Friday, June 11, 2010

வளையோசை கலகலவென...

உண்மையிலேயே சொல்கிறேன். இந்தப் பாடலை குறைந்தது ஆயிரம் முறையாவது இதுவரை கேட்டிருப்பேன். கேட்கும் ஒவ்வொரு முறையும் சின்ந்தால் சோப்பின் உறையை பிரிப்பது போல் அத்தனை புத்துணர்ச்சியைத் தருகிறது.  கோடைக்காலத்தில் கேட்டால் கூட 'இதோ, அடுத்த கணத்தில் மழை பெய்யப் போகிறது' என்கிற உற்சாக பிரமையை பெரும்பாலான தருணங்களில் தரத் தவறுவதில்லை.  ராஜா தன்னுடைய படைப்பூக்கத்தின் உச்சியிலிருந்து மெல்ல தளர்கிற நேரத்தில் உருவாக்கினதொரு மாஸ்டர்பீஸ். பாவத்தில் வலுவாக வெளிப்படும் பாலு வழக்கம் போல் இந்தப் பாடலைக் கொண்டாடியிருக்கிறார். லதாவின் தமிழ் நெருடலாக இருந்தாலும் குரலில் வழிந்தோடும் மதுரத்திற்காக அவரை மன்னிக்கலாம்.ஒரு குழந்தை வீட்டிற்குள் கள்ளத்தனமாக எட்டிப்பார்ப்பது போல் ஆரம்பிக்கிறது குழலின் இசை. பின்பு அது குடுகுடுவென்று நெளிந்தாடிக் கொண்டே வீட்டிற்குள் ஓடி வந்து பிறகு அடிக்கிற கும்மாளம்... அதகளம்.

முதல் சரணத்திற்குப் பின்னான லதாவின் ஹம்மிங்.. பின்பு இணைந்து கொள்கிற பாலு. அதற்குப்பிறகு எங்கோ மலையுச்சியை எட்டி விடும் நோக்கத்துடன் பாயும் வயலின்(கள்).. இந்தப் பாடலின் கேட்பனுபவத்தை உன்னதமாக்குகிறது.

சிறப்பாக அமைந்திருக்கும் இசை உருவாக்க பாடல்களை வீடியோவாக மாற்றும் போது சிதைத்து கொத்து பரோட்டோ போடுவது பொதுவான தமிழ்சினிமா மரபு. ஆனால் இந்தப்பாடலுக்கான குறைந்த பட்ச நியாயத்தை செய்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

காந்திமதியுடன் டூயட் பாடினால் கூட அதில் ஒரு ரொமாண்டிக் தன்மையைக் கொண்டு வருவதில் கமல் சமர்த்தர். சலிப்பூட்டும் வழக்கமான இவ்வகைப் பாட்டுக்களில் சிறு சிறு குறும்புகளைச் செய்து அதை அவர் சுவாரசியமாக்க முயல்வதை நாம் கவனித்திருக்க முடியும். இதிலும் அவ்வாறானதொரு தருணம்.

கமலின் டையைக் கட்டிக் கொண்டு ஓர் ஆணின் பாவனையுடன் அமலா புஜத்தை மடக்கிக் காட்டுவதும்  ஆணாதிக்கத்தனத்தோடு (?) கமல் அதன் மேல் முத்தமிடுவதும் அவரின் மொட்டை மண்டையின் மேல் அமலா ஒரு செல்லக் கொட்டு  வைப்பதும்...what a romantic scene. கமல் சித்தப்பா தோற்றத்திலிருந்தாலும் அமலாவின் கண்களில் பொங்கி வழியும் அந்தக் காதலும் காமமும்... பாவனைதான் என்றாலும் நான் ஒரு மலையாளியாக பிறக்கவில்லையே என்று ஏங்க வைக்கும் தருணங்களில் இதுவுமொன்று. (இந்தப்படத்தில் அமலா மலையாளப் பெண்ணாக நடித்திருப்பார்).

