Thursday, July 22, 2010

ஆனந்த விகடனும் சிங்கத்தின் மாமிசமும்


 யாரை நாம் தவிர்க்க விரும்புகிறோமோ  அவரையே அடிக்கடி எதிரி்ல் சந்திக்க நேரும் சங்கடங்கள் யதார்த்தத்தில் ஏற்படும். அப்படியாக 'அந்த' எழுத்தாளரைப் பற்றி இனி எழுதுவதை தவிர்ப்பது என்கிற இரண்டு இடுகைகளுக்கு முன்னர்தான் எடுத்த முடிவை இத்தனை விரைவில் மீறுவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை.

குறிப்பிட்ட எழுத்தாளரின் பத்தி எழுத்து சமீபத்திய ஆ.வி. இதழில் சிறப்பாக வந்திருப்பதாக இணைய நண்பரொருவர் buzz-ல் பகிர்ந்து கொண்டார். சில காரணங்களுக்காக 'அந்த' எழுத்தாளரை நான் விரும்பாவிட்டாலும் அடிப்படையாக அவரது சுவாரசியமான எழுத்தை விரும்புபவன் என்கிற வகையில் இதழை வாங்கினேன். நான் ஆனந்த விகடனை வாசிக்க நிறுத்தி சில வருடங்கள் ஆகி விட்டிருந்தன. எஸ்.ராவின் தொடர்,  இயக்குநர்கள் பாலா, சேரன், நடிகர் பிரகாஷ்ராஜ் போன்றோர்களின் தொடர்களுக்காகவும் குறிப்பாக வாத்தியாரின் 'கற்றது பெற்றதும்' பத்திகளுக்காகவும்  முன்னர் அதை தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன். அட்டையில் நமீதாவை அடிக்கடி போட்ட ராசியோ என்னவோ, ஒரு நிலையில் இதழ் பாரம்பரிய வடிவிலிருந்து நீண்டு அகலமாகி உள்ளே உருப்படியான விஷயங்கள் குறைந்து போய் மாறாக டெஃபானிருக்கு போட்டியாக அரை நிர்வாணப்படங்கள் மிகுந்ததில் இதற்கு உருப்படியாக நேரடியாக டெஃபானிரையே படிப்பது நலம்  என்று ஆவியை நிறுத்தினேன்.(!)

சரி. சமீபத்திய இதழுக்கு வருவோம். அப்படியொன்றும் பெரிதான மாற்றமில்லை என்றாலும் உருப்படியான சில விஷயங்கள் இருந்தன. குறிப்பாக 'பொக்கிஷம்' பகுதியைச் சொல்லாம். சிலதை மீள்நினைவாகவும் தவற விட்டதை இப்போது வாசிக்க கிடைத்த வாய்ப்பாகவும் சொல்லலாம். 'நம்ம' எழுத்தாளரின் பத்தி எழுத்தை முதலில் வாசித்தேன். நான் முன்பே குறிப்பிட்டது போல் இணையத்தில் எழுதுபவர்களே, பரவலாக அறியப்படும் அச்சு எழுத்தாளர்களை விட தரமாகவும் ஆழமாகவும் எழுதுகிறார்கள் என்பது உறுதியானது. அதனால்தான் 'இந்த' எழுத்தாளரும் அவரால் 20 வருடங்களுக்கும் மேலாக  'விமர்சிக்கப்படும் (?) எழுத்தாளரும் பொத்தாம் பொதுவாக இணையத்தில் எழுதுபவர்களை பாதுகாப்பற்ற உணர்வின் காரணமாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 'காய்ச்சிக் கொண்டிருக்கிறார்களா என தெரியவி்ல்லை. (எஸ.ரா. மாத்திரமே இதில் விதிவிலக்கு. மாறாக அவர் நன்றாக எழுதுபவர்களை அடையாளப்படுத்தும் வேலையைத்தான் செய்கிறார்).

இணையத்தில்தான் சுயபுராணம் என்று பார்த்தால் காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் இதழிலும் தனது சுயபுராணத்தை பாடியிருந்தார் 'அந்த' எழுத்தாளர். சுயபுராணம் எழுதுவதில் தவறில்லை. சுஜாதா கூட எழுதிக் கொண்டிருந்தார். ஆனால் குறைந்தபட்சம் அது வாசிக்க சுவாரசியமாகவாவது இருக்க வேண்டும். இல்லை. சரி, இது போகட்டும்.

