Wednesday, October 01, 2008

அப்போ... வடிவேலுதான் அடுத்த முதல்வரா?

Photobucket

எல்லா தேசத்தையும் போல் தமிழ்நாட்டிலும் அவ்வப்போது விநோதமான சம்பவங்கள் நடந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அடுத்த விநோதத்திற்கு தாவிவிடும். சமீபத்திய சிலதில் என்னவென்று பார்த்தால் சிம்புவின் கார் பிரச்சினை. முதல் நாள் வந்த செய்தியின் படி சிம்புவும் அவரது சகோதரரும் இரவு 10 மணிக்கு நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு சென்றதாகவும் நள்ளிரவிற்கு மேலாகியும் அவர்கள் வெளியே வராததால் கார் டிரைவர் சிம்புவின் அம்மாவிற்கு போன் செய்து கேட்டதாகவும் "காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர். அப்போதுதான் அவர்களுக்கு புத்தி வரும்" என்று அவர் சொன்னதாகவும் தாமதமாக வெளியே வந்த சிம்பு காரைக் காணாமல் காவல் துறைக்கு புகார் ஒன்றை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாயின. அடுத்த நாள் செய்தியில் சிம்பு ஊரிலேயே இல்லை என்றும் அவரின் சகோதரர்தான் ஓட்டலுக்கு சென்றதாகவும் தெரிய வந்தது. பிறகு அந்த காரில் அடிபட்டு ஒரு ஆள் இறந்து போனதாகவும் காரில் சிம்பு இருந்ததாகவும் செய்தி வந்ததில் இன்னும் பரபரப்பானது. டிரைவர் வண்டியை வீட்டில் விடாமல் அனுமதியும் பெறாமல் தன்னுடைய சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திய போதுதான் இந்த விபத்து ஏற்பட்டதாக பிறகு கூறப்பட்டது. சிம்பு நடத்திய பிரஸ் மீட்டில் 'தனக்கு எதிராக சதி நடக்கிறது. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது" என்று அரசியல்வாதி அளவிற்கு அறிக்கை விட்டார். அவரின் தந்தையான 'டண்டணக்கா' டி.ஆரும் வழக்கம் போல் தலைமுடியைச் சிலுப்பி ஆவேசப்பட்டிருக்கிறார்.

பத்திரிகைகளில் வரும் செய்திகளை நம்புவதென்பதை நான் எப்பவோ விட்டு விட்டே¦ன்றாலும் இதில் உண்மை எங்கே ஒளிந்திருக்கிறது என்பதை யூகிக்க சுவாரசியமாயிருக்கிறது. சன் பிக்சர்ஸ் தத்து எடுத்துக் கொண்ட "காதலில் விழுந்தேனை" மதுரையில் வெளியிட அழகிரி குழு தடை ஏற்படுத்துவது ஒரு விநோதம் என்றால் (இப்படி சமீபத்தில் வெளியாகிற எல்லா தமிழ் திரைப்படங்களையும் தமிழ்நாடு முழுக்க வெளியிட முடியாமல் திமுக தடுத்தால் அவர்களுக்கு புண்ணியமாகப் போகும்). 'விடுமுறை நாள்' சிறப்பு நிகழ்ச்சிகள் என்று விநாயகர் சதுர்த்தியன்று காமெடி செய்கிறது கலைஞர் டி.வி. விநாயகர் சதுர்த்தி என்று சுயவாக்குமூலம் கொடுத்தால் பகுத்தறிவின் படி லாஜிக் இடிக்கும் என்று கருதுகிறார்கள் போலிருக்கிறது. "ஒரு வேளை கருணாநிதியை மண்டையைப் போட்டு அரசு விடுமுறை அளிக்கும் அன்றைய தினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகளை போடுவார்களா?" என்று கேட்கிறார் நண்பரொருவர் விநோதமாக. காசும் சம்பாதிக்க வேண்டும், கொள்கையையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் எப்படி.