இதோ.. இன்று காலையிலிருந்து நாற்பத்தெட்டாவது முறையாக இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சென்னையின் மழைக்காலம் இந்த அனுபவத்தை இன்னும் சுவாரசியமாக்குகிறது.

இறந்து போவதற்கு மிக உன்னதமான தருணமிது.


suresh kannan

28 comments:

சென்ஷி said...

:))

இந்தப் பாட்டையும் உங்க விமர்சனத்தோட படிக்கறதும் அருமை.. பாட்டைப் பத்தி ரொம்ப உணர்வுப்பூர்வமா எழுதற மூணு பேர்ல நீங்களும் ஒருத்தர்னு நினைக்கறேன்..

(இரண்டாமவர் கே. ரவிஷங்கர்.. முதலாமவர் குமரன் குடில் நண்பர்..)

***

//காந்திமதியுடன் டூயட் பாடினால் கூட அதில் ஒரு ரொமாண்டிக் தன்மையைக் கொண்டு வருவதில் கமல் சமர்த்தர்.//

:))

Krubhakaran said...

இளையராஜாவின் Nothing But Wind பற்றி அறிந்திருப்பீர்கள், அந்த இசை தொகுப்புக்காக உருவாக்கப்பட்ட இசை தான் இந்த வளையோசை பாடல் என சமீபத்தில் ஒர் விழாவில் ராஜா சொன்னார், இந்த பாடலின் தொடக்க இசை தான் என் மொபைலில் ரிங் டோனாக உள்ளது, பகிர்வுக்கு நன்றி.

ராம்ஜி_யாஹூ said...

nice song but for me the next song is super- potta padiyuthu padiyuthu.

Overall I love Satyaa film so much., I would have seen 20+ times.

ஹரன்பிரசன்னா said...

//ராஜா தன்னுடைய படைப்பூக்கத்தின் உச்சியிலிருந்து மெல்ல தளர்கிற நேரத்தில் உருவாக்கினதொரு மாஸ்டர்பீஸ். //

அப்படியா?

ரா.கிரிதரன் said...

//ஒரு குழந்தை வீட்டிற்குள் கள்ளத்தனமாக எட்டிப்பார்ப்பது போல் ஆரம்பிக்கிறது குழலின் இசை//

மிகவும் ரசித்தேன். எங்கியோ போயிட்டீங்க சார் :)

//இறந்து போவதற்கு மிக உன்னதமான தருணமிது// :)

ஆயில்யன் said...

சென்னை கோடை மழை சிச்சுவேஷனுக்கு வீக் எண்ட் ஆரம்பிக்கும் வேலையில் கண்டிப்பாக மகிழ்ச்சியின் மடங்கினை அதிகரித்திருக்ககூடும் இப்பாடல் உணர்வுபூர்வமாய் வெளிப்படுத்தியிருப்பதில் புரிகிறது :)

//நான் ஒரு மலையாளியாக பிறக்கவில்லையே என்று ஏங்க வைக்கும் தருணங்களில் இதுவுமொன்று///

ரைட்டு :)

கோபிநாத் said...

அழகாக எழுதியிருக்கிங்க தல...நீங்க சொன்னாது போலவே இந்த மழையில் உங்க எழுத்தும் சேர்த்து படிச்சிக்கிட்டே பாட்டை கேட்குறதும் சுகமாக தான் இருக்கு நன்றி ;))

\\இறந்து போவதற்கு மிக உன்னதமான தருணமிது. \\

ராஜாவின் பாடல்களை கேட்டு முடித்த பின்பு தோன்றும் வழக்கமான உணர்வு இது ;))

நேரம் கிடைக்கும் போது இதை பாருங்கள்

http://www.deccanchronicle.com/entertainment/daughter%E2%80%99s-special-gift-104
;)

Riyas said...

நல்ல பாடல்.. உங்கள் விமர்சனமும் அருமை.

Prathap Kumar S. said...

கலக்கல்... பாட்டு கலக்கல் விமர்சனம்...

