Wednesday, December 24, 2008

நிர்வாணமாக நின்ற ஆசிரியர்கள்

மறுபடியும் ஒரு நீயா நானா நிகழ்ச்சியைப் பற்றி எழுத வேண்டுமா என்று தோன்றியது. என்றாலும் அதன் தீவிரம் காரணமாக இதை எழுதித்தான் ஆக வேண்டியிருக்கிறது. கடந்த வார நிகழச்சியில், 'ஆசிரியர்கள் தங்களின் போதிக்கும் திறனை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்கிறார்களா, அல்லது இருக்கிற குறைந்த பட்ச அறிவை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார்களா?' என்ற தலைப்பில் விவாதம் நிழந்தது. மாணவர்கள் எப்படி வகுப்பில் நிகழ்ந்து கொள்வார்கள் என்பதை ஆசிரியர்கள் சில நடித்துக் காட்டினர். மாணவர்களும் அவ்வாறே. குறைந்த பட்ச ஆங்கில அறிவு இல்லாமல் கூட சில ஆசிரியர்கள் இருப்பதை மாணவர்களில் சிலர் சுட்டிக்காட்டினர். 'எங்களிடம் இருக்கிற ஞானத்தை மாணவனிடம் வழங்குவதற்கு மொழி பெரிய தடை கிடையாது' என்று ஆசிரியர் சார்பில் ஒருவர் கூறினார்.

ஆனால் என்னை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் பிறகுதான் நடந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத், இரண்டு சிறப்பு விருந்தினர்களை சபையில் அமர வைத்து ஆசிரியர் குழுவினரிடம் 'அவர்கள் யார்'? என்று அடையாளம் காட்டச் சொன்னார். நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த நானே வெட்கப்படும்படியாக அங்கிருந்த அனைத்து ஆசிரியர்களும் மெளனம் காத்தனர். இத்தனைக்கும் அந்த இரண்டு சிறப்பு விருந்தினர்களும் கல்வித்துறையை சேர்ந்தவர்கள்தான். இருந்தும் ஒரு ஆசிரியருக்கும் அவர்களைப் பற்றிய அடையாளமோ தகவலோ தெரியவில்லை.

சிறப்பு விருந்தினர்கள் வந்து அமரும் போதே அவர்களைப் பற்றி என் மகளிடம் கூறிக் கொண்டிருந்தேன்.

Photobucket

ஒருவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவர். 'அந்த காலத்தில் காப்பி இல்லை', 'நாவலும் வாசிப்பும்' 'முச்சந்தி இலக்கியம்' போன்ற சில முக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை எழுதினவர். குறிப்பாக 'புதுமைப்பித்தனின் சிறுகதைகளை' கவனமாக தொகுத்து செம்பதிப்பை தயாரித்தவர். பாரதியின் சில அபூர்வ படைப்புகளை லண்டனிலிருந்து கொண்டு வந்தவர். பாரதியின் கட்டுரைகளை வ.உ.சியின் கடிதங்களை தொகுத்தவர், சு.ராவின் ஜே.ஜே.சில குறிப்புகள்' புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பவர்.

Photobucket

இன்னொருவர் பேராசிரியர் கல்யாணி.

மனித உரிமைப் போராளி. அரசு கல்லூரியில் பேராசிரியராக பல வருடங்கள் பணியாற்றியவர். 'மக்கள் கல்வி இயக்கத்தை நிறுவியவர். பழங்குடிகளுக்காகவும், பத்மினி, அத்தியூர் விஜயா போன்றவர்களின் மீது நிகழத்தப்பட்ட வன்முறைகளுக்காக களத்தில் இறங்கி போராடியவர், வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது மீட்பு தூதுவர் குழுவில் இடம்பெற்றவர்.


இவ்வளவு தகவல்கள் கூட சொல்ல வேண்டாம், அவர்கள் யார் என்பது கூட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. பிரபலமான முகம் என்கிற வகையில் சலபதியையாவது தெரியாமலிருக்கலாம். பேராசிரியர் கல்யாணியின் முகத்தை வீரப்பன் கடத்தலின் போது பத்திரிகைகளில் நிச்சயம் பார்த்திருக்க வேண்டும்.

இது மாத்திரமல்ல, சமீபத்தில் புக்கர் பரிசு பெற்ற இந்திய நாவலாசிரியரைப் பற்றின கேள்விக்கும் யாரிடமும் பதிலில்லை. தங்கள் துறை சார்ந்த புத்தகங்களையே அதிகம் படிப்பதாக சில ஆசிரியர்கள் சமாளித்தனர். சமீபத்தில் எந்த புத்தகம் படித்தீர்கள்? என்ற கேள்விக்கு ஒருவர் காப்மேயரின் சுயமுன்னேற்ற நூலைப் பற்றிக் கூறினார். ஏழாம் வகுப்பிலேயே இதை தாம் படித்து விட்டதாகக் கூறி கோபிநாத் அவர் மூக்கை உடைத்தார்.

()

ஆசிரியர்களின் தகுதியின் போதாமை குறித்து ஏற்கெனவே சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்த சலபதி, 'நான் எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக இருக்கிறது' என்றார்.

