Saturday, September 18, 2010

எந்திரன் - FAQ's

முந்தைய பதிவின் தொடர்ச்சி



கடந்த பதிவில் நிகழ்ந்த சில விடுபடல்களுக்காக இந்தப் பதிவை எழுத நேர்ந்தது. சில கேள்விகளை பின்னூட்டத்தில் சந்திக்க நேர்ந்ததற்காகவும்.

'எந்திரன் போன்ற திரைப்படங்களை எதிர்ப்பதனால் என்ன பயன்? எப்படியும் பெரும்பாலோனோர் பார்க்கத்தான் போகிறார்கள். அப்புறம் ஏன் இந்த வீண் வேலை? யார் உங்களை கவனிக்கப் போகிறார்கள்?

'இவிடம் ஸ்வர்க்கமானு' என்கிற மலையாளத் திரைப்படத்தை சில நாட்களுக்கு முன் பார்த்தேன். தன்னுடைய பூர்வீக விவசாய நிலத்தை அரசியல் குண்டர்களிடம் இழந்து விடாமலிருக்க பேராடுபவராக மோகன்லால் நடித்திருப்பார்.

சட்ட ரீதியான உதவிக்காக இடதுசாரி சிந்தனையுள்ள நியாயமான வழக்குரைஞரை (ஸ்ரீனிவாசன்)  அணுகுவார் மோகன்லால். அவசரப் பணிக்கிடையிலும்  சமூகப் பிரச்சினை ஒன்றிற்காக  தெருமுனைக் கூட்டத்தில் உரையாற்றி விட்டுத் திரும்புவார் ஸ்ரீனிவாசன். அதுவரை நிலைகொள்ளாமல் தவிக்கும் மோகன்லால் கேட்பார்.

"நீங்கள் உரையாடியதை தெருவில் கடந்து செல்வோர் ஒருவர் கூட கவனித்தாகத் தெரியவில்லையே?"

"நெறைய பேர் கவனிக்கணும்னா நான் காபரே பிஸினஸ் நடத்தப் போயிருக்கணும்"
 

சற்று இடைவெளி விட்டுச் சொல்வார் ஸ்ரீனிவாசன்.

"இதோ பாருப்பா. நான் கூட்டத்தை கூட்டி கைத்தட்டு வாங்கறதுக்காக இதைச் செய்யல. எனக்கு இந்தச் சமூகத்திடம் உரக்கப் பேச வேண்டியிருக்கு. தன்னைச் சுற்றி நடக்கிற எந்தவொரு சமூகக் கொடுமையையும் காணாமல் இதுவரை தன்னுடைய சுயநலத்துக்காக மாத்திரமே யோசிக்கறவன்ல ஒரே ஒருத்தன் கூட ஒரு நிமிஷம் சிந்திச்சா கூட அது எனக்குக் கிடைச்ச வெற்றி."





அவ்வளவுதான் விஷயம்.

இந்தச் சமூகச் சொரணை ஏறக்குறைய பெரும்பாலோனோருக்கு இருக்கும். பலருக்கு இதைப் பற்றி பேச விருப்பமிருக்காது. பேசி என்ன ஆகப் போகிறது என்று சிலருக்கு அலுப்பாயிருக்கலாம். சிலர் தேர்தல் நேரங்களின் போது மாத்திரம் தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பார்கள். பேசுவதற்கு அஞ்சி எப்போதும் மெளனமாயிருப்பவர் பலர். நடப்பதை மெளன அவதானிப்புடன் காலம் கழிப்பவர் சிலர். இவர்களுடன் கூட 'அறியாமைதான் பேரின்பம்' என்றும் கண்டும் காணாமலும்  போகிறவர்களுக்காக இப்படி மறுபடியும் மறுபடியும் உரையாடத்தான் வேண்டியிருக்கிறது. எல்லா நீதி நியாங்களும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டு விட்டன. என்றாலும் சமூக அநீதிகளின் சதவீதம் மேன்மேலும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. எனவேதான் இவற்றை நினைவுப்படுத்துவதற்காகவாவது இதைப் பேசவேண்டியிருக்கிறது. எனக்குக் கிடைத்த ஆயுதம் இந்த எளிய எழுத்து. பெரும்பாலான அச்சு ஊடகங்கள் அதிகாரத்திற்கு வால் பிடிக்கும் பணியைச் செய்து கொண்டிருப்பதால் அங்கு இம்மாதிரியான கட்டுரைகளை கனவிலும் எதிர்பார்க்க முடியாது.

சமூகத்தின் மற்ற துறைகளை விட தனிப்பட்ட வகையில் நான் நேசிக்கும் சினிமாத்துறையில் நிகழும் அநியாயங்களும் 'நான் புழங்கும் மொழியிலும் பிரதேசத்திலும் நல்ல சினிமா வர வேண்டும்' என்கிற ஆதங்கத்திலும் இவ்வாறான கட்டுரைகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வணிக சினிமாவினால் பலநூறு மக்களுக்கு வேலைவாய்ப்பும் பணமும் அரசிற்கு வருமானமும் கிடைக்கிறது. அதைத் தடுக்க நினைப்பது முட்டாள்தனம்தானே? 

இது ஆண்டாண்டு காலமாக பொதுப்புத்தியில் அழுத்தமாக உறைந்து நிற்கும் சிந்தனையும் கேள்வியும்தான். சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னால் இதே மக்கள் வேலைவெட்டி எதுவுமில்லாமல் இருந்தார்களா? மேலும் பல்லாயிரக்கான மக்களுக்கு வருமானம் கிடைக்குமென்றால் மதுக்கடைகளைப் போல போதை மருந்து, உயிர்காக்கும் மருந்துகளில் கலப்படம் உள்ளிட்ட பல சட்டரீதியான குற்றங்களுக்கு அனுமதி கொடுத்து விட்டால் இன்னும் பல நபர்களுக்கு வேலை வாய்ப்பும் வருமானமும் கிடைக்குமே என்பதற்காக அதை ஆதரிக்க முடிவு செய்வோமா?

மேலே குறிப்பிட்டிருக்கும் உடல்ரீதியான ஆபத்தை ஏற்படுத்தும் அபாயங்களை விட ஒட்டுமொத்த சமூகத்தின் மனதை பாழ்படுத்தும், சிந்தனைகளை காயடிக்கும், அதிகார, முதலாளி வர்க்கத்தினரின் எந்தவொரு ஊழல்களைப் பற்றியும் யோசிக்க விடாமல் மயக்கத்திலேயே ஆழ்த்தி வைக்கும் வணிக சினிமா என்பது மிகக் கொடுமையான போதை மருந்திற்கு நிகரானது என்பதை நாம் அறிவோம்தானே?

