Wednesday, July 02, 2008

கமலின் 'அபத்த' அவதாரம்

இணையத்தில் ஏற்கெனவே இந்தப்படத்தை கிழித்து எறிந்தும், தூக்கிக் கொண்டாடியுமான பதிவுகளின் ஆரவாரங்கள் அடங்கின இந்தச் சமயத்தில் ஒரு அதிதாமத பதிவை எழுத என்னைத் தூண்டியது, chaos theory-ஆ, பெருமாளா, மன அரிப்பா, யாரோ, எந்த காரணமோ நானறியேன். நிறைய விமர்சனங்களைப் படித்த பின்பும் எந்த முன்தீர்மானமும் இல்லாமலிருக்க முயன்றுதான் இந்தப் படத்தை அணுகினேன்.

உண்மையில் இந்தப்படத்தைப் பற்றின செய்திகள் ஆரம்பத்திலிருந்தே எனக்கு உவப்பானதாக இல்லை. 'பத்து வேடங்கள்' என்னும் போதே, அதுதான் பிரதானமாக இருக்கப் போகிறது என்பதையும் கதையோ, திரைக்கதையோ முறையாக இல்லாமல் ஒரு typical வணிகப்படமாகத்தான் இருக்கப் போகிறது என்பதையும் யூகிக்க முடிந்தது. (அதிலும் கே.எஸ்.ரவிகுமார் வேறு). எனவேதான் இந்தப்படத்தை உடனே பார்ப்பதற்கான எந்த ஆவலும் இல்லாமலிருந்தேன்.

இந்தப் படத்தை 'உலகத்தரமான படம்" ' பத்து வேடங்களில் முதன் முறையாக.... blah blah... 'உலக நாயகன்" என்பது போன்ற விஷயங்களையெல்லாம் கட்டிக் கொண்டு மாரடிப்பதை தவிர்க்க வேண்டும். பாமர ஜனங்களை ஏமாற்ற படத்தயாரிப்பாளர்கள் இந்த விஷயங்களை hype செய்து விளம்பரம் அடித்துக் கொள்ளட்டும். திரைப்படம் என்கிற ஊடகத்தின் அடிப்படையை எளிமையாக புரிந்து வைத்திருக்கிற பார்வையாளனுக்கு கூட இந்தப்படம் ஒரு அப்பட்டமான gimmicks என்பது எளிதில் புரிந்துவிடும். எனவே, வழக்கமான அருவா, துப்பாக்க நாயக திரைப்படங்களிலிருந்து விலகி நின்று வழக்கம் போல் கமல் செய்திருக்கிற ஒரு வணிக முயற்சி என்கிற நிலையிலேயே இந்தப்படத்தை அணுகலாம்.

Photobucket

படத்தின் கதை (?) என்ன என்பது இந்நேரம் நாளைக்குப் பிறக்கப்போகிற குழந்தைக்குக் கூடத் தெரிந்திருக்கும் . உண்மையில் இந்தப்படத்தில் கதை என்கிற சமாச்சாரம் இருக்கிறதா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இல்லாத ஒன்றுக்காகவா நீதிமன்றத்தில் அடித்துக் கொண்டார்கள் என்பதும் நகைப்புக்குரியதாக இருக்கிறது. 12-ம் நூற்றாண்டில் இருந்து பிரமிப்புடனும் சீரியசாகவும் ஆரம்பிக்கும் திரைக்கதை, கமல் இந்தியா வந்தவுடனே 'மைக்கேல்மதனகாமராஜன்' படத்தின் மோசமான பிரதி போல் ஆகிவிடுகிறது. (தசாவோடு ஒப்பிடும் போது மைக்கேல் சுவாரசியமான படம்).

