Monday, May 30, 2005

எழுத்தாளர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு?

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய 'மானுடப்பிரவாகம்' என்ற சிறுகதை ஒன்பதாம் வகுப்பு தமிழ் துணைப்பாடத்தில் இடம் பெற்றிருந்தது. மாமன் - மைத்துனன் இடையே வயல் வரப்பு தொடர்பாக ஏற்படும் தகராறு போலீஸ் வரை சென்று, பிறகு மாட்டை விற்று போலீஸிற்கு லஞ்சம் கொடுத்து விவகாரத்தை முடிக்கின்றனர். பின்னர் ஏற்படும் ஒரு குடும்ப விழாவில் இருவரும் தங்கள் தவறுகளை மறந்து ஒற்றுமையாகின்றனர். தங்களுக்குள் ஏற்படும் கருத்து வேற்றுமைகளை தாங்களே அமர்ந்து பேசி முடிப்பதையழித்து, மூன்றாம் மனிதர் (அதிலும் அதிகார அமைப்பு) தலையிடுவதன் மூலம் பொருள் இழப்பும் தீராப்பகையும் ஏற்படுவதால், இதைத்தவிர்த்து ஒற்றுமையுடன் வாழ்ந்தால் கோடி நன்மை என்பது இக்கதையின் ஆதார நீதி.

ஆனால் இக்கதை காவல்துறையின் செயல்பாட்டை விமர்சிக்கும் வகையில் இருப்பதால், இந்தக் கதையை பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டில் இந்தக் கதை நீக்கப்பட்டுள்ளது. (ஆதாரம்: தினமலர் செய்தி - 17.05.2005)

()

பாடத்திட்டத்தில் எந்தமாதிரியான உள்ளடக்கத்தை தர வேண்டும் என்று ஒரு குழுவே அமர்ந்து தீர்மானிக்கிறது. அவ்வாறு தீர்மானித்த பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை முறையற்ற காரணங்களுக்காக நீக்குவது என்பது சரிதானா? என்கிறதொரு கேள்வி என்னுள் எழுகிறது.

மேலாண்மை பொன்னுச்சாமி இடது சாரி சிந்தனையுடையவர் என்பதும் அவரது கதைகளில் பிரச்சாரத் தொனி சற்று மேலோட்டமாகவே இருக்கும் என்பதும் நாம் அறிந்தே இருக்கிறோம். அடிப்படையில் அவரே ஒரு விவசாயியாக இருப்பதால், உள்ளடக்கத்தின் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டு இந்தக் குறைகளை நாம் ஒதுக்கித்தள்ளவே வேண்டும். இவ்வாறானாவர், ஏதோ நடைமுறையில் இல்லாத ஒன்றையோ அல்லது முறையற்ற செயலை மறைமுகமாக ஆதரிக்கும் படைப்பையோ எழுதிவிடவில்லை. சமகாலப் பிரச்சினையையும் அதற்கு முறையான தீர்வு ஒன்றினையுமே அவர் தனது படைப்பில் கொடுத்துள்ளார்.

இந்தக் கதையை நீக்குவதன் மூலம் அவர்களின் நோக்கம் என்ன? இளம் தலைமுறையினரிடம் காவல் துறையின் செயல்பாடுகளை நியாயப்படுத்தவோ அல்லது மறைக்கவோ முயல்கின்றார்களா? அந்த நோக்கத்தில் இது செய்யப்பட்டிருக்குமாயின் அதை விட அபத்தம் ஒன்றுமிருக்க முடியாது. ஈராக்கில் குண்டு வெடித்து அதன் அதிர்வை அடுத்த அரைமணி நேரத்தில் நம் வரவேற்பறையில் உணர முடிகிற அளவிற்கு, ஊடகங்கள் தகவல் மழை பொழிந்து கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், இளம் தலைமுறையினருக்கு நம் காவல்துறையினரின் லஞ்ச லாவண்யச் செயல்களும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் அப்பாவிகளை அவர்கள் கொடுமைப்படுத்துவதும், சமீபத்தின் செயல்பாடுகள் மூலம் ஒரு பெண்ணின் முந்தானைக்குள் ஒரு மாநிலத்தின் காவல்துறையே இளைப்பாறும் அசிங்கத்தையும் அவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்.