பேராசிரியர் கல்யாணி தன்னுடைய மாணவப் பருவத்தில் ஆசிரியரிடம் பெற்ற ஒரு தண்டனையை நினைவு கூர்ந்த போது உணர்ச்சி மேலிட்டு தொடர முடியாமல் அழுதார். ஒரு வயோதிகரின் உருவம் மறைந்து டிரவுசர் போட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுவனையே அப்போது நான் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு வருடங்கள் கடந்தும் அதை நினைவு கூர்கிற போது அவர் அழுகிறார் எனும் போது குறிப்பிட்ட சம்பவம் அவரை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அடுத்த ஜென்மங்களில் நம்பிக்கையில்லை எனினும் 'அப்படியிருந்தால் எல்லா ஜென்மங்களிலும் ஆசிரியர் பணியாற்றவே விரும்புகிறேன்' என்ற போது மிகவும் நெகிழ்வாக இருந்தது.

ஊதியம் தொடர்பான போராட்டங்களில் மாத்திரம் தீவிரமாக இயங்கும் ஆசிரியர் பெருமக்கள், தங்களுடைய தேசத்தின் அடுத்த தலைமுறையை ஞானம் மிக்கவர்களாக மாற்றி சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும் என்கிற அடிப்படை பொறுப்புணர்ச்சியை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றே நான் கருதுகிறேன்.

suresh kannan

37 comments:

நட்புடன் ஜமால் said...

தலைப்பே பயமாக்கீது.

Anonymous said...

அதில் எனக்கு உடன்பாடில்லை.கல்யாணி,சலபதி,புக்கர் எழுத்தாளரைப் பற்றி அறியாமலிருந்தது வருத்தத்திற்குரியது என்றாலும், அதனால் குற்ற உணர்ச்சி கொள்ளவோ, ஆசிரியர் தொழிலுக்கு அவமானம் என்றோ நான் கருதவில்லை. அதுமாதிரியான தோற்றத்தை கோபி உருவாக்கியிருந்தார். சிலருக்கு இலக்கியத்தில் ஆர்வம் என்பதால் அந்த மாதிரியான தகவல்களைத்தெரிந்து வைத்திருக்கிறீர்கள். எல்லோரும் அப்படியிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை..கல்யாணியைப்பற்றி தகவல் எல்லோருக்கும் தெரிந்திருக்கக்கூடும். அவரது முகம் பெரும்பாலோர்க்குப்பரிச்சயமில்லை. மொத்தத்தில் கோபியின் பார்வையில் ஆசிரியர் என்றால் 'மானாட மயிலாட' பார்க்கக்கூடாது...லைப்ரரியிலும், புத்தகங்களிலும் மூழ்கி அறிவை வளர்த்துக்கொண்டிருக்கவேண்டும்.

கல்வெட்டு said...

I too have concern about the nowadays teachers. But if you think reading few story books and knowing kalyani is the outside world I pity for you :-(

There are different domains in the world. Everyone thinks knowing their domain is the outside world.

If I ask you few things outside of elakiyam and cinema you may fail in my test. If you ask me who is sujataha then I will fail in your test that doesn't mean we are failed in our profession. Also it doesn't mean that we did not read outside.We choose our pick that is it.

Teaching is art. Gopi and you could not identify the teachers. Gopi brought bunch of few jokers thinking that they are teacher. Just because they get paid for teaching doesn't mean they are teachers. Gopi asked about the Hindu paper center page. He thinks reading Hindu paper center page is outside knowledge. So Dinathanthti center page is not worth ?

Gopi can bring any group of people and ask few questions and make them look like நிர்வாணம் in front of others. Ex: Bring few police A.C and ask world crime question. If they they will fail in the test . Happily you can say there are not good cops.

Unknown said...

சார்,
எல்லாம் சரிதான் ஆனால் கோபி தன் எல்லையை மீறி “அல்டி”க்கொண்டார்.
ஜெய மோகனனத் தெரியுமா? என்றார்.

நல்ல வேளை “பெஞ்ச்” மீது ஏறி நிற்க சொல்லவில்லை.

சரி கோபிக்கு எழுத்தாளர் எஸ்.வி.வியை தெரியுமா? “Wisdom" அல்லது “Champak" போன்ற பாரம்பரிய பத்திரிக்கைகள் ஆசிரியர் பெயர் தெரியுமா?

BBCயின் தலமை நிருபர் பெயர் தெரியுமா?

பட்னம் சுப்பய்யர் தெரியுமா? வி.தக்‌ஷிணமூர்த்தி என்பவர் யார் என்று தெரியுமா?


ஞானியும் படகுக்காரனும் கதை கோபிக்கு தெரியுமா?தெரிந்தால்

கல்யாணியையும்,வெ.சலபதியையும்
தெரியுமா என்று கேட்டிருக்க மாட்டார்.

PRABHU RAJADURAI said...

It seems you are overreacting. I donot know about the tv program...however I find that the context, from what you said is in very bad taste.

manasu said...

கோபி அன்று கொஞ்சம் ஓவர்தான்.

Sridhar Narayanan said...

பேராசிரியர் கல்யாணியைப் பற்றி எனக்கு தெரிந்தாலும் டிவியில் பார்த்த பொழுது கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எனக்கு மிகவும் ஆச்சர்யமான விசயம் ‘சமீபத்தில் நீஙகள் படித்த புத்தகம் எது’ என்ற கேள்விக்கு அசாத்தியமான மௌனம் நிலவியது. அதிலும் ஒருவர் மைக்கை பிடித்து சொன்ன புத்தகங்கள் - கோப்மேயர் மற்றும் பாப்பியான். அதையும் அவர் ’பாப்பில்யான்’ என்று தவறாக உச்சரித்தார். இந்த இரண்டு புத்தகங்களும் குமுதத்தில் பல வருடங்கள் முன்னர் தமிழ்படுத்தி (ராகிரங்கராஜன்) வெளியிட்டிருந்தார்கள். அதனால் அவர் குமுதம் தாண்டி வேறு பத்திரிகைகளை படிக்காமலே இருந்திருக்க வாய்ப்புண்டு.