வேறு ஒரு உருவத்துக்குள் கூடுமாறிப் போவதில் கமலுக்கு 'தப்புத்தாளங்கள், கடல்மீன்கள், 'எனக்குள் ஒருவன்' ......காலத்திலிருந்தே ஒரு பிரேமை. நல்லதுதான். உண்மையான கலைஞனுக்குள் இருக்கிற தாகம்தான் அது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் நாளுக்கு நாள் அதுவே ஒரு வியாதியாக வளர்ந்து போய் இந்தப்படத்தில் வியாதி முற்றிப் போய் இருக்கிற நிலையை காண முடிகிறது. ஒரு அழுத்தமான கதைக்காக 'பாத்திரங்கள்' என்பதில்லாமல் reverse-ஆக 'பத்து வேடங்கள்' என்பதை முடிவு செய்து கொண்டு அதற்கேற்ப கதையை (!) தயார் செய்ததில் பெருங்குழப்பமே ஏற்பட்டிருக்கிறது. சம்பந்தமேயில்லாமல் 12-ம் நூற்றாண்டில் துவங்கி அதை சமீபத்திய சுனாமி வரை தொடர்புபடுத்துவதற்குள் (அதாங்க கேயாஸ் தியரி) அவர்களுமில்லாமல் நம்மையும் மூச்சு வாங்க வைத்திருக்கிறார்கள்.

ஒரு வணிகப்பட நாயகனின் ஆர்ப்பாட்ட அறிமுகத்திற்கு எந்தவித குறைச்சலுமில்லாமல் ரங்கராஜன் நம்பி ஆர்ப்பாட்டமாக சண்டைக் காட்சியில் அறிமுகமாகிறார். 12-ம் நூற்றாண்டில் இப்படித்தான் தமிழ் பேசப்பட்டதா என்பதை தமிழறிஞர்கள்தான் சொல்ல வேண்டும். 'கயிலாயத்தில் கயவர்களுக்கு இடமில்லை' என்பதெல்லாம் கருணாநிதி பாணி மாதிரியிருக்கிறது. உலகத்தையே அழிக்கும் ஒரு உயிர்க்கொல்லி கிருமியை கண்டுபிடித்து ஆராய்ச்சி செய்யும் ஒரு விஞ்ஞானி, அதை அழிப்பதற்கு இப்படியா திணறுவார் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. இது போன்ற பல லாஜிக் ஓட்டைகளினால் படத்தில் ஒன்ற முடியவில்லை.

()

பெரும்பாலோரைப் போல எனக்கு பிடித்த கமல் 'பல்ராம் நாயுடு'தான். ஆனால் இப்படி ஒரு கோமாளி, 'ரா'பிரிவின் தலைவராக இருப்பார் என்கிற கேள்வி எழுகிறது. சொல்ல முடியாது. இந்தியாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். விஞ்ஞானி கமலை 'விசாரணை' செய்யும் பாணியிலும் 'நூவு தெலுகு அப்பாயியா' என்று ஆவலாக விசாரித்துவிட்டு 'கன்னடிகா' என்று பதில் வரும் போது சட்டென்று மாறுகிற முகபாவமும் பின்னர் சுதாரித்துக் கொண்டு "ரெண்டுக்கும் ஒரே script-தான்' என்று சமாதானமடைவதிலும்... நாயுடுகாரு.. பாக உந்தி. "He speaks five languages in Telugu' போன்ற வசனங்களில் கிரேசி மோகன் வாசனை.

விஷ்ணுவின் பத்து அவதாரங்களுக்கும் இந்தப்படத்தின் பாத்திரங்களுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமையை ஆராய்ந்து சில பதிவுகளையும் யூகங்களையும் இணையத்தில் படித்தேன். வாழ்க தமிழர்கள்.

()

வித்தியாச முயற்சியை பாராட்டாமல், நொட்டை & நொள்ளை சொல்கிறாயே என்று இணையத்தில் ஏற்கெனவே கேள்வி எழுந்திருக்கிறது. ஒரளவிற்கு சரிதான். தமிழ்ச் சினிமாவின் தரத்தையும் போக்கையும் அவ்வப்போது உயர்த்திக் கொண்டே போகும் சொற்ப ஆளுமைகளில் கமல் பிரதானமானவர்தான். மறுக்க முடியாது. அதற்காக அவர் காலை 04.00 மணிக்கே எழுந்து ஒப்பனை செய்து கொண்டு சிரமப்பட்டார் என்பதற்காக ஒரு அபத்தமான திரைப்படத்தை பாராட்ட முடியாது.

