Tuesday, May 18, 2010

மாமா மாதிரியான ஹீரோக்கள்'பையா' பார்த்தேன். பொதுவாக உற்சாகமாக இருந்தது.

என்ன..'ரன்'னையே அழுக்கு போகாமல் துவைத்து காயவைத்து சூடான இஸ்திரி போட்டு தந்திருக்கிறார் லிங்குசாமி.

சில சுவாரசியமான டிவிஸ்ட்டுகள் மாத்திரம் இருந்திருக்காவிட்டால் படம் ஃபிளாப்பாகி தயாரிப்பாளர், இயக்குநரை ----------------பையா..  என்று திட்டியிருந்திருக்கக்கூடும். நல்ல வேளையாக தயாரிப்பாளரும் இயக்குநரும் ஒரே நபர் என்பதால் இந்த அபாயத்திற்கு சந்தர்ப்பமில்லை.

'சித்தப்பா' தோற்றத்தில் ஒரு ஹீரோ. முந்தைய படங்களைப் போல் அல்லாமல் காதலிக்கும் 'சாக்லேட் பாய்' வேடமெல்லாம் கார்த்திக்குக்கு பொருந்தவில்லை. (இந்த மாதிரியான வேடங்களில் தாத்தாக்களெல்லாம் நடித்துக் கொண்டிருப்பது வேறு விஷயம்).

'The heroes' pictures make you feel even your uncles can be movie stars' என்று தன்னுடைய காதல் சுயசரிதை புதினத்தில் சென்னையைப் பற்றி வர்ணிக்கும் போது சேத்தன் பகத்  குறிப்பிட்டிருப்பது உண்மைதான். ஹீராயின்கள் விஷயத்தில் நமக்கிருக்கும் ரசனையின்மை (இந்தப் படத்து நாயகியும் ஓர் உதாரணம்) ஹீரோக்கள் விஷயத்திலும் நீடிப்பது துரதிர்ஷ்டம்தான்.

படத்தில் போற்றப்பட வேண்டிய கலைஞர்கள் ஒளிப்பதிவாளர் மதியும் இசையமைப்பாளர் யுவுனும். அதீதமான சண்டைக்காட்சிகளும் துரத்தல் காட்சிகளும்  மதியின் பரபரப்பான உழைப்பால் சுவாரசியமாகியிருக்கிறது. யுவன் ஒரே மாதிரியாக பாடிக் கொண்டிருந்தாலும் 'என் காதல் சொல்ல நேரமில்லை' அந்த சூழ்நிலைக்கு மிகச் சரியாக பொருந்தியிருந்தது.

பாவம் மிலிந்த் சோமன் போன்ற நடிகர்கள். ஊறுகாய் ஜாடியாகக் கூட பயன்படுத்தப்படவில்லை. 

'ரன்' திரைப்படத்தின் போதே இதைப் பற்றி எழுதியிருந்த ஞாபகம். எந்தவொரு சமூகத்தைப் பற்றியோ, துறையினரைப் பற்றியோ இழிவாக காட்சியமைக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் உடனே தங்களது எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். அதே போல் தாதாக்களும் ரவுடிகளும் தங்களுக்கென சங்கம் அமைத்து திரைப்படத்தில் இப்படி தங்களை இழிவாக சித்தரிப்பதை கண்டித்து குரல் கொடுக்க வேண்டும். மூன்று வேளையும் ஃபீப் பிரியாணியாக சாப்பிட்டு உடலை ஏற்றி வைத்திருக்கும் ஒரு திடகாத்திரனை பல்லி போலவோ, பக்கத்து வீட்டு மாமா போலவோ இருக்கும் நாயகர்கள் ஒரே அடியில் விண்ணில் பறக்க வைப்பதை பார்த்து சாதாரணனாகிய எனக்கே மனம் பதைக்கும் போது அவர்கள் மனது என்ன பாடுபடும்?

suresh kannan

19 comments:

King Viswa said...

கடைசி பத்தி என்னை மிகவும் சிந்திக்க வைத்து விட்டது. உண்மையிலேயே.

King Viswa said...

தலைப்பை படித்தவுடன் என்னமோ ரதோ என்று நினைத்தேன்.

King Viswa said...

//ரன்'னையே அழுக்கு போகாமல் துவைத்து காயவைத்து சூடான இஸ்திரி போட்டு தந்திருக்கிறார் லிங்குசாமி.//

சில நேரங்களில் ஒரு முயற்சி தோற்றவுடன் இயக்குனர்கள் தங்களின் வெற்றி பார்முலாவை மறுபடியும் ரெப்ரெஷ் செய்து வெற்றிப்பாதையில் வர முயல்வார்கள். அது மாதிரிதான் இதுவும்.

King Viswa said...

//'சித்தப்பா' தோற்றத்தில் ஒரு ஹீரோ.//

இவருக்கே இப்படி என்றால், அப்போ மத்த ஹீரோக்களெல்லாம் எங்கே போவதாம்?

D.R.Ashok said...

கடைசி வரி :)

King Viswa said...

இது போன்ற படங்களை எல்லாம் பார்க்கும்போது சமீப நாட்களில் எனக்கு ஒரு சிந்தனை அடிக்கடி வருகிறது.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு (அதாவது தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாள வில்லன்கள் எல்லாம் வந்து அடி வாங்கியபின்னர்) வேறு யாருமே இல்லாமல் தமிழ் ஹீரோக்கள் அயல் கிரக ஏலியன் கூடவா மோதுவார்கள்? அல்லது சாவே இல்லாத ஜோம்பிக்கள் கூடவா?