அட தங்கள் துறை சார்ந்த ஜர்னல் கூட யாரும் சொல்லவில்லை என்பதை கேட்க கொடுமையாக இருந்தது.

முக்கியமாக ‘நீயா / நானா’ நிகழ்ச்சியின் ஃபார்மெட் எனக்கு பிடித்த விசயம். ஆனால் கோபி நிறையவே அமெச்சூராக நடந்து கொள்கிறார் என்பதால் கொஞ்சம் அலுப்புதான் வருகிறது.

ரவி said...

தமிழ்மணம் அட்மின் : யோவ் இந்த நிர்வாணம் அப்படீங்கற வார்த்தையை பில்டர்ல ஆட் பண்ணுடே...

ரவி said...

///உடன்பாடில்லை.கல்யாணி,சலபதி,புக்கர் எழுத்தாளரைப் பற்றி அறியாமலிருந்தது வருத்தத்திற்குரியது என்றாலும், அதனால் குற்ற உணர்ச்சி கொள்ளவோ, ஆசிரியர் தொழிலுக்கு அவமானம் என்றோ நான் கருதவில்லை///

நல்லவேளை...சரியாக சொன்னீங்க...

மூனாப்புக்கு எடுக்கற ஆசிரியர் எல்லா கருமத்தையும் கரைச்சு குடிச்சிருக்கனும் என்ற தட்டயான பார்வையோடமைந்த இந்த பதிவின் உள்ளடக்கத்தை நீங்களாவது எதிர்த்தீங்களே...

நல்ல பண்பாடும் கலாச்சாரமும் நல்ல எண்ணங்களும் தூய உள்ளமும் இருக்கும் எவ்வளவோ ஆசிறியர்கள் சிற்றிலக்கிய புத்தகங்களை எல்லாம் பிரித்து மேய்வதில்லைதான்...

ஒய்வு நேரத்தில் அவர்கள் குமுதமும் ஆனந்தவிகடனும் படித்தால் போதும்...

அவர்களாலும் நல்ல மாணவர்களை உருவாக்கமுடியும்...

நீங்க பதிவில் சொல்லியிருக்கும் இருவரையும் எனக்கும் தெரியாது...

என்னை நீங்கள் முட்டாள் என்று கூட சொல்லிக்கொள்ளலாம் அல்லது நிர்வானமாக நிற்பதாக கூட சொல்லிக்கொள்ளலாம்...!!!

SurveySan said...

அந்த நிகழ்ச்சியில் கோபிநாத், எல்லை மீறியதாகத் தான் எனக்கும் தோன்றியது.

ஆசிரியர் என்ற பெயரில் சிலரை கூட்டிக் கொண்டு வந்து, கோமாளி ஆட்டம் நடந்தது.

எங்க வாத்தியாரை கூட்டிக் கொண்டு வந்திருந்தால், நிகழ்ச்சியே தலைகீழா போயிருக்கும்.

சில பிரபலங்களைத் தெரியாதவங்களுக்கு வெளி விஷயம் தெரியல என்பதெல்லாம் அபத்தம்.

பேரா.கலியாணியின் "அப்படியிருந்தால் எல்லா ஜென்மங்களிலும் ஆசிரியர் பணியாற்றவே விரும்புகிறேன்" was genuinely nice statement.

சொல்லிக் கொடுப்பது ஒரு கலை. சொல்லிக் கொடுக்கப்படும் சப்ஜெக்ட் பத்தி எல்லா விஷயமும் முழுசா தெரியாமலே கூட, அதை மத்தவங்களுக்கு எளிமையா புரிய வைக்க முடியும்.

பொத்தாம் பொதுவா, எல்லா ஆசிரியர்களும் இப்படிதான்னு சொல்வதெல்லாம் சில்லரைத்தனமா இருந்தது.

Anonymous said...

தலைப்பினை பார்த்திட்டு பயந்துட்டம்
ஓ இதுதான் விசயமா

sri said...

ஆசிரியர்கள் என்பவர்கள் அனைத்து அறிந்து இருக்க வேண்டும் என்பது அவசியம் என்றாலும் கட்டாயம் இல்லை.தெரியாத விசயத்தை அன்றைய நிகழ்ச்சியில் தெரி்ந்து கொண்டு இருப்பார்கள்.அதற்காக அறிவு ஜீவி போல் எழுத வ்ந்து விட்டீர்களா? கற்றது கை மண் அளவு

sri said...

ஆசிரியர்கள் என்பவர்கள் அனைத்து அறிந்து இருக்க வேண்டும் என்பது அவசியம் என்றாலும் கட்டாயம் இல்லை.தெரியாத விசயத்தை அன்றைய நிகழ்ச்சியில் தெரி்ந்து கொண்டு இருப்பார்கள்.அதற்காக அறிவு ஜீவி போல் எழுத வ்ந்து விட்டீர்களா? கற்றது கை மண் அளவு

sri said...

ஆசிரியர்கள் என்பவர்கள் அனைத்து அறிந்து இருக்க வேண்டும் என்பது அவசியம் என்றாலும் கட்டாயம் இல்லை.தெரியாத விசயத்தை அன்றைய நிகழ்ச்சியில் தெரி்ந்து கொண்டு இருப்பார்கள்.அதற்காக அறிவு ஜீவி போல் எழுத வ்ந்து விட்டீர்களா? கற்றது கை மண் அளவு

sri said...

