எனது சமீபத்திய பதிவில், பொதுவான கவிதைகள் மேலான என் கடுமையான விமர்சனங்கள் குறித்து நண்பர்களிடையே மெலிதான அதிருப்தி எழுந்ததை உணர முடிந்தது. கவிதை என்கிற இலக்கிய வடிவத்திற்கு நான் ஜென்மப் பகைவனில்லை. ரஷ்ய மொழியில் இருந்தோ அல்லது ஸ்பானிஷ் மொழியில் இருந்தோ மொழிபெயர்க்கப்பட்டாற் போன்ற தோற்றத்துடன், மிகவும் பூடகமான மொழியில் எழுதப்பட்டு வாசகனை திண்டாடச் செய்வதில் ரகசியமாக மகிழ்கின்ற கவிதைகள் குறித்தே நான் சாடியிருந்தேன். எனவேதான் கவிதைகளைக் கண்டாலே கசப்பு மருந்தைக் கண்ட குழந்தைகள் மாதிரி முகச்சுளிப்புடன் ஓடிவிடுகிறேன். (மருந்து கசப்பென்றாலும் அதுதான் நோயைக் குணப்படுத்துவதென்று யாராவது அபத்தமாக பின்னூட்டமிடாதீர்கள்) :-)
என்றாலும் சில நல்ல கவிதைகள் (?!) அபூர்வமாக கண்ணில் படும் போது ரசித்து படித்திருக்கின்றேன். அவ்வாறாக சமீபத்தில் மே 2005 காலச்சுவடில் படித்த கவிதையன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
()
தான்
ஒரு யானையால்
வன் புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதை
காவலர்கள் முன்னிலையில்
மீண்டுமொரு முறை கூற வேண்டியிருந்தது
அந்த எறும்புக்கு.
சாட்சியம் உள்ளதா
என்ற காவலரிடம்
தன் வயிற்றைக் காட்டி
யானையின் கருவை
தான் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறியதும்
சிரிப்பை அடக்க முடியவில்லை அவர்களுக்கு.
எல்லா இடங்களிலும்
புன்னகைக்கும் இதழ்களின் இடையே
ஒரு புழுவைப் போல நெளிந்தபடி
இருக்கின்றனசிலரின் பரிதவிப்புகள்
()
நன்றி: காலச்சுவடு
எழுதியவர்: காலபைரவன்
இந்தக் கவிதையை புரிந்து கொள்ள நீங்கள் கண்ணாடியை மாட்டிக் கொண்டு அகராதியை ஆராய வேண்டியதோ, கொஞ்ச நேரம் கிழக்கு பக்கமாக மோட்டுவளையை பார்த்துக் கொண்டோ, நூற்று ஒன்றாவது முறையாக படித்தும் தலையை சொறிய வேண்டியதோ இல்லை. படித்தவுடன் நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் புரிந்து விடும், அதிகாரத்திற்கெதிரான ஒரு முனகல் என்று.
இது மாதிரி நல்ல கவிதைகளை படிக்கும் போதுதான் எனக்கும் இவ்வாறு கிறுக்கத் தோன்றுகிறது.
இந்தியா
ஒரு ஜனநாயக நாடு
'பாப்பாப்பட்டி'க்களைத் தவிர.
suresh kannan
4 comments:
நண்பரே,
நானும் காலச்சுவடு வாங்கி இந்த கவிதையைப் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. மற்ற கவிதைகளைப் பார்த்தீர்களா? மண்டைய பிச்சுக்கலை?
அன்புடன்
ராஜ்குமார்
´Õ °ÕÄ ´Õ «Æ¸¡É ±ÚõÒ þÕóÐõ;
«ó¾ ±ÚõÀ ´Õ ¡¨É ¸¾È ¸¾Èì ¸üÀƢÎõ;
«ôÒÈÁ¡ «ó¾ ±ÚõÒ Å£ðÎìÌò àÃÁ¡¸Ä¢Â¡õ.
«ó¾ ±ÚõÒ police station §À¡Â¢ complaint ÀñÏõ.
«í¸ þÕó¾ ´Õ ¸¡ì¸¢ §¸ð¼¡Ã¡õ:
"² ±Úõ§À, ´ýÉ ¡¨É ¸üÀÆ¢îºÐìÌ ±ýÉ ¬¾¡Ãõ"-Û
±ÚõÒ ¦º¡øÖõ: "¿¡ý þô§À¡ Óظ¡Á þÕ째ý, «ó¾ ¡¨É§Â¡¼ Å¡Ã¢Í ±ý§É¡¼ ÅÂòÐÄ ÅÇÕÐ"-Û.
þ¾ì§¸ð¼ ¸¡ì¸¢¸û ±øÄ¡õ ¦¸ì§¸ À¢ì§¸ýÛ º¢Ã¢îº¡í¸Ç¡õ.
±ÚõÒìÌ ²ñ¼¡ þýÛõ ¯Â¢§Ã¡¼ þÕ째¡ÓýÛ §¾¡Ïõ.
ÓüÚõ.
-----
ÒØ ¦¿Ç¢ÂÈÐ, ´Õ§Å¨Ç ±Úõ§À¡¼ ÅÂòÐìÌûÇ Â¡¨ÉìÌðÊ ÓýÎȾ¡§Å¡, þøÄ¡ðÊ ¸¡ì¸¢¸û ÅÂòÐìÌûÇ ¸£Ã¢ôâ ¸Ê츢Ⱦ¡§Å¡ þÕì¸Ä¡õ.
-----
By: EEEE
ஒரு ஊருல ஒரு அழகான எறும்பு இருந்துச்சாம்;
அந்த எறும்ப ஒரு யானை கதற கதறக் கற்பழிச்சிடுச்சாம்;
அப்புறமா அந்த எறும்பு வீட்டுக்குத் தூரமாகலியாம்.
அந்த எறும்பு police station போயி complaint பண்ணுச்சாம்.
அங்க இருந்த ஒரு காக்கி கேட்டாராம்:
"ஏ எறும்பே, ஒன்னய யானை கற்பழிச்சதுக்கு என்ன ஆதாரம்"-னு
எறும்பு சொல்லுச்சாம்: "நான் இப்போ முழுகாம இருக்கேன், அந்த யானையோட வாரிசு என்னோட வயத்துல வளருது"-னு.
இதக்கேட்ட காக்கிகள் எல்லாம் கெக்கே பிக்கேன்னு சிரிச்சாங்களாம்.
எறும்புக்கு ஏண்டா இன்னும் உயிரோட இருக்கோமுன்னு தோணுச்சாம்.
முற்றும்.
-----
புழு நெளியறது, ஒருவேளை எறும்போட வயத்துக்குள்ள யானைக்குட்டி முன்டுறதாவோ, இல்லாட்டி காக்கிகள் வயத்துக்குள்ள கீரிப்பூச்சி கடிக்கிறதாவோ இருக்கலாம்.
-----
By: EEEE
//மருந்து கசப்பென்றாலும் அதுதான் நோயைக் குணப்படுத்துவதென்று யாராவது அபத்தமாக பின்னூட்டமிடாதீர்கள்//
இதில் என்ன அபத்தம்?
Post a Comment