Monday, January 17, 2011

விஜய் டிவியில் 'ஒரே கடல்' மாலை 04.00 மணிக்கு

முன்பு 'அக்ரஹாரத்தில் கழுதை'  என்கிற ஜான் ஆபிரகாமின் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்போவதை அறிந்த போது மிகுந்த பரவசத்துடன் அதை இங்கு பகிர்ந்து கொண்டேன். ஆனால் கழுதை மிகப் பலமாக என்னை உதைத்ததில் ஜெயமோகன் ஆபிதின் உட்பட பலர் மகிழ்ச்சியடைந்தார்கள். இந்த முறை அது நடக்காது. ஏனெனில் முந்தைய படத்தை நான் பார்க்காமலிருந்ததால் அந்த விபத்து நிகழ்ந்தது.


விஜய் டிவியில் இன்று (17.01.2011) மாலை 04.00 மணிக்கு (இந்திய நேரப்படி) ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் 'ஒரே கடல்' (2007) என்னும் மலையாளத் திரைப்படம் (தமிழ் டப்பிங்கில்) ஒளிபரப்பாகிறது. மம்முட்டி, மீரா ஜாஸ்மின், நரேன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். லோக் சபா தொலைக்காட்சியில் இதை முதன் முறையாக பார்த்த போது இந்தியத் திரைப்படங்களில் இப்படிக்கூட முதிர்ச்சியான படைப்புகள் உருவாக சாத்தியமுள்ளதா என அதிசயத்துப் போனேன். சுவாரசியம் கருதி இந்தப் படத்தைப் பற்றி எதையும் எழுத மாட்டேன். பாலியல் சார்ந்த உறவை காட்சி ஊடகத்தில் இத்தனை நுட்பமாக, முதிர்ச்சியாக  வெளிப்படுத்த முடியுமா என்று இன்னும் பிரமிப்பாகவே உள்ளது. மம்முட்டி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லையென்றாலும் மீரா ஜாஸ்மினும் அதற்கு ஈடுகொடுத்திருப்பதுதான் ஆச்சரியம்.

கலாசார காவலர்களும் கற்பு போன்ற கற்பிதங்கள் குறித்து இன்னும் ஒட்டடை படிந்த சிந்தனைகளை சுமந்திருக்கும் பழமைவாதிகளும் இந்தப் படத்தை தவிர்ப்பது நன்று. இது முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கானது என்பதை அடிக்கோடிட்டு சொல்ல விரும்புகிறேன்.

இதுவரை இத்திரைப்படத்தை பார்க்காதவர்கள், இதை தவறவிடாமல் பார்க்க வேண்டுகிறேன். திரைப்படங்களில் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களிடமும் இதை பகிரவும் பிறகு பின்னுட்டத்தில் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும் வேண்டுகிறேன்.

(தொலைக்காட்சி ஒளிபரப்பு நேரத்தை சரிபார்த்துக் கொள்ளவும்).
http://app.indya.com/epg/asp/displaySchedules.asp?ddChannelName=starvijay

suresh kannan

6 comments:

CS. Mohan Kumar said...

அலுவலகம் இருக்கும் போது போடுறாங்களே! மறுபடி போட்டா பாக்கணும் !

PB Raj said...

போன வாரமே பார்த்துவிட்டேன் சிங்கபூர் விஜய் டிவில் தமிழ்லில் இது மாதிரி படம் எடுக்க வாய்ப்பு இல்லை...

அருண்மொழிவர்மன் said...

இங்கே கனடாவில் தமிழ் மொழிபெயர்ப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது. முன்னர் மலையாள மூலத்திலும் பின்னர் தமிழிலுமாக இரண்டுமுறை பார்த்து இருக்கின்றேன். படம் பிடித்திருந்தது என்றே சொல்லவேண்டும். படம் மலையாளத்தில் வெளியான காலத்திலேயே கானா பிரபா இது பற்றி ஒரு பகிர்வை செய்திருக்கின்றார்

http://kanapraba.blogspot.com/2008/05/blog-post.html

Ram said...

ஆஹா.. எங்க வீட்ல விஜய் டிவி எடுக்காதே.!!!

Anonymous said...

All the actors justify their character in the movie. But, the big loophole in the movie is the developing love/lust between mira and mammootty. They show mira more like a prostitute than a crazy lover. If there is any solid reason between their love and lust, the movie easily could have been a wonderful to watch. I recommend you to watch a korean movie "A frozen flower" and want to see your review.

Rajan

உதிரச்சூடு said...

.... நான் இந்த பக்கத்திற்கு புதியவன் .. அருமையான திரைக்காவியம் நண்பரே. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் இத்திரைபடத்தை பார்த்து இருக்கிறேன் .. அதன் யதார்த்தமும் ,கவிதுவார்தமும் என்னை பிரமிக்கவைத்தது . அப்பொழுதே ஓர்குட் இணைய தலத்தில் ஒரு கருத்து கட்டுரையும் எழுதி இருந்தேன் . அதன் இறுதி காட்சி சமூக கட்டமைப்பின் சாரத்தை உடைத்து பார்த்தது என்றாலும் . கற்பென்பது பெண்ணிற்க்கானது மட்டும் அல்ல அது மொத்த சமூகதிர்க்குமனது என்ற என் எண்ண கோட்ப்பாட்டின் படி , நம் சமூக தளத்திலோ அல்லது குடும்ப அமைப்பிலோ அதை அனுமதிக்கும் மனப்பாங்கு சாமான்யனாய் வாழும் எனக்கு வரவில்லை ..