என்னுடைய வலைத்தளத்தில் இந்த வருடம் சினிமாவைப் பற்றி எழுதுவதைக் குறைத்துக் கொண்டு வாசிக்கும் நூல்களைப் பற்றி அதிகம் எழுதலாம் என்றிருக்கிறேன். கடந்த வருட துவக்கத்தில் 'சினிமா 365' என்கிற தலைப்பில் தினம் ஒரு சினிமாவைப் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது சாத்தியமா என்று சஞ்சலமாக இருந்தது. அறிவித்து விட்டு நிறுத்தினால் எனக்கே அவமானமாக இருக்கும்.
எனவே மாறுதலாக இந்த வருடத்தில் புத்தகங்களைப் பற்றி அறிவித்து விட்டு எழுதலாம் என்று உத்தேசம். வாங்கும் மற்றும் நூலகத்திலிருந்து எடுத்து வரும் பல நூல்களில் குறைந்தது சுவாரசியமான நூல்களைப் பற்றி சிறிய அறிமுகமாவது செய்து விடலாம் என்று நினைப்பேன். எப்படியோ இயலாமல் ஆகிவிடும். இந்த 2015 முழுக்க அதை சாத்தியப்படுத்தலாம் என்று யோசனை. பார்ப்போம். சமூக வலைத்தளங்களில் எதையோ எழுதிக் கொண்டிருக்காமல் இதன் மூலம் என்னை நானே செயலூக்கமாக்கவும் ஆக்கபூர்வமாகவும் இயங்க வைக்கலாம் என்ற திட்டம்.
எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் கவனத்திற்கு:
எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் கவனத்திற்கு:
உங்களின் எந்தவொரு நூலையும் என் வலைத்தளத்தின் மூலம் அறிமுகப்படுத்த விரும்பினால் அனுப்பி வைக்கலாம். எனக்கு சுவாரசியமானதாக இருக்கும் பட்சத்தில் அவற்றைப் பற்றி எழுதுவேன். விருப்பமுள்ள வாசகர்களும் நூல்களை வாங்கி அனுப்பி உதவலாம். சினிமா பற்றிய நூல்களுக்கு முன்னுரிமை. என் முகநூல் பக்கத்திலும் இந்த விவரம் வெளியாகும்.
மேல் விவரங்களுக்கு மின்னஞ்சலில் தொடர்புகொள்ளவும்.
sureshkannan2005 at gmail.com
நண்பர்கள் இதை பகிர்ந்துதவ வேண்டுகிறேன்.
suresh kannan
2 comments:
தங்களின் முகவரி,,,தரலாமா சார்?
பன்மடங்கு இலாபம் கிடைக்கும் தொழிலாக ஆகிவிட்டது பதிப்புத் துறை. இச்சூழலில் பதிப்பாளர்களிடமிருந்து இலவசமாகப் புத்தகங்களை எதிர்பார்க்கும் அறிவிப்பினை வெளியிட்ட தங்கள் தன்னம்பிக்கை வியப்பூட்டுகின்றது. 10% கழிவு சாதரணமாகப் பழக்கமான புத்தக விற்பனைக் கடைகளிலேயே கிடைக்கின்றது என்பதும் ஓர் உண்மைத் தகவல்.
Post a Comment