வலைப்பூவில் எழுதப்பட்ட ஒரு கவிதையை  இணைய முகவரியுடன் எடுத்துப் போட்டு விட்டு 'இதை எழுதியவர் சுந்தர ராமசாமியின் பேரன்' என்று எழுதியிருக்கிறார். இதன் மூலம் காலச்சுவடிற்கு அவர் சொல்லும் மறைமுகச் செய்தி எதுவென தெரியவில்லை. எதுவாக வேண்டுமானால் இருந்து விட்டுப் போகட்டும், இல்லாமலும் போகட்டும். 'அந்த' எழுத்தாளரின் தளத்தில் முன்பு 'மலாவி ஆனந்த்' என்பவர் தொடர்ந்து கடிதங்கள் மூலம் எழுத்தாளருடன் உரையாடிக் கொண்டிருந்தார். சமயங்களி்ல் எழுத்தாளருடையதை விட வாசகரின் கடிதங்கள் சுவாரசியமாகவும் தகவல்பூர்வமாகவும் இருக்கும். அந்த வாசகர் ஒருமுறை எதிரணியைச் சேர்ந்த (காங்கிரஸில் உள்ள கோஷ்டி எண்ணிக்கையை விட இலக்கிய கோஷ்டிகள் அதிகமாகயிருக்கலாம்) எழுத்தாளருக்கு ஒரு வாசக கடிதம் எழுதிவிட்டாராம். அவ்வளவுதான். பொங்கி விட்டார் 'நம்ம' ஆள். வாசகர் அதிக பிழைகளுடன் எழுதிய கடிதங்களையெல்லாம் எடிட்செய்யவே பல மணி நேரமாகிவிட்டதாம். இப்படியாக இவர் வாசகருக்காக மெனக்கெட்டுக் கொண்டிருக்கும் போது அவர் இவரது ஜென்ம விரோதியிடம் கொஞ்சிக் கொண்டிருந்தால் கோபம் வராதா? நியாய்ம்தான். இப்போது இதே அற்புத லாஜிக்கை 'நம்ம' எழுத்தாளருக்கும் பொருத்திப் பார்ப்போம்.

பல வருடங்களாக யாருமே பொருட்படுத்தாத இவரின் படைப்புகளை சமீபகாலமாக மனுஷ்யபுத்திரன் உயிர்மை பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டு வருகிறார். இதை சம்பந்தப்பட்ட எழுததாளரே தம்முடைய தளத்தில் அவ்வப்போது ஒப்புதல் வாக்குமூலம் தந்திருக்கிறார். நிலைமை இப்படியிருக்க இந்த எழுத்தாளர், அரசியல் மேடை பேச்சாளர் போல எதிரணி கோஷ்டித் தலைவரின் பேரன் எழுதிய கவிதையை சிலாகித்தால் எழுத்தாளரின் அதே தருக்க நியாயப்படி ம.பு. என்ன செய்ய வேண்டும்? இதை வாசிப்பவரின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.

ம.பு.வும் எழுத்தாளர் மாதிரியே எதிர்வினை புரியவேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. மேற்சொன்ன எழுத்தாளர் எத்தனை சிறுபிள்ளைத்தனமாக முன்பு நடந்திருக்கிறார் என்பதை விளக்குவதற்காக இத்தனையையும் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

இதில் உச்சபட்சமான நகைச்சுவை என்றால், நம்ம எழுத்தாளர், யாரை சு.ராவின் பேரன் என்று சிலாகித்தாரோ, அந்த வலைப்பூவின் சொந்தக்காரர் உண்மையில் அப்படி கிடையாது. தனக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக அந்த நண்பர் இதை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். 'பின்னாளில் 'எழுத்தாளர்' என்னையும் திட்டலாம்' என்று முன்எச்சரிக்கையாக அந்தப் பதிவர் எழுதியிருப்பதன் மூலம் எழுத்தாளரின் லட்சணத்தைப் பற்றி நன்றாக அறிந்துள்ளார் என்று தெரிகிறது.

