2018-ம் ஆண்டு
புத்தக கண்காட்சியில் இரு முறைகளாக சென்று வாங்கிய புத்தகங்களின் பட்டியல் இது. இதை
சாத்தியப்படுத்துவற்கு சில நல்ல உள்ளங்கள் நிதியுதவி செய்திருக்கின்றனர். இந்த நூற்களோடு
அவர்களின் நினைவும் பிரியமும் உறைந்திருக்கும். ‘நீ உண்ணும் உணவில் உன் பெயர் எழுதப்பட்டிருக்கும்’
எனும் பொன்மொழி போல இந்த நூல்களின் மேல் அவர்களின் பெயர்களும் அரூபமாக எழுதப்பட்டிருக்கும்.
என்னதான் முன்கூட்டியே
திட்டமிட்டு சென்றாலும் இது போன்ற கண்காட்சிகளில் புத்தகங்களை தேர்வு செய்வதென்பது
பெரும்பாலும் தற்செயலே என்பது என் தனிப்பட்ட அனுபவம். அந்த நேரத்து மனநிலையும், நூலின்
கவர்ச்சியான வடிவமைப்புகளும் தலைப்பும், சல்லிசான விலையும் எப்போதோ வாசித்திருந்த
பரிந்துரைகளின் நினைவுகளும், சில தனிப்பட்ட ஆர்வங்களும், நிர்ப்பந்தங்களும் என்று பல விஷயங்கள் கூட்டாக இந்தத் தேர்வை செயல்படுத்துகின்றன
என்று நினைக்கிறேன்.
“இன்னும் ஒண்ணும்மா.
ப்ளீஸ்.’ என்று தீராத ஏக்கத்துடன் ஐஸ்கிரீம் கடையை திரும்பிப் பார்த்துக் கொண்டே
இழுத்துச் செல்லப்படும் சிறுவனைப் போலவேதான் ஒவ்வொரு முறையும் புத்தக கண்காட்சி அரங்கிலிருந்து திரும்புவேன்.
எனவே இந்தப் பட்டியல் மிக சொற்பமானதே. வாங்க விரும்பும், உத்சேத்திருக்கும் பட்டியல்
இன்னமும் நீண்டது. எனவே இது இறுதியானதல்ல.
இந்த நூல்களின்
சில பக்கங்களையாவது தினமும் வாசித்து விடுவது என்கிற உறுதியில் இருக்கிறேன். வெறுமனே
வாசிப்பது மட்டுமல்ல, அவற்றின் நேர்மறையான கருத்துகள், என் மனதின் உள்ளே வர அனுமதிப்பதும்,
வாழ்நாள் முழுவதும் அவற்றைப் பின்பற்ற முயற்சிப்பதும்தான் இந்த வாசிப்பின் நிகர
பயனாக இருக்க முடியும் என நம்புகிறேன்.
கடந்த சில வருடங்களாக, என்னுடைய கவனம் புனைவுகளிலிருந்து சற்று விலகி அபுனைவுகளின் பக்கம் அதிகம் திரும்பத் துவங்கியிருக்கிறது என்பதை எனக்கே ரகசியமான பெருமையைத் தரும் வளர்ச்சியாக கருதுகிறேன்.
இனி பட்டியல்.
**
1)
காவேரியின்
பூர்வகாதை – கோணங்கி – டிஸ்கவரி
2)
தமிழக
வரலாற்றில் தரங்கம்பாடி – ஆ.சிவசுப்பிரமணியன் – NCBH
3)
சந்நியாசமும்
தீண்டாமையும் – ராமானுஜம் – மாற்று
4)
நாவல்
எனும் பெருங்களம் – அ.ராமசாமி – நற்றிணை
5)
அடித்தள
மக்கள் வரலாறு - ஆ.சிவசுப்பிரமணியன் – NCBH
6)
வழித்தடங்கள்
– தொ.பரமசிவன் – மணி பதிப்பகம்
7)
தொல்லிசைச்
சுவடுகள் – நா.மம்மது – வம்சி
8) சில
பொழுதுகள் சில நினைவுகள் – பாவண்ணன் – வெங்கட்சுவாமிநாதனைப் பற்றியது – சந்தியா பதிப்பகம்
9)
தென்னிந்திய
குலங்களும் குடிகளும் – ந.சி.கந்தையா பிள்ளை - சந்தியா பதிப்பகம்
10) இந்தியா என்கிற கருத்தாக்கம் – சுனில் கில்நானி
- சந்தியா பதிப்பகம்
11) இந்தியாவின் இருண்ட காலம் – சசிதரூர் – கிழக்கு
12) ஊழல் – உளவு – அரசியல் – சவுக்கு சங்கர்
– கிழக்கு
13) இசைக்கச் செய்யும் இசை – கருந்தேள் ராஜேஷ்
– வாசகசாலை
14) கவிதை – ஓவியம் – சிற்பம் – சினிமா – இந்திரன்
– டிஸ்கவரி
15) தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டல் – டி.செளந்தர்
– டிஸ்கவரி
16) திரை இசைத் திலகங்கள் – வி.ராமமூர்த்தி
- சந்தியா பதிப்பகம்
17) பயாஸ்கோப் – கிருஷ்ண்ன் வெங்கடாசலம் - சந்தியா
பதிப்பகம்
18) தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் – ந.முருகேச
பாண்டியன் –டிஸ்கவரி
19) தமிழ் சினிமா – சில குறிப்புகள் – பி.எல்.ராஜேந்திரன்
– சிக்ஸ்சென்ஸ்