தமிழ்பெயரில் தலைப்பு  வைத்தால் வரிவிலக்கு என்கிற அபத்தமான கொள்கைக்காக பல கோடி ரூபாய் வரிகளை இழக்கும் அரசு ஒருபுறமெனறால் இதுபோன்ற மிகை எதிர்பார்ப்பு படங்களின் மூலம் அதிகம் சம்பாதிப்பது நடிகர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் தவிர இடைத்தரகர்களும் கள்ள அனுமதிச் சீட்டை மறைமுகமாக ஊக்குவிக்கும் திரையரங்கு உரிமையாளர்களும்தான். சினிமா தொழிலாளர்களும் இந்த வணிகத்தைச் சார்ந்திருப்பவர்களும் அல்ல. இது போன்ற,  வணிகத்தை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்களை நாம் புறக்கணிக்கத் துவங்கி அதே சமயம் சிறப்பாக உருவாக்கப்படும் நல்ல திரைப்படங்களை ஆதரிக்கத் துவங்கினால், 'வாடிக்கையாளர்களே முதலாளிகள்' எனும் தத்துவப்படி தயாரிப்பாளர்களும் நல்ல படங்களைத் தயாரிக்க முன்வருவார்கள். இதைச் சார்ந்திருக்கும் தொழிலாளர்களுக்கும் எவ்வித பாதிப்பும் நேராது. எனவே இதற்கான தீர்வு நம்மிடம்தான் உள்ளது.

இம்மாதிரியான படங்களில் ஹாலிவுட் தரத்திற்கான நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான நபர்களின் உழைப்பு உள்ளது. ஏன் இதை கொச்சைப்படுத்துகிறீர்கள்? 

அசோகமித்திரன் தொடர்பான விழா ஒன்றில் சுந்தரராமசாமி பேசும் போது "நூற்றுக்கணக்கான நூற்களை எழுதியிருக்கும் வணிக எழுத்தாளர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும். அவற்றின் பின்னேயுள்ள உழைப்பை நீங்கள் கவனிக்கக்கூடாதா' என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களை நாம் 'உழைப்பாளர் தினத்தன்று கொண்டாடுவோம்' என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான அபத்த நாவல்களை எழுதிய காரணத்திற்காக ஒரு க்ரைம் நாவலாசிரியரையோ, தாள்களை கருப்பாக்கி நூற்றுக்கணக்கான கவிதை நூல்களை எழுதிக் குவிக்கும் ஒரு கவிஞரையோ, அவற்றின் பின்னேயுள்ள உழைப்புக் கருதியாவது அவற்றை நாம் கொண்டாட வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்று வாதிட்டால் அது எத்தனை அபத்தமாக இருக்கும்? கள்ளச் சாராயம் காய்ச்சுபவனிடத்திலும் சிறுமிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சமூக விரோதிகளிடம் கூடத்தான் அதிக உழைப்பும் ரிஸ்க்கும் உள்ளது. அந்த காரணங்களுக்காக அதைப் பாராட்ட முடியுமா?

குறிப்பிட்ட உச்சநடிகரின் படம் வரும் போது மாத்திரம் ஏன் இத்தனை எதிர்ப்பு? மற்ற படங்கள் வரும் போது மட்டும் ஏன் மெளனம் சாதிக்கிறீர்கள்?

உலகத்தின் இதுவரை எத்தனையோ படுகொலைகளும் மனித உரிமை மீறல்களும் நிகழ்ந்திருந்தாலும் அதன் உச்சமான யூதப்படுகொலைகளைப் பற்றியும் ஜப்பான் அணுகு்ண்டு கோரத்தையும் பற்றி பல ஆண்டுகள் கழிந்தும் நாம் துக்கத்துடனும் கோபத்துடனும் உரையாடுகிறோம். ஏன்?

மேலும் தமிழகத்தைப் பொறுத்த வரை வணிகச் சினிமா ஏற்படுத்தும் சமூக நாசத்தைப் பற்றின உரையாடல்கள் இன்றோ, நேற்றோ அல்லது இது போன்ற உச்ச நடிகர்கள் படம் வெளிவரும் போதோ மாத்திரம் நிகழ்வதில்லை. சிற்றிதழ்களும் சினிமா ஆர்வலர்களும் சமூக அக்கறை உள்ளவர்களும் தொடர்ந்து இதிலுள்ள அபாயங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருக்கின்றனர். 1980-களில் தமிழ் சினிமா ஒரு மறுமலர்ச்சி யதார்த்த அலையில் பயணிக்கத் துவங்கியது மேற்குறித்த அணுகுண்டுக்கு இணையாக ஏவிஎம் நிறுவனம் 'சகலகலா வல்லவனை' எறிந்து சூழலை மாசுபடுத்தியோடு அந்தப் போக்கையே அடியோடு தகர்தத்தை சினிமா விமர்சகர்கள் இன்றும் ஆதங்கத்தோடும் கொதிப்போடும் பேசுகிறார்கள். எனவே இவ்வாறான உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருப்பது அவசியமாகிறது.

இந்த எதிர்ப்பின் பின்னணியில் உள்ள அரசியல்தான் என்ன?

முந்தைய பதிவுகளிலேயே இதை தெளிவுபடுத்தி இருக்கிறேன். எந்தவொரு தனிபட்ட நபரையோ, நடிகரையோ, படைப்பாளியையோ, குழுமத்தையோ, நிறுவனத்தையோ, அரசியல் கட்சியையோ தாக்கும் எண்ணம் எனக்குக் கிடையாது. என்னுடைய இலக்கு முழுவதும் இதற்குக் காரணமாக உள்ள அமைப்பின் மீதும் அதன் பின்னணியின் மீதும் அதற்கான சமூகக் காரணங்களின் மீதுதான். காலவர்த்தமானங்களைத் தாண்டி சில நபர்களால் இந்த உரையாடல் தொடர்ந்து கொண்டுதானிருக்கும். இது தொடர்பான சமகால நிகழ்வு 'எந்திரன்' என்பதால் இந்த எதிர்ப்பும் கலகமும் அவசியமாகிறது.

இம்மாதிரியான படங்களை குறிவைத்து எழுதுவதின் மூலம் தளத்தின் மீதான கவனமும் ஹிட்டும் அதிக கிடைக்கும் என்பதுதானே  நோக்கம்?

