இன்றைய தினமணி நாளிதழைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் போது 'ஸ்லம்டாக் மில்லியனர்' படம் பார்க்காதீர்கள்" என்றொரு தலைப்பை அடங்கிய விளம்பரத்தைப் பார்த்தேன். 'சன்டே இந்தியன்' என்றொரு வாரஇதழின் விளம்பரத்தில் அதன் ஆசிரியர் அரிந்தம் செளத்ரி 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தைப் பற்றி வலிமையான மொழியில் எழுதின காரசாரமான விமர்சனக் கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
'இந்தியாவில் இருப்பதைதானே வெளிநாட்டு துரைமார்கள் படத்தில் காட்டியிருக்கிறார்கள்" என்று சப்பைக்கட்டு கட்டும் கனவான்கள் இந்த கட்டுரையை அவசியம் படித்துப் பார்க்க வேண்டும். இந்தியாவிலிருக்கும் குறைபாடுகளை திரைப்படத்தில் சித்தரிப்பதில் தவறில்லை. ஆனால் 'இதுதான் இந்தியா' என்று படமெடுத்து சர்வதேச அரங்கில் முன்நிறுத்தும் முதல் உலக நாடுகளின் அரசியலை நாம் புரிந்து கொள்வது அவசியம்.
இப்போதே இந்தப் படம் குறித்த ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களின் கூச்சல் தாங்க முடியவில்லை. ரஹ்மானின் பெயர் இந்தப்படத்துடன் சம்பந்தப்பட்டிருப்பதாலேயே இது இந்தியாவில் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இல்லையென்றால் பத்தோடு பதினொன்றான ஆங்கிலப்படங்களுடன் கலந்திருக்கும்.
ஏற்கெனவே கமல் சொல்லியிருப்பது போல 'ஆஸ்கர் விருது' என்பது அமெரிக்கத்தரம்தான். அதற்காக நாம் ஏன் இவ்வளவு மாரடிக்கிறோம் என்று தெரியவில்லை. 2006-ம் ஆண்டின் சிறந்த படமாக தேர்வு பெற்ற 'The Departed' திரைப்படம் ஒரு குப்பை. அதன் இயக்குநர் Martin Scorsese திறமையானதொரு இயக்குநர்தான். ஆனால் இந்த குறிப்பிட்ட படம் அவரது முந்தைய சிறந்த படங்களுள் ஒன்றான 'Taxi driver'-ன் தரத்தோடு ஒப்பிடும் போது ஒன்றுமேயில்லை.
அரிந்தம் செளத்ரியின் ஆங்கிலக் கட்டுரையைப் படிக்க இங்கே செல்லவும்.
ஆனால் ஒன்று. இந்த மாதிரியான விமர்சனக் கட்டுரைகளும் குறிப்பிட்ட படத்தைப் பார்க்கும் ஆவலைத்தான் அதிகப்படுத்தும் என்று தோன்றுகிறது.
suresh kannan
13 comments:
//2006-ம் ஆண்டின் சிறந்த படமாக தேர்வு பெற்ற 'The Departed' திரைப்படம் ஒரு குப்பை. அதன் இயக்குநர் Martin Scorsese திறமையானதொரு இயக்குநர்தான். ஆனால் இந்த குறிப்பிட்ட படம் அவரது முந்தைய சிறந்த படங்களுள் ஒன்றான 'Taxi driver'-ன் தரத்தோடு ஒப்பிடும் போது ஒன்றுமேயில்லை.
//
Taxi driver சிறந்த படம் தான் அதற்காக Departed குப்பை என்று சொல்லாதீர்கள் ப்ளிஸ்.
IIPM பிராட் அரிந்தம் சவுத்ரி இப்படி பரபரப்புக்காக எதையாவது எழுதுவது வழக்கம்தான். இதை எல்லாம் படிக்காமல் ஒதுக்குவதே உத்தமம்.
அவர் சொன்னதை போல அந்த படத்தை நிராகரிக்க வேண்டும்.
