Friday, January 04, 2008

இரண்டு செருப்படிகள்

சில செய்திகளைப் பற்றி அறிய வரும் போதோ, எங்காவது காணும் போதோ, அனுபவப்பூர்வமாக உணரும் போதோ அது இதயத்தின் மீது செலுத்தப்படும் அட்லிரின் மருந்து போல நேரடியாக உடனே நம்மை பாதிக்கும். கொச்சையான மொழியில் சொன்னால்.. யாரோ நம் முகத்தில் செருப்பால் அடித்தது மாதிரி இருக்கும். அம்மாதிரி சமீபத்தில் நான் உணர்ந்த தருணங்களைப் பற்றி இங்கே பகிர உத்தேசம்.

'நதியின் கரையில்' என்றொரு கட்டுரைத் தொடரை பாவண்ணன் 'புதிய பார்வை'யில் எழுதிவருவதை உங்களில் பெரும்பாலோனோர் அறிந்திருப்பீர்கள். சமீபத்திய இதழில் பிரசுரமான கட்டுரையை ஆசிரியர் தாம் படிக்க நேர்ந்த பத்திரிகைச் செய்தியோடு ஆரம்பிக்கிறார். அதை ஆசிரியரின் மொழியிலேயே அறிவதுதான் நியாயமான செயலாக இருக்குமென்பதால், அதை இங்கே மீள்பிரசுரம் செய்கிறேன். (நன்றி புதிய பார்வை | பாவண்ணன்)

()

ஐதராபாத்தில் தொண்டாற்றிவரும் ஒரு மனநல மருத்துவமனை நோயாளிகளுக்கிடையே புத்துணர்ச்சியை ஊட்டும் பொருட்டு ஒரு சின்ன கலை நிகழ்ச்சியை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அதன் ஒரு பகுதியாக நோய்வாய்ப்பட்டிருந்த சிறுமிகளிடையே ஓர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அப்பந்தயத்தில் எட்டு சிறுமிகள் கலந்து கொண்டார்கள்.

ஓடத்தொடங்கலாம் என்பதற்கு அடையாளமாக விளையாட்டுத் துப்பாக்கியிலிருந்து வெடிச்சத்தம் கிளம்பியது. அடுத்த கணமே இலக்குப்புள்ளியில் கட்டப்பட்டிருந்த வண்ண நாடாவை நோக்கி ஒவ்வொருவரும் ஓடத் தொடங்கினார்கள்.

பார்வையாளர்கள் அரங்கில் குழுமியிருந்தவர்கள் சிறுமிகளைப் பார்த்து சையசைத்து உற்சாகப்படுத்தினார்கள். எங்கெங்கும் ஆரவாரம். ஓடிக்கொண்டிருந்த ஒரு சிறுமி கால் தடுக்கி கீழே விழுந்து விட்டாள். பயமோ, வேதனையோ தெரியவில்லை. விழுந்த இடத்திலிருந்து எழுந்திருக்கத் தெரியாமல் ஓவென்று கதறி அழத் தொடங்கினாள் அச்சிறுமி.

ஏதோ கட்டளைக்கு அடிபணிந்ததைப் போல அவள் அழுகுரலைக் கேட்டதும் மற்ற ஏழு சிறுமிகளும் ஓடுவதை நிறுத்தி தன்னிச்சையாக அவளை நோக்கி ஓடிவந்தார்கள். விழுந்து கிடந்த சிறுமியைத் தூக்கினாள் ஒரு சிறுமி. கூட்டத்திலேயே சற்றே வயது கூடிய சிறுமி அவளுடைய கண்ணீரைத் துடைத்து தன் தோளோடு ஆதரவாகச் சாய்த்துக் கொண்டாள். அவள் உடைமீதும் உடல்மீதும் படிந்திருந்த புழுதியைத் தன் கைகளாலேயே தட்டித்தட்டித் தூய்மை செய்தாள் இன்னொரு சிறுமி. 'அழாதடி, அழாதடி' என்று எல்லாச் சிறுமிகளும் அவளுக்கு ஆறுதல் சொன்னார்கள். அவள் அழுகையை நிறுத்தியதும் எல்லாச்சிறுமிகளும் ஒருவரோடு ஒருவர் கைகளைக் கோர்த்துக் கொண்டு இலக்குப்புள்ளியில் காணப்பட்ட வண்ணநாடா வரைக்கும் நடந்தே வந்தார்கள். குழுமியிருந்த கூட்டமே அக்காட்சியைக் கண்டு நெகிழ்ந்தது. பல நிமிடங்கள் விடாமல் கைதட்டி தம் வாழ்த்துக்களைத் தெரிவித்தது. .......