நானும் ஓர் கமல் ரசிகன்தான். (இங்கே ரசிகன் என்கிற வார்த்தையை சங்கடத்தோடு பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அந்தளவிற்கு அந்த வார்ததையை பாழ்படுத்தியிருக்கிறார்கள்). நினைத்துப் பார்க்கிறேன். 'நாயகன்' திரைப்படம் படம் பார்த்து வீடு திரும்பிய அந்த மழை பொழிந்து கொண்டிருந்த தருணத்தில் உறைந்து போய் வீடு திரும்பினேன். 'வேலு நாயக்கர்' என்னுள் முழுதாக நிரம்பியிருந்தார். பின்னர் அந்தப்படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று தெரியாது. இப்போது அதனுடைய திரைப்படத்தின் குறுந்தகடு அவ்வப்போது பயன்பாடாகிக் கொண்டிருக்கிறது. அதே போல் மகாநதி, அன்பே சிவம், விருமாண்டி என்று பிற்கால படங்களாகட்டும், அவர்கள், அவள் அப்டித்தான், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து.. என்று முற்கால படங்களாகட்டும், கமலின் உழைப்பையும் ஈடுபாட்டையும் கண்டு பிரமித்துப் போயிருக்கிறேன். கமலின் இயக்கத்தில் வந்த 'ஹேராம்' ஒரு காவியப்படமென்றே சொல்வேன்.

கமலின் survival-காக தசா.. போன்ற வணிகப்படங்களை எடுக்கட்டும். ஆட்சேபிக்கவில்லை. ஆனால் அவைகளை உலகத்தரமென்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு கொண்டாட முடியாது. அவரிடமிருந்து நான் எதிர்பார்ப்பது மேற்சொன்ன மாதிரியான படங்களைத்தான்.

காத்திருக்கிறேன்.....


suresh kannan

25 comments:

கோவி.கண்ணன் said...

மோசமான விளைவு ஏற்படுத்தும் கிரிமியை அசினுக்கு ஒரு அரையை விட்டு பிடுங்கி இருக்கலாம். அவ்வளவு முக்கியமான ஒன்றை ஒரு பெண்ணிடமிருந்து பறிப்பது வில்லன் கும்பலிடம் மோதுவதைவிட சிரமமான காரியமா ?

அதைப் போலவே கதையை நகர்த்துவதற்காவே ஒட்ட வைத்த காட்சிகள் படத்தில் நிறைய உண்டு.

நீங்கள் எழுதும் விமர்சனங்கள் தரமானவையாகவே இருக்கிறது

Anonymous said...

பேமானீ suresh kannan மூனு நாள பெட்ரோல் கிடைகில
இன்னும் என்டா தாசவதாரத்தை மயிரை புடுங்கிட்டு இருக்கர.

Daily many TV serical afficeted our people why you don't that topic??

thamizhparavai said...

//உங்களின் மொத்தபதிவும்//
ரிப்பீட்டேய்ய்ய்ய்..
தசாவதாரம் தாமதமாக(நேற்று) பார்த்தபின் விமர்சனப் பதிவிடத் தோன்றவில்லை.. ஆனால் நீங்கள் பதிவாக்கிவிட்டீர்கள் என் எண்ணங்களையும்..
இது ஒரு வணிகப்படமென்றாலும் கூட முன்பாதிப் படம்தான் ஓரளவிற்கு பொழுதைப் போக்கியது...பின்பாதி பொழுதை வீணடித்தது..(ஒருவேளை நம் முகத்திலறையும் ஒப்பனை இல்லாவிடில் ரசித்திருக்கத் தோன்றுமோ என்னவோ..?)
ப‌ல்ராம் நாயுடு... 'ப‌லே'ராம் நாயுடு...
க‌ம‌லின் தேவைய‌ற்ற‌ அவ‌தார‌ங்க‌ளில் ,த‌மிழில் எவ்வ‌ளவோ ந‌ல்ல‌ ந‌டிக‌ர்க‌ளை வைத்து பாத்திர‌ங்க‌ள் துல‌ங்க‌ச்செய்திருக்க‌லாம்.(பிர‌காஷ்ராஜ்,நாச‌ர்,வ‌டிவேலு இன்னும்பிற‌..இது வ‌ணிக‌ ம‌திப்பையும் உய‌ர்த்தி இருக்கும்)
பின்னணி இசை ம‌ட்டும‌ல்ல‌ பாட‌லின் இசையையும் தேவி சிரி பிர‌சாத்திட‌ம் ஒப்ப‌டைத்திருந்தால், ஓர‌ள‌வு ந‌ன்றாக‌ ப‌ண்ணி இருப்பார்.