பதிவின் ஆரம்பத்தில் நடிகர் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்ட அதே விஷயம்தான். ஹிட் கிடைப்பதும், அதிக பார்வையாளர்களை ஈர்ப்பதும், அதன் மூலம் ஆதாயம் பெற நினைப்பதும்தான் என்னுடைய நோக்கம் என்றால், கவர்ச்சியான புகைப்படங்களை இணைத்தும், இணையத்தில் பரவலாக கிடைக்கும் ஆபாச நகைச்சுவைகளை மொழிபெயர்த்தும், பின்னூட்டம் போடுபவர்கள் முதல் அச்சுப் பத்திரிகை முதலாளிகள், எழுத்தாளர்கள் வரை அனைவரையும் அகமகிழச் செய்தும் அதை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அதை நான் செய்வதில்லை என்பதை என் பதிவை வாசிக்கும் மனச்சாட்சியுள்ள வாசகர்கள் ஒப்புக் கொள்வார்கள்.

இதெல்லாம் நான் ஏதோ 'ரூம்' போட்டு யோசித்து எழுதினவை அல்ல. இங்கிருந்து எடுக்கப்பட்டவை இங்கேயே பகிரப்படுகிறது. கேள்விகள் தொடர்ந்தால் பதில்களும் தொடரலாம். :-)

suresh kannan

46 comments:

கானகம் said...

அன்பு சுரேஷ் கண்ணன்,

உங்களின் சமூக அக்கறை உண்மையிலேயே நிறைவைத் தருகிறது. சமூக அக்கறை பொய்யாக இருக்க வேண்டிய அவசியம் இல்லையாகையால் உங்களின் குரல் ஓரிருவரையாவது மாற்றட்டும்,

வாழ்த்துக்கள்.

ஜெயக்குமார்

Prakaash Duraisamy said...

"உடல்ரீதியான ஆபத்தை ஏற்படுத்தும் அபாயங்களை விட ஒட்டுமொத்த சமூகத்தின் மனதை பாழ்படுத்தும், சிந்தனைகளை காயடிக்கும், அதிகார, முதலாளி வர்க்கத்தினரின் எந்தவொரு ஊழல்களைப் பற்றியும் யோசிக்க விடாமல் மயக்கத்திலேயே ஆழ்த்தி வைக்கும் வணிக சினிமா என்பது மிகக் கொடுமையான போதை மருந்திற்கு நிகரானது என்பதை நாம் அறிவோம்தானே?"

"சிறு முதலீட்டுத் திரைப்படங்களும் புதிய முயற்சிகளும் தமிழ் சினிமாவில் சாத்தியமேயில்லாமல் போய்விடும்."

1.அவர்கள் ஒன்றும் பொது சேவை செய்ய சினிமாவிற்கு வரவில்லையே அவர்கள் முற்றிலும் வணிகர்களே , அவர்களுக்கு தேவை வெற்றி , ஒவ்வொரு வணிகனுக்கும் தேவை வணிகம் சார்ந்த வெற்றியே , இதில் தனி ஒரு மனிதன் எவ்வாறு பாதிக்க படுகின்றான் என்று புரிய வில்லை. உங்கள் மனது ஒரு சினிமாவால் பாதிக்க(பாழ்) பட்டு இருந்தால் அந்த அனுபவத்தை சொல்லுங்கள்.

2.சிறு முதலீட்டுத் திரைப்படங்களையும் புதிய முயற்சிகளையும் அவர்களிடம் விட்டு பாருங்கள் அதை மிக அதிகமான மக்களிடம் கொண்டு செல்வார்கள்.

ரா said...

Suresh,
I really dont agree with your views...If the movie is good...its going to be a Hit..even SUN Pictures movie(SURA) have also Flopped even after aggressive marketing....so i dont agree that movie will run just bcz of marketing.....
people who use internet and wise enough to think of their own...and they will decide themselves to make this movie hit or Flop...if you really have concerns go to some villages and do social activity...pls stop giving advise to us..

அவிய்ங்க ராசா said...

நல்ல பதிவு சுரேஷ் கண்ணன். இவ்வவு விளக்கியபின்பும் ஒருத்தர் கேட்பார் பாருங்கள் "****** எந்தலைவனைப் பத்தி தப்பாவா பேசுற..."

Thekkikattan|தெகா said...

//பெரும்பாலான அச்சு ஊடகங்கள் அதிகாரத்திற்கு வால் பிடிக்கும் பணியைச் செய்து கொண்டிருப்பதால் அங்கு இம்மாதிரியான கட்டுரைகளை கனவிலும் எதிர்பார்க்க முடியாது.//

உண்மையோ உண்மை!

பதிவுடன் வரிக்கு வரி ஒத்துப் போக முடிகிறது. நல்ல பதிவுங்க!

Karthik said...

I believe in Karma. Charging fans for watching trailer is unacceptable. Last time they did like this, it was for Baba (copyrighting rudra etc..) and that turned out be modern Rajni's biggest flop. I hope Endiran flops and wipes Sun from film production

கிரி said...

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... எந்திரன் படத்தை பார்க்காமல் புறக்கணித்து சுரேஷ் கண்ணன் அவர்கள் எந்திரன் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுபவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கப்போகிறார் திருட்டு DVD யில் கூட பார்க்க மாட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனவே அவரிடம் இருந்து எந்திரன் விமர்சனம் வரும் என்று யாரும் எதிர்பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதையே எந்திரனை புறக்கணிக்க நினைப்பவர்களும் பின்பற்றும் படி அறிவுறத்தப் படுகிறார்கள் :-)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

///// 'நான் புழங்கும் மொழியிலும் பிரதேசத்திலும் நல்ல சினிமா வர வேண்டும்'/////

சுரேஷ் சார் ,
படம் வெளிவராமலேய எப்படி இது கெட்ட சினிமா என்று முடிவுக்கு வந்தீர்கள் ?...,

////மேலும் பல்லாயிரக்கான மக்களுக்கு வருமானம் கிடைக்குமென்றால் மதுக்கடைகளைப் போல போதை மருந்து, உயிர்காக்கும் மருந்துகளில் கலப்படம்,////

ஆகா ...என்னே ஒரு அவதானிப்பு ...படம் பார்காமலேய ,மதுக்கடை ,போதை மருந்து ,உயிர்காக்கும் மருந்துகளில் கலப்படம்..என்னே ஒரு விமர்சனம் !!!!!

