி உற்றால் என்னை விட மகிழ்ச்சி அடைவது வேறு யாரும் இருக்க முடியாது.
நண்பர் வஜ்ராவின் வேண்டுகோளின்படி அவரது பின்னூட்டம் மட்டுறுத்தலோடு இங்கு:
வஜ்ரா has left a new comment on your post "எந்திரன்: மார்க்கெட்டிங் மாயாஜாலமும் பலியாடுகளும்":
//
அம்பானி செய்தால் பிசினஸ் அதுவே மாறன் செய்தால் அசிங்கமா? என்னங்க சார் இது?
//
அம்பானியின் மாமா என்ன சி.எம்மா ?
அம்பானி 2 தலைமுறையா ரத்தத்தை வியர்வையா சிந்தி சம்பாதிச்ச்துவே, அது பிசினஸ்.
இப்படி மாமாவை வைத்து, போட்டியை ஒழித்துக்கட்டி (கேபிள் வயரை வெட்டி) அடித்து மிரட்டி அம்பானி செஞ்ச அளவுக்கு 10 வருஷத்துல செஞ்சா அது ரவுடித்தனம், சண்டித்தனம் தான். பிசினஸ் இல்ல.
அதைப்பார்த்து தார்மீகக் கோபம் வராத எவனுமே ************
அம்பானியின் மாமா என்ன சி.எம்மா ?
அம்பானி 2 தலைமுறையா ரத்தத்தை வியர்வையா சிந்தி சம்பாதிச்ச்துவே, அது பிசினஸ்.
You were wrong, if you know the real reason why reliance succeeded you wouldn't write like this. Reliance imported machines without paying lot of taxes and edged out competition( aka Bombay dying) with the help of politicians(Mama).
Your articles has a semblance of balanced outrage, but only just that. Beyond that there is nothing.
//
You were wrong, if you know the real reason why reliance succeeded you wouldn't write like this.
//
Ambani succeeded even in a License permit raj. He did what he has to do to succeed like a business man and not like a rowdy. He never had political patronage like Sun family.
You please read the next blogpost by Suresh kannan. He has written very good answers for your questions.
I did comment here after reading the next post only. You can find some differences between Sun & Reliance, but the underlying principle is this, illegal business practices(not businesses) with nexus of politicians.
Boycott Enthiran
http://www.facebook.com/pages/Boycott-Endhiran/109412382452134?ref=mf
வாய் கிழிய பேசற நீங்களும் உங்கள மாதிரி ஆளுங்க தான் மொத நாள் க்யூவல நின்னு அடி வாங்கி சட்டை கிழிஞ்சு, கவுண்டர்ல கெஞ்சி கூத்தாடி டிக்கட் வாங்கி படம் பாத்துட்டு விட்டுக்கு வந்து எந்திரன் குப்பை அதை புறக்கணிங்கன்னு காமடி பண்ணுவீங்க.
you have written the truth behind the business. Endiran is just another business for SUNPICTURES. It has nothing to do with the film.
உங்களுக்கு கருத்து சுதந்திரம் இருக்கலாம், ஆனால்
எல்லோரையும் கோமாளிகள் என்று சொல்ல, யார் அந்த உரிமையை கொடுத்தது
Enthiran- Rich man's RamaNarayanan Movie
padam release aagivittathu ippo enna solla poringa
Post a Comment