குஷ்பு கால் மீது கால் போட்டாலோ ராமன், அனுமன் பாத்திரங்கள் மூத்திரம் போவது போல் சுவரொட்டி அடித்தாலோ இந்து முன்னணிகாரர்களுக்கு மூக்கில் வேர்த்துவிடுகிறது. புகார் மனுவுடன் கிளம்பி விடுகிறார்கள்.இப்படிப்பட்டவர்கள் ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தை எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சமீபத்தில் ஒளிபரப்பபடுகிற தேநீர்த்தூள் விளம்பரமொன்றில் வயதானவர் ஒருவர் "முருகன் பக்திப்பாடலை" பாடுகிறார். வீட்டில் இருக்கும் சின்னஞ்சிறுசுகள் சகிக்க முடியாமல் காதை மூடிக் கொள்கின்றனர். பின்பு தேநீரை அருந்தியுவுடன் உற்சாகமடைந்து எம்.ஜி.ஆர் பாடலை பாடுகிறார். பக்திப்பாடலை கேவலப்படுத்தும் இந்தப் போக்கை எதிர்த்து இந்து முன்னணிகாரர்கள் யாரும் ஏன் இன்னும் வழக்கு போடவில்லை? உற்சாகமடைந்தால் எம்.ஜி.ஆர். பாடலைத்தான் பாட வேண்டுமா? கருணாநிதியின் வசனத்தை பேசி மகிழக்கூடாதா?" என்று உடன்பிறப்புகளும் வழக்கு போடலாம்.

()

"முதல்வராக ஆவதற்கான அனைத்து தகுதியும் அறிவும் எனக்கு இருக்கிறது" என்று சந்தடி சாக்கில் விநோதமாக காமெடி செய்கிறார் கார்த்திக். தமிழ்நாட்டில் இந்த முதல்வர் பதவி என்பது பாண்டி பஜார் பிளாட்பாரத்தில் கூறு போட்டு விற்கும் வஸ்துவை விட எளிமையான ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது. "2011-ல் என்னுடைய ஆட்சிதான் அமையும்" என்று வீரத்தளபதி (?) ஜே.கே.ரித்தஷ் அடுத்த வாரமே ஒரு கட்சி ஆரம்பித்து அடுத்த நாளே அறிவித்தால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். வேலை வாய்ப்பு பதிவு அலுவலகத்தில் நிற்பதை விட பெரிய வரிசை 2011 முதல்வர் பதவிக்காக நிற்கிறது. "வருவியா, வரமாட்டியா" என்று தமிழக மக்கள் கேட்டுக் கொண்டிருந்த ரஜினிகாந்த் நல்ல வேளையாக இந்த வரிசையில் தற்போதைக்கு இல்லை. கர்நாடக, குசேல விவகாரங்களுக்குப் பிறகு மக்களிடையே அவரின் இமேஜ் சரிந்து விட்டதாக கூறுப்படுகிறது. என்னைப் பொறுத்த வரை ரஜினி அரசியலுக்கு லாயக்கானவர் அல்ல. தனிப்பட்ட வகையில் சில அடிப்படையான நேர்மை குணங்கள் அவரிடம் இருக்கின்றன. அரசியலுக்கு இது ஆகாது. தவறான கொள்கையாக இருந்தாலும் அதிலேயே உறுதியாக இருக்க சாதுர்யமும் மனத்திடமும் ஸ்திரமான புத்தியும் இருக்க வேண்டும். ரஜினியிடம் இவை இருப்பதாக தெரியவில்லை. ஷார்ட் டைம் மெமரி லாஸ் 'கஜினி' போல சுற்றியிருப்பவர்களின் கருத்துக்கு ஏற்ப தினத்துக்கு ஒன்று மாற்றிச் சொல்லும் "குழப்பவாதிகளால்" அரசியலில் குப்பை கொட்ட முடியாது. விதவிதமான 'விக்குடன்' ஐஸ்வர்யாவுடன் நிம்மதியாக டூயட் பாடிக் கொண்டிருப்பதுதான் அவருக்கு சரியானது.

()

இன்னொரு விநோதம் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வீட்டின் மீது நடந்த தாக்குதல். விஜய்காந்த் ஆட்கள்தான் இதை செய்ததாக அவர் காவல்துறையில் புகார் செய்திருப்பதும் சினிமாவில் தீவிரவாதிகளை பந்தாடிய கேப்டன் முன் ஜாமீன் மனுவிற்காக விண்ணப்பத்த கையோடு "ஆளுங்கட்சியின் விரோதப் போக்கு இது" என்று குற்றஞ்சாட்டியிருப்பதும் இன்னொரு விநோதம். விஜயகாந்த் வீட்டில் பிரியாணி போட்டால் கூட "ஆடு, கோழி உயிர் வதைச் சட்டத்தின் கீழ்" அவரைக் கைது செய்ய ஆளுங்கட்சி சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அசந்தர்ப்பமான சூழ்நிலையில் விஜய்காந்த் இந்த அபத்தத்தை செய்ய மாட்டார் என்று நாளைக்கு அரசியலுக்கு வரப்போகும் கனிமொழியின் வாரிசுக்குக் கூட தெரியும். வடிவேல் இது தொடர்பாக தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிதான் இன்னும் விநோதமானது. "தேர்தல் சமயத்தில் விஜய்காந்த் எங்கே நின்றாலும் அவருக்கு எதிராக நிற்பேன். மக்களிடத்தில் எனக்குள்ள செல்வாக்கை நிரூபிப்பேன்."