//// கள்ளச் சாராயம் காய்ச்சுபவனிடத்திலும் சிறுமிகளை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் சமூக விரோதிகளிடம் கூடத்தான் அதிக உழைப்பும் ரிஸ்க்கும் உள்ளது. அந்த காரணங்களுக்காக அதைப் பாராட்ட முடியுமா?/////

மிகவும் மோசமான உவமை சார் ..,

இதை நீங்கள் படம் பார்த்துவிட்டு விமர்சித்திருந்தால் உங்கள் பதிவு ஓரளவாது நியாமாக இருக்கும்.படம் பார்க்கமலே முன்முடிவோடு ஒருவரையோ அல்லது ஒரு குழுமத்தையோ விமர்சிப்பதில் எந்த வகை நியாயம் ...,

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

அசோகமித்திரன் தொடர்பான விழா ஒன்றில் சுந்தரராமசாமி பேசும் போது //// "நூற்றுக்கணக்கான நூற்களை எழுதியிருக்கும் வணிக எழுத்தாளர்களை ஏன் புறக்கணிக்க வேண்டும். அவற்றின் பின்னேயுள்ள உழைப்பை நீங்கள் கவனிக்கக்கூடாதா' என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களை நாம் 'உழைப்பாளர் தினத்தன்று கொண்டாடுவோம்' என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ////

நாங்கள் அக்டோபர் 01 கொண்டாடுகிறோம்

Raj Chandra said...

Dear Suresh,

>>நல்ல சினிமா வர வேண்டும்
- Define the scale of "good movie". Your scale will be completely different with mine. Do not confuse the mass mentality with these kind of prayers. Mass needs entertainment. Let me tell you something: You and I love Iranian cinemas. In that country only there are still stoning to death is allowed (whether executing it or not is different). So a "good movie" society need not be rosy.

Take Hollywood: The "good movie" directors are rare species there too. Some of the movies/music that are appreciated by us is trashed by Americans. So to each has their own standard. No need to rationalize/generalize it.

If you read JeyaMonhan's today's article about his speech in Shaji's book function, you will see the same point.

Why our community is running behind some personalities (not only film, you know that)? It cannot be explained every time Rajini/Kamal/Ajit films are released.

Anyway..I just twittered like this:
"For the sake of @sureshkannan70 -s health reasons, I would like the movie 'Endhiran' to be released and done with that :). Relax."

Take care.

Regards,
Rajesh

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

@ கிரி

ஒரே சிந்தனை :)

கல்வெட்டு said...

நிறையப் பேச வேண்டும் என்று உள்ளது சுரேஷ். ஆனால் அதைக் கூட " அதிக வலைப்பதிவர்களால் பேசப்பட்ட xxxxx" என்று சொல்ல பல மொன்னை மாந்தர்கள் உள்ளதால் சகலமும் பொத்தி , கூமுட்டைகளின் ஆரவாரத்தைக் சகித்துக்கொள்ளவேண்டியுள்ளது. :-(((

இப்போதுள்ள நிலையில் இதை விமர்சித்தாலே உதை விழும் போல உள்ளது. அரசியல் பண பலம். :-(((

தகவலுக்கு...
http://tvrk.blogspot.com/2010/09/blog-post_03.html

bandhu said...

இப்போதிருக்கும் சூழல் மிக அபாயமானது. ஒரு கட்சி / நிறுவனம் எல்லோரும் என்ன சினிமா பார்க்கவேண்டும் (அந்த நிறுவனம் / கட்சி சார்புள்ளவர்கள் தயாரிக்கும் படங்கள் வெளியிட தியேட்டர்கள் கிடைக்காததால்), என்ன படிக்க வேண்டும் (நாளிதழ்கள் / வார இதழ்கள் வழிக்கு கொண்டுவரப்பட்டதால்) , டிவியில் என்ன பார்க்க வேண்டும் என்று முடிவு செய்யும் நிலையில் உள்ளதால். இந்திரன் ஒரு பாகம் மட்டுமே ..

கல்வெட்டு said...

சுரேஷ்கண்ணனின் உலகப்படம் (அப்படி ஒன்று இல்லை என்னளவில்) மற்றும் கதைப்புத்தக (மன்னிக்க சுரேஷ்! என்னாள் அதைத்தாண்டி வரமுடியவில்லை ) விமர்சனங்களில் அல்லது இரசிப்பு ஆராதனை கலந்த விசயங்களில் எனக்கு அதிக விமர்சனங்கள் உண்டு.

ஆனால் இந்தப் பதிவில் "படம் வரும் முன் விமர்சனம் ஏன்?" என்று கேட்கும் பலர் , "மக்களை மகுடிப்பாம்பாக மாற்றிக் கொண்டிருக்கும்" அதிகார ஊடக விசயம் மற்றும் அதற்கு டான்ஸ் ஆடும் ஸ்டார்கள் அதன் மூலம் திணிக்கப்படும் கருத்துகள் .... தெரியவில்லையோ என்று தோன்றுகிறது.

இது பட விமர்சனம் இல்லை யுவர் ஆனர்ஸ். சமூகத்தில் இப்படி ஆட்டுமந்தை மக்களை வைத்து நினைத்ததைச் செய்யும் அதிகார/பண வர்க்கத்திற்கு எதிர்ப்பாகத்தான் இந்தைப் ப‌திவு எனக்குப்படுகிறது.

**

பார்ப்பது இரசிகனின் உரிமை என்று சொல்லலாம் யுவர் ஆனர்....அவமானப்படுவது தாழ்த்தப்பட்டவனின் உரிமை என்று நமது முன்னோர்கள் இருந்து இருந்தால் ..இன்னும் ரத்னா கபே பிராமணாள் கடையாகத்தான் இருந்து இருக்கும். மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்க்ரகம் இன்னும் தேவைப்பட்டு இருக்கும்.

**

இன்னும் சன் டிவி வகையறாக்களை காசு கொடுத்து வீட்டில் வைத்து இருப்பது வீட்டில் மற்றவர்களின் நிர்ப்பந்தமா சுரேஷ்? எப்படித்தான் இந்தப்படம் வந்து 100 நாள் ஓடி அந்த விழா முடியும் வரை சகித்துக் கொள்ளப்போகிறீர்களோ?

ஸ்ரீஹரி said...

யாரிந்த வினவு ? ஏனிந்த வேலை ?