ஹிமேஷ் அவ‌ர‌து இயல்பான‌ ச‌ன‌ம் ஓ ச‌ன‌ம் பாட‌லைக் கூட‌ சொத‌ப்பி இருக்கிறார்..
ம‌ல்லிகா ஷெராவ‌த் பாட‌லில் காட்சியில் ந‌ம‌க்கும்,இசைக்கு இடையில் பாட்டெழுதுவ‌தில் வைர‌முத்துவிற்கும் மூச்சுத் திணறிப் போகிற‌து.
(முகுந்தா பாட‌ல் ஓகே...)
ம‌ற்ற‌ப‌டி க‌ம‌ல் ம‌ற்றுமொரு முழுநீள காமெடி ப‌ட‌மே எடுக்க‌லாம்..
(விருமாண்டியின் ஆளுமையில் ப‌த்து ச‌த‌ம்தான் இந்த‌ த‌சாவ‌தார‌ம்)
ம‌ற்ற‌ப‌டி த‌சாவ‌தார‌த்தில் என்னைக் க‌வ‌ர்ந்த‌ அரிதார‌ம் பூசிய அழகிய(இன்னும்கூட)முக‌ம் 'ஜெய‌ப்ர‌தா'தான்..

thamizhparavai said...

//உங்களின் மொத்தபதிவும்//
ரிப்பீட்டேய்ய்ய்ய்..
தசாவதாரம் தாமதமாக(நேற்று) பார்த்தபின் விமர்சனப் பதிவிடத் தோன்றவில்லை.. ஆனால் நீங்கள் பதிவாக்கிவிட்டீர்கள் என் எண்ணங்களையும்..
இது ஒரு வணிகப்படமென்றாலும் கூட முன்பாதிப் படம்தான் ஓரளவிற்கு பொழுதைப் போக்கியது...பின்பாதி பொழுதை வீணடித்தது..(ஒருவேளை நம் முகத்திலறையும் ஒப்பனை இல்லாவிடில் ரசித்திருக்கத் தோன்றுமோ என்னவோ..?)
ப‌ல்ராம் நாயுடு... 'ப‌லே'ராம் நாயுடு...
க‌ம‌லின் தேவைய‌ற்ற‌ அவ‌தார‌ங்க‌ளில் ,த‌மிழில் எவ்வ‌ளவோ ந‌ல்ல‌ ந‌டிக‌ர்க‌ளை வைத்து பாத்திர‌ங்க‌ள் துல‌ங்க‌ச்செய்திருக்க‌லாம்.(பிர‌காஷ்ராஜ்,நாச‌ர்,வ‌டிவேலு இன்னும்பிற‌..இது வ‌ணிக‌ ம‌திப்பையும் உய‌ர்த்தி இருக்கும்)
பின்னணி இசை ம‌ட்டும‌ல்ல‌ பாட‌லின் இசையையும் தேவி சிரி பிர‌சாத்திட‌ம் ஒப்ப‌டைத்திருந்தால், ஓர‌ள‌வு ந‌ன்றாக‌ ப‌ண்ணி இருப்பார்.

ஹிமேஷ் அவ‌ர‌து இயல்பான‌ ச‌ன‌ம் ஓ ச‌ன‌ம் பாட‌லைக் கூட‌ சொத‌ப்பி இருக்கிறார்..
ம‌ல்லிகா ஷெராவ‌த் பாட‌லில் காட்சியில் ந‌ம‌க்கும்,இசைக்கு இடையில் பாட்டெழுதுவ‌தில் வைர‌முத்துவிற்கும் மூச்சுத் திணறிப் போகிற‌து.
(முகுந்தா பாட‌ல் ஓகே...)
ம‌ற்ற‌ப‌டி க‌ம‌ல் ம‌ற்றுமொரு முழுநீள காமெடி ப‌ட‌மே எடுக்க‌லாம்..
(விருமாண்டியின் ஆளுமையில் ப‌த்து ச‌த‌ம்தான் இந்த‌ த‌சாவ‌தார‌ம்)
ம‌ற்ற‌ப‌டி த‌சாவ‌தார‌த்தில் என்னைக் க‌வ‌ர்ந்த‌ அரிதார‌ம் பூசிய அழகிய(இன்னும்கூட)முக‌ம் 'ஜெய‌ப்ர‌தா'தான்..

Anonymous said...