ஆசிரியர்கள் என்பவர்கள் அனைத்து அறிந்து இருக்க வேண்டும் என்பது அவசியம் என்றாலும் கட்டாயம் இல்லை.தெரியாத விசயத்தை அன்றைய நிகழ்ச்சியில் தெரி்ந்து கொண்டு இருப்பார்கள்.அதற்காக அறிவு ஜீவி போல் எழுத வ்ந்து விட்டீர்களா? கற்றது கை மண் அளவு

enRenRum-anbudan.BALA said...

'சூடான இடுகை'களுக்கு இது ஒரு மிக நல்ல முயற்சி என்பதை தெரிவித்துக் கொள்ளும் நேரத்தில், நீங்கள் எழுதியிருப்பது போல ஆசிரியரின் பொது அறிவு அதள பாதாளத்தில் இருக்கும் சங்கதி கவலைக்குரியதே!

ஒரு விஷயம், ஒரு ஆசிரியர் தனது சப்ஜெக்டில் கெட்டிக்காரராகவும், அதில் தனது அறிவை மேம்படுத்திக் கொள்பவராகவும் இருந்தால் கூட பரவாயில்லை என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும், ஓவராக இலக்கியவாதிகள் எல்லாரையும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதீதம் !

enRenRum-anbudan.BALA said...

இன்னொரு விஷயம், கோபி என்ற அந்த முட்டாள் showman தன்னை அதிமேதாவி என்று எண்ணிக் கொண்டு ஆசிரியர்களை அவமதிப்பதை ஏற்க முடியாது :-( அந்த ஆளுக்கு பேசுவதைத் தவிர வேறு ஏதாவது தெரியுமா என்பது சந்தேகத்துக்குரியது

குப்பன்.யாஹூ said...

இங்கிலாந்தில் எப்போதும் ஆசிரியர்கள் புத்துணர்வு பயிற்சி, கருத்தரங்கு, கூத்து பட்டறை நடக்கிறது.

நம் நாட்டிலும் அதை தொடங்க வேண்டும், ஆசிரியர்க்களும் அவ்வப்போது தங்கள் அறிவை, விஷய ஞானகலை புதுபித்து கொள்ளல் வேண்டும்.

அதே போல ஆசிரியர்கள் தொழிழ் நிறுவனங்கள், ஆராய்ச்சி சாலிகள் போன்றவற்றிக்கு மாணவர்களுடன் அடிக்கடி விஜயம் செய்ய வேண்டும், அப்போதுதான் (theory meets with practice)

என் காலத்தில் ஆசிரியர்கள் வீடே ஒரு நூலகம் போல காட்சி அளிக்கும், அந்த அளவிற்கு புத்தகங்கள், பத்திரிகைகள், கட்டுரைகள்..

அரசும் இதற்க்கு உதவ வேண்டும். பெற்றோர் சங்கங்களும் (பெற்றோர்களாகிய நாமும் இதை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களிடம் கூற வேண்டும்)


குப்பன்_யாஹூ

sarath said...

கட்டுரை எனக்கு உடன்பாடில்லை. செய்யும் தொழில் திறனும், நேர்மையும் கொண்ட ஆசிரியர் வேறு எதைப் பற்றியும் அறிந்து இருக்க அவசியம் இல்லை. என் கடமை கற்றலும் கற்பித்தலும்.
என் துறை புதிய ஆய்வுகளில் என்னை புலமை பெற முயல்வது.

sarath said...

கட்டுரை எனக்கு உடன்பாடில்லை. செய்யும் தொழில் திறனும், நேர்மையும் கொண்ட ஆசிரியர் வேறு எதைப் பற்றியும் அறிந்து இருக்க அவசியம் இல்லை. என் கடமை கற்றலும் கற்பித்தலும்.
என் துறை புதிய ஆய்வுகளில் என்னை புலமை பெற முயல்வது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அப்டுடேட்டா இருக்கனும்னு நினைக்கிறது சரிதான் அதுக்காக இப்படி எல்லாம் குவிஸ் வைக்கவேண்டியதில்லை.. கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவுங்கறது மாதிரி.. எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டுத்தான் இந்த வேலைக்கு போகனும்ன்னு நினைச்சா யாருமே யாருக்கும் சொல்லிக்கொடுக்கவே முடியாதே.. என்னவோ போங்க.. அந்த நிகழ்ச்சியில் வந்த ஆசிரியர்களுக்காக நான் வருந்துகிறேன்..:(

சாணக்கியன் said...

சுரேஷ்,

பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு போதுமான திறனோ தொழில்பக்தியோ இல்லைதான். ஆனால் அதை நிறுவ நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்கள் நியாயமாகப்படவில்லை. வேங்கடாசலபதியை பற்றி நானும் படித்திருக்கிறேன். ஆனால் அவர் புகைப்படத்தைக் காட்டி அடையாளம் காட்டச் சொன்னால் சட்டென்று நினைவுவராது. எனக்கு சிலரைத்தெரியும் ஆனால் அவர்களின் பெயர் தெரியாது.

அவ்வாசிரியர்களின் திறனை சோதிக்க அவர்கள் பாடம் எடுக்கும் துறையில் சில கடினமான கேள்விகளை அல்லது சமீபத்திய முன்னேற்றங்களை கேட்டிருந்தாலே குட்டு வெளிப்பட்டு இருக்கும்.

