Wednesday, June 23, 2010

ஹாலிவுட் 'வியட்நாம் வீடு'

சில திரைப்படங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து பிறகு அது இயலாமலேயே போய் விடுகிறது.  எனவே 'நல்ல படங்கள்' என நான் கருதுபவற்றைப் பற்றி சில வரிகளாவது எழுதி வைக்கப் போகிறேன். 'நீங்கள் பரிந்துரைக்கும் திரைப்படங்கள் உபயோகமாக உள்ளது' என பின்னூட்டத்திலும் தனி மடலிலும் நேர் உரையாடலிலும் தெரிவிக்கும் நண்பர்களுக்கு (உண்மையாகத்தான்) இது உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் திரைப்படங்களைப் பற்றி வழக்கமான முறையில் எழுதுவேன். 



EVERYBODY'S FINE (2009) பார்த்தேன். சிவாஜியின் 'வியட்நாம் வீடு' திரைப்படத்தை நினைவுப் படுத்தியது. புரிந்திருக்கும். வயதான காலத்தில் வாரிசுகளின் புறக்கணிப்பை வலியுடன் தனிமையில் உணரும் 'அழுகாச்சி' படம்.

தன்னுடைய மகன்/ள் (கள்) வருகைக்காக வீ்ட்டை ஒழுங்குபடுத்தி காத்திருக்கிறார் பிராங்க். நாம் எதிர்பார்த்தது போலவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி வராமலிருந்து விடுகிறார்கள். 'அட நாதாரிகளா, சரி.  நானே உங்களைப் பார்க்க வரேன்' என்று ஆச்சரிய வருகையை அவர்களுக்கு  அளிக்க புற்ப்பட்டு விடுகிறார். அவரவர்களின பிரச்சினையில் இவரை எல்லோருமே தவிர்க்க முயல்கின்றனர் என்பது புரிகிறது. ஆயாசத்துடன் திரும்பும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு எல்லோருமே வந்து சேர விக்ரமன் பட பின்னணி இசையுடன்  கிறிஸ்துமஸ் விருந்தை அனைவரும் உண்ண படம் ஜூம் அவுட் கோணத்துடன் நிறைகிறது.

இத்தனை SUBTLE  ஆக ராபர்ட டி நீரோ நடிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். தன் மனைவியிடம் மிக இயல்பாக பழகிய மக்கள்ஸ் தன்னிடமிருந்து ஏன் விலகிப் போகிறார்கள் என்று ஒவ்வொரு தகப்பனும் நெருடலான வலியாக உணர்கிற சமாச்சாரத்தை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரயில் பயண்த்தில் எதிர் குண்டு பெண்  பயணியிடம் வம்படியாக தான் செய்து கொண்டிருடிருந்த பணியை நினைவு கூர்வது சுவாரசியமான காட்சி. சமகாலத்து வயதான தோற்றத்துடன் உள்ள தந்தை, குழந்தைகளுடன் உரையாடும் அந்த விசாரணைக் காட்சியும் நன்று.

வயதான தகப்பனை புனிதப்பசுவாகவும், வாரிசுகளை வில்லர்களாகவும் கருப்பு வெள்ளையாக சித்தரிக்காமல், அவரவர்கள் வாழ்க்கைகளை பிரச்சினைகளுடன எதிர்கொண்டிருக்கும் யதார்த்தத்தை பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற செய்தியையும் இந்தப்படம் முன்வைக்கிறது.

சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ராபர்ட்  டி நீரோவின் அற்புதமான நடிப்பிற்காக பார்க்கலாம்.

தொடர்புடைய பதிவு : ஸ்மித்தைப் பற்றி

suresh kannan

15 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான விமர்சனம்.. அப்ப படத்தை பார்த்துட வேண்டியதுதான்.

Riyas said...

நல்ல முயற்சி.. தொடருங்கள்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

me the second..

venkat said...

அருமையான படம், ஆனால் உங்கள் விமர்சனம் அருமையாக இல்லை..

பிச்சைப்பாத்திரம் said...

வெங்கட்: இவை வெறும் அறிமுகக் குறிப்புகள் மட்டுமே.

முகமூடி said...

// என பின்னூட்டத்திலும் தனி மடலிலும் நேர் உரையாடலிலும் தெரிவிக்கும் நண்பர்களுக்கு //

"என தெரிவிக்கும் நண்பர்களுக்கு" ன்னு சொன்னா பத்தாதா? இல்ல யாரும் தொலைபேசி, தந்தி, எஸ்.எம்.எஸ்ல எல்லாம் சொல்றது இல்லின்னு குத்தி காமிக்கிறீங்களா?

geethappriyan said...

சுரேஷ்கண்ணன்,
கலங்க வைத்தது படம்,ராபர்ட் நடிப்பு அபாரம்!சின்ன விளம்பரம்
http://geethappriyan.blogspot.com/2010/03/everybodys-fine-2009pg13.html

:)

பிச்சைப்பாத்திரம் said...

முகமூடி: அப்படி எழுதினால் அது பின்னூட்டத்தில் என நினைத்துக் கொண்டு 'நாங்கள் யாரும் அப்படிச் சொல்லவில்லையே' என்று கோரஸாக கத்தினால் என்ன செய்வது? :-)

கீதப்பிரியன்: எப்படித்தான் ஒவ்வொரு பதிவையும் இவ்வளவு எழுதறீங்களோ? ஆச்சரியம்.

யாசவி said...

சுரேஷ் கண்ணன்,

இந்த படம் உங்களை பாதிக்கவில்லையா?

எவ்வளவு நுண்ணிய உணர்வுகளை அற்புதமாக எடுத்து இருப்பார்கள்.

மகனை பார்க்க முடியாமல், மற்றவர்கள் மறைத்து விடை கிடைக்கையில்...

ஒரு தந்தையின் படம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான விமர்சனம்...

சகோதர The Collector படத்தை பற்றி விமர்சனம் எழுதலாமே ..

geethappriyan said...

சுரேஷ்கண்ணன்,
மனதுக்கு மிகவும் நெருக்கமாய் உனரும் படங்களுக்கே அப்படி எழுத தோன்றுகிறது,பிடிக்காத படங்களை உடனே அழித்து விடுவேன்,:)

Ashok D said...

முதல் பத்தி முடித்தவுடன் என் dadyக்கு போன் செய்தேன்.. :)

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி,

யாசவி: பாதித்தினால்தான் எழுதியிருக்கிறேன். ஆனால் மிகச் சிறந்த திரைப்படம் என்று இதை சொல்லமாட்டேன்.

வெறும்பய: (ஆஹா என்னவொரு தத்துவார்த்தமான பெயர். :-)

எழுதுகிறேன்.

அசோக். நல்லது :)

Ashok D said...

இன்னைக்கி அவர இராமசந்திராவில் சேர்த்தேன்..

பிச்சைப்பாத்திரம் said...

அசோக்: அடடா! என்ன ஆச்சு? :-(
எதுவாக இருந்தாலும் அவர் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப நானும் வேண்டுகிறேன்.