Friday, June 18, 2010

சூப்பர் சிங்கர் ஜூனியர் - அல்கா தேர்வு


முந்தைய  இரண்டு போட்டித் தொடர்களைப் போல் (நிகில் மேத்யூ மற்றும் கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்ற நிகழ்ச்சிகள்) இந்த ஜூனியர் தொடரை தொடர்ந்து காண இயலவில்லையென்றாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காணத்தவற மாட்டேன். இளம் வயதிலேயே எத்தனை விதமான திறமை என்று ஆச்சரியமாக இருக்கும். பல வருடங்களாக சங்கீதம் கற்றுக் கொண்டிருந்த குழந்தைகள் முதல் சமீபத்தில்தான் பயிற்சியை துவங்கியவர்கள், வெறும் கேள்வி ஞானத்தையே  கொண்டு பாடியவர்களை வரை பெரும்பாலோனோர் தொழில்முறை பின்னணி பாடகர்ளுக்கு ஈடாக பாடியது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருந்தது.

தொலைக்காட்சிகளின் எரி்ச்சலூட்டும் வழக்கமான  வணிக உத்திகள் இதிலும் பிரதானமாக இடம் பெற்றிருந்தன. தோல்வியில் அழும் குழந்தைகளை காமிரா பிரதானமாக துரத்தியது. இந்தப் போட்டியில் தோற்பதை குழந்தைகளை விடவும் அவர்களின் பெற்றோர் மிகுந்த கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டனர் என்றே கருதுகிறேன். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம் என்கிற பாவனையே பெரும்பாலான முடிவுகளில் வெளிப்பட்டன. சில குழந்தைகள் தோல்வியை யதார்த்தமாக எடுத்துக் கொண்டாலும் அவர்களின் பெற்றோர் கண்ணீர் கம்பலையாக அழுதுத்தீர்த்தனர். எல்லாவற்றையும் தொலைக்காட்சி காமிரா தங்களுக்கான வணிக நிமிடங்களுக்கான தீனியாக நிரப்பிக் கொண்டது.

இந்தக் காரணங்களினாலேயே இந்த நிகழ்ச்சியை பல சமயங்களில் பார்ப்பதற்கு ஆர்வம் தோன்றவில்லை. நான் கவனித்தவரை இறுதிப் போட்டியில் இருந்தவர்களைத்தவிர பிரியங்கா, ஸ்ரீநிஷா போன்றவர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. கிராமத்து வெள்ளந்தி தோற்றத்திலிருந்த ஒரு கருப்பு நிறச் சிறுவனும் (பெயர் ஞாபகமில்லை) சற்று குண்டாக இருந்த ஒரு பெண்ணும்  தேர்வுச் சுற்றுகளில் சிறப்பாக பாடினார்கள்.  எந்த நிலையில் அவர்கள் நீக்கப்பட்டார்கள்  என்று தெரியவில்லை. இறுதியாக வெற்றி பெறுபவர் கவாச்சி தோற்றத்திலிருக்க வேண்டும் என்பதும் வணிகயுகக் கட்டாயங்களில் ஒன்று போலும்.

நான் கவனித்த வரை ஸ்ரீகாந்த் என்கிற துறுதுறுச் சிறுவன் பாடுவது முன்னே பின்னே இருந்தாலும் அவனின் குறும்புத்தனங்கள் பெரும்பாலோரை கவர்ந்ததனால் எஸ்எம்எஸ் ஓட்டுக்கள் மூலம் மறுபடியும் இறுதிச் சுற்று வரை வந்திருக்கிறான். ஒரு திறமைசசாலியை இப்படி எஸ்எம்எஸ் ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தெடுப்பது சரியா என்று தோன்றுகிறது. ஒரு சிறுவனோ அல்லது சிறுமியோ நன்றாக பாடுகிறான்/ள் என்பதை சாதாரணர்களை விட அதில் பாண்டித்தியம் பெற்றவர்கள்தான் சிறப்பாக கணிக்க முடியும். இந்த நுட்பமான சமாச்சாரத்தை ஏதோ கவுன்சில்ர் எலெக்ஷன் போல் ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையே அபத்தமாக இருக்கிறது. இதற்காக சம்பந்தப்பட்ட போட்டியாளர்களின் பெற்றோர் நடத்தும் ஓட்டு வேட்டை அதை விட அபத்தம்.