ராஜாவின் அற்புதமான படைப்புகளில் ஒன்று இது... பாடல் தொடங்கும்போது வரும் புல்லாங்குழலுக்கு நீங்கள் கொடுத்து உதாரணம் சூப்பர்,,,

//இறந்து போவதற்கு மிக உன்னதமான தருணமிது.//

கவிதையாக இருக்கிறது..,

Unknown said...

நெறைய பேருக்கு அப்படிதான் சார்....

எனக்கு இப்போதைய சென்னையின் காற்றை போல குளுகுளுவேன இருக்கும்...

ஆனால் காதலிதான் அருகில் இல்லை... :(

கையேடு said...

நல்ல விமர்சனங்க, ரொம்பவே இரசித்து வாசித்தேன்.

//ராஜா தன்னுடைய படைப்பூக்கத்தின் உச்சியிலிருந்து மெல்ல தளர்கிற நேரத்தில் உருவாக்கினதொரு மாஸ்டர்பீஸ்.//

நேரம் கிடைக்கும் போது இதை விளக்க முடியுமா.. எப்படி என்று புரியவில்லை?

Umesh said...

I enjoyed ur post more than the song itself!

Siva said...

ஒரு காதல் கடிதம் விழி போடும்;உனை காணும் சபலம் வரக்கூடும்;
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்;
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்;

கன்னே என் கண் பட்ட காயம்; கை வைக்க கைவைக்க தானாக ஆறும்...

வரிகள் பற்றி சொல்லவே இல்லையே..

பிச்சைப்பாத்திரம் said...

Mythili has left a new comment on your post "வளையோசை கலகலவென...":

Very interesting post.

***

sorry, i rejected the comment by oversight.
-suresh kannan

க.பாலாசி said...

மறுபடியும் இப்ப அந்த பாட்ட கேட்கணும்போலருக்கே..

இனியா said...

What a beautiful song it is..

மாதவராஜ் said...

சுரேஷ் கண்ணன்!

இதன் ஒவ்வொரு துளியையும் ரசிக்கலாம். பாடலும், அதைக் காட்சியாக்கிய விதமும் அடேயப்பா! கமலோடும், அமலாவோடும் சடசடத்துத் தழுவும் காற்றும் கூடவே வருமே!

அ.ஜீவதர்ஷன் said...

நினைத்தாலே நெஞ்செல்லாம் இனிக்கும் பாடல்களில் ஒன்று, "ராகங்கள் தாளங்கள் நூறு, ராஜா உன் பேர் சொல்லும் பாரு " இந்த வரிகள் ராஜாவை முன்னிறுத்தி எழுதப்பட்டவை, கேட்கும்போது சிலிர்ப்பாக இருக்கும். பக்ர்வுக்கு நன்றி. அப்புறம் baavam என்பதை தமிழில் எழுதும்போது 'பாவம்' என்று எழுதினால் paavam (ஐயோ பாவம் என்று சொல்லுவோமே ) என்பதை எப்படி எழுதுவது :-)

ILA (a) இளா said...

//காந்திமதியுடன் டூயட் பாடினால் கூட அதில் ஒரு ரொமாண்டிக் தன்மையைக் கொண்டு வருவதில் கமல் சமர்த்தர்.//
:)). கோவை சரளா கூடவே என்னா ரொமான்ஸ் கொண்டு வந்தாரு

கல்வெட்டு said...

.

டிஸ்கவரி என்று சொல்வார்கள்

அதாவது ஏற்கனவே இருப்பதை கண்டு சொல்வது. இதில் புதிய கண்டுபிடிப்பு அல்லது புதிய உருவாக்கம் ஏதும் இல்லை. ஆனால் சும்மா போகிற‌போக்கில் ஒரு விசயத்தைச் சொல்வது பல நேரங்களில் நம்மை துவைத்து காயப்போட்டுவிடும்.

சுரேஷ்,

பலமுறை கேட்டது. பார்த்ததுதான். ஆனால் நீங்கள் எடுத்துக்காட்டிய போது ...அடடா எப்பக் கேட்டது என்று மறுபடியும் பார்க்க சந்தர்ப்பம்!
இந்தப்பாடல் இன்றைய பொழுதை எனக்கும் மகிழ்ச்சிக்குரியதாக ஆக்கியது

நன்றி!