AR ரெஹ்மான் சம்பந்த பட்டு இருப்பதால் தான் இவ்வளவு பரபரப்பும்.
இதை விட தமிழில் எவ்வளவு ஜீவன் உள்ள பாடல்கள் தந்து இருக்கிறார்.
இருந்தாலும் ரெஹ்மானுக்கு Oscarகிடைத்தால் மகிழ்ச்சியே.
Departed நல்ல படம் தாங்க.
முட்டாள் தனமான வாதம். 'இதுதான் இந்தியா' என்று படத்தில் எங்கும் சொல்லப்படவில்லை அதே போல் படத்தைப் பார்த்து நீங்களும் 'இதுதான் இந்தியா' என்று எண்ணுவது தவறாகும் "இதுவும் இந்தியா" என்ற கண்ணோட்டத்தில் பார்க்கவும். இப்படத்தில் காட்சிப்படுத்திய ஒரு சில உண்மைகள் "பம்பாய்" படத்தில் காட்ச்சிப்படுத்திய அளவிற்கு கூட இல்லை. இப்படத்திலும் சரி "பம்பாய்" படத்திலும் சரி நீங்கள் கூறிய உலக நாடுகளின் அரசியல் எங்கு வருகிறது என்று தெரியவில்லை. அப்படியே உலக நாடுகள் இது தான் இந்தியா என்று நினைத்தால் என்ன ஆகப்போகிறது மிஞ்சி மிஞ்சிப் போனால் சுற்றுலா பயணிகளின் வருகையும் சுற்றுலா வருமானம் ஆகியவை குறைய வாய்ப்பு இருக்கிறது பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணுவதற்கு பதில் நம் நாட்டில் உள்ள ஏற்ற தாழ்வுகளை சரி செய்வதற்கான செயல்ப்பாட்டில் இறங்கலாம் .இதில் நீங்கள் கூறிய உலக நாடுகளின் அரசியலை விட அரிந்தும் சௌதரி போன்ற ஆட்களின் தேவைஅற்ற இன்னும் பழம் பெருமை பேசும் அங்கலாய்ப்பே அதிகம் தெரிகிறது. அரிந்தும் சௌதரி கால் பக்கம் விளம்பரத்திற்கு செய்த செலவை ஒரு குப்பத்து வாசியின் வாழ்வின் மேம்பாட்டிற்கு செலவு செய்து இருக்கலாம் . ஆங்கில தொலைக்காட்சி ஊடகங்களின் கூச்சல்களை கண்டுக்கொள்ள வேண்டாம். ஜப்பான் அரசு நாம் ஊட்டியில் போடும் குப்பையை நாம் அள்ள நிதி ஒதுக்குகிறது இது போன்ற விளம்பர குப்பைகளை அந்த குப்பையோடு சேர்த்துப் போட்டு விட்டு உங்கள் வேலையைப் பார்க்கவும் இல்லையென்றால் ஏதாவது companyஇல் vacancyஇருந்தால் எனக்கு தெரியப்படுத்தவும்
Naanum yaaro urupadiyanavanga idha eludhirukkangannu paatha,ada, indha veena pona Arindham Chaudri thaan. Have you seen his 'fall admissions' advertisement in the newspapers for a dumb institute like IIPM? Where in India do we have a fall season? Ivan mattum kevalama, oru stupid publicitykaga West a copy adikalam, but oru unmaya sonna adhai othukuda maattom.
As someone said, Arindham does not deserve an attention.
unmai kirathunala parka kudathu nu sollrathu eppadi sariyagum....ippathanga kamal osgar venamnu solraru munnadi avarum asai pattaru... oru velai kidaikathu ninachu pechai mathidaro
அமிதாப், அரிந்தம்,
ஜெமோ, இப்ப நீங்கள் இதைவைத்து கற்றுக்கொடுக்கிறீர்கள் போல கவனம் ஈர்க்கும் உத்தியை என்றெடுத்துக் கொள்ளலாம்.
india-va pathi eppadi evan padam eduththa namakkenna?