பெரும்பான்மையோனரைப் போல வடிவேலின் நகைச்சுவை எனக்கும் பிடித்தமானதுதான். மன உளைச்சலிருந்து என்னை மீட்டுக் கொள்வதில் அவரின் காமெடி காட்சிகளும் உதவுகிறது. அவரே சொல்கிறது போல தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலும் அவரை விரும்புகிறார்கள். ஆனால் வடிவேல் இந்த அபிமானத்தை தேர்தலில் ஜெயிப்பதற்கான பாதையாக மாற்றிக் கொள்ள முனைவதும் அதில் தெரியும் உறுதியும் விநோதமாக தெரிகிறது. முன்பெல்லாம் கதாநாயகர்களாக நடிப்பவர்கள்தான் தேர்தலில் எளிதில் வெற்றி பெறும் கனவில் இருந்தார்கள். ஆனானப்பட்ட சிவாஜியையே மக்கள் ஏற்றுக் கொள்ளாதது ஒருபுறமும் பாக்கியராஜ், ராமராஜன், டி.ஆர். போன்ற உதாரண புருஷர்கள் இருந்தும் இவர்கள் மயக்கம் தெளியவில்லை. "சினிமாவில் நல்லவனாக இருப்பவன் நிஜத்திலும் நல்லவனாக இருப்பான்" என்று தமிழக மக்களுக்கு இருக்கும் பாமரத்தனத்தை இவர்கள் உடனே பயன்படுத்திக் கொள்ள விழைகிறார்கள். அப்பன் காசில் தயாரிக்கும் முதல் படத்திலேயே கேமராவிற்கு முன்பு விரலை நீட்டி "எனக்குப் பின்னால ஒரு கூட்டமே இருக்கு" என்கிற விநோதமெல்லாம் நடக்கிறது.

இந்த வரிசையில் காமெடியனான வடிவேலுவும் சேர்ந்திருப்பது "தமிழக மக்களை" அவர் நன்கு புரிந்து வைத்திருப்பதைக் காட்டுகிறது. எனவேதான் வரும் தேர்தலில் நிச்சயம் ஜெயிப்பேன் என்று அவரால் அவ்வளவு உறுதியாக சொல்ல முடிகிறது. உணர்ச்சி வேகத்தில் அவர் பேசியிருந்தாலும் நடிகர்கள் ஆழ்மனதில் புதைந்திருக்கும் ரகசியக் கனவே அவர் வார்த்தைகளிலும் வெளிப்பட்டிருப்பதாக நான் கருதுகிறேன்.

()

சமீபத்தில் இன்னொரு விநோதமான விளம்பரத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். விஷயம் என்னவென்றால் 'மக்கள் மனதில் நிற்பவர் யார்' என்று கல்லூரி ஒன்று கருத்துக் கணிப்பை நடத்தியிருக்கிறது. இதில் அதிக புள்ளிகளைப் பெற்று முன்னணியில் இருப்பவர்.. வேறு யாருமில்லை. கோணல் மாணலாக நடனமாடியே புகழ் பெற்றிருக்கும் 'இளைய தளபதி' விஜய். அதையொட்டி வெளியான பத்திரிகை விளம்பரத்தில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தின் அருகே "நேற்று" என்றும் விஜய்யின் பெரிய அளவு புகைப்படத்திற்கு அருகே "நாளை" என்றும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இன்னாங்கடா வெளையாடறீங்களா?

suresh kannan

20 comments:

லக்கிலுக் said...

//"ஒரு வேளை கருணாநிதியை மண்டையைப் போட்டு அரசு விடுமுறை அளிக்கும் அன்றைய தினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகளை போடுவார்களா?" என்று கேட்கிறார் நண்பரொருவர் விநோதமாக. //

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை :-(

Robin said...

//"சினிமாவில் நல்லவனாக இருப்பவன் நிஜத்திலும் நல்லவனாக இருப்பான்" என்று தமிழக மக்களுக்கு இருக்கும் பாமரத்தனத்தை இவர்கள் உடனே பயன்படுத்திக் கொள்ள விழைகிறார்கள். // அருமையான கருத்து.

Anonymous said...

Gud one.
-Raji

சுதாகர் R said...

கலக்கிட்டீங்க சுரேஷ் கண்ணன்.

சரவணகுமரன் said...