()

உண்மையிலேயே யார் மனநிலை பிறழ்ந்தவர்கள் என்பதையும், உலகமயமாக்கத்தின் இக்காலகட்டத்தில் வெற்றி என்பதன் வரையறை என்ன என்பது குறித்தும் பல கேள்விகளை மேற்குறிப்பிட்ட செய்தி என்னுள் எழுப்பியது. பாவண்ணனின் இக்கட்டுரையை தொடர்ந்து படித்து முடிக்கும் தருணத்தில் நான் உணர்ச்சிப் பெருக்கில் தொண்டை அடைத்துக் கிடந்தேன். ஓடிக் கொண்டிருந்த ரயில் வண்டியில் அசசமயத்தில் மாத்திரம் இல்லாமல் தனிமையில் இருந்திருந்தால் மெளனமாகவேனும் ஒரு வேளை அழுதிருப்பேனோ என்னவோ.

இன்னொரு செருப்படி வந்து விழுந்த இடம் வண்ணதாசனிடமிருந்து. (இவ்வாக்கியமே ஒரு முரண்தான். மென்மையும் குழைவுமான விஷயங்களைப் பற்றி மட்டுமே தன் படைப்புகளில் சிந்திக்கிற ஒரு ஆளுமையின் பெயரையும் 'செருப்படி' என்கிற கடுமையான வார்த்தையையும் அடுத்தடுத்த இடத்தில் வைப்பதே ஒரு முரண்தான்).

.. நரிக்குறவச் சிறுவர்களின் பிரத்யேக அழகு, குடிசைப்பகுதிக்காரர்களை அதிகாரம் அப்புறப்படுத்திவிட்ட பிறகு அந்த இடத்தின் வெறுமை, பன்னீர்ப்பூக்களின் மேல் சிறுநீர் கழிக்க விரும்பாத பள்ளிக்கூட மாணவன், கூட்ட நெரிசலில் இயல்பாக இயங்கும் பேருந்து நடத்துநர்..... என்று நாலைந்து விஷயங்களை ஆற அமர அவருக்கு உரித்தான பிரத்யேக மொழியில் ரசனையாக விவரித்து விட்டு ... கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார்.

... இதையெல்லாவற்றையும் பற்றி நமக்கென்ன? நமக்குத்தான் இருக்கிறதே இருபத்து நான்கு மணிநேரத் தொலைக்காட்சிகள். யார் அசத்துகிறார்கள், யார் கலக்குகிறார்கள் என்று பார்த்துக் கொண்டு இருந்தால் போதாதா?! (ஆனந்த விகடன் கட்டுரை).

9 comments:

Boston Bala said...

நன்றி

சின்னப் பையன் said...

மிகவும் சரியாக சொல்லியிருக்கிறார்...இன்னும் 10 கட்சிகள் வந்தால், புதிய 10 தொலைக்காட்சிகள் நமக்கு கிடைக்கும்.. அப்போது 24 மணி நேரமே போதாது.....:-(

PPattian said...

எனக்கென்னவோ வண்ணதாசன் கருத்தில் உடன்பாடில்லை. அவர் மிகைப்படுத்துகிறார்.

அவர் குறிப்பிடுவது அந்த மனிதர்களிம் ஒரு கணம், ஒரு பொழுதுதான். அவர்களும் இரவில் தொலைக்காட்சி, சினிமா முன் ஐக்கியம் ஆவார்கள் என்பது திண்ணம். நான் கூடத்தான் ஒரு பொழுதில் உலகை, இயற்கையை ரசித்து விட்டு, மறு பொழுதில் தொலைக்காட்சியில் என் விருப்ப நிகழ்ச்சி பார்க்கலாம்.

அவரது எழுத்து வாசிப்பதற்கு நன்றாயுள்ளது.. அவ்வளவே..

Unknown said...

ஆமாம் என்ன அப்படி கலக்குவதன் மீது அனைவருக்கும் காழ்ப்புணர்ச்சி?

நன்றாகத்தானே இருக்கிறது

Anonymous said...