ஈழத்திலும் உங்கள் கருத்தை ஒட்டிய விமர்சனங்கள்தான் பரவலாக உண்டு. " பிரமாண்டம்" என்பது தொழில்நுட்பம் மாத்திரம்தான் என்றால் தமிழ் சினிமா வளர்கின்றது.
இதற்காக 10 அவதாரம் கமலுக்குத் தேவைதானா?

சலங்கை ஒலியிலும், நாயகனிலும் ஒற்றையாக நின்ற கமல், இப்போது 10 அவதாரம் எடுத்தும் "பிரமாண்டமாகத்" தெரியவில்லை.

லக்கிலுக் said...

கமல் ரசிகர்களுக்கு (கவனிக்க இங்கே பெருமையோடு ரசிகர் என்கிறேன்) இந்தப் படம் செம ட்ரீட்!

உங்களை கவரவில்லை என்பது வருத்தத்தை :-) தருகிறது.

நான் மூன்றாவது முறையாக இந்தப் படத்தை பார்த்தபோது என்னோடு படம் பார்த்த நண்பர் ஒருவர் எங்கெல்லாம் ஓட்டை தெரிகிறது என்றே பார்த்துக் கொண்டிருந்தார். அதனால் படத்தில் என்ஜாய் செய்யக்கூடிய பலவிஷயங்களை அவர் கோட்டை விட்டுவிட்டார்.

பெருமாளே, பெருமாளே என்று கதறிக்கொண்டிருக்கும் அசின் பாத்திரம் எரிச்சல் தந்தாலும் அவரை காதலி, மனைவி என்று மற்றவர்கள் விளிக்கும்போது அழகாக கோபப்படுவார். அவரை கோவிந்து சமாளிக்கும் விதமும் ஜாலியாக இருக்கும்.

இன்னும் ரெண்டு மாசம் கழித்து பாருங்கள். ஒருவேளை உங்களுக்கு(ம்) பிடிக்கலாம்.

Anonymous said...

பெரிய புத்திசாலியாக இருப்பீர்கள் போலிருக்கிறதே

Anonymous said...

என்னப்பா உங்களோட பெரிய இதாப்போச்சு...

யோசிப்பவர் said...

//ஆனால் அவைகளை உலகத்தரமென்று நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு கொண்டாட முடியாது. //

Perfectly Right!!

//மோசமான விளைவு ஏற்படுத்தும் கிரிமியை அசினுக்கு ஒரு அரையை விட்டு பிடுங்கி இருக்கலாம். அவ்வளவு முக்கியமான ஒன்றை ஒரு பெண்ணிடமிருந்து பறிப்பது வில்லன் கும்பலிடம் மோதுவதைவிட சிரமமான காரியமா ?
//

ungalukku theriyuthu. govindhukku theriyalaiye!!

bala said...

//மோசமான விளைவு ஏற்படுத்தும் கிரிமியை அசினுக்கு ஒரு அரையை விட்டு பிடுங்கி இருக்கலாம். அவ்வளவு முக்கியமான ஒன்றை ஒரு பெண்ணிடமிருந்து பறிப்பது வில்லன் கும்பலிடம் மோதுவதைவிட சிரமமான காரியமா ?//


சுரேஷ் கண்ணன் அய்யா,
சரியா சொன்னீங்க.அதுவும் அக்ரகார பென்ணிடமிருந்து.ஆனால் இதில் உள்ள நுண்ணரசியலை புரிஞ்சிக்காம சொல்லியிருக்கீங்க.கதைப் படி இந்த அவதாரம் ஒரு க்ரீமி லேயர் ஓ பி ஸி அவதாரம்.இட ஒதுக்கீட்டின் மூலம் அமெரிக்காவின் டாப் லேப்ல வேலை பார்த்தாலும் க்ரீமி லேயர் ஓ பி சி க்கு I Q மிகவும் குறைவு என்பது போல் காட்டி கமல் தான் ஒரு அப்பட்டமான பகுத்தறிவு பார்ப்பனீயவாதி என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்.இதைவிட சோகம் என்னன்னா நம்ம மானமிகு கருப்பு சட்டையும்,மஞ்ச துண்டு அய்யாவும் கமலின் சமூக நீதிக்கெதிரான நிலைப்பாட்டை கண்டு கொள்ளாமல் அவருக்கு ஜல்லி அடித்தது தான்.எங்கே போகிறது திராவிடம்?