20) திரைக்கதை உருவமும் உள்ளடக்கமும் – கே.ராஜேஷ்வர்
– புளூ ஓசன்
21) படைத்தவன் மற்றும் எனது வளர்ப்பு மீன்கள்
– ஷங்கர் ராமசுப்பிரமணியன் – டிஸ்கவரி
22) மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு – யமுனா
ராஜேந்திரன் – டிஸ்கவரி
23) என் கதை – சார்லி சாப்ளின் – யூமா வாசுகி
– NCBH
24) காட்சிகளுக்கு அப்பால் – எஸ்.ரா – தேசாந்திரி
25) இடக்கை – எஸ்.ரா. – தேசாந்திரி
26) நாவலெனும் சிம்பொனி - எஸ்.ரா. – தேசாந்திரி
27) உலகை வாசிப்போம் - எஸ்.ரா. – தேசாந்திரி
28) எழுக நீ புலவன் – ஆ.இரா.வேங்கடாசலபதி – காலச்சுவடு
29) நாவலும் வாசிப்பும் - ஆ.இரா.வேங்கடாசலபதி
– காலச்சுவடு
30) ஆஷ் அடிச்சுவட்டில் - ஆ.இரா.வேங்கடாசலபதி
– காலச்சுவடு
31) பாரதி கவிஞனும் காப்புரிமையும் - ஆ.இரா.வேங்கடாசலபதி
– காலச்சுவடு
32) முச்சந்தி இலக்கியம் - ஆ.இரா.வேங்கடாசலபதி
– காலச்சுவடு
33) அந்தக்காலத்தில் காப்பி இல்லை - ஆ.இரா.வேங்கடாசலபதி
– காலச்சுவடு
34) தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் – மாரி
செல்வராஜ் – வம்சி
35) தலித்தியமும் உலக முதலாளியமும் – எஸ்.வி.ராஜதுரை - NCBH
36) சிந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை – சுகுணா
திவாகர் – எதிர் வெளியீடு
37) செவ்வி – தொ.பரமசிவன் நேர்காணல்கள்- கலப்பை
பதிப்பகம்
38) உரைகல் - தொ.பரமசிவன் - கலப்பை பதிப்பகம்
39) தமிழ் நவீனமயமாக்கம் – க.இராசாராம் – காலச்சுவடு
40) ஜெயலலிதா – மனமும் மாயையும் – வாஸந்தி –
காலச்சுவடு
41) தமிழக அரசியல் – காலச்சுவடு கட்டுரைகள்
42) மொழி பெயர்ப்புப் பார்வைகள் - க.இராசாராம்
– காலச்சுவடு
43) முகங்களின் தேசம் – ஜெயமோகன் – சூரியன்
பதிப்பகம்
44) வெண்கடல் – ஜெயமோகன் – வம்சி
45) சொல்லி முடியாதவை – ஜெயமோகன் – நற்றிணை
46) நாளும் பொழுதும் - ஜெயமோகன் – நற்றிணை
47) கலாச்சார இந்து - ஜெயமோகன் – நற்றிணை
48) உச்ச வழு (சிறுகதைகள்) - ஜெயமோகன் – நற்றிணை
49) வலசைப் பறவை - ஜெயமோகன் – நற்றிணை
50) இன்றைய காந்தி - ஜெயமோகன் – தமிழினி
51) தனிக்குரல் - ஜெயமோகன் – கிழக்கு
52) மிளர்கல் – இரா.முருகவேள் – பொன்னுலகம்
53) நாடோடித் தடம் - ராஜசுந்தர்ராஜன் – வாசகசாலை
54) கொல்லனின் ஆறு பெண்மக்கள் – கோணங்கி –
பாரதி பதிப்பகம்
55) சில செய்திகள் சில படிமங்கள் – கலாப்ரியா
– சந்தியா
56) அழகிய லம்பன் – எழில்வரதன் – சந்தியா
57) நான் வடசென்னைக்காரன் – பாக்கியம் சங்கர்
– பாதரசம்
58) காற்று வளையம் – பாஸ்கர் சக்தி – டிஸ்கவரி
59) இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும்
– ஆர்.சிவகுமார் – பாதரசம்
60) நடைவெளிப்பயணம் – அசோகமித்திரன் – சூரியன்
பதிப்பகம்
61) பதேர் பாஞ்சாலி – விபூதிபூஷண பந்தயோபாத்யாய்
– மாற்று
62) உயிர்காக்கும் உணவு நூல் – மயிலை சீனி. வேங்கடசாமி
– சந்தியா
63) மறைந்து திரியும் நீரோடை – கலாப்ரியா –
சந்தியா
64) கூண்டுப்பறவையின் தனித்த பாடல் – கவிதா முரளிதரன்
– டிஸ்கவரி
65) வல்விருந்து – நாஞ்சில்நாடன் – தமிழினி
66) 1084-ன் அம்மா – மகாஸ்வேதா தேவி – பரிசல்
67) பெருவலி – சுகுமாரன் – காலச்சுவடு
68) தெற்கிலிருந்து ஒரு சூரியன் – தி இந்து
69) அயல்சினிமா (ஜனவரி 2018 இதழ்)
70) நம் நற்றிணை (ஜனவரி – மார்ச் 2018 இதழ்)
71) இடைவெளி (இதழ் 3) ஜனவரி 2018
72) பெரியார் இன்றும் என்றும் – விடியல் பதிப்பகம்
No comments:
Post a Comment