It may be a mediocre film, I have not seen the film. But Jeyamohan's arguments are flawed. This IIPM guy lists foreign universities and professors to sell his programs offered by his institute.Jeyamohan writes nonsense without even bothering to know who is writing what in English in India and elsewhere. Perhaps he envys those who write in English for the money and fame they get. If he can make money by writing about beggars in
Palani and selling that to Bala
to make a film and more money by writing dialog, what is wrong with
slumdog millionaire or the novel.
Ultimately all of them make money by writing about poor and by making films about poor and beggars. How much of that money has
been given back to the poor, as
Meera Nair did with the money she
got from Sallam Bombay. Has Jeyamohan done any such thing.
//ஆனால் 'இதுதான் இந்தியா' என்று படமெடுத்து சர்வதேச அரங்கில் முன்நிறுத்தும் முதல் உலக நாடுகளின் அரசியலை நாம் புரிந்து கொள்வது அவசியம்.//
உலக நாடுகளின் அரசியலை? இதில் என்ன அரசியல் இருக்குன்னு தெரியல. ரொம்பத்தான் சிந்திக்கீறீங்க.
//அதற்காக நாம் ஏன் இவ்வளவு மாரடிக்கிறோம் என்று தெரியவில்லை.//
ஸ்டேட் லெவல்ல prize வாங்குறதுக்கும் நேஷனல் லெவல்ல prize வாங்குறதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு.
இது போன்ற விமர்சனங்களை தயவு செய்து ஊக்குவிக்காதீர்கள்.
படம் பார்க்ககூடாது என்று சொல்லும் அளவுக்கு மோசமான படமில்லை.
ஏ.ஆர் ரகுமான் இதைவிட நல்ல இசையெல்லாம் அமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இவ்வளவு சிலாகிக்கும் அளவுக்கு ஒன்றும் இசை அமைத்துவிடவில்லை.
இதுவும் இந்தியா என்று பார்க்கவேண்டும், பாராட்டவேண்டும், சீராட்டிப்பாடவேண்டும் என்று இந்த குப்பையைச் சொல்பவர்கள் எல்லாம் இந்தியாவின் ஏழ்மையைக் கொண்டாடுபவர்கள்.
இந்தியா இப்படியெல்லாம் குப்பையாகவும், பீயில் விழுந்து எழும் சிறுவர்களாலும் ஆனது. கண்ணில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றும் கொடியவர்க்ளால் ஆனது என்பதெல்லாம் நாம் ஒத்துக் கொண்டு கொண்டாடவேண்டும். அப்படி ஏழ்மையைக் கொண்டாடாதவர்கள் அடிப்படைவாதிகள், இந்துத்வாவாதிகள்.
இந்தியாவில் எங்கும் வியாபித்திருக்கும் ஏழ்மையைக் கொண்டாடுவதை விட்டு சந்திரனுக்கு ராக்கெட் அனுப்பு கனவு எல்லாம் காண அருகதையற்றவர்கள் இந்தியர்கள் என்ற உண்மைய பொட்டி அடித்தார் போல் வெள்ளைக்கார துரை சொல்லியிருக்கிறார். அக்கருத்தை சிரமேற்கொண்டு பரப்புவதில் தான் பிறவிப்பயன் அடைய முடியும் என்று நம்பாதவர்கள் அடிப்படையில் அடிப்படைவாதிகள்.
celebrate india's poverty, celebrate slumdog millionaire. Long live Indian slums and long live indian dogs.
//
As someone said, Arindham does not deserve an attention.
//
Arindham deserves as much attention as slumdog millionaire.
He is not your regular throw a penny columnist or rent a cause celebrity like Suzanne Roy. He does not write for money. Thats what makes his opinion all the more reliable.
All the media columnist are up in arms against bloggers as they are just taking away the wind out of their sail. A very recent example is Barkha dutt Vs C.Kunte (blogger).
So, who deserves what is not determined by few elite columnists of Mainstream media.
the departed - kuppai - is too harsh a comment. I hink the Departed is a very good movie
Post a Comment