எச்சரிக்கை: பசு வதையைப் பற்றிய வீடியோ. மிகக் குரூரமாக உள்ளது. இளகிய மனம்
கொண்டவர்கள் பார்க்க வேண்டாம். குழந்தைகளைப் பார்க்க அனுமதிக்காதீர்கள்.
ஹரன் பிரசன்னா பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட இந்த வீடியோவினால் மனச்சாட்சி உசுப்பப்பட்டு நேற்றிரவு தூக்கத்தையும் நிம்மதியையும் இழந்தேன். அடிமாடுகளாக கேரளாவிற்கு கொடுமையாக கடத்தப்படும் பசுக்களைப் பற்றி அச்சு ஊடகங்களில் வாசித்திருக்கிறேன் என்றாலும் அவை குரூரமாக கொல்லப்படுவதை காட்சி ஊடகமாக பார்க்க் நேர்ந்தது இதுவே முதன்முறை.
நான் மிதமான அசைவ உணவுப்பழக்கத்தைக் கொண்டவன். என்றாலும் அசைவ உணவை நான் எந்த வகையிலும் நியாயப்படுத்தவே மாட்டேன். இதை விவாதித்து நிறுவ முடியாது. அவரவர் மனச்சாட்சிக்கு உண்டான விஷயம். அசைவ உணவு உண்ணும் வழக்கத்தில் உள்ள சமூகத்தில் பிறந்ததன் காரணத்தினாலேயே அதை நியாயப்படுத்துவது முறையல்ல. பிற உயிர்களைக் கொன்று வாழ நேரும் விலங்குகள் கூட தம்முடைய இரை மிகவும் துன்புறாதவாறு சில இயற்கையான நெறிமுறைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால் மனிதன் எத்தனை கொடூரமான விலங்கு என்பதை இந்த வீடியோவைப் பார்த்தால் உணரலாம். ஆனால் துன்புறுத்தாதவாறு விலங்குகளைக் கொல்வதின் மூலமும் கூட இதை நியாயப்படுத்தி விட முடியாது என்பதையும் இணைத்து யோசிக்க வேண்டியுள்ளது.
எல்லா உயிர்களும் இந்த உலகில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையுள்ளது. 'வலிமையுள்ளது எஞ்சும்' என்கிற கருத்து யதார்த்த உண்மை என்றாலும் ஒரு நாகரிக சமூகம் மற்ற உயிர்களை துன்புறுத்தாத, வாழ அனுமதிக்கிற சூழலுக்குத்தான் நகர வேண்டும். கொசு, மூட்டைப் பூச்சியையெல்லாம் நாம் சாகடிப்பதில்லையா? என்று சிலர் புத்திசாலித்தனமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு அசட்டுத்தனமாக விவாதிப்பார்கள். நம்மைத் துன்புறுத்துவதால் நோய்களைப் பரப்புவதால் தற்காப்பிற்காக, சைவ உணவு அமையாத சூழலில், வேறு வழியில்லாமல் கொல்வது என்பது வேறு. ஆனால் மாற்று உணவிற்காக, அதன் சுவைக்காக, வேட்டையாடுவதின் மகிழ்ச்சிக்காக, ஒரு உயிரைக் கொல்வதின் மூலம் கிடைக்கும் குரூர இன்பத்திற்காக சக உயிர்களைக் கொல்வது முறையற்றது.
இந்த வீடியோ பசுவதை தொடர்பானது என்பதால் இதை இந்துத்துவ அரசியலோடு பொருத்திப் பார்க்க வேண்டாம். என்னளவில் நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. மனிதனின் பேராசைக்காக கொல்லப்படும் அத்தனை அப்பாவி உயிரினங்களுக்கும் இந்த வார்த்தைகள் பொருந்தும்.
அசைவ உணவை கைவிட வேண்டும் என்கிற தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியது இந்த வீடியோ. இந்தக் கொடுமைகள் ஏற்கெனவே நாமறிந்தவைதான் என்றாலும் ஏதாவது ஒரு புள்ளியில், பிரேக்கிங் பாயிண்டில்தானே சில முடிவுகள் நிகழும். அப்படியொன்றாக இந்த வீடியோவைப் பார்க்கிறேன்.
suresh kannan
6 comments:
இந்த வீடியோவை நான் நேற்று பார்த்ததில் இருந்து உங்களின் மனநிலையோடு தான் இருக்கின்றேன். இன்னும் என் நெற்றிப் பொட்டில் அந்த வலியை உணர்ந்து கொண்டேயிருக்கிறேன். பகிர்விற்கு நன்றி.
அடுத்து என்ன? மதுவும், மாதுவுமா?
Cows are no different than goats, lamb, fish and chicken.
Have you seen how goats are slaughtered? It is no different than cow slaughter (excepting for the hammering part). The animals go through a slow, painful dying process.
Chicken are transported in the most inhumane manner - bunched up and tied upside down in bicycles, thrown into a van - as if they are already lifeless.
Just look into their eyes for one minute and you will see the life and its pain.
Fish - taken out of water and suffocated to death.
At the time of death, the animals go through enormous amount of stress and their blood is full of hormones that deal with stress - adrenaline/epinephrine etc.
The eaters of the meat will also go through the same stressful process later on.
Please stop eating non-veg for your own sake!!
பால் எப்படி கறக்க படுகிறது என்று பார்த்திருக்கிறீர்களா சார்
குட்டி பிறந்தவுடன் ஆன் குட்டியாக இருந்தால் விற்று விட்டு வைக்கோலை வைத்து போலியாக குட்டியை செய்து ,ஊசி போட்டு கறப்பார்கள்
பெண் கன்றாக இருந்தால் சில வினாடிகள் மடியை நாக்கால் தடவ விட்டு வேகமாக பிடித்து இழுப்பார்கள் .இந்த பிரிவால் தாயும் கன்றும் துடிக்க துடிக்க கத்தும் போது தான் பால் கறப்பார்கள்
நம் உடைகள்,மருந்துகள்,ஆயுதங்கள்,எண்ணெய் ,எரி சக்தி,கை பேசி ,கட்டிடங்களுக்காக நாம் கொல்லும் விலங்குகள் நாம் உண்பதனால் கொல்வதை விட பல ஆயிரம் மடங்கு அதிகம்
ஒழுங்கான முறையில் உணவாக உட்கொள்ளப்படும் விலங்குகளை மாமிச உணவாக ஆக்க வேண்டும் என்று கோருவதில் எந்த எதிர்கருத்தும் வராது.ஆனால் சைவம் சிறந்தது என்ற பிரசாரத்திற்கு கை பேசி வைத்து கொண்டு,பட்டு புடவை கட்டி கொண்டு,முடி வளர பல ஆயிரம் விலங்குகளின் மேல் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர்கள் குதிப்பது சரியா
Pls watch this documentary Earthlings http://www.youtube.com/watch?v=ce4DJh-L7Ys to understand the holistic view of veganism that says "Promoting ways of living free from animal products for the benefit of animals, people and environment"
Checkout other vegan resources
1. www.vegankit.com
2. http://thevegantruth.blogspot.com/
3. My journey from Non-vegetarian to vegetarian to vegan
http://regug.blogspot.com/2011/09/from-non-vegetarian-to-vegetarian-to.html
Greenhouse gas emission from dairy/meat industry is 15-30% higher than the entire road/rail/sea/air transport industry....
Everyone knows driving an SUV or leaving the lights on is bad for the earth. But when it comes to your environmental impact, what's on your plate is just as important.
http://prospect.org/article/are-cows-worse-cars
Post a Comment