ஒரு சாராரின் கோரிக்கையை ஏற்று இப்படைப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படும் என்றால், இதை தீர ஆராய்ந்து பாடத்திட்டத்தில் சேர்த்ததின் நோக்கம் பலனற்றதாகவே போய்விடுகிறதல்லவா? இதே நிலை நீடித்தால், காக்கா வடை திருடிய கதையை கூட, வனவிலங்குகளின் பால் அக்கறை கொண்ட மேனகா காந்தி போன்ற அமைப்பினர், ஒரு பறவையை தவறான முறையில் சித்தரிப்பதா என்று கேள்வி எழுப்பும் பட்சத்தில், அந்தக் கதையையும் நீக்கிவிடுவார்களா? அபத்தம்.

suresh kannan

7 comments:

Voice on Wings said...

உங்கள் வாதம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. அரசின் ஒரு அங்கத்தின் (காவல்துறை) செயல்பாட்டை விமரிசித்து இன்னொரு அங்கம் (கல்வித்துறை) பாடப் புத்தகங்கள் தயாரித்து போதனை செய்வது, தன்னைத் தானே சுட்டுக்கொள்வதற்கு ஒப்பானது. அதை எந்த அரசும் அனுமதியாது.

மேலும் பள்ளிகளில் பாடங்களாக கற்பிக்கப் படுபவை, சிறார்களுக்கு் நம்பிக்கையூட்டும் வண்ணம் அமைந்திருத்தல் நலம். சினிசிசத்தை (cynicism) பாட புத்தகம் வழியாக போதிக்க வேண்டுமா என்ன?

Anonymous said...

இந்தக் கதையை நீக்கத் தேவையில்லை.மாணவர்கள் எத்தனையோ விஷயங்களைப் படிக்கிறார்கள், கேட்கிறார்கள், பார்க்கிறார்கள். பாடப்புத்தகங்கள் மூலம்தான் உலகைப் புரிந்துகொள்கிறார்கள் என்றில்லை. சமூகம் எப்படி இருக்கிறது என்பதை அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் புரிந்து கொள்கிறார்கள். நடைமுறையில் காவல்துறை செயல்படுவது எப்படி என்பதையும் பார்க்கிறார்கள்.

ஒரு கதை என்ற அளவில் கூட இதை ஏற்க முடியவில்லை என்றால் என்னதான் சொல்லிக் கொடுக்க வேண்டும்.இங்கே பாலாறும், தேனாறும் பாய்கிறது, தர்மதேவை ஆட்சி புரிகிறாள் என்றா?.

ravi srinivas said...

previous comment was mine

Anonymous said...

¯í¸û ¸Õò¾¢Ä¢ÕóÐ ¿¡ý «ôÀʧ Á¡ÚÀθ¢§Èý. ¿ÁÐ ¸¡ÅøШÈ¢ø ´Øí¸£Éõ ÁÄ¢ó¾¢Õ츢ÈÐ ±ýÀ¨¾ °¼¸í¸Ç£ý ãÄÁ¡¸ ¦¾Ã¢óÐ ¦¸¡ûÅÐ §ÅÚ À¡¼Òò¾¸¸í¸Ç¢Ä¢ÕóÐ ¦¾Ã¢óЦ¸¡ûŦ¾ýÀÐ §ÅÚ.¸¡ÅøШÈ¢ý Á£Ð ¿õÀ¢ì¨¸ ²üÀÎòÐõ Å¢¾Á¡¸§Å À¡¼í¸û þÕ츧ÅñΦÁýÀ¨¾ìܼ ÅÄ¢ÔÕò¾ §ÅñÊ¢ÕôÀÐ ÅÕò¾ò¨¾ò ¾Õ¸¢ÈÐ. þó¾ì ¸¨¾ ¿øÄ ¸¨¾¦ÂýÀÐõ §ÁÖõ º¢È󾦾¡Õ ¸Õò¨¾ ¦¾Ã¢Å¢ì¸¢ÈÐ ±ýÈ¡Öõ «ÃÍò ШÈìÌ ±¾¢Ã¡É ¸ÕòÐ - «Ð ±ùÅÇ× ¯ñ¨Á¡¸ þÕó¾¡Öõ ܼ - À¡¼í¸Ç¢ø ÅÕÅРŢ¼Å¢òÐì¸¨Ç «Ã§º Å¢¨¾òÐô §ÀÏŨ¾ô §À¡ýÈÐ. ¬Â¢Ãõ Å¢¼Å¢òÐì¸û ¾¡Á¡¸ ÀÃÅðÎõ. ÓÊó¾Å¨Ã ´Æ¢ô§À¡õ. «ÃÍ þô§À¡¾¡ÅРŢƢòÐì ¦¸¡ñ¼¾üÌ ¿ýÈ¢ ¦º¡ø§Å¡õ.

