லெனின் விருது
இயக்குனர் பீம்சிங் அவர்களின் மகனான படத்தொகுப்பாளர் திரு. பி. லெனின் அவர்கள் தமிழின் மிக முக்கியமான படத்தொகுப்பாளர்.
மிக உச்சத்தில் இருக்கும்போதே படத்தொகுப்பு வேலைகளை குறைத்துக் கொண்டு குறும்படத் துறையில் தனது கவனத்தை திசை திருப்பினார். மேலும், தமிழில் குறும்படங்களுக்கான ஒரு அலையை தோற்றுவித்தார். இவர் இயக்கிய "நாக் அவுட்" என்கிற குறும்படம்தான் தமிழில் முதலில் திரைப்படக் கல்லூரி மாணவர் அல்லாத ஒருவர் எடுத்த குறும்படமாகும். இக்குறும்படம் இவருக்கு தேசிய விருதையும் பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து குறும்படங்களுக்காக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இவர் செலவழித்து வருகிறார். குறும்படங்கள் சார்ந்து கிராமப் புற மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்தல், அவர்களை குறும்படம் எடுக்க ஊக்குவித்தல் என பல பணிகளை செய்து வருகிறார். மேலும் யாருமே செய்யத் துணியாத பணியாக தனது ஸ்டுடியோவில் குறும்படங்களுக்கு இலவசமாக படத்தொகுப்பை செய்து வருகிறார்.
குறும்படங்கள் சார்ந்து பலருக்கும் உதவி செய்து வருகிறார். தனது பணியைக் கூட அவ்வளவாக கவனிக்காமல் குறும்படங்களுக்காக தொடர்ந்து போராடும் இவர், குறும்படங்களுக்கு தமிழக அரசு விருதுகளும், உதவிகளும் செய்து ஊக்குவிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இன்னும் சொல்லப்படாத இவரது சாதனைகள் ஏராளம். இவரது எளிமை ஊரறிந்த ஒன்று.
இத்தகைய சிறப்பு வாய்ந்த படத்தொகுப்பாளர் திரு. லெனின் அவர்களின் பெயரில் ஒரு விருதை ஏற்படுத்துவதில் தமிழ் ஸ்டுடியோ.காம் பெருமிதம் கொள்கிறது. மேலும் இந்த ஆண்டு குறும்படத் துறையின் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதை திரு. லெனின் அவர்களுக்கு கொடுப்பதில் தமிழ் ஸ்டுடியோ.காம் மேலும் பெருமிதம் கொள்கிறது. இந்த விருது அவரை கௌரவிப்பதற்காக அல்ல. இந்த விருதை பெறுவதன் மூலம் அவர்தான் தமிழ் ஸ்டுடியோவை கவுரவிக்கிறார். இதுமட்டுமின்றி இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியை உலகத் தமிழ் குறும்பட தினமாக கொண்டாட தமிழ் ஸ்டுடியோ.காம் முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று (லெனின் அவர்களின் பிறந்த தினத்தில்) அந்த ஆண்டு குறும்படத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு லெனின் விருது வழங்கப்படும். இந்த விருது, பட்டயத்துடன் 10,000 ரூபாய் ரொக்கப் பரிசை உள்ளடக்கியது. மேலும் விருது பெரும் ஆளுமை குறித்த ஆவணப்படமும், அவர் குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகமும் வெளியிடப்படும். இது அவர் பற்றி உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்து கொள்ள உதவும்.
மேலும் இந்த விருதைப் பெற யாரும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. தகுதியுடையவர்கள் எங்கிருந்தாலும் விருது அவர்களை வந்தடையும். இதற்காக தமிழ் ஸ்டுடியோ.காம் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பரிந்துரைக்கும் நபர்களை இறுதியாக மூன்று பேர்கள் அடங்கிய நடுவர்கள் குழு தீர்மானிக்கும். இந்த நடுவர்கள் குழுவில், குறும்படம், இலக்கியம் சார்ந்த இருவரும், அனுபவம் வாய்ந்த ஒருவரும் இடம்பெற்றிருப்பர்.
------------------------------------------------------------------------------------------------------
திரையிடல் நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 07 முதல் 13 வரை
நேரம்: இரவு ஏழு மணி முதல் பத்து மணி வரை.
இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024
------------------------------------------------------------------------------------------------------
லெனின் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறும் நாள்: ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4.30
இடம்: ஜீவன ஜோதி அரங்கம், எழும்பூர் (கன்னிமாரா நூலகம் எதிரில்)
------------------------------------------------------------------------------------------------------
படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா
மற்றும்"லெனின் விருது" துவக்க விழாவை முன்னிட்டு நடைபெறும் குறும்படத் திருவிழா!!
படத்தொகுப்பாளர் பி. லெனின் அவர்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் லெனின் அவர்கள் பெயரில் அடுத்த வருடம் முதல் குறும்படத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் "லெனின்" விருது துவக்க விழாவை முன்னிட்டும், லெனின் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 15 ஐ உலகத் தமிழ் குறும்பட தினமாக தமிழ் ஸ்டுடியோ.காம் அறிவிக்கவிருப்பதை முன்னிட்டும், எதிர் வரும் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை தொடர்ந்து ஏழு நாட்கள் குறும்படங்கள் திரையிடல் திருவிழா நடைபெறும். இதில் ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். அனுமதி இலவசம்.