எஸ்.பி.பி  இளம் பாடகராக இருந்த போது கலந்து கொண்ட ஒரு பாட்டுப் போட்டியில் இரண்டாம் பரிசையே அவருக்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தந்தனர். ஆனால் நடுவராக இருந்த எஸ்.ஜானகி மேடையிலேயே இதை தடுத்து நிறுத்தி 'முதல் பரிசுக்காக தோந்தெடுக்கப்பட்டவரை விட இந்த இளைஞரே திறமையாக பாடியதால் இவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தி முதல் பரிசை எஸ்.பி.பிக்கு வாங்கித்தந்தார். அந்த மாதிரியான எவ்வித எதிர்பார்ப்புமில்லாத நேர்மையை இப்போது பார்க்க முடியாது போலிருக்கிறது.

மலையாளிகளையே குறிப்பாக தேர்ந்தெடுத்து இறுதிப் போட்டிக்கு அனுப்புகின்றனர் என்றும் குறிப்பாக ஸ்ரீநிஷா எனும் தமிழ் சிறுமி  வஞ்சிக்கப்பட்டு விட்டாள்' எனும்  ஓலங்களை சில பதிவுகளில்  காண முடிந்தது. இவ்வாறான இனவாதத்தை தூண்டும் பதிவுகளைக் கண்டாலே எரிச்சலாக இருக்கிறது. திறமையுள்ளவருக்கு மறுக்கப்படுகிற வாய்ப்பை மையமாக குறித்தே இந்தப் பதிவுகள் உரையாட வேண்டும்.

 கால்பந்து போட்டிக்காக காத்துக் கொண்டிருந்தவன், இறுதி முடிவு அறிவிக்கப்படுகிறது என்பதால் இடையில் இந்த நிகழ்ச்சியையும் காண முடிந்தது. நிறைய விளம்பரங்கள் மற்றும் பில்டப்பிற்குப் பின்னர் முடிவுகளை அறிவித்தனர்.

  • ரோஷன் மற்றும் நித்யஸ்ரீ ஆறுதல் பரிசு. 
  • ஸ்ரீகாந்த் மூன்றாவது பரிச
  • ஷ்ரவன் இரண்டாவது பரிசு
  • அல்கா  அஜீத் - வெற்றியாளர் - முதல் பரிசு
அனைவருக்கும் வாழ்த்துகள்.

கடந்த போட்டி முடிவு அறிவிப்பு குறித்து எழுதியது.

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்

image courtesy: original uploader

suresh kannan

22 comments:

rajasundararajan said...

என்னங்க, இம்புட்டு சுறுசுறுப்பா இருக்கீங்க!

அல்காவுக்கு முதல் பரிசு கொடுத்தது நியாயந்தான்; ஸ்ரீநிஷாவைக் கழிச்சுக் கட்டுனதும் அநியாயந்தான்.

டிராகன் said...

/// எல்லாவற்றையும் தொலைக்காட்சி காமிரா தங்களுக்கான வணிக நிமிடங்களுக்கான தீனியாக நிரப்பிக் கொண்டது. ////

இந்த கருமத்துக்கு தான் நான் பாக்குறதில்லை ....,ரொம்ப சுறுசுறுப்பு சார் ,நீங்க

goma said...

சூப்பர் சிங்கர்-3
வரப் போகிறது.
பாவம் குழந்தைகள்

Renga said...

//மலையாளிகளையே குறிப்பாக தேர்ந்தெடுத்து இறுதிப் போட்டிக்கு அனுப்புகின்றனர் என்றும் குறிப்பாக ஸ்ரீநிஷா எனும் தமிழ் சிறுமி வஞ்சிக்கப்பட்டு விட்டாள்' எனும் ஓலங்களை சில பதிவுகளில் காண முடிந்தது. இவ்வாறான இனவாதத்தை தூண்டும் பதிவுகளைக் கண்டாலே எரிச்சலாக இருக்கிறது. திறமையுள்ளவருக்கு மறுக்கப்படுகிற வாய்ப்பை மையமாக குறித்தே இந்தப் பதிவுகள் உரையாட வேண்டும்//

Renga said...