பாலா

Samuthra Senthil said...

//இப்படி ஒரு கோமாளி, 'ரா'பிரிவின் தலைவராக இருப்பார் என்கிற கேள்வி எழுகிறது.//


:-X

மயிலாடுதுறை சிவா said...

மிகச் சரி சுரேஷ் கண்ணன்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்று இருந்ததால் இந்த படம் எனக்கு பெரிய ஏமாற்றத்தை தரவில்லை. அதே சமயத்தில் "இது உலகதரம்" என்று சொல்வதுதான் வேடிக்கை!

மயிலாடுதுறை சிவா...

Anonymous said...

//இதைவிட சோகம் என்னன்னா நம்ம மானமிகு கருப்பு சட்டையும்,மஞ்ச துண்டு அய்யாவும் கமலின் சமூக நீதிக்கெதிரான நிலைப்பாட்டை கண்டு கொள்ளாமல் அவருக்கு ஜல்லி அடித்தது தான்.எங்கே போகிறது திராவிடம்?//

ஐயா பாலா,

மானமிகுவும்,மஞ்ச துண்டும் எப்படி நுண்ணரிசயலை புரிஞ்சிப்பாங்க?அவங்க தான் மெகா க்ரீமி லேயர் ஓ பி சி ஆயிற்றே.அவங்க I Q மட்டும் அதிகமா இருக்குமா என்ன?

ஜோ/Joe said...

நல்ல வேளை உங்களுக்கு பிடிக்கவில்லை ..இல்லையென்றால் இந்த மாபெரும் வெற்றி சாத்தியமாயிருக்காது :))

rajkumar said...

டிபிகல் சுரேஷ் கண்ணன் விமர்சனம்.
ஆனால் எனக்கு இப்படம் சுவாரஸ்யமாக இருந்தது.

ரஜினி ரசிகர்களுக்கு ஈடு கொடுக்கும் மூடத்தனமான கமல் ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பதை இணையத்தில் வந்திருக்கும் பல விமர்சனங்களும், எதிர்வினைகளும் எடுத்துக் காட்டுகின்றனர்.

ரஜினி மோகத்தால் திரைப்படக் கலை வளரவில்லை என்ற உங்கள் ஆதங்கத்தில் மறுக்கமுடியாத சில உண்மைகள் உண்டு. அதே போல்தான் அதீத கமல் மோகமும் பல நல்ல வளரும் கலைஞர்களை புறக்கணிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

கலைஞர் டிவியில் தசாவதார விளம்பர நிகழ்ச்சி சுய தம்பட்ட சுனாமி.திரைப்படத்துறையின் முன்னேற்ற பாதைக்கு சினிமா ஆர்வலர்கள் புதியவர்களைத்தான் நாட வேண்டும்.

கதாநாயகனை பிரதானமாக்காமல், கதையை பிரதானமாக்கும் மறுமலர்ச்சிக்கு இனி கமலை நம்பியும் பிரோயசனமில்லை.

வானம்பாடி said...

@ஜோ, :D

Anonymous said...

கிழவனான நாகேஸ் வத வத பிள்ளைகள். ஜனத்தொகை பெருகி வரும் நிலையிலும் புத்திகெட்ட இனத்தின் செயல்பாடுகளையும் ஆங்காங்கே காட்டியுள்ளார்.

காலி புல்லா நன்றியுள்ளவர் போல், நல்லவர் போல் காட்டப்பட்டாலும், அடிப்படையில் மடயன் மாதிரி காட்டிவிட்டார்.

காலிபுல்லா பாத்திரமும், சீனாக்காரர் பாத்திரமும் அவசியமே இல்லாதவைகள்.

அமெரிக்காவில் விஞ்ஞானி என்றாலும், அங்கேயும் திருட்டுக் கும்மளாக இந்தியர்களே இருப்பதை இப்படம் தெளிவாக்கியுள்ளது. பணத்திற்காக எதையும் செய்பவன் இந்தியன் என்பதை இப்படம் காட்டியுள்ளது. தீவிரவாதியுடன் என்றாலும் கைக்கோர்த்துக்கொள்ளும் இந்திய அடிப்படைக் கொள்கையையும் காட்டுகிறது.