கானகம் said...

இவ்வளவு தூரம் போயிருக்க வேண்டாம். ஆனால் இன்றைய ஆசிரியர்களின் நிலைமை (குறிப்பாய் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வகுப்பு எடுப்பவர்கள்) மிகவும் மோசம். எனக்குத் தெரிந்த எங்கள் ஊர் ஆசிரியர் இரண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கிறார். எங்கள் ஊரின் பிரபல பள்ளியும் கூட. இந்தியாவின் முதலமைச்சர் யார்?? தமிழ்நாட்டின் பிரதமர் யார் என்று கேட்டால் கூட அரை நிமிடம் கழித்துத்தான் ஏய் அதெப்படி தமிழ்நாட்டுக்கு பிரதமர் வரும்.. முதலமைச்சர்தான என்பார்கள்.

கேட்பதற்கு நகைச்சுவையாய் இருப்பதற்காக இதை சொல்லவில்லை. எங்கு வேண்டுமானாலும் போய் சோதித்துக்கொள்ளலாம். இதுதான் இன்றைய ஆசிரியர்களின் நிலை. அடிப்படி பொது அறிவு என்பது அறவே அற்ற ஒரு குழு இன்றைய ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் குழு. மேல் நிலைப்பள்ளி குறித்து அவ்வளவாய் கவனித்ததில்லை. எனவே கருத்து இல்லை.

உடனடியாக பழைய முறையான தினமும் செய்தித்தாள் வாசித்தல், பள்ளியின் அறிவிப்புப்பலகையில் அன்றைய செய்திகளைப் போடுதல். பிற புத்தகங்களைப் படிக்க ஊக்குவித்தல், கலந்துரையாடச்செய்தல் மற்றும் இன்னபிற முயற்சிகளில் மாணவர்களின் பொது அறிவை வளர்க்காவிட்டால் மெக்காலேவை குறைசொல்ல நமக்கு அருகதையற்றுப்போய்விடும்.

இனிமேல் இந்த " சாரு வீட்டு கழிப்பறை," நிர்வாணமாய் நின்ற ஆசிரியர்கள் போன்ற தலைப்புக்கள் வேண்டாமே.

ஜெயக்குமார்

Pradeep said...

எல்லாருக்கும் எல்லாம் தெரிய வேண்டும் என்று அவசியம் இல்லை. சிலருக்கு இலக்கியத்தில் ஆர்வம் , சிலருக்கு மறற விசயங்களில் ஆர்வம். ஆக , தான் தெரிந்திருக்கும் அனுபவ அறிவை மற்றவர்களுக்கு உணர வைத்தால் அதுவே ஆசிரியர்களுகு போதுமானது.

butterfly Surya said...

நல்ல பதிவு..

வாழ்த்துக்கள்..

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

அதிகம் பேரைச் சென்று சேர வேண்டும் என்கிற ஆர்வத்தில் வைத்த பதிவின் தலைப்பு சற்று அதீதமானதுதான் என்று உணர்கிறேன்.
(அப்படி வெச்சாதானே படிக்கறீங்க):-)

ஆனால் பதிவின் உள்ளடக்கத்தில் என்னுடைய நிலைப்பாடு அப்படியேதான் இருக்கிறது. நீதி,காவல்,பத்திரிகை துறைகளைப் போல ஆசிரியர் துறையும் சமூகத்தில் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய துறை என்பதில் நமக்கு மாற்றுக் கருத்துகளே இருக்க முடியாது என்று நம்புகிறேன். நான் முன்னமே குறிப்பிட்ட மாதிரி நம்முடைய தேசத்தின் வருங்கால வாக்காளார்களை மிகுந்த ஞானத்தோடு சுயசிந்தனையோடும் சமூகத்திற்கு அளிக்க வேண்டிய கடமை நிச்சயம் அவர்களுக்கு இருக்கிறது.

சுயசிந்தனை என்பதே பாவமாகி விட்ட நம் மாணவ சமூகத்தில் சொல்லிக் கொடுத்ததை அப்படியே வாந்தியெடுப்பவன்தான் சிறந்த மாணவன் என்கிற நம் கல்வித் திட்டத்திலேயே குறை இருக்கிறது.

அந்த கல்வித் திட்டத்திலேயே ஊறிப் போயிருக்கும் ஆசிரியர்களும் (பெரும்பாலானவர்கள்) தங்கள் சிலபஸை முடிக்க வேண்டிய கட்டாயத்திலேயே தங்கள் வகுப்புகளை நடத்துகின்றனர். தாங்கள் சொல்வது மாணவர்களுக்கு புரிகிறதா என்பது பற்றிக் கூட அவர்களுக்கு கவலையில்லை.

தங்கள் துறைச் சார்ந்த கல்வி தவிர (பலர் அதிலும் நிறைவானவர்கள் அல்ல) வெளியில் நிகழ்கின்றவற்றைப் பற்றி எதுவுமே அறியாத கிணற்றுத் தவளைகள் போல் இருக்கின்றனர். பத்திரிகைகள் படிப்பதே சம்பளப்படி உயர்வு குறித்த அறிவிப்பு அன்று மட்டும்தான்.