சுரேஷ் கண்ணன்

பாவண்ணன் ஹைதராபாதில் நடந்ததாகச் சொல்லும் சம்பவம் கிட்டத்தட்ட முன்னால் மனநலம் குன்றிய குழந்தைகளுக்கான ஒலிம்பிக்ஸில் நடந்ததாக ஒன்றரை ஆண்டுக்கு முன்னால் மின்னஞ்சல் ஒன்றின் வழியாக அறிந்தேன். பாவ்ண்ணனும் அந்த மின்னஞ்சல் வாசித்திருப்பாரா என்று தெரியவில்லை

இதை விட அற்புதமான மின்னஞ்ச்ல ஒன்றும் என்னிடம் இருக்கிறது. இது நடந்த கதை என்று பாவண்ணனைப் போலக் கதை விடாமல் மொழி பெய்ரத்து பதிவிட முயற்சிக்கிறேன் - மொக்கை போடாத பொழுதுகளில்

சாத்தான்குளத்தான்

ROSAVASANTH said...

பாவண்னன் பதிவு செய்த நிகழ்வை தந்ததற்கு நன்றி. மிகவும் யோசிக்கவும், உணர்சிவயப்படவும் வைத்து விட்டது.

Sundar Padmanaban said...

சுரேஷ்

ஜனவரி 1 அன்று புத்தாண்டு வாழ்த்தாக நண்பர் அனுப்பிய மடலைக் கீழே கொடுத்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பவத்திற்கும் இதற்கும் ஆச்சரியமானஒற்றுமை!

நன்றி.

*****
Two Choices

What would you do?....you make the choice. Don't look for a punch line, there isn't one. Read it anyway. My question is: Would you have made the same choice?

At a fund raising dinner for a school that serves learning-disabled children, the father of one of the students delivered a speech that would never be forgotten by all who attended. After extolling the school
and its dedicated staff, he offered a question:
"When not interfered with by outside influences, everything nature does is done with perfection. Yet my son, Shay, cannot learn things as other
children do. He cannot understand things as other children do. Where is the natural order of things in my son?"

The audience was stilled by the query.

The father continued. "I believe, that when a child like Shay,
physically and mentally handicapped comes into the world, an opportunity to realize true human nature presents itself, and it comes in the way other people treat that child."

Then he told the following story:

Shay and his father had walked past a park where some boys Shay knew were playing baseball. Shay asked, "Do you think they'll let me play?" Shay's father knew that most of the boys would not want someone like Shay on their team, but the father also understood
that if his son were allowed to play, it would give him a much-needed sense of belonging and some confidence to be accepted by others in spite of his handicaps.

Shay's father approached one of the boys on the field and asked (not expecting much) if Shay could play. The boy looked around for guidance and said, "We're losing by six runs and the game is in the eighth inning. I guess he can be on our team and we'll try to put him in to bat in the ninth inning."

Shay struggled over to the team's bench and, with a broad smile, put on a team shirt. His Father watched with a small tear in his eye and warmth in his heart. The boys saw the father's joy at his son being accepted.

In the bottom of the eighth inning, Shay's team scored a few runs but was still behind by three. In the top of the ninth inning, Shay put on a glove and played in the right field. Even
though no hits came his way, he was obviously ecstatic just to be in the game and on the field, grinning from ear to ear as his father waved to him from the stands. In the bottom of the
ninth inning, Shay's team scored again. Now, with two outs and the bases loaded, the potential winning run was on base and Shay was scheduled to be next at bat.

At this juncture, do they let Shay bat and give away their chance to win the game? Surprisingly, Shay was given the bat. Everyone knew that a hit was all but impossible because Shay didn't even know how to hold the bat properly, much less connect with the ball.

However, as Shay stepped up to the plate, the pitcher, recognizing that the other team was putting winning aside for this moment in Shay's life, moved in a few steps to lob the ball in softly so Shay could at least make contact. The first pitch came and Shay swung clumsily and missed. The pitcher again took a few steps forward to
toss the ball softly towards Shay. As the pitch came in, Shay swung at
the ball and hit a slow ground ball right back to the pitcher.

The game would now be over. The pitcher picked up the soft grounder and could have easily thrown the ball to the first baseman. Shay would have been out and that would have been the end of the game.

Instead, the pitcher threw the ball right over the first baseman's head, out of reach of all team mates. Everyone from the stands and both teams started yelling, "Shay, run to first! Run to first!" Never in his life
had Shay ever run that far, but he made it to first base. He scampered down the baseline, wide-eyed and startled.