//மலையாளிகளையே குறிப்பாக தேர்ந்தெடுத்து இறுதிப் போட்டிக்கு அனுப்புகின்றனர் என்றும் குறிப்பாக ஸ்ரீநிஷா எனும் தமிழ் சிறுமி வஞ்சிக்கப்பட்டு விட்டாள்' எனும் ஓலங்களை சில பதிவுகளில் காண முடிந்தது. இவ்வாறான இனவாதத்தை தூண்டும் பதிவுகளைக் கண்டாலே எரிச்சலாக இருக்கிறது. திறமையுள்ளவருக்கு மறுக்கப்படுகிற வாய்ப்பை மையமாக குறித்தே இந்தப் பதிவுகள் உரையாட வேண்டும்//


இவர்களும் தமிழக அரசியல்வாதிகள் போலதான்....

திறமைக்கு முன் இனம், நிறம், எல்லாம் ஒதுக்கப் படவேண்டியவைகளே

சும்மா.. டைம் பாஸ் said...

//இவ்வாறான இனவாதத்தை தூண்டும் பதிவுகளைக் கண்டாலே எரிச்சலாக இருக்கிறது// I think you would have got irritated if you read my comment in one of the blog in which i supported. I sincerely wish ALCA to enter in Tamil film Industry she is really talented. But my point is if they have this Title as open as South India's favorite voice then it is acceptable But for their commercial reason they say Tamilnadu's favorite voice. when they went Talent search in all the districts of Tamilnadu in the audition round, from which district of Tamilnadu she represent. so it is purely cheating. Again my point is not against Alca. I am agianst vijay TV. if they want to bring other state talent. They can very make this program open for all over south India. whose knows we might have seen more talents from Andhra and karnataka too. again my question why only from kerala that too from the backdoor

Anonymous said...

//மலையாளிகளையே குறிப்பாக தேர்ந்தெடுத்து இறுதிப் போட்டிக்கு அனுப்புகின்றனர் என்றும் குறிப்பாக ஸ்ரீநிஷா எனும் தமிழ் சிறுமி வஞ்சிக்கப்பட்டு விட்டாள்' எனும் ஓலங்களை சில பதிவுகளில் காண முடிந்தது. இவ்வாறான இனவாதத்தை தூண்டும் பதிவுகளைக் கண்டாலே எரிச்சலாக இருக்கிறது. திறமையுள்ளவருக்கு மறுக்கப்படுகிற வாய்ப்பை மையமாக குறித்தே இந்தப் பதிவுகள் உரையாட வேண்டும்//

இந்தப் பிரச்சன இன்னிக்கு நேற்றைக்கில்ல ரொம்பக்காலமா இருக்கத்தான் செய்துங்க. திறமைக்கும் நேர்மைக்கும் முதலிடம்ங்கிறது நம்ப நாட்ல சாத்தியப்படாதுங்க அப்படீன்னா லஞ்சம் இப்படி தலவிரித்தாடாதுங்க. நடிக்கணும்னு வந்த தமிழ்நாட்டுப் பொண்ணுங்க 99 பார்சன்ட் நடுத்தெருவுலதாங்க பாடகர்ன்னாலும் உள்குத்து சமாச்சாரம் இல்லாம போவாதுங்க. இனவாதம் லஞ்சம் இல்லாத திறமை நேர்மைங்கிறத முதல்ல மீடியாகிட்ட எதிர்பார்க்க முடியாதுங்க.

Anonymous said...

அப்புறம் ஏன் தமிழ் நாட்டின் செல்ல குரல்-னு சொல்றீங்க? தென் இந்தியாவின் செல்ல குரல்-னு சொல்லலாமே? கேரளாவில் இருந்து தான் தமிழ் நாட்டின் செல்ல குரலை தேர்வு செய்வதா?

faidh said...