()

ஐந்தாம் வகுப்பைக் கடக்கும் வரை நான் தமிழ்நாடு என்பது வேறு, இந்தியா என்பது வேறு என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். நான் அப்படியொன்றும் மோசமான கற்றல்திறனுடைய மாணவன் அல்ல. இதை எனக்கு சரியாக கொடுக்காதது யார் தப்பு? இளநிலை முடித்துவிட்டு வெளியே வரும் ஒரு மாணவனுக்கு மணியார்டர் படிவத்தை முறையாக நிரப்பக் கூட தெரிவதில்லை.

+1 என்று ஞாபகம். வரலாறு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர், இந்தியச் சுதந்திரத்தைப் பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த போது "காந்தியாலதான் நமக்கு சுதந்திரம் கெடைச்சதுன்னு நெனக்கறீங்களா?" என்றொரு கேள்வியை குறும்புச் சிரிப்புடன் கேட்டார். எங்களுக்கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது. அதுவரை காந்தி என்பவர் நம் தேசத் தந்தை, எளிமையானவர், வெள்ளையர்களிடம் போராடி சுதந்திரம் வாங்கினவர் என்பதையும் தாண்டி காந்தி என்னும் பிம்பத்தை முழுமையாக அறிய முயல வேண்டும் என்கிற ஒரு நெருப்புப் பொறியை என்னுள் தூண்டினது அந்தக் கேள்விதான். நிற்க. எதிர் அரசியல் பேசும் ஆசிரியர்கள்தான் சிறந்தவர்கள் என நிறுவ நான் முயற்சிக்க வில்லை. பாடப்புத்தகத்தில் இருப்பது மாத்திரமே கல்வி அல்ல. அது அதையும் தாண்டி நம் புவியெங்கும் நிறைந்துள்ளது. இதைப் புரியவைப்பவர்களே சிறந்த ஆசான்கள் என நான் கருதுகிறேன்.

அவ்வாறானவர்கள் சமூக நடப்புகளைப் பற்றியும் அன்றாட முக்கிய நிகழ்வுகள் குறித்தும் அறிந்திருக்க வேண்டுமென என எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டவர்கள் செவ்வாய் கிரகத்தில் மருத்துவ ஆராய்ச்சி செய்யும் வேற்றுக்கிரக ஜீவிகள் அல்ல. ஆசிரியர்கள் சார்ந்திருக்கிற அதே கல்வித்துறையில் சில சாதனைகளைப் புரிந்திருக்கிறவர்கள். அவர்களைப் பற்றிக்கூட தெரிந்திருக்காத, தெரிய முனைப்பில்லாத ஓர் ஆசிரியர் சமூகம் எவ்வாறு சிறந்த கல்வியை தன் மாணவர்களுக்கு போதிக்க முடியும்?

ரவி said...

//ஆனால் பதிவின் உள்ளடக்கத்தில் என்னுடைய நிலைப்பாடு அப்படியேதான் இருக்கிறது.//

so who ever says any thing, your idiotic mind will never change ?

mundam.

ரவி said...

என் பின்னூட்டம் எங்கே ?

ரவி said...

என் பின்னூட்டம் எங்கே ?

பிச்சைப்பாத்திரம் said...

//so who ever says any thing, your idiotic mind will never change ?

mundam.//


செந்தழல் ரவி அல்லது அந்தப் பெயரில் எழுதியவருக்கு:

நண்பரே,


கூடுமானவரை என்னுடைய பதிவில் வரும் பின்னூட்டங்களை நான் தவிர்ப்பதில்லை, அது என்னையே தனிப்பட்ட வகையில் திட்டி வந்தாலும். (மற்ற தனி நபர்களை திட்டுகிற பின்னூட்டம் என்றால் அதை நிச்சயம் நீக்கிவிடுவேன்.). என்னுடைய பதிவை தேடிப்படி்த்து தன்னுடைய கருத்தை சொல்லும் நபருக்கு தரக்கூடிய குறைந்தபட்ச மரியாதையாக இதைக் கருதுகிறேன்.

ஆனால் உங்களின் இந்த பின்னூட்டம் அராஜகமாக இருக்கிறது. எப்படி உங்களுக்கு ஒரு கருத்து சரி என்று நம்புவதற்கு இருக்கிறதோ அதே உரிமையை அடுத்தவருக்கும் தாருங்கள். நீங்கள் சரி என நினைப்பவற்றை அடுத்தவரும் நினைக்கவேண்டும் என்று திணிக்காதீர்கள்.

இணையத்தில் இவ்வாறான விபத்துக்களை தாண்டித்தான் தீர வேண்டும் என்பது புரிந்திருந்தாலும் நீங்கள் திட்டித் தீர்ப்பதையெல்லாம் பொறுத்துக் கொள்ள "நான் ரொம்ப நல்லவன்" அல்ல. வசைகளும் ஆபாச வார்த்தைகளும் அடுத்தவர்களுக்கும் தெரியும் என்பது உங்களுக்குத் தெரிந்தே இருக்கும். சமூகம் கற்றுத் தந்த நாகரிகம் காரணமாகத்தான் பலர் பொறுத்துப் போகின்றனர். அந்த பொறுமையை கோழைத்தனம் என கருதாதீர்கள்.

உங்களின் இவ்வாறான பின்னூட்டங்கள் இனி பிரசுரமாகாது.

பட்டுக்கோட்டை பாரி.அரசு said...

சுரேஷ்,

நீயா! நானா! பார்ப்பதை நிறுத்தி சில மாதங்களாகிவிட்டது! ஆகையால் நிகழ்வை பற்றி கருத்து எதுவுமில்லை!

ஆனால்...
ஆசிரியன் என்பவன் யார்?
அவனுக்கு என்னென்ன தெரிந்திருக்க வேண்டும்?