க‌ரிச‌ல்கார‌ன் said...

//'சித்தப்பா' தோற்றத்தில் ஒரு ஹீரோ.//

இவருக்கே இப்படி என்றால், அப்போ மத்த ஹீரோக்களெல்லாம் எங்கே போவதாம்? //

ஹீரோயினுக்கு சித்த‌ப்பா மாதிரி

//அப்போ மத்த ஹீரோக்களெல்லாம் எங்கே போவதாம்? //
அதான் தாத்தான்னு சொல்லியிருக்காருல்ல‌

சுரேஷ் கண்ணன் said...

அதிகபட்ச வெறுப்புடன் திட்டி ஒரு ஆபாச மொழி பின்னூட்டம் வந்திருந்தது. அந்த நண்பருக்கு நான் சொல்ல விரும்புவது. இது எல்லா தமிழ் ஹீரோக்களையும் பற்றிய விமர்சனமல்ல. 'ஆதவன்' திரைப்படத்தைப் பற்றி எழுதும் போது என்ன எழுதியிருக்கிறேன் என்பதையும் கவனியுங்கள்.

//பாரதியார் கேட்ட வரங்களில் ஒன்றினைப் போல 'விசையுறும் பந்தாக' மிக உற்சாகமாக இருக்கிறார் சூர்யா. வில்லாக வளைகிறார்; நெளிகிறார்; தாவுகிறார்.//

http://pitchaipathiram.blogspot.com/2009/12/blog-post_11.html

பருப்பு The Great said...

ஹீராயின்கள் விஷயத்தில் நமக்கிருக்கும் ரசனையின்மை (இந்தப் படத்து நாயகியும் ஓர் உதாரணம்)
/////////////////

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...தமன்னாவ உங்களுக்கு புடிக்கலன்னா சம்திங் ராங்...

பின்ன ஹீரோயின் எப்படி இருக்கனுமாம்??? கொஞ்சம் விளக்க முடியுமா?

பருப்பு The Great said...

நமக்கிருக்கும் ரசனையின்மை
//////////////////////////////

தமிழனோட சகிப்பு தன்மை பத்தி எனக்கு நல்லா தெரியும்...இன்னைக்கு என்ன நாள்ன்னு தெரிஞ்சும் நீங்களும் நானும் தமன்னாவ பத்தி பேசும் போதே தெரியலையா?

இராமசாமி கண்ணண் said...

கடைசில சொன்ன விசயம் நச்.

ராம்ஜி_யாஹூ said...

do you have to write review to these kind of films

I still wonder hos does this Lingusamy get money to take films.

ஜெகதீஷ் குமார் said...

எதிர்த்து வரும் பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப் படவேண்டாம். என்னைப்போன்றோர் உங்கள் தளத்திலிருந்துதான் பல திரைப்படங்கள் பற்றி அறிகிறோம். ஒருவேளை விமர்சிக்க லாயக்கற்ற படங்கள் பற்றி எழுதினால் இப்படித்தானோ? தமிழ் திரைப்படங்கள் பற்றி எழுத நீங்கள் ராவணன் வரைக்குமாவது காத்திருந்திருக்கலாம். ரன்னை, சண்டைகோழியிலேயே சலவை செய்துபோட்டுவிட்டார் இயக்குனர்.

சதிஷ் said...

இந்த படம் முடிந்த பிறகு . கார்த்திக் சொன்ன வார்த்தைகள் இதோ " இந்த மாதிரி படம் பண்ணி இருந்தா இந்த 5 வருசத்துல நேரிய படங்கள் பண்ணி இருப்பேன் " .... இதை தொடர்ந்து நடிகர் சிம்பு

லின்குசாமியுடன் படம் பண்ணுகிறார்.
நல்ல (மார்க்கெட் இருக்குற) ஹீரோ . அழகான(மார்க்கெட் இருக்குற) ஹீரோயின்.. மோசமான வில்லன் .. 5 நல்ல பாட்டு .. 2 சண்டை .. இது தான் லிங்குசாமியின் படம்.

எப்ப திருந்த போறாரோ ...

அய்யனார் said...

சுரேஷ்,
வழக்கத்தை விட சற்று தடாலடியான பதிவிது. கடைசி பத்தியில் சிரித்துவிட்டேன் :)

வவ்வால் said...

Athu enna sir amir khan,madhavan ellam college student aga nadicha uruthama parkuringa. Kadantha kalangalai vida tharpothu niraya real youths hero va varanga athuve santhosham than.

White skin iruntha pothum heroin appo thamanna heroin thane!
Danush nadicha Puthukottai saravanan padam than paiya agi irukku.

^ சித் || sid ^ said...

" பாவம் மிலிந்த் சோமன் போன்ற நடிகர்கள் "

ஏனுங்க சுரேஷ் என்னக்கி மிலிந்த் சோமன் actor ஆனார் ..?
உங்களோட ஒரே காமெடி போங்க :) ..

Anonymous said...

//" பாவம் மிலிந்த் சோமன் போன்ற நடிகர்கள் "

ஏனுங்க சுரேஷ் என்னக்கி மிலிந்த் சோமன் actor ஆனார் ..?
உங்களோட ஒரே காமெடி போங்க :) //

அடி சருக்க்குற மாதிரி feeling!
KKPSK

KKPSK said...

chetan baghat told many things! why dont u write abt that "2 states" உங்களுடைய வரிகளில் படிக்க நன்றாக இருக்கும்.அப்டின்னு தோணுது