யாருப்பா நீ ? உங்க தொல்லை தாங்க முடியல .. எவ்வளவு நேரம் வீணடித்து எந்திரன் பற்றி பதிவு போட்டீர்கள் .. உங்களுக்கு வேற வேலைய இல்லையா ? அடுத்தவனை திருத்துறது தான் வேலையா?
தனி மனிதனை தாக்குவது புரட்சி இல்லை.

நீங்கள் மக்களை நல்வழி படுத்த முயன்றால் .. நல்ல பதிவு போடுங்கள்....
எந்திரனை புறககணியுங்கள் ..அரவணை ... புண்ணாக்கு. அப்படின்னு போட்டு டைம் வேஸ்ட் பண்ணாதீங்க ...

நாங்க எல்லாம் ரொம்ப புத்திசாலிகள் .. எங்களுக்கு தெரியும் யார அரவணைகனும்.. புறக்கணிக்கனும் என்று ....

ஊருக்கு உபதசம் வேண்டாம் ..

ரொம்ப வேலை இருக்கு .. அப்புறம் மீட் பண்ணுவோம் ..

http://sri1982-srihari.blogspot.com/2010/09/blog-post_17.html

ஸ்ரீஹரி said...

எந்திரன் பற்றி எழுதும் நீங்கள் எல்லாம் எது போன்ற எழுத்தாளர ( முடியல) என்பது எல்லாருக்கும் தெரியும்.... நீங்கள் செய்த சேவைகள் என்ன ??? புரட்சி என்ன? இவ்வளு நாளா என்ன ????????? ( கேட்ட வார்த்தை)...... நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியல ... வாய் மட்டும் வண்டலூர் வர ..... ஒரு ரூபாய் பிச்சை போட முடியாதவன் , ஊருக்கு உபதேசம் .... உங்கள மாதிரி நெறைய பேரு பதிவு போடுறாங்க எந்திரன் பத்தி ..... ரஜினி பத்தி... அதுவும் எப்ப போட்ட எது கிடைக்கும் தெரிஞ்சி ... நீங்க ரஜினி பற்றி ஏன் இவ்வளு நாளா விமர்சனம் பண்ணல..... உங்க புரட்சி கருத்துக்கு இப்ப தான் நேரம் வந்ததா...

எல்லாம் ஒரு விளம்பரம் ...

உண்மைத்தமிழன் said...

அன்பின் சுரேஷ் கண்ணன்,

அந்த மலையாளப் படத்தை நானும் பார்த்தேன். சிறந்த படம்தான்..! அது போல் மையக் கருத்தாக மக்களுக்கு வேண்டிய கதையாடல் கொண்டு சமீபமாக எந்தத் தமிழ்ச் சினிமாவும் வரவில்லை..! வருத்தமே..!

காலப் பறவை said...

ஒரு________காக எத்தனை ________கள் அல்லாடுகிறார்கள் பாருங்கள்


http://thatstamil.oneindia.in/movies/specials/2010/09/19-rajinikanth-fans-enthiran-sholinger.html

பிச்சைப்பாத்திரம் said...

காலப்பறவை: உங்கள் பின்னூட்டம் மட்டுறுத்தப்பட்டு வெளியாகிறது. புரிதலுக்கு நன்றி.

காலப் பறவை has left a new comment on your post "எந்திரன் - FAQ's":

@ஸ்ரீஹரி


----------------------------


மேலே நான் கூறியவை மட்டுப்படுத்த படலாம்....... இருப்பினும்
ஒரு வாதத்திற்கு வாதம் வைக்க தெம்பில்லாமல் வினவு, புரட்சி, ரசினி என எதற்கு பிதற்றுகிறார்கள் என்று தான் தெரியவில்லை......

R.Gopi said...

இந்த பதிவில் சுரேஷ் கண்ணன் குறிப்பிடும் அந்த ஆதங்கம் விஷயம் தாண்டி வயத்தெரிச்சல் என்கிற விஷயம் மேலோங்கி நிற்கிறது....

திரைப்பட உலகே இன்று “அவர்கள்” கையில் என்பதை அவர்கள் தயாரிக்கும், விநியோகிக்கும் படங்களை குறிப்பிட்டு ஆதாரத்தோடு எழுதுங்கள்....

சின்ன தளபதி “மன்மத அம்பு” என்றொரு சிறிய பட்ஜெட் படத்தை உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பலில் எடுத்து வருகிறார்... இது கூட நீங்கள் கமல் ரசிகராக இருக்கும் பட்சத்தில் சாத்தியமல்ல...

ரஜினி பற்றிய (விஷமமான கருத்துக்களை) விஷயங்களை மட்டுமே பதிவு செய்து வரும் நீங்கள், இது போன்ற ஆதங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆதங்கம்....

Karthik said...

அது ஏன் ரஜினி படம் வரும் போது மட்டும் எல்லாருக்கும் சமூக அக்கறை பொத்துக்கிட்டு வருதுன்னே தெரியல!

Anonymous said...

But is this is the first commercial film in tamil?

is this the first film produced by the same producer's family?

you really dont know any other problem tamilnadu is facing now because of the same "power"

yamuna rajendran said...

anpulla suresh-

a wondeful assesment of on-going cinema and its politis.

what i could not understand is, you are right about criticising charu nivadita's views on cinema, but your views on jeyamohan's attitude towards tamil mainstream cinema is totally biased.

for example tell me about his attitude on thasvathaaram and john's films as a whole. just do not limit yourself with john's agrhaarathil kaluthai.

how do you evaluate jeyamohan's connection and his silence with films like samy's sindhu samveli.

please evaluate your views on the claims of samy, russian literature and the part of jeyamohan in the making of this film.

hope you can understand that my views are not personal. it is about some one who is being often appreciated in your articles.

i am writing all of this because, i thought you are very serious about your critcism, good cinema, and the politics of cinema.

i would like to engage this as long dialogue.

hope you respond, and i will continue afterwards

anpudan yamuna rajndran

Ashok D said...

மேலும் புரிதல்கள் இப்பதிவில் :)

//தாள்களை கருப்பாக்கி நூற்றுக்கணக்கான கவிதை நூல்களை எழுதிக் குவிக்கும் ஒரு கவிஞரையோ//

’கவிதை’ பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்...

Prakaash Duraisamy said...

"ஆஹா அற்புதம்! உங்கள் கருத்துகளுக்கு நன்கு பதில் சொல்லும் விதமான ஒரு பதிவை இங்கு படித்தேன்,



http://www.saravanakumaran.com/2010/09/blog-post_19.html

raja said...