நிகழ்வின் மேலும் சிறப்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் குறும்படங்கள் திரையிடப்படுகிறது.
அதன் விபரம்:
ஆகஸ்ட் 07, 2010, சனிக்கிழமை மாலை ஏழு மணிக்கு:
வகைப்பாடு: சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. செழியன். (கல்லூரி, ரெட்டை சுழி)
ஆகஸ்ட் 08, 2010, ஞாயிற்றுக்கிழமை மாலை ஏழு மணிக்கு:
வகைப்பாடு: ஆவணப்படங்கள் திரையிடல்
சிறப்பு விருந்தினர்: ஆவணப்பட இயக்குனர் திரு. ஆர். ஆர். சீனிவாசன் (என் பெயர் பாலாறு)
ஆகஸ்ட் 09, 2010, திங்கள்கிழமை மாலை ஏழு மணிக்கு:
வகைப்பாடு: நகைச்சுவைக் குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: தொலைகாட்சி நகைச்சுவை எழுத்தாளர் திரு. பழனி (சின்ன பாப்பா, பெரிய பாப்பா)
ஆகஸ்ட் 10, 2010, செவ்வாய்க்கிழமை மாலை ஏழு மணிக்கு:
வகைப்பாடு: பொதுவான குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: அரசு திரைப்படக் கல்லூரி பேராசிரியர் திரு. ரவிராஜ்
ஆகஸ்ட் 11, 2010, புதன்கிழமை மாலை ஏழு மணிக்கு:
வகைப்பாடு: மற்ற மொழிக் குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: பிரசாத் திரைப்படக் கல்லூரி முதல்வர் திரு. ஹரிஹரன்
ஆகஸ்ட் 12, 2010, வியாழக்கிழமை மாலை ஏழு மணிக்கு:
வகைப்பாடு: ஈழம் சார்ந்து எடுக்கப்பட்ட குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர், நடிகர் அஜயன் பாலா
ஆகஸ்ட் 13, 2010, வெள்ளிக்கிழமை மாலை ஏழு மணிக்கு:
வகைப்பாடு: எடிட்டர் லெனின் அவர்கள் இயக்கிய குறும்படங்கள்
சிறப்பு விருந்தினர்: எடிட்டர். திரு. பி. லெனின்
திரையிடப்படும் குறும்படங்கள் பற்றிய விபரங்கள் விரைவில்...
திரையிடல் நடைபெறும் இடம்:
எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024
suresh kannan
12 comments:
அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி.
இதுல யார்வேணாலும் கலந்துக்கலாமா? அனுமதி இலவசமா? துட்டு கேப்பாங்களா?
நாக் அவுட் குறும்படத்திற்கு முன்பு திரைப்பட கல்லூரி மாணவர்கள் அல்லாதோர் குறும்படம் எடுக்க வில்லையா..உங்கள் தகவலில் பிழை இருக்கும்போல் தோன்றுகிறது.
http://nattunadappu.blogspot.com/2008/08/blog-post.html
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
நண்பர்களுக்கு:
நண்பர் ஒருவரின் வேண்டுகோளை ஏற்று இத்தகவலை இங்கு பகிர்ந்துள்ளேன். எந்தவொரு மேலதிக தகவலுக்கும் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்வது சரியாக இருக்கும்.
(இதை பதிவிலேயே தெரிவித்திருக்க வேண்டும். விடுபட்டு விட்டது)
அதிஷா: அனுமதி இலவசம் என்றுதான் போட்டிருக்கிறார்கள்.
அரவிந்தன்: குறிப்பிட்டுள்ள தகவலின் நம்பகத்தன்மை பற்றி எனக்குத் தெரியவில்லை.
லெனின் மிக எளிமையான மனிதர்,கடும் உழைப்பாளி,பெரும்பாலும் இவர் வேகமாய் நடந்து போகையில் பார்த்ததுண்டு.
நாக் அவ்ட் படம் எங்கேயாவது காணக்கிடைக்குமா?
பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
தமிழ் ஸ்டுடியோ குழுவினர்க்கும் நன்றிகள் . வாழ்த்துக்கள்.
குறும் படங்கள் ஏன் வணிக ரீதியாக வெற்றி பெற முடிவதில்லை.
பகிர்ந்தமைக்கு நன்றி.
பகிர்வுக்கு நன்றி. லெனின் இயக்கிய ஜெயகாந்தனின் "ஊருக்கு நூறு பேர்" படத்தை நீங்கள் கண்டதுண்டா? எங்கு கிடைக்கும் என்று தெரியுமா?
இதுப் போன்ற விழாக்களில் கலந்து கொள்ள முடியவில்லயே என்ற வருத்தம் உள்ளது!
தகவலுக்கு நன்றிகள் பல...இதுப் போன்ற குறுபடங்களை எங்கு வாங்க முடியும் சுரேஷ்கண்ணன்?
நன்றி
மயிலாடுதுறை சிவா...
இந்த பதிவை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி. குறும்படம் எடுப்பதர்கான பயிற்சி எங்கு கிடைக்கும் ஆர்வமாக உள்ளேன்.78maga@gmail.com
Post a Comment