Everyone yelled, "Run to second, run to second!" Catching his breath, Shay awkwardly ran towards second, gleaming and struggling to make it to the base. By the time Shay rounded towards second base, the right fielder had the ball ... the smallest guy on their team who now had his first chance to be the hero for his team. He could have thrown the ball to the second-baseman for the tag, but he
understood the pitcher's intentions so he, too, intentionally threw the
ball high and far over the third-baseman' s head. Shay ran toward third base deliriously as the runners ahead of him circled the bases toward home.

All were screaming, "Shay, Shay, Shay, all the Way Shay"

Shay reached third base because the opposing shortstop ran to help him by turning him in the direction of third base, and shouted, "Run to third! Shay, run to third!"

As Shay rounded third, the boys from both teams, and the spectators, were on their feet screaming, "Shay, run home! Run home!" Shay ran to home, stepped on the plate, and was cheered as the hero who hit the grand slam and won the game for his team.

"That day", said the father softly with tears now rolling down his face, "the boys from both teams helped bring a piece of true love and humanity into this world".

Shay didn't make it to another summer. He died that winter, having never forgotten being the hero and making his father so happy, and coming home and seeing his Mother tearfully embrace her little hero of the day!

AND NOW A LITTLE FOOTNOTE TO THIS STORY: We all send thousands of jokes through the e-mail without a second thought, but when it comes to sending messages about life choices, people hesitate. The crude, vulgar, and often obscene pass freely through cyberspace,
but public discussion about decency is too often suppressed in our schools and workplaces.

If you're thinking about forwarding this message, chances are that you're probably sorting out the people in your address book who aren't the "appropriate" ones to receive this type of message. Well, the person
who sent you this believes that we all can make a difference. We all have thousands of opportunities every single day to help realize the "natural order of things." So many seemingly trivial interactions between two people present us with a choice: Do we pass along a little spark of love and humanity or do we pass up those opportunities and leave the world a little bit colder in the process?


A wise man once said every society is judged by how it treats it's least fortunate amongst them.

****

பிச்சைப்பாத்திரம் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

'பாவண்ணனின் பதிவை' எழுதி அனுப்பியதுமே நண்பர் ஆசாத் தொலைபேசியில், இந்தச் செய்தி ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மின்னஞ்சலில் உலா வருகிற விஷயமாயிற்றே என்று தெரிவித்தார். மிக தற்செயலாக நான் 2006 இதழ் 'மஞ்சரி' இதழை புரட்டிக் கொண்டிருந்த போது தென்கச்சி சுவாமிநாதன் 'பதில்'களிலும் இதே சமாச்சாரத்தை எழுதியிருந்தார். பாவண்ணனும் இதை சமீபத்தில்தான் -என்னைப் போலவே- படித்திருக்கலாம் என்கிற யூகமும் தோன்றுகிறது.

இந்த நிகழ்வு நிஜமா, பொய்யா, புனைவா, எப்போது எழுதப்பட்டது என்ற ஆராய்ச்சிகளில் புகுந்து புறப்படத்தேவையில்லை என்று எனக்குத் (கவனிக்க: எனக்கு) தோன்றுகிறது. அந்தச் செய்தி எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் மாத்திரமே நான் முக்கியமாக கவனித்தது.

பிரகாஷ் said...

செருப்படிகள் உடம்பில் அல்ல, மனதில் விழுந்தன.
முதல் நிகழ்ச்சி,ஏற்கனவே வாசித்திருப்பினும் நெகிழ வைத்தது.
வண்ணதாசனின் கட்டுரையை நானும் படித்தேன்.அவர் சொல்வது எனக்கும் உடன்பாடே.இந்த அவசர யுகத்தில்
அவர் குறிப்பிட்டிருந்த காட்சிகளில் (நாம் பார்க்க நேர்ந்தாலும்) மனம் பதியாமல் மனிதத்தைத் தொலத்து நிற்கிறோம் என்பதே கசப்பான உண்மை.
சற்று சிந்தித்தால் ஒரு சில நாட்களில் நமது தினப்படித் திட்டமிடுதலை தொலைக்காட்சியிடமே நாம் விட்டு விடுகிறோம்.
தொலைக்காட்சிக்கு முக்கியத்துவம் தரும் நம் மனம் ஆக்கப்பூர்வமான வேறு பணிகளை விட்டும்,மனிதத்தை விட்டும் வெகு தூரம் விலகிக் கொண்டு இருக்கிறது.