ஆனால் வெறுமனே இந்தியாவில் காண்போரையெல்லாம் தீவிரவாதி தீவிரவாதி எனும் பைத்தியக்காரத்தனத்தையும் இப்படம் வெளிப்படுத்துகிறது.

அது அமெரிக்க CIA என்றாலும் சரி, விஞ்ஞான கமல் என்றாலும் சரி, முஸ்லீம் கமல் என்றாலும் சரி, எல்லோரையும் நாயுடு தீவிரவாதி தீவிரவாதி என்று எந்த ஆய்வும் இன்றி மனம் போனபோக்கில் கூறும் இந்தியாவின் அடிப்பட்ட மடமையையும் இந்த படம் காட்டியுள்ளது.

எப்படியோ கமல் சில இடங்களில் சில வற்றை மறைமுகமாக சொல்லியுள்ளார்.

SMOKY said...

mr.criticizer..

this is ur hard try to show yourself as a good, standard critic.. dont show off like a GENIUS.. this is just a highest budget, little more advanced, masala tamil movie.. standards are decided by people.. not by some useless , time killing chair critics.. wat s ur qualification to criticise a great artist like Kamal?

you havent mentioned anything about his hardwork behind screen as a script writer and his sharp dialogues...

neeyellam oru blogger.. summa velaya paaruyya....

Anonymous said...

உங்கள் விமர்சனம் நன்றாகவே இருக்கிறது. கமலுக்கு ஒரு ராசி உண்டு. அதாவது அடுத்த படம் வெளியானபின் முந்தைய படம் தரமானது என ஒத்துக் கொள்ளப்படும். தசாவதாரத்தை விட அதிகமாய் விமர்சிக்கப்பட்ட படம் தான் விருமாண்டியும், ஹேராமும் என்பது நினைவில் இருக்கிறது.

தசாவதாரம் : பர்தாப் பெண்ணின் வெட்கம் என நான் ஒரு பதிவிட்டிருந்தேன். நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள்.

http://sirippu.wordpress.com/2008/06/23/dasavathaaram/

enRenRum-anbudan.BALA said...

Suresh kannan,

படம் இன்னும் பார்க்கவில்லை. நமது திரைப்படங்கள் மேல் பொதுவாக எனக்கு பெரிய "எதிர்பார்ப்பு" எதுவும் இல்லையென்றாலும், இதற்கு பில்டப் ரொம்ப அதிகம் தான்.

ஆனாலும், 'அன்பே சிவம்', 'மகாநதி' போன்ற படங்களைத் தந்தவர் / தரக்கூடியவர் கமல் மட்டுமே, மற்ற அனைவரும் ஹோப்லஸ் என்பது தான் யதார்த்தம்.

உங்கள் 'வித்தியாசமான' விமர்சனம் பிடித்திருந்தது ! சீரியஸாகத் தான் சொல்கிறேன். நன்றி.

எ.அ.பாலா

Vijay said...

எதிர்பார்ப்புகள் அதிகமாயிருக்கின்
ஏமாற்றம் தான் மிஞ்சும்

எல்லா மேட்சிலும் சச்சின் சதம் அடிக்கணும்னு எதிர்பார்க்க முடியுமா. அந்த மாதிரி தான் இதுவும். நீங்கள் இப்படத்தை ஹே ராம் அல்லது அன்பே சிவம் போன்ற படங்களோடு ஒப்பிடவே கூடாது. அப்படிப்பட்ட படங்கள் எடுத்த கமல் ஏன் இம்மாதிரி படம் எடுத்தார் என்று சொல்வதற்கு. நான் தசாவதாரத்தை இன்னும் ஒரு 2 தடவையாவது திரையரங்கில் போய் பார்க்கணும் என்று நினைத்திருக்கிறேன்.

Vijay said...

சேம் பிட்ச்...நான் நினைத்தவை அனைத்தும் உங்கள் பதிவில். வெல்செட்....

லேகா said...

கடந்த சனியன்று தான் இப்படம் பார்த்தேன்....ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்..ராவு..........!!!எப்போ படம் முடியும் என்று இருந்தது

Anonymous said...

orru kinathtulla frod etthumme, meella varramma mattha frog ellaam killa killa illukkumam...

adhdu madiri dhaan you people never let others move further by your creative reviews (u think u r so smart without being in their shoes..).

Anonymous said...

athu padama?