நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியை முன்னிட்டு புதிதாக வெளியிடப்பட்டுள்ள/படவுள்ள புத்தகங்களில் என் கண்ணில் பட்ட/கவனத்தை கவர்ந்த புத்தகங்களை - யாருக்காவது பயன்படும் என்கிற எண்ணத்தில் - இங்கே பகிர்ந்து கொள்ள உத்தேசம்.
1) காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - (மொழிபெயர்ப்பு நூல்) - பாரதி புத்தகாலயம்
2) பகத்சிங் பற்றிய முழுமையான பதிப்பு - பாரதி புத்தகாலயம்
3) அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் அணு ஒப்பந்தமும் - அ.மார்க்ஸ் - எதிர் வெளியீடு
4) அசோகவனம் - நாவல் - ஜெயமோகன் - தமிழினி
5) சூடியபூ சூடற்க - சிறுகதைகள் - நாஞ்சில் நாடன் - தமிழினி
6) உலக சிறுவர் திரைப்படங்கள் - விஸ்வாமித்திரன் - வம்சி புக்ஸ்
7) உயிர்த்தலம் - சிறுகதைகள் - ஆபிதீன் - எனிஇந்தியன்
8) நதியின் கரையில் - கட்டுரைகள் - பாவண்ணன் - எனிஇந்தியன்
9) பேசும் பொற்சித்திரம் - கட்டுரைகள் (திரைப்படம்) - அம்ஷன்குமார் - காலச்சுவடு
10) பேசும் படம் - கட்டுரைகள் (திரைப்படம்) - செழியன் - காலச்சுவடு
11) நினைவோடை: தி.ஜானகிராமன் - சுந்தரராமசாமி - காலச்சுவடு
12) போரின் மறுபக்கம் (ஈழஅகதியின் அனுபவங்கள்) - பத்திநாதன் - காலச்சுவடு
13) நினைவலைகள்: அம்பேத்கர் (தொகுப்பு: அழகிய பெரியவன்) - நியூ செஞ்சுரி
14) உலகமயமாக்கல்: இந்திய இறையாண்மையின் மீது ஒரு தாக்குதல் - அரவிந்த் - விடியல்
15) உலகமயமாக்கல் - மிகச்சுருக்கமான அறிமுகம் - மான்·பிரெட் பி.ஸ்டெகர் - அடையாளம்
16) யாமம் - நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
17) மரம் - நாவல் - ஜீ.முருகன் - உயிர்மை
18) காலத்தின் கலைஞன் - மணா - உயிர்மை
19) மணற்கேணி - குறுங்கதைகள் - யுவன் சந்திரசேகர் - உயிர்மை
20) எம்.ஆர்.ராதா: திரைக்கடலில் ஒரு தனிக்கலைஞன் - கிழக்கு
21) நான் வித்யா - ஒரு திருநங்கையின் வலிமிகுந்த வாழ்க்கை - கிழக்கு
22) எல்.டி.டி.ஈ. - விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறு - கிழக்கு
(புத்தகங்களின் விவரம் பெரும்பான்மையாக கிடைக்கும் பட்சத்தில் இந்தப் பட்டியல் நீளக்கூடும்)
()
ஆனால் நான் எந்தப் புத்தத்தையும் வாங்கப் போவதில்லை. ஏனெனில்:
1) முந்தைய, அதற்கும் முந்தைய, அதற்கும் மு...ந்தைய கண்காட்சிகளில் வாங்கின புத்தகங்களே இன்னும் படிக்கப்படாமல் என்னுள் குற்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும்...
2) அதிக விலை கொடுத்து வாங்கின புத்தகம், நூல்நிலையத்தில் கண்ணில் படும் போது .. புத்தகத்திற்குப் பதிலாக மகளின் ஒரு மாத பள்ளிக்கூட கட்டணத்தை செலுத்தியிருக்கலாம் என்றோ அவள் அடம்பிடித்தும் மறுக்கப்பட்ட உடையை வாங்கித் தந்திருக்கலாம் என்றோ, ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்து தகப்பனாக யோசிப்பதும்....
3) பரணையிலும், அலமாரிகளிலும், கட்டில் மீதும், தரையிலும் அகதிகள் மாதிரி பரந்து இறைந்திருக்கிற புத்தகங்கள், ஒரு வேளை நான் தீடீரென்று செத்துப் போய்விட்டால் என்ன ஆகும் என்று அடிக்கடி தோன்றுவதும்...
4) "·பிளைட் எப்படி பறக்குது'ன்னு கேட்டா அதுக்கு விடை தெரில. ஆனா எப்பப் பார்த்தாலும் என்னத்தையோ படிச்சிட்டே இருக்கீங்க. என்கூட கொஞ்ச நேரம் விளையாடமில்லையா?" என்று அடிக்கடி என்னுடைய ஏழு வயது மகள் கேட்க ஆரம்பித்திருப்பதாலும்....
5) மாதா மாதம் வாங்குகிற வார/மாத இதழ்கள், கன்னிமரா/தேவநேய பாவாண நூல்நிலையங்களிலிருந்து கொண்டுவரும் புத்தகங்களை படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதற்கே பெரும்பாடாய் இருப்பதாலும்....
இனிமேல் புதிதாய் எந்தப் புத்தகத்தையும் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். ஆனால்... போன வருடமும் இதே மாதிரி ஒரு பதிவு எழுதிவிட்டு, கண்காட்சிக்கு போனபிறகு ஆவல் தாங்காமல் சில புத்தகங்களை வாங்கின நினைவிருக்கிறது.
ஆகவே....
5 comments:
Nandri ungal pathivukku. Engu nadakka pogirathu kankaatchi...
நன்றி உங்கள் பதிவுக்கு. எங்கு நடக்க போகிறது கண்காட்சி...
நீங்கள் கீழே கூறி இருந்த உன்மைகள் நிஜமானவை... நானும் உங்களை போலவே படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள் ஏராளம்.
என்ன தான் சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்தாலும் அம்மா சாப்பிடும் போது ஒரு வாய் வாங்கி கொன்டால் நன்றாய் இருக்கும் இல்லையா... அது போல புத்தகம் வாங்குவதையும் நிறுத்த முடிவது இல்லை.
"·பிளைட் எப்படி பறக்குது'ன்னு கேட்டா அதுக்கு விடை தெரில. ஆனா எப்பப் பார்த்தாலும் என்னத்தையோ படிச்சிட்டே இருக்கீங்க. என்கூட கொஞ்ச நேரம் விளையாடமில்லையா?" என்று அடிக்கடி என்னுடைய ஏழு வயது மகள் கேட்க ஆரம்பித்திருப்பதாலும்....
true.spending time with a child is
much better than reading.You can
read a book any time but the time
you spend with a child when (s)he
is growing wont come again. I see
no point in buying more books when
there are more pressing needs in
terms of money and time.
//வாங்கின புத்தகங்களே இன்னும் படிக்கப்படாமல் என்னுள் குற்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும்...//
நாமதான் இப்படின்னு நெனச்சா, நம்மைப் போல நிறையப் பேர் இருக்காங்க.
:)
நன்றி
I have been there. Welcome to the real world and stay here. Reading is a good habit. But reading and more importantly, bragging about it should not reach an obsessive level. It is not worth unless you do it as a part of your profession or business. It is also true with internet and blogging. Doing it for the called 'aatham thirupthi' is bullshit. It is done for instant gratification and scratch the ego.
A well wisher.
Post a Comment