பெரியபடங்களினால் சினிமாத்தொழில் எப்படி நசியக்கூடும் என்பதற்கு ஹாலிவுட்டில் இருந்தே ஒரு உதாரணத்தை கூறுகிறேன்.. HEAVENS GATE என்கிற படத்தை சினிமா ரசிகர்கள் பலர் கேள்விபட்டிருக்ககூடும்.. பல நூறு மில்லியன் டாலர்கள் முதலீட்டில் தயாரிக்கபட்டு MGM நிறுவனத்தை மூடவைத்தது இந்த பெரியபட்ஜெட் படம்..நிஜமாக சினிமாத்தொழில் தெரிந்தவர்களுக்கு பெரியபட்ஜெட் சவக்குழிதான்..சிறிய முதலீட்டு படங்களில் ஆர்வம் வைத்த ஆர்.பி.செளத்ரி 50 படங்களும்..30 புது இயக்குநர்களை உருவாக்கி.. 10 ஸ்திரமான இயக்குநர்களை தமிழ்சினிமாவுக்கு கொடுத்திருக்கிறார்.. கே.டி.குஞ்சுமோன் நிலையை யோசித்துபாருங்கள்..சமீபத்தில் இரண்டுமுறை சினிமாவை எடுத்து பொட்டியில் பூட்டிவைத்திருக்கிறார்.வட்டாரதன்மை கொண்ட தமிழ்மொழியில் பெரிய பட்ஜெட் படம் என்பது. மெல்ல கொள்ளும் விஷம் தான். உண்மைகளை உரத்து சொல்லியும் கேட்கவிடில்.. அடித்து தான் சொல்லவேண்டியிருக்கிறது.. மனநிலை சரியில்லாதவர்களுக்கு சிகிச்சைகளை நாம் அப்படித்தான் கொடுக்கவேண்டியிருக்கிறது.

Anonymous said...

சுரேஷ்கண்ணன்

நான் உங்களுடன் இந்த விஷயத்தில் முற்றிலும் உடன் படுகிறேன். நாம் சொல்லி யாரும் கேட்க்காவிட்டாலும் பரவாயில்லை நமக்கு சொல்ல ஒரு தளம் இருக்கும் பொழுது தயங்காமல் உண்மையைச் சொல்ல வேண்டும். இந்த விஷயத்திலாவது துணிந்து சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

இந்த எந்திரன் படத்தை சமூகத்தின் மீது அக்கறையுள்ள எந்த மனிதனும் இன்னும் சொல்லப் போனால் தன்னை மனிதன் என்று நம்பும் எவனும் நிச்சயம் புறக்கணிக்க வேண்டும். நான் இதற்கு முன்னால் வந்து பெரிதும் தமிழக மக்களால் மூளையின்றி ஆட்டு மந்தைகள் போலப் பார்த்து பரவசப் பட்டுப் பேசப் பட்ட சந்திரமுகி, சிவாஜி போன்ற கழிசடைப் படங்களையும் இன்று வரை பார்த்தவனில்லை இனிமேலும் பார்க்கப் போவதும் இல்லை. ரஜினிகாந்த் மீது பல்வேறு காரணங்களுக்காக தனிப் பட்ட முறையில் ஒரு மதிப்பு உண்டு. அது வேறு இது வேறு.

பிற எந்தப் படங்களை விட இந்த எந்திரன் புறக்கணிக்கப் பட வேண்டும். இந்தப் படம் தோல்வி அடைந்து நாசமாகப் போக வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். காரணங்கள்:

1. இந்தப் படத்திற்காக அப்பாவித் தமிழர்கள் கொடுக்கும் ஒவ்வொரு காசும் ஒரு மாபெரும் குடும்ப மாஃபியாவை மேலும் மேலும் வளர்த்து ஒட்டு மொத்த தமிழ் நாட்டையுமே பேரழிவுக்குக் கொண்டு போய் விட்டு விடும். ஆகவே மாஃபியாக் கலாச்சாரத்தில் நம்பிக்கையில்லாத எவரும், அராஜகங்களின் மீது எதிர்ப்பு கொண்ட எவரும் இந்தப் படத்தைக் கண்டிப்பாக எதிர்த்தே ஆக வேண்டும் இதை ஒரு பிரச்சாரமாகவே அக்கறையுள்ள ஒவ்வொரு இயக்கமும் செய்ய வேண்டும்

2. இந்த சினிமா என்று அல்ல குடும்ப மாஃபியா உருவாக்கும் தொடர்பு கொள்ளும் எந்தவொரு சினிமாவையுமே நம் எதிர்கால நலன்களில் அக்கறையுள்ள எந்தவொரு மனிதனும் முற்றிலுமாகப் புறக்கணிக்கவே வேண்டும். அதற்காக சினிமா உலகமே அழிந்தாலும் பரவாயில்லை அதுவும் நன்மைக்கே.

3. இவை போன்ற மலினமான மட்டமான மக்களின் நல்ல ரசனைகளை மழுங்க அடிக்கும் ஆட்டு மந்தைக் கூட்டமாக ஆக்கும் சினிமாக்களுக்கு வரவேற்பு கிடைக்கா விட்டால் எதிர்காலத்திலாவது நல்ல சினிமாக்கள் எடுப்பதைப் பற்றி தமிழ் சினிமாக்காரர்கள் சிந்திப்பார்கள். இல்லாவிட்டால் இவை போன்ற கேவலங்கள் மட்டுமே தொடரும் அவலம் நிகழ்ந்து விடும்

ஆகவே மீண்டும் சொல்கிறேன் தயவு செய்து இந்தப் படத்தைப் புறக்கணியுங்கள். மாறாக ஒரு குடும்ப ஆட்சியின் அராஜகங்களை மேலும் வளப்படுத்த உங்கள் சொந்தக் காசை செலவழிக்க விரும்பினால் உங்கள் சொந்தச் செலவிலேயே சூனியம் வைத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் எதிர்கால சந்ததியினரின் அழிவிற்கு முதலீடு செய்ய விரும்பினால் தாராளமாக போய் பாருங்கள் உங்கள் தலையில் நீங்களே மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளுங்கள் உங்கள் தலைகளில் நீங்களே கொள்ளிக் கட்டையால் சொறிந்து கொள்ளுங்கள். நஷ்டம் ஒட்டு மொத்த தமிழ் நாட்டுக்குமே

வருத்தத்துடன்
ச.திருமலை

harisivaji said...

ipppa enna pannanum
Enthiran pakkaama (chinna budjet Rajini nadikala SUN produce panala)
Sinthu samaveli padam vanthuruku atha pakaalama
samoogatha thirutha antha maathri kevalamaana padatha pathi UNGA AKKARAIYODA pathiva podunga

Enthiran trailer potta kooda kanna moodikanumaa????
neenga SUN produce panni viyaaparam panra padam ellam pakka koodathunu solreengala..

ithuku munnadi sun veliyitta padathuku thoongitu iruntheengalo

ellam solittu ithula naan site publicityku panalaanu sonnna atha naanga nambanumna

Vayaterichal...pervazhiyo..