Anonymous said...

¯í¸û ¸Õò¾¢Ä¢ÕóÐ ¿¡ý «ôÀʧ Á¡ÚÀθ¢§Èý. ¿ÁÐ ¸¡ÅøШÈ¢ø ´Øí¸£Éõ ÁÄ¢ó¾¢Õ츢ÈÐ ±ýÀ¨¾ °¼¸í¸Ç£ý ãÄÁ¡¸ ¦¾Ã¢óÐ ¦¸¡ûÅÐ §ÅÚ À¡¼Òò¾¸¸í¸Ç¢Ä¢ÕóÐ ¦¾Ã¢óЦ¸¡ûŦ¾ýÀÐ §ÅÚ.¸¡ÅøШÈ¢ý Á£Ð ¿õÀ¢ì¨¸ ²üÀÎòÐõ Å¢¾Á¡¸§Å À¡¼í¸û þÕ츧ÅñΦÁýÀ¨¾ìܼ ÅÄ¢ÔÕò¾ §ÅñÊ¢ÕôÀÐ ÅÕò¾ò¨¾ò ¾Õ¸¢ÈÐ. þó¾ì ¸¨¾ ¿øÄ ¸¨¾¦ÂýÀÐõ §ÁÖõ º¢È󾦾¡Õ ¸Õò¨¾ ¦¾Ã¢Å¢ì¸¢ÈÐ ±ýÈ¡Öõ «ÃÍò ШÈìÌ ±¾¢Ã¡É ¸ÕòÐ - «Ð ±ùÅÇ× ¯ñ¨Á¡¸ þÕó¾¡Öõ ܼ - À¡¼í¸Ç¢ø ÅÕÅРŢ¼Å¢òÐì¸¨Ç «Ã§º Å¢¨¾òÐô §ÀÏŨ¾ô §À¡ýÈÐ. ¬Â¢Ãõ Å¢¼Å¢òÐì¸û ¾¡Á¡¸ ÀÃÅðÎõ. ÓÊó¾Å¨Ã ´Æ¢ô§À¡õ. «ÃÍ þô§À¡¾¡ÅРŢƢòÐì ¦¸¡ñ¼¾üÌ ¿ýÈ¢ ¦º¡ø§Å¡õ., at 7:45 PM

Anonymous said...

சுர் என்று உரைக்கும்படி எழுதியிருக்கிறீர்கள்.இக்கதையின் மையக்கருத்தை விட்டுவிட்டு , உபநிகழ்வை வைத்து கதையை நீக்குவது அபத்தமான செயல்.

இந்த அபத்தமான செயலுக்கு வக்காலத்து வாங்குவோர் பரிதாபத்துக்குரியவர்.
அன்புடன்
ராஜ்குமார்

Anonymous said...

உங்கள் கருத்திலிருந்து நான் அப்படியே மாறுபடுகிறேன். நமது காவல்துறையில் ஒழுங்கீனம் மலிந்திருக்கிறது என்பதை ஊடகங்கள் மூலமாக தெரிந்துகொள்வது என்பது வேறு பாடபுத்தகங்களிலிருந்து தெரிந்துகொள்வதென்பது வேறு. காவல்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவே பாடங்கள் இருக்கவேன்டுமென்பதைக்கூட வலியுருத்தவேன்டியிருப்பது வருத்தத்தைத் தருகிறது. இந்தக்கதை நல்ல கதை என்பதும் மேலும் சிறந்ததொரு கருத்தை தெரிவிக்கிறது என்றாலும் அரசு துறைக்கு எதிரான கருத்து - அது எவ்வளவு உண்மையாக இருந்தாலும் கூட - பாடங்களில் வருவது விட வித்துக்களை அரசே விதைத்துப் பேணுவது போன்றது. ஆயிரம் விடவித்துக்கள் தாமாகப் பரவட்டும். முடிந்தவரை ஒழிப்போம். அரசு இப்போதாவது விழித்துக்கொன்டதற்கு நன்றி சொல்வோம்.