Thursday, April 09, 2009
அருண் வைத்தியநாதனின் திரைப்படத்துக்கு விருது
நிறைய குறும்படங்களை எடுத்துள்ள சக பதிவரான நண்பர் அருண் வைத்தியநாதன், பிரசன்னா மற்றும் சிநேகா ஆகியோரின் நடிப்பில் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்கிற திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ரெட் ஒன் காமிராவை உபயோகப்படுத்தி எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இது என்று சொல்லப்படுகிறது. இந்தத் திரைப்படத்திற்கு அமெரிக்காவின் Garden State Film Festival-ல் Home Grown category-ல் விருது கிடைத்திருப்பதை டைம்ஸ் ஆ·ப் இந்தியாவின் செய்தியின் மூலம் இன்று அறிந்தேன். வலைப்பதிவு உலகத்திலிருந்து ஒருவர் இயக்குநராகி வெற்றி பெற்றிருக்கிறதனாலேயே இந்தச் செய்தி எனக்கு முக்கியமாகப் படுகிறது.
இன்னும் பல விருதுகள் பெற என்னுடைய வாழ்த்துக்கள் அருண். படத்தை தமிழ்நாட்ல எப்ப ரிலீஸ் செய்யப் போறீங்க?
டைம்ஸ் ஆ·ப் இந்தியா செய்தி
அருண் குறும்படங்கள் குறித்து என்னுடைய பழைய பதிவு
suresh kannan
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அருண் வைத்தியநாதனுக்கு, மென்மேலும் வெற்றிகள் குவிக்க எனது வாழ்த்துக்கள்.
அருணுக்கு வாழ்த்துக்கள் . பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
http://www.gsff.org/winners09.php
There is a tie. That category is for films shot in the state of New Jersey. I wonder how many feature films would have been shot there in one year.Six, Seven or ten or just three ?.
அருண் வைத்தியநாதனுக்கு, மென்மேலும் வெற்றிகள் குவிக்க எனது வாழ்த்துக்கள்.
சில மாதங்கள் முன் அருணைப் பாராட்டி ஒரு மெயில் அனுப்பியிருந்தேன். பதில் எழுதியிருந்தார்.
அருணுக்கு வாழ்த்துக்கள்.
Thanks a lot Suresh and Friends.
For Anonymous, NJ is one of the leading states in producing Independent feature films and I don't know the exact data. But according to the festival director, Diane Raver...they got 600 submissions (as a whole) and they were able to select only handful of films to compete. You can also find the previous 'Homegrown - Best Feature' award by visiting the this IMDB link - http://www.imdb.com/Sections/Awards/Garden_State_Film_Festival/
and the merit of the award by clicking the reviews of those films.
Eventhough it was a tie, both the films are categorized under winners only and you can assure the same by visiting the above link. (There was a tie in previous years too).Our film will be updated with this info soon.There were five films which competed in the category.
37 films were shot in the state of NJ during 2008 and you can find this information by visiting http://njfilm.org/films.html
These r all the films which was registered with NJ film commision - I am sure there would have been more films.
More than anything, a subtitled film competing with American films and winning an award is something to be happy about! Forget the award, participating in a festival where there is no Foreign film category is something to be proud of!
அருண் வைத்தியநாதனுக்கு, மென்மேலும் வெற்றிகள் குவிக்க எனது வாழ்த்துக்கள்.
சில மாதங்கள் முன் அருணை நேரில் பார்த்து கைகுலுக்கினேன். பதிலுக்கு அவரும் கைக்குலுக்கினார் :-)
கிழக்குப் பதிப்பகத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு "ஜால்ரா அடித்து கூஜா தூக்கலாம்" என்று இருக்கிறேன்!
பதிலுக்கு, நான் எழுதவிருக்கும் 2 "காலணா பெறாத" புத்தகங்களைப் பதிப்பிக்க சான்ஸ் கிடைத்து விடும் என்று நம்புகிறேன். :-)
அனானி நண்பர் ஒருவரின் பின்னூட்டம் "தனிப்பட்ட" நபர்களை தாக்கும் வகையில் இருப்பதால் மறுக்கப்படுகிறது. மன்னிக்கவும்.
()
இம்மாதிரியான இடைஞ்சலான பின்னூட்டங்களினால்தான் பொதுவாக எநத பின்னூட்டத்திற்கும் நான் பதிலளிக்காமல் இருக்கிறேன். பேசாமல் பின்னூட்டப் பெட்டியையே மூடிவிடலாமா என்றும் யோசிக்கிறேன். மற்ற பதிவுகளில் பின்னூட்டம் அளிக்கக்கூட யோசனையாக இருக்கிறது. எனக்கு இதற்கெல்லாம் நேரம் கிடையாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். என்னுடைய பதிவு தொடர்பான பின்னூட்டங்களை மாத்திரம் ஆரோக்கியமான தொனியில் வெளியிடுங்கள். தனிப்பட்ட அரசியல் சமாச்சாரங்களையோ என்னைத் திட்டுவதாக இருந்தாலோ வேறு எங்காவது இட்டுக் கொள்ளுங்கள்.
இனிமேல் பதிவிற்குச் சம்பந்தமில்லாமல் அல்லது அநாகரிகமான மொழியில் இடப்படும் எந்தவொரு பின்னூட்டமும் எந்தவிதமான குறிப்புமின்றி மறுக்கப்படும். மன்னிக்கவும். வேறு வழி தெரியவில்லை.
Post a Comment