கோவி.கண்ணன் said...

சிறப்பான விளக்கம் சுரேஷ்

கோயிஞ்சாமி குழுமம் said...

நாலு பேருக்கு நல்லது செய்றதா எதுவுமே தப்பில்லை. தென்பாண்டிச் சீமையிலே.. தேரோடும் வீதியிலே.......

Prathap Kumar S. said...

அருமையான பதிவு... நீங்கள் தொடருங்கள் சரேஷ் ஜீ..

Prathap Kumar S. said...

//நல்ல பதிவு சுரேஷ் கண்ணன். இவ்வவு விளக்கியபின்பும் ஒருத்தர் கேட்பார் பாருங்கள் "****** எந்தலைவனைப் பத்தி தப்பாவா பேசுற..."//

ராசாண்ணே.... அதான் கேட்டாய்ங்களே.... எதையோ நிமித்தமுடியாதுன்னு சொல்வாங்களே... எது எதண்ணே...மறந்துப்போச்ச...:))

Prakaash Duraisamy said...

சுரேஷ் கண்ணன் , வினவு போன்றவர்கள் (இருவரின் பதை வெவ்வேறு ) நல்ல எழுத்து மற்றும் சிந்தனை திறன் உடையவர்கள் , அவர்கள் எதை பற்றி எழுதினாலும் அது சரியாகவே தோன்றும்படி செய்து விடுவார்கள் , அதுதான் அவர்களது வெற்றி. வேண்டுமென்றால் இவர்களை எந்திரனை பற்றி ஒரு நேர்மறையான பதிவை எழுத சொலுங்களேன் அதுவும் ரசிக்கும் படியாகவும் ஏற்று கொள்ளும்படியாகவும் எழுதிவிடுவார்கள் , எழுத்தின் வலிமை அப்படி. நல்ல ஒரு எழுத்தாளர் மற்றவர்களின் சிந்தனைகளை மழுங்க வைக்க முடியும் , அதுதான் இங்கே நடந்து கொண்டு இருக்கிறது .

Anonymous said...

மிஸ்டர் டுபாக்கூர் சுரேஷ் கண்ணன் அவர்களே

சென்ற பதிவில் நான் கேட்ட கேள்விகள் இன்னமும் அப்படியே இருக்கின்றன

1. படு மொக்கை படமான உன்னை போல் ஒருவனும் சென்னையில் 15 தியேட்டரில் ரிலீசானது..அது ரொம்ப சூப்பர் படம் என நீரும் விமர்சனம் எழுதினீர்...அந்த படம் சம்ம ப்ளாப் + மொக்கை என தமிழ் படம் பார்க்கும் எந்த ரசிகனும் அறிவான். அந்த படம் வந்த நேரத்தில் சிறிய பட்ஜெட்டில் வந்த ஈரம் படத்தை அது முழுங்க பார்த்தது. கமல் அவர்களும் நேரம் காலம் பார்காமல் எல்லாம் டிவிகளிளும் தன் படத்தை ப்ரோமோட் செய்தார்,

2. இசை ரசிகர்கள் அனைவருக்கும் தெரியும் உன்னை போல் ஒருவன் பாடல்கள் ````````````````````````````````````````படு கேவலமான மொக்கை என...ஆனால் நீர் ஒருவர் மட்டும் பாடல்கள் சூப்பர் வரிகள் சூப்பர் அடுத்த ஏ ஆர் ரகுமான் என பில்டப்பு கொடுத்து திருந்தீர்,,கடைசியில் என்ன நடந்தது.. உன்னை போல ஒருவன் சம்ம ப்ளாப்பு அப்புறம் பாடல்கள் எவரும் சீந்த வில்லை.

உமக்கு விடலை பருவ ரஜினி கமல் சண்டை மோகத்தில் இருந்து வர மனதில்லை அதுக்காக இப்படியா !!

முகமூடி said...

// அணுகுண்டுக்கு இணையாக ஏவிஎம் நிறுவனம் 'சகலகலா வல்லவனை' எறிந்து சூழலை மாசுபடுத்தியோடு //

லாட்டரி, மது போன்ற பொதுவான கேளிக்கைகளை கூட சுய கட்டுப்பாட்டோடு எதிர்கொள்ளும் திராணியற்ற அல்லது அப்படி நினைத்து அதை சட்ட ரீதியில் தடை செய்யும் அரசாங்கத்தை - அதனிடமே பணம் பெற்றுக்கொண்டு ”தேர்ந்தெடுக்கும்” மக்களை - கொண்ட சமூகத்தில், டைரக்டரின் சுதந்திரத்தில் கத்தரி போடும் அமைப்பின் தணிக்கையை தாண்டி வெளிவரும் ஒரு படம் வரலாறு காணாத அளவு வெற்றி பெற்றால் அதற்காக நாம் சபிக்க வேண்டியது சமூகத்தையா அல்லது சட்டத்துக்குட்பட்டு வியாபாரம் செய்யும் ஏவிஎம்மையா?

பொதுவான டிக்கெட் விலை $10 - $12. என்னால் முடியும் என்றாலும் $15 மேல் எந்திரன் டிக்கெட்டுக்காக கொடுக்க மாட்டேன். எனக்கு தெரிந்து பெரும்பாலான மத்திய வர்க்கம் அப்படிதான் என்று நினைக்கிறேன். ஆனால் பொது விலையை விட 10 மடங்கு விற்கும் டிக்கட்டை தன் சக்திக்கு மீறி கடன் வாங்கியாவது வாங்கி படம் வெளியான முதல் வாரத்திலேயே பார்த்தே ஆக வேண்டும் என்ற போதை கொண்ட கும்பலையா அல்லது அந்த கும்பலை தனது வியாபாரத்துக்காக பயன்படுத்தும் - கவனிக்கவும் யாரும் துப்பாக்கி முனையில் படம் பார்க்க வற்புறுத்தவில்லை - வியாபாரியையா யாரை நோவது?