////மலையாளிகளையே குறிப்பாக தேர்ந்தெடுத்து இறுதிப் போட்டிக்கு அனுப்புகின்றனர் என்றும் குறிப்பாக ஸ்ரீநிஷா எனும் தமிழ் சிறுமி வஞ்சிக்கப்பட்டு விட்டாள்' எனும் ஓலங்களை சில பதிவுகளில் காண முடிந்தது. இவ்வாறான இனவாதத்தை தூண்டும் பதிவுகளைக் கண்டாலே எரிச்சலாக இருக்கிறது////

மிக சரியாக சொன்னீர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளிலும் மொழி பேதம் பார்த்து எழுதவது உண்மையில் தேவை இல்லாதது கண்டிக்கபட வேண்டிய விஷயம்.திறமை இருந்ததால் அந்த சிறுமி வெற்றி பெற்றாலே தவிர இன அடிபடையால் அல்ல

Swami said...

இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வரிசையில் கிர்ஷ்ணமுர்தியை தவிர அனைவரும் மல்லுஸ்.இது சந்தேகத்துக்குரியது. தமிழ் தெரியாத அல்காவைவிட சரவன்,ஸ்ரீனிஷா,நிதயஸ்ரீ எல்லாரும் நன்றாக பாடினார்கள். தவறான தீர்ப்பு.

Anonymous said...

This is a programme for the mallus, by the mallus and to the mallus.

துளசி கோபால் said...

பொடியன் ஸ்ரீகாந்தின் அப்பா, முடிவு அறிவிக்கப்பட்டவுடன் கடுகடுன்னு இருந்தார். அந்தப் பையனுக்கு வீட்டில் என்ன மண்டகப்படி கிடைச்சதோ:((

ராம்ஜி_யாஹூ said...

அல்கா அஜித் நன்றாகவும் இனிமையாகவும் பாடினார். எனவே வென்றார்.

இதில் மொழி, ஜாதி, மதம், நிறம் குறித்த பாகுபாடுகள் தேவை அற்றவை.

பதின்மூன்று லட்சம் வாக்குளில் எட்டு லட்சம் வாக்குகள் மேல் பெற்ற அல்கா மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்

ராம்ஜி_யாஹூ said...

Thulasi mam u r awsome

In fact srikanth has reached the final just because of his age(sympathy seat)

Anonymous said...

When Ajeesh, Alka or Nikhil won the super singer, it's all through
public voting and 99% voting is done by tamil people.

I have seen all these super singer programs and all of the
above singers were best in the respective season.

Please don't blame vijay tv for this.

You can't deny an indian citizen from participating from a tv show,
just because it says tamizagathin chella kural and
it's not like when audition is done in a particular district
only people from that district should participate,audition is done in many places for conveniance

Now famous singer Naresh Iyer is a tamil,he won some music
competition in North and Rahman gave chance to him afer that.

Two years back a girl called durga who is marathi, won idea
star singer which is a malayalam program.

In India, 2 crores tamil people live outside tamil nadu.

So you mean to say they cannot participate in their respective state programs.

In a country like India where people have mingled for 100s of years this is not possible.

Can you give the definition for tamilan?

When vaiko says that he is a mara tamilan, we accept it, because we know the history of tamil nadu

thanks,
Venu

Saravanan MASS said...

/// சூப்பர் சிங்கர் ஜூனியர் - அல்கா தேர்வு ///

திறமைக்கு மரியாதை...


நித்யஸ்ரீ‍ க்கு Better Luck Next Change


/// பொடியன் ஸ்ரீகாந்தின் அப்பா, முடிவு அறிவிக்கப்பட்டவுடன் கடுகடுன்னு இருந்தார். அந்தப் பையனுக்கு வீட்டில் என்ன மண்டகப்படி கிடைச்சதோ //

எனக்கு அந்தப் பையன் சும்மா எல்லோர் காலிலும் விழுந்ததே ஒரு வெறுப்பாதான் இருந்தது but அவரோட திறமையை குறைத்து மதிப்பிட கூடாது!

Chithragupthan said...

நல்ல விமர்சனம்,பாராட்டுக்கள், இந்த நிகழ்ச்சியில் எனக்கு தோன்றிய மற்றொரு அபத்தம்- வயதிற்கு பொருத்தமில்லாத டப்பாங்குத்து அல்லது உறவுகளை வக்கிரமாக விமர்சிக்கும் பாட்டுக்களை குழந்தைகள் பாடுவதை பெற்றோர்கள்- பெரியவர்கள் அனைவரும் வாய்திறந்து பார்த்து ரசித்ததும் அபத்தமாக இருந்தது. குறிப்பாக இறுதி நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த் பாடிய சிங்காரி சரக்கு நல்ல சரக்கு - குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அற்புதமான கருத்துக்கள்? - சித்திரகுப்தன்

BalHanuman said...