கற்றல், கற்பித்தல்... இவற்றின் நோக்கம் என்ன?


எதுவெல்லாம் உனக்கு தெரியும்... என்று ஒரு ஆசிரியனிடம் கேள்வி கேட்கும் முட்டாள்தனத்தை! அதை ஆராதிக்கும் மனோநிலையை வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது.

உங்களுக்கு ஒரு நிகழ்வை மட்டும் சொல்லிவிடுகிறேன்...

பட்டுக்கோட்டை வட்டம், காசாங்காடு கிராமத்தில் பணியாற்றிய கோபால் என்கிற ஆசிரியர்...
இந்த உலகத்தை பற்றி அறிவற்றவர்...
உங்களை போல உலகசினிமா, உள்ளூர் சினிமா அறிந்திராதவர்...
அவரை தெரியுமா? இவரை தெரியுமா? என்கிற கேள்விக்கும் அவரிடம் விடை இருந்திருக்காது! நீங்க கடைசியா படித்த நூல் எதுவென்றால்.. விடை அவருடைய பாடநூலாக கூட இருந்திருக்கலாம்...!?

கோபால் ஆசிரியர் ஆசிரியனாக வாழ்ந்தார்!
அதன் தடங்கள் அந்தபகுதியெங்கும் இருக்கு!

ரவி said...

///எப்படி உங்களுக்கு ஒரு கருத்து சரி என்று நம்புவதற்கு இருக்கிறதோ அதே உரிமையை அடுத்தவருக்கும் தாருங்கள்///

தொடர்ந்து சூரியன் மேற்குதிசையில் உதிக்கும் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு அல்லது அந்த அசட்டு முட்டாள்தனமான கருத்தை அடுத்தவருக்கும் சொல்லிக்கொண்டு திரிபவருக்கு தான் பின்னூட்டம் எழுதினேன்...

உங்கள் கருத்து கந்தாயத்தை நீங்கள் மட்டும் வைத்திருந்தால் பரவாயில்லை, "ஆசிரியர்கள் நிர்வாணமாக நின்றதாக" அனைவரும் பார்க்கும் வண்ணம் வர்ணித்து எழுதும் "அறிவுசீவி" பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணனை தான் நான் முட்டாள் என்றேன்...

உங்கள் கருத்து உங்களுடையதாகவே இருந்துவிட்டு போகட்டுமே ?

உங்கள் கடந்த மூன்று பதிவுகளின் தலைப்பே சொல்லுமே ? நீங்கள் எதை நோக்கி போகிறீர்கள் என்று...

மனநல மருத்துவரை சந்திப்பது நல்லது..

வெளியிடுங்கள் வெளியிடாமல் போங்கள், உங்கள் உரிமை...

அடிப்படை நாகரீகம் கூட இல்லாமல் ஆசிரிய பெருமக்களை கேவலப்படுத்திய இந்த பதிவை கண்டிக்கிறேன் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்...

கற்றது கையளவு என்று தெரிந்துகொள்ளுங்கள்...

வேண்டுமானால் நான் ஒரு சவால் விடுகிறேன்...

நான் ஒரு கேள்வி கேட்கிறேன்...உங்களுக்கு 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன்..அந்த கேள்விக்கான பதிலை தரமுடியுமா அறிவாளியே?

Thekkikattan|தெகா said...

இங்கு நிறைய அன்பர்கள் ரொம்ப விவரமா எடுத்துரைத்துருக்கிறார்கள்; அதோடு ஒத்துப் போக முடிகிறது. ஆசிரியத் தொழில் ஒரு மனிதனை அவனுடைய சிந்தனைகளை கட்டமைக்கத் தக்க வகையிலயே உருவாக்கும் வல்லமை படைத்த ஒரு தொழில்.

எனவே, அதனைக் கற்றுத் தரும் ஆசிரியர்களின் மூளை எப்பொழுதும் டைனமிக்காக புதுப் புது விசயங்களோடு எளிமையாக எடுத்துச் சொல்லும் படைப்பாற்றலை அவர்களும் காலம் தோரும் கற்றுக் கொண்டு மாணவர்களுக்கும் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும். அது அவசியம்.

இருந்தாலும், எந்த அளவிற்கு அவர்களின் வாசிப்பு அனுபவமும், அன்றைய உலகசார் அறிவும் இருந்தால் ஒப்பீட்டளவில் "நிர்வாணமாக" கோபி போன்றவர்களின் முன்னால் நிற்கவில்லை என்று நாம் அளவிட முடியும்? இலக்கியம் சார்ந்து ஆழமாக படிக்கவோ, எங்கோ இருக்கும் ஒரு குட்டி நாட்டின் தலை நகரம் எதுவென்று மனனம் செய்து வைத்துக் கொள்ள 2ம் வகுப்பு நடத்தும் ஒரு ஆசிரியருக்கு என்ன தேவை இருக்க முடியும்? அவருக்கு சுய ஆர்வம் இல்லாத பட்சத்தில்?

எல்லோரும் சொன்னதுதான் "கற்றது கை மண்ணளவு."

Anonymous said...

//நீதி,காவல்,பத்திரிகை துறைகளைப் போல ஆசிரியர் துறையும் சமூகத்தில் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய துறை என்பதில் நமக்கு மாற்றுக் கருத்துகளே இருக்க முடியாது என்று நம்புகிறேன். நான் முன்னமே குறிப்பிட்ட மாதிரி நம்முடைய தேசத்தின் வருங்கால வாக்காளார்களை மிகுந்த ஞானத்தோடு சுயசிந்தனையோடும் சமூகத்திற்கு அளிக்க வேண்டிய கடமை நிச்சயம் அவர்களுக்கு இருக்கிறது.