மீசை கூட முளைக்காத கருணாதி குடும்ப சிறுவர்கள் பல நூறு கோடியில் படம் எடுப்பதும், திரைப்படத்துறையில் (மட்டுமா?) கருணாநிதியின் குடும்ப ஆதிக்கமும் குறித்த கவலை பெரும்பாலானோருக்கு உண்டு. லஞ்சம் பற்றி அங்கலாய்த்துக்கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடும் சமூகத்தை விடுங்கள். உங்களுக்கான இரண்டு கேள்வி.. சன் குழும தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கிறீர்களா, புறக்கணிக்கிறீர்களா? எந்திரம் படம் பார்ப்பீர்களா, மாட்டீர்களா?

ravikumar said...

I read ur post it is not neutralized seems to be biased though u claim it is unbiased

கல்வெட்டு said...

முகமூடி,
நிச்சயம் வெளங்காத கேடுகெட்ட கும்பலைத்தான் திட்டவேண்டும். பிரச்சனை என்னவென்றால் யாராவது வந்து சொல்லும்வரை முட்டாள்களுக்கு அவர்கள் முட்டாள் என்று தெரியாது. ஜிமெயில் வருவதற்குமுன் யாகூ அதிக எம்பி ஸ்டோரேஜுக்கு காசுவாங்கும் திட்டம் கொண்டுவந்தது. ஜிமெயில் வந்தபின்தான் ஆகா இது கொள்ளை என்று என்னைப்போன்ற முட்டாள்களுக்கு புரிந்தது.

பெரியார் வந்து ஆப்படிக்கவில்லையென்றால் இன்னும் ரத்னா கபே நம்மவா கபேயாகத்தான் இருந்திருக்கும். எனவே யாரவது ஒருவர் நீங்கள் சொன்ன கும்பலுக்கு வேப்பைலை அடிக்கவேண்டும்.

அரசர் அம்மணாகப் போகிறார் என்று குழந்தையாவது சொல்லவேண்டும்.

அடிமையாய் இருப்பது அவர்கள் சுதந்திரம்தான். ஆனால் ஒருவரோடுஒருவர் சேர்ந்து வாழும் உலகில் சகிக்கமுடியவில்லை.

***

Anonymous said...

You are becoming over defensive, there is no need for it. Movies cannot be made super hit by promotion alone, producers can lie about the collection, but even they know the truth.

Practice your 'tharmega kopam' on something you have strong conviction and clarity.

Anonymous said...

add subscribe via email gadget for your blog so that readers will receive your new posts in their email inbox

http://ramasamydemo.blogspot.com/2010/09/add-subscribe-via-email-gadget-for-your.html

Anonymous said...

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html

(sureshkannan sir ungal blogil neengal yintha buttonai place seithaal yen ponravargalukku migavum ubayogamaai yirukkum)

THE UFO said...

செத்தே போனாலும் போங்கள்...

ஆனால்,

தயவு செய்து இந்த பட ரிலீசிற்கு பிறகு (அசிங்க அசிங்கமாய் திட்டி கூட) இதற்கு 'விமர்சனம்' என்று எதையும் எழுதி விடாதீர்கள்.

அது அட்டர் ஃபிளாப் ஆனாலும் கூட, 'பாத்தீங்களா, தமிழர்கள் தந்த தக்க செருப்படியை' என்ற ரீதியில் கூட இதற்கு மேலும் ஒரு விளம்பரம் உங்களிடம் இருந்து வேண்டாம். (அந்த படம் மூனே நாள் ஓடினால் கூட போதுமாம்... கோடி கோடியாய் அமோக லாபமாம்..!)

அப்போத்தான்... நீங்கள் கொள்கை மாறா உத்தமர் என்று அறிந்து கொள்வேன்.

சிவாஜியை 'உலகத்தொலைக்காட்சிகளில் முதல்முறை' போதுதான் பார்த்தேன்.

ஆனால், இதை... ம்ஹூம்... அப்போது கூட, என் எப்போதுமே பார்க்கப்போவதே இல்லை. இந்த முடிவை எடுத்துள்ளீர்கள்தானே?

Anonymous said...

i think the kutty kadhai in following link will help you to prevent yourself from giving more stress to what you what to convey. if u give more stress to waht you want to convey then people will think that you are becoming over defensive and you dont have strong convictin and clarity...

பாய் சியா யியின் ஒரு குட்டி கதை
http://ramasamydemo.blogspot.com/2010/09/blog-post_26.html

geeyar said...

சன்குழுமத்தார் தங்களது படைப்புகளுக்கு அபரிதமான விளம்பரம் தருவதால் பலருக்கு ஏற்படும் எரிச்சலை காணமுடிகிறது. சுரேஷ் நீங்கள் கூறுவது போல் கலைஞரின் பேரன் என்பற்காக கலாநிதிமாறனின் மேலாண்மை திறமையை குறைகூறுவது சரியல்ல. அவரைப் பொருத்தவரை இதுவும் ஒரு வர்த்தகம். அவர் நிச்சயம் வெற்றிபெறுவார். இன்னும் சொல்லப்போனால் கமலின் மருதநாயகம் படம் மீண்டு(ம்) வரவேண்டுமெனில் சன்னால் மட்டுமே முடியும். எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் என்னவென்றால் படம் பார்க்க எத்தனை ஏழையின் தாலி அடகுகடைக்கு போகவேண்டிமோ?

Prasanna Rajan said...

ஏனுங்!! 'எந்திரன்' ஹிட்டாயிடுச்சாமா. பரவலா பேசிக்கிறாங்க. எல்லாந் தெரிஞ்சவரு உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டு புட்டு போகலாம்னு வந்தேனுங்...

பின்னோக்கி said...

ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படம். ரொம்ப செலவு செஞ்ச படம். பெரிய நடிகர்கள் நடித்த படம். அதுனால, ஓட வைக்கலைன்னா, உங்க வருங்கால சந்ததிகள் பாதிப்படையும் என்ற ரீதியில் விளம்பரங்கள் எரிச்சலடையச் செய்கிறது. ஒரு ஊடகம், பதவியில் இருப்பவர்களிடம் சிக்கி, மக்களை, கேளிக்கை மாயையில் சிக்க வைத்து, இலவசங்களை அள்ளித்தெளித்து, சிந்திக்க இயலாத ஜடங்களாக மாற்றுவது, ஹிட்லர் காலத்திலிருந்து இருக்கிறது. தொடர்கிறது இன்றும் :(

ALL THE BEST STUDENTS said...

magizchi