Sunday, May 16, 2010

தாம் தூம் திரைப்பட தலைப்பு அனிமேஷன்

புறநகர் ரயிலில் 'பதேர் பாஞ்சாலி' தொடர்பான நூலை வாசித்துக் கொண்டிருந்தவரிடம் அதன் காரணமாகவே என்னுடைய வழக்கத்திற்கு மாறாக பேச்சுக் கொடுத்தேன். கவிஞர் அறிவுமதி நடத்தும் 'தை' கவிதை காலாண்டு இதழில் வடிவமைப்பு செய்வதாக அறிமுகப்படுத்திக் கொண்டார் வெங்கடேஷ். திரைப்படத்துறையிலும் ஆர்வமுண்டு.  தீடீரென்று அமானுஷ்யமாக அவ்வப்போது தொலைபேசியில் உரையாடுவார். வலைப்பூ ஆரம்பிக்கச் சொன்னேன்.  நுட்பம் தொடர்பாக எனக்குத் தெரிந்ததை அவ்வப்போது  சொல்வேன்.

சமீபத்தில் என்னிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்தார். தாம்தூம் திரைப்பட தலைப்புக் காட்சிக்கான அனிமேஷனை அவருடைய நண்பரொருவர்தான் உருவாக்கினதாகவும் அதைப் பார்வையிட்டு பின்னூட்டமிட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.சம்பந்தப்பட்ட அனிமேஷனைப் பார்த்தேன். சிறப்பாகவே இருந்தது. டாப் ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட நகர்ப்புற காட்சிகளின் பின்னணியில் கணினி நுட்பம் உதவி கொண்டு சிறப்பான கற்பனையுடன் பெயர்களை நிரப்பியிருந்தார் வெங்கடேஷின் நண்பர். கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்கப்படும் திரைப்படமொன்றின் பின்னணியில் பணிபுரியும் இவ்வாறான பல சிறு கலைஞர்களைப் பற்றி நாம் அறியாமலே இருக்கிறோம்.

உங்கள் நண்பர்களிடமும் இதைப் பற்றிச் சொல்லுங்கள் என்றும் வேண்டுகோள் வைத்தார். சொல்லி விட்டேன். சாவகாசமான நேரத்தில் இதைப் பார்வையிட்டு உங்கள் கருத்தையும் சொல்லி வைத்தால்,  அதை உருவாக்கியவருக்கு உற்சாகமாக இருக்கும் என நம்புகிறேன். நன்றி.

suresh kannan

15 comments:

MinMini.com said...

Nice work anna !

கானா பிரபா said...

இந்தப் படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போதே குறித்த அனிமேஷனைக் கண்டு வியந்தேன். கலைஞர்கள் பட்டியல் முடியும் தறுவாயில் கலக்கும் இரத்தத் துளிகளின் வடிவமைப்பு, படத்தின் சாரம்சமாக குறிப்பால் உணர்த்தும் உத்தியாகப் பயன்பட்டிருப்பது வெகு சிறப்பு

சுரேஷ் கண்ணன் said...

பதிவை வாசித்து விட்டு வெங்கடேஷ் தொடர்பு கொண்டார். ஏரியல் வ்யூவில் தெரியும் காட்சிகள் வீடியோ காட்சிகள் அல்லவாம். படத்தோடு தொடர்புடைய ருஷ்ய நகரின் இமேஜ்களை வைத்து அசையும் படமாக உருவாக்ப்பட்டது என்பதை அறியும் போது இன்னும் பிரமிப்பாக இருந்தது.

அனிமேஷன் படங்கள் பற்றிய விழிப்புணர்வு நம்மிடம் அதிகமில்லை. பெண்டாமீடியா போன்ற நிறுவங்கள் அவர்களின் உருவாக்கங்களை பிரபலமாக்குவதில் அதிக முயற்சிகள் எடுப்பதில்லை என்று தோன்றுகிறது. 'சுல்தான்' வந்த பிறகு இது மாறுகிறதா என பார்க்கலாம். :-)

கானா பிரபா, குருதித் துளிகள் நீரில் கலக்கும் போது ஏற்படும் வண்ணக் கலவை படத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என யூகித்தேன். (திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை). நன்றி.

Anonymous said...

looks stylish. KKPSK

Anonymous said...

y? u r not writing for long time.i visited many times! any way u r bck. happy! (pl delete this irrelevant comment 4 this topic) LOL - KKPSK

மஞ்சூர் ராசா said...

ஆரம்பத்தில் இருந்த விறுவிறுப்பு முடியும் தருவாயில் குறைந்துவிட்டதோ என எண்ண தோன்றியது. அல்லது அது தான் ட்ரென்டோ!

Subbaraman said...

Nice animation..I noticed that the buildings/streets are from Russia especially the "Red square".

Indian said...

அனிமேஷன் நல்ல இருந்தது.
இந்த ஐடியா ஏற்கனவே ஒரு ஹாலிவுட் படத்தில வந்தது.

Anonymous said...

hi,

* subject: add tell a friend button below each and every post of your blog. Even d newyork times uses this button.

wt is tell a friend button? it is a button which helps the reader in 5 ways.

help number 1:

tis button helps d reader to email the particular post to their friends.(Emailing a particular post facility is already available in your blogger. But it doesn't help d reader to get his/her contact list from his/her email account like Gmail, windows live mail, yahoomail etc.)

help number 2:

tis button helps d reader to bookmark d particular post in famous bookmarks like delicious, digg, google bookmark, yahoo bookmark, stumbleupon, digg, multiply, technorati, reddit, windows live bookmark, yahoo buzz, yahoo home page.... etc...

help number 3:

tis button helps d reader to share d particular post in social friend networks like orkut, facebook, my space, twitter etc....

help number 4:

tis button helps d reader to share d paticular post via their messengers like yahoo messenger, gtalk, live messenger etc

help number 5:

tis button helps d reader to add d particular post to his/her blog's dashboard.

To add this button below each n every post of ur blog visit http://tellafriend.socialtwist.com/index.jspFollow the steps mentioned in that site...it will be very easy...the most important facility available here is u can customize ur button according to ur wish.....add d tell a friend button.....
(பின்குறிப்பு: if u want to know how d button will look like and how it will work just see my blog http://kuranguthalaiyan.blogspot.com/ )

ஜெய் said...

Good one..

மீனாட்சி சுந்தரம் said...

அருமையான "டைட்டில் சிக்குவன்ஸ் ". முதலில் "Aerial View" அப்படியே "Map" ஆக மாறி பின் சாலைகள் கோடுகளிலிருந்து படத்தின் பெயர் உருவாகிறது. நல்ல கற்பனை மற்றும் உருவாக்கம்.

இந்த தளத்தில் சில பிரபலமான "Title Sequences" பாருங்கள்.
http://www.artofthetitle.com/

எனக்கு மிகவும் பிடித்தது "சவுல் பாஸ்" வடிவமைத்த "ஹிட்ச்காக்" படங்களின் டைட்டில்கள்.

mak said...

i already seen this animation from hollywood movie like spiderman. it looks nice, but not new one.

நறுமுகை said...

மிகவும் ரசிக்கதக்க அனிமேஷன். சூப்பர்

அன்புடன்,
www.narumugai.com
கருத்துக்களை பகிர, செய்திகளை படிக்க நமக்கான ஓரிடம் - நறுமுகை.காம்

கார்த்திக் said...

அருமை

பார‌தி(Bharathy) said...

really nice grapics..when i was watched first time its reminds me titile of " HOSTAGE " movie.!!
please watch his link

http://www.youtube.com/watch?v=ukabvDvZBXE