சுயசிந்தனை என்பதே பாவமாகி விட்ட நம் மாணவ சமூகத்தில் சொல்லிக் கொடுத்ததை அப்படியே வாந்தியெடுப்பவன்தான் சிறந்த மாணவன் என்கிற நம் கல்வித் திட்டத்திலேயே குறை இருக்கிறது.

அந்த கல்வித் திட்டத்திலேயே ஊறிப் போயிருக்கும் ஆசிரியர்களும் (பெரும்பாலானவர்கள்) தங்கள் சிலபஸை முடிக்க வேண்டிய கட்டாயத்திலேயே தங்கள் வகுப்புகளை நடத்துகின்றனர். தாங்கள் சொல்வது மாணவர்களுக்கு புரிகிறதா என்பது பற்றிக் கூட அவர்களுக்கு கவலையில்லை.

தங்கள் துறைச் சார்ந்த கல்வி தவிர (பலர் அதிலும் நிறைவானவர்கள் அல்ல) வெளியில் நிகழ்கின்றவற்றைப் பற்றி எதுவுமே அறியாத கிணற்றுத் தவளைகள் போல் இருக்கின்றனர். பத்திரிகைகள் படிப்பதே சம்பளப்படி உயர்வு குறித்த அறிவிப்பு அன்று மட்டும்தான். //

பதிவின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.

ஆசிரியப் பணி ஒரு தன்னலமில்லாத, தியாக மனப்பான்மையுடன் கூடிய சேவை என்ற நிலை மாறி, இப்போது அதுவும் ஒரு தொழில் (Profession) -ஆக மாறி விட்டது. அவர்களைப் போல் மாணவர்களையும் பணம் சம்பாதிக்கும் இயந்திரங்களாக மட்டும் உருவாக்கினால் போதும் என்ற நிலை நிலவுகிறது. இதனால் அனைத்து துறைகளிலும் சமூக சிந்தனை, சுய மரியாதை அற்ற ஒரு சமுதாயம் உருவாகியுள்ளது. பந்தயக் குதிரைகளை போல் மாணவர்கள் தயார்ப் படுத்தப்படுகிறார்கள். மாணவர்களின் தனித்தன்மையை வளர்க்கும் விதமாகவும், மாணவர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரிக்கும் வகையிலும் கல்வி முறையில் மிகப் பெரிய அளவிலான மாற்றம் தேவை.

Anonymous said...

என்னுடைய பள்ளி, கல்லூரி ஆசிரியர்களைப் பற்றிய நினைவலைகளை கிளப்பி விட்ட இந்த கலந்துரையாடலை நானும் பார்த்தேன். நினைத்து பார்க்கும்போது அப்போது இருந்த ஆசிரியர்கள், பேராசிரியர்களின் subject மீதான ஆளுமை, தூய பண்புகளால் தானாகவே வெளிப்படும் கம்பீரம், மாணவர்கள் மீதான உண்மையான அக்கறை, மாணவர்களை வழி நடத்தும் இராணுவ ஒழுங்கு போன்றவை இப்போதுள்ள result-oriented ஆசிரியர்களிடையே குறைந்து வருகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆசிரியர்களின் புனிதத்தன்மை கேள்விக்குறியாகி வருகிறது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

என்னுடைய கருத்துக்கள் தனிப்பதிவாக இங்கே

உண்மைத்தமிழன் said...

சுரேஷ்..

எனக்கும் தலைப்பு பிடிக்கவில்லை. படிக்க வைக்க வேண்டும்தான். ஆனால் அதற்காகத் தாங்கள் இந்த அளவுக்கு இறங்கி வர வேண்டாம். தமிழில் வேறு வார்த்தைகளா அல்ல..

மற்றபடி உள்ளடக்கத்தில் நான் உங்களுக்கு நேரெதிர்.

இப்போதைய பாடப்புத்தகங்களின் செலபஸ்ஸும், பள்ளி ஆசிரியர்களுக்கான தேர்வு முறைகளும், அவர்களுக்கான பாடப்புத்தகங்களும் எந்த அளவுக்கு உள்ளதோ அதுதான் அவர்களது அளவுகோல்.

பொது அறிவு என்பது பள்ளியிலும் சரி.. பாடப்புத்தகத்திலும் சரி கொஞ்சம்தான்.

நீங்கள் குறிப்பிட்ட இருவருமே ஒரு நிலையைத் தாண்டி பொதுவிற்குள் வந்ததில்லை. அப்படியிருக்க அவர்களை எங்கோ குக்கிராமத்தில் இருக்கும் ஒருவர் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பல்ல..

ஏழாம் வகுப்பிலேயே காப்மேயரை கோபி படித்திருக்கிறார் எனில் அவருடைய குடும்பச் சூழலை நாம் வாழ்த்துவோம். அவ்வளவுதான்.. நான் எனது 30-வது வயதில்தான் கண்ணதாசன் பதிப்பகத்தில்தான் அந்தப் பெயரைப் பார்த்தேன். படித்தேன். இது எனது சூழல்.

இதற்காக நான் அவரைவிட மட்டமா என்ன..?

கோபி சில சமயங்களில் சற்று அதீதமான பேச்சாளராகச் செயல்படுகிறார்.