பாரபட்சம் பார்க்காமல் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......... :-)

Anonymous said...

Attagaasam! Aana onnu, neenga ennathaan ezudhinaalum, ivanunga thirundha poradhilla

ஆட்காட்டி said...

வேறு ஏதாவது புதினங்கள்????????

யூர்கன் க்ருகியர் said...

தோல உரிச்சு வெளுத்து வாங்கிட்டிங்க! சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு வந்தால் "வேர்த்து" போவது நிச்சயம்.

அரசியல்-ல பிரகாசமான எதிர் காலம் நிச்சயமா உங்களுக்கு இருக்கு :)

முரளிகண்ணன் said...

\\விஜயகாந்த் வீட்டில் பிரியாணி போட்டால் கூட "ஆடு, கோழி உயிர் வதைச் சட்டத்தின் கீழ்" அவரைக் கைது செய்ய ஆளுங்கட்சி சமயம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த அசந்தர்ப்பமான சூழ்நிலையில் விஜய்காந்த் இந்த அபத்தத்தை செய்ய மாட்டார் \\

:-))))))))))))))))))))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தமிழக முதல்வருக்கான கல்வித் தகுதியை 1969 அண்ணா ஆட்சிக்குப் பிறகு தேர்தல் கமிஷன் குறைத்திருப்பது தெரியாதா?(ஓ.பி.எஸ் மட்டும் விதி விலக்கு)

ஜோ/Joe said...

////"ஒரு வேளை கருணாநிதியை மண்டையைப் போட்டு அரசு விடுமுறை அளிக்கும் அன்றைய தினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகளை போடுவார்களா?" என்று கேட்கிறார் நண்பரொருவர் விநோதமாக. //

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை :-(

//

வழிமொழிகிறேன் .வருந்துகிறேன்.

Anonymous said...

ஒரு வேளை கருணாநிதியை மண்டையைப் போட்டு அரசு விடுமுறை அளிக்கும் அன்றைய தினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகளை போடுவார்களா?" என்று கேட்கிறார் நண்பரொருவர் விநோதமாக. //

உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை....

Ethu Nallavae ella Suresh....very bad.

http://urupudaathathu.blogspot.com/ said...

நெத்தியடி .. புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்..

Anonymous said...

""""ஒரு வேளை கருணாநிதியை மண்டையைப் போட்டு அரசு விடுமுறை அளிக்கும் அன்றைய தினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகளை போடுவார்களா?" என்று கேட்கிறார் நண்பரொருவர் விநோதமாக"""

Wow.....Wonderfulllllllll.
Let us think about your father /mother/wife/your kid died . What will happen..Nothing only you put sick leave from your office.

Welldone ..keep it up

Anonymous said...

Innum Konja naal pona vote poda aal irukathu, ellorum arasiyal katchi aarambchiduvanga.

Anonymous said...

Hi Suresh,
I keep reading your blog since 2006.But never posted a comment. I couldn't resist myself from appreciating you for the flow of this post.

////இன்னாங்கடா வெளையாடறீங்களா?////

Simply Superb.....
Keep up the gud work going on.

Cheers
Priya

Anonymous said...

Do you accept actor vijayakanth's movement to become a power in tamilnadu politics, he has the qualities to establishing governance in assembly.....?

Great funnnnnnnn generally some actor are doing like this.

Thanks
raja - bgl

Anonymous said...

Do you accept actor vijayakanth's movement to become a power in tamilnadu politics, he has the qualities to establishing governance in assembly.....?

Great funnnnnnnn generally some actor are doing like this.

Thanks
raja - bgl

Anonymous said...

Do you accept actor vijayakanth's movement to become a power in tamilnadu politics, he has the qualities to establishing governance in assembly.....?

Great funnnnnnnn generally some actor are doing like this.

Thanks
raja - bgl

அரவிந்தன் நீலகண்டன் said...

//"ஒரு வேளை கருணாநிதியை மண்டையைப் போட்டு அரசு விடுமுறை அளிக்கும் அன்றைய தினத்திலும் சிறப்பு நிகழ்ச்சிகளை போடுவார்களா?" என்று கேட்கிறார் நண்பரொருவர் விநோதமாக. //
நரகாசுரன் செத்த நாளைத்தான் இருட்டுல இருந்து விடுதலை பெற்றோம் அப்படீன்னு நாடு பூரா கொண்டாடுறாங்க இல்லீங்களா. அப்படி இருக்கும் போது ஏங்க சாமி இந்த சந்தேகம். தமிழ்நாடு பூரா பவர்கட்டால இருளுலதான் மூழ்கியிருக்கு,