அல்கா அஜித் - ஒரு excellent , flaw - less singer . வசிஷ்டர் வாயால் (சின்னக்குயில் சித்ரா) பல முறை பாராட்டப் பட்டவர்.

அவரது தேர்வு very well deserved .

சித்ராவைத் தவிர மற்ற இரண்டு judges - ம் சூப்பர் வேஸ்ட் (மனோ மற்றும் மால்குடி சுபா)

நித்யஸ்ரீ ஓவர் ஆட்டம். அதற்கு மேல் சொல்ல ஒன்றும் இல்லை.

பொடியன் ஸ்ரீகாந்தை finals வரை வர விட்டதே ரொம்ப ஜாஸ்தி. ஸ்ரீ நிஷா நிச்சயம் அவனை விட better சிங்கர்.

சீமான்கனி said...

கலை உணர்வோடு பார்க்காமல் வெறும் மொழி உணர்வோடு பார்க்கும் சிலருக்கு ஒன்று சொல்ல ஆசை படுகிறேன்...கொஞ்சம் இங்கு வந்து பார்க்கவும்....

http://ganifriends.blogspot.com/2010/06/blog-post_18.html

manasu said...

தேசிய தடகள போட்டியில் "ஹுசைன் போல்டை" கலந்துகொள்ளவைத்து வெற்றிபெற்றால், தகுதியும் திறமையும் உள்ளவருக்குத்தான் பரிசு கிடைத்திருக்கிறது என்று எடுதுக்கொள்ள வேண்டும். எரிச்சல் பட கூடாது யாரும்.

SENTHILKUMARAN said...

எனக்கு விஜய் T.V மலையாளிகளின் சொந்த T.V என்ற விடயம் இன்றுவரை தெரியாது. விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சி பார்த்த போது அவர்கள் மலையாளிகளுக்கு சார்பாக நடக்கின்றார்கள் என்னும் விடயம் மட்டும் தெளிவாக தெரிந்தது. நடுவர்கள் கூட தமிழர்கள் இல்லை. விசேட நடுவர்களாக வருபவர்கள் கூட 100% மலையாளிகளாக இருக்கிறார்கள். ஏன் தமிழர்களில் இசை அனுபவம் உள்ளவர்கள் இல்லையா?
இவர்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள். தற்போது புது நாடகம் போடுகின்றார்கள். அதாவது SMS மூலம் ரசிகர்கள் தான் தெரிவு செய்வார்களாம். அப்போது எதற்கு நடுவர்கள் இருக்கிறார்கள்? எதாவது விமர்சனம் வந்தால் நாங்கள் தெரிவு செய்யவில்லை ரசிகர்கள் தான் தெரிவு செய்தார்கள் என்று கூறி தப்பித்து கொள்வார்கள்.
காட்டு குரலில் கத்தி கத்தி பாடும் அந்த Club Dancer நித்திய ஸ்ரீ யை Final kku ஏன் தெரிவு செய்தார்கள் என்று தெரியவில்லை. அதேபோல் நன்றாக பாடி வந்த ஓவியாவை ஏன் நீக்கினார்கள் என்றும் தெரியவில்லை. அந்த உப்பிலியப்பனுக்கே வெளிச்சம்.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

தமிழ் நாட்டில் பகுத்தறிவு ஆட்சி நடந்தாலும்,சினிமா,தொலைக்காட்சி,மற்றுமுள்ள ஊட்கங்களிலும் மூடநம்பிக்கைகளை விதைத்துக்கொண்டுஇருக்கிறார்கள்.இதைத் தமிழக முதல்வர் கவனிக்கவில்லையா/பணம்சம்பாதிக்க என்ன வேண்டுமானுலும் செய்யத் துணிந்துவிட்டார்கள்.இதைத்தமிழக முதல்வர்பார்வைக்குவைக்கிறேன்.ந்ன்றி.