**

கொசுவர்த்தி.... Wednesday, June 17, 2009

தமிழ் சினிமாவில் பாடல்கள் தேவையா? ஒரு சர்வே
http://pitchaipathiram.blogspot.com/2009/06/blog-post_1946.html

இதில் நான் பின்னூட்டமாகச் சொன்னது....

// மேற்குலக வாழ்க்கையில் பாடல்/ஆடல் கொண்டாட்டங்கள் தனியாகவே பதிவு செய்யப்படுகிறது. அதற்கான சந்தையும் உள்ளது.
தமிழ்நாட்டில் அதற்கான சந்தை வராதவரை குறைந்த பட்சம் சினிமாவிலாவது அது பதிவு செய்யப்படவேண்டும்.//


தமிழ் நாட்டில் பாடலுக்கான நல்ல சந்தை(சினிமா தாண்டி)இருக்குமானல் இது போல நல்ல விசயங்கள் மேலும் வரும்.

.

வடுவூர் குமார் said...

அம‌லாவா,இசையா அல்ல‌து க‌ம‌லா? என்று மும்முனை போட்டி இப்பாட‌லில் பார்க்க‌லாம்.எப்போது கேட்டாலும் ஒரு துள்ள‌ல் இப்பாட‌லில் இருக்கும்.

புலிகேசி said...

படைப்பூக்கத்தின் உச்சியில் இருந்த தளர்ந்து கொன்டிருக்கும் ஒரு கலைஞனுக்குத்தான் இப்படி எல்லாம் இசை ஆராய்ச்சி பன்ன தோண்றும்:
http://www.youtube.com/watch?v=9qrBzlnkq8s

சுப. முத்துக்குமார் said...

ஒவ்வொரு படைப்பிற்கும் விமர்சனம் எவ்வளவு முக்கியம் என்பதற்கு நல்ல ஒரு உதாரணம் இந்தப் பதிவு.

ஏற்கனவே என் விருப்பப் பட்டியலில்-கைவசமும்- இருக்கும் இந்தப்பாடலை மறுபடியும் கேட்டுப்"பார்க்கத்" தூண்டியிருக்கிறது உங்கள் விமரிசனம்.

கலக்கிட்டீங்க கண்ணன்!

பாடல் வரிகள் பாடல் வெளிவந்த நேரத்தில் சற்றே சிறப்பான வரிகள் என்றாலும் மிகவும் பிரமாதமான வரிகள் எனக் கூறிட முடியாது.

ராஜா இந்தப்பாடலுக்குப்பின் வேறு சிறந்த பாடல்கள் தரவில்லையா?

Anonymous said...

hi pitchaipathiram,

Important subject: just show only post titles instead of showing both post title and its content.

Bloggers don't know the mentality of readers. They are showing both post title and its content. It must be avoided. Surely. Bloggers must show only post titles as like s.ramakrishnan has in his blog.

Please not these 3 things:

1. மக்களுக்கு பொறுமை கிடையாது. உங்கள் பிளாகின் முதல் பக்கத்தில் உள்ள போஸ்ட்டுகளை மட்டுமே பார்த்து விட்டு அவர்கள் வெளியேறி விடுவார்கள். அதிலும் 2 பிரச்சனை உண்டு. பலருடைய கட்டுரைகள் மிகவும் நீளமாக இருக்கின்றன. அதனால் முதல் பக்கத்தில் பத்து போஸ்ட்டுகள் மட்டுமே இருந்தால் கூட ஒருவித அலுப்பை அவை ஏற்படுத்திவிடும். Scroll barஐ கீழே fast ஆக‌ இழுக்கும் போது முதல் பக்கத்தில் உள்ள கட்டுரைகளின் தலைப்புகளைக் கூட தவறிவிடுவார்கள்.

2. பல பொது மக்களுக்கு ஒரு blogஐ எப்படி use செய்வது என்பதே கூட தெரியாது. முதல் பக்கத்திலேயே Blog archive sideல் உள்ளது. அதை திறந்து பார்த்தால் இதுவரை எழுதப்பட்டுள்ள அத்தனை கட்டுரை தலைப்புகளையும் பார்க்க முடியும். ஆனால் இது கூட பலருக்கும் தெரியாது என்பது உண்மை.

3. மருதன், முகில், பா.ராகவன் போன்ற சில கிழக்கு எழுத்தாளர்கள் கிட்னி பிரச்சனையால் அவதிப்ப‌டும் முத்துக்குமார் என்பவருக்கு உதவுமாறு ஒரு கட்டுரை எழுதினார்கள். அவர்கள் புதிதாக அடுத்த கட்டுரைகளை எழுதிய போது அந்த உதவி தேவை என்ற கட்டுரை கீழே இறங்கிப் போய் விட்டது அல்லது அடுத்த பக்கத்திற்கு போய் விட்டது. அதனால் அந்த முக்கிய கட்டுரை புதிய வாசகர்கள் கண்ணில் உடனடியாக படாமல் போய்விட்டது. எந்த வாசகரும் post titleகளுக்காக blog archiveஐ பொறுமையாக திறந்து பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை சொல்ல வேண்டியதில்லை. மேலும் next page என்பதை திறந்து திறந்து பார்ப்பார்கள் என்று சொல்வதும் முடியாது. அவர்களுக்கு பொறுமையும் இல்லை. நேரமும் இல்லை. இந்த கிழக்கு எழுத்தாளர்கள் மட்டும் போஸ்ட் டைட்டில்கள் மட்டும் தெரியுமாறு செட் செய்திருந்தால் அந்த முக்கிய கட்டுரை இன்னும் பலர் கண்ணில் எளிதாய் பட்டிருக்கும். இன்னும் நிறைய பேரின் உதவி கிடைத்திருக்கும்.

So, Please set your blog to show just post titles only instead of showing both title and its content as in my blog http://blufflink.blogspot.com/

A blogger followed my tips and she has changed her blog to show only post title. Watche her blog http://livingsmile.blogspot.com/

For showing only post title instead of showing both title and its content visit and follow steps mentioned here

http://www.anshuldudeja.com/2009/03/show-only-post-title-in-blogger-label.html

(If you decide to show only post title in your blog after changing it so set you blog to show 50 post titles per page. It will enable the reader to have very quick glance of your posts.)

AN Rayen said...

ராஜாவின் பாட்டுக்கள் எல்லாமே அருமை...அதிலும் சில பாடல்களை கேட்கும் போது (பொத்தி வச்ச மல்லி,ஊரு சனம் தூங்கிருச்சு,தென்றல் வந்து என்னை தொடும்,கேளடி கண்மணி...சொல்லிட்டே போலாம்)என்னையறியாமலே கண்ணீர் துளிர்க்கும்,ஆனந்தத்தில்...அந்த வரிசையில்..வளையோசையும் ஒன்று...
உங்களது விளக்கமும் நன்று..உண்மையும் கூட...
நன்றி....

Sridhar said...

//ராஜா தன்னுடைய படைப்பூக்கத்தின் உச்சியிலிருந்து மெல்ல தளர்கிற நேரத்தில் உருவாக்கினதொரு மாஸ்டர்பீஸ்.//

//நேரம் கிடைக்கும் போது இதை விளக்க முடியுமா.. எப்படி என்று புரியவில்லை?//

நல்ல வெளக்குவாறு பாருங்க

தடி எடுத்தவன் எல்லாம் நாட்டிலே தண்டல்காரன் தான் !

Umesh said...

Hi sir!

super post!similar feelings with anothe Raja song.

Do read it and post ur feedback

http://theumeshblog.blogspot.com/2010/06/moondram-marijuana.html

Thank you

Umesh

Kingsly said...

Nice write up!

ராகங்கள் தாளங்கள் நூறு!
ராஜா உன் பேர் சொல்லும் பாரு!!