இந்த இரண்டு விஷயங்களையும் விட்டுவிட்டால் கூட கோலா பூஃப் பற்றி எழுதப்பட்ட பிரதான பத்தியும் க்ரைம் நாவல் பாணியில் வாசகனுக்கு கிளர்ச்சி ஏற்படுத்தும் பாணியிலேயே எழுதப்பட்டிருக்கிறது. இறுதியில் நூலாசிரியர் ஏன் அரை நிர்வாணமாகவே காட்சி தருகிறார் என்கிற ஆன்மிக விசாரம் வேறு. 'உங்களில் யாரும் சிங்கக்கறி சாப்பிட்டிருக்கிறீர்களா?' என்கிற அபத்தக் கேள்வி வேறு. யாரிடம் இந்தக் கேள்வி? மதியத்திற்கு சாம்பார் சாதமும் தயிர் சாதமும் சாப்பிட்டு பெரும்பாலும் சிங்கத்தை நேரில் கூட பார்த்திருக்காத நடுத்தர வர்க்கத்து வாசகர்களிடம். அதிர்ச்சி மதிப்பீடாகயிருக்கும் போலிருக்கிறது. இனி ஆவியை வாங்காமலிருப்பதற்கு இந்த ஒரு எழுத்தே போதுமான காரணமாயிருக்கும்.

உண்மையில் இந்த இடுகையை நான் எழுத ஆரம்பித்ததே இதில் எனனைக் கவர்ந்த இன்னொரு எதிர்பாராத படைப்பை பற்றி எழுதுவதற்கு. அதற்குப் பதிலாக ஏன் இந்த இதழை வாங்கினேன் என்று எழுத ஆரம்பித்து இத்தனை நீளமாகி விட்டது. நாரதரை விட மஹாவிஷ்ணுவை அதிகம் நினைக்கும் கம்சனின் கதை போலாகி விட்டது என் நிலைமை. அந்தக் கதை உங்களுக்கும் தெரியும்தானே?

என்னைக் கவர்ந்த அந்தப் படைப்பைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

suresh kannan

18 comments:

சித்தன்555 said...

சிங்கக்கறி மேட்டர் கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர்.

ராம்ஜி_யாஹூ said...

சுரேஷ் கண்ணன்
தெரிந்தும் விரும்பியும் நாம் செய்யும் தவறுகளுக்கு தீர்வோ ஆறுதலோ கிடையாது.
முதல் தவறு விகடன் வாங்குவது அல்லது சந்தா கட்டுவது , எஸ் ரா கட்டுரை விரைவில் புத்தக வடிவில் வந்து விடும், அப்போது படித்து கொள்ளலாமே. என்ன அவசரம்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா பற்றி நீங்கள் எழுதி உள்ளது, உங்கள் சுய விருப்பம், அனுபவம்....

பல இலக்கிய படைப்பஊகள் எழுத்துக்கள் வெளி வர மனுஷ்ய புத்திரன் உதவியாக இருக்கிறார்.

அமுதா கிருஷ்ணா said...

ஆவி இரண்டு வருடங்களாக நானும் வாங்குவதில்லை. ராம்ஜி கூறுவது சரி தான்.

சென்ஷி said...

//

வலைப்பூவில் எழுதப்பட்ட ஒரு கவிதையை இணைய முகவரியுடன் எடுத்துப் போட்டு விட்டு 'இதை எழுதியவர் சுந்தர ராமசாமியின் பேரன்' என்று எழுதியிருக்கிறார்.//

ஒரு சிறு தகவல் பிழையைக்கூட உங்களால் ஜீரணிக்க முடியவில்லையா சு.க.

ஹ்ம்... இந்த உலகம் எப்படித்திருந்துமென்றே தெரியவில்லையே.. :((

Mohan said...

நானும் கூட எப்போதெல்லாம் கேபிள் சங்கரும்,தண்டோராவும் சாருவின் 'மனம் கொத்திப் பறவை' நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்களே அந்த வாரம் மட்டும் ஆனந்த விகடனில் அந்தப் பத்தி படிக்கலாம் என்றிருக்கிறேன் :-)

பொன் மாலை பொழுது said...

// நாரதரை விட மஹாவிஷ்ணுவை அதிகம் நினைக்கும் கம்சனின் கதை போலாகி விட்டது என் நிலைமை. அந்தக் கதை உங்களுக்கும் தெரியும்தானே?//

------சுரேஷ் கண்ணன்.

சிரிப்பாய் வருகிறது. சிலபேருக்கு இந்த குறுகுறுப்பு இருக்கும். ஆ.வி போன்றவைகளை கையால் தொட்டு பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆமா? டெஃபானிர் இன்னும் வருகிறதா என்ன? கல்லூரி நாட்களில் திருட்டுதனாய் படிப்பது!!
--

Anonymous said...

//ஒரு சிறு தகவல் பிழையைக்கூட உங்களால் ஜீரணிக்க முடியவில்லையா சு.க.
//

தி இந்துவை கண்காணித்த ராம்வோச்சர் போல ஒரு விகடன்வோச்சர் காலத்தின் கட்டாயம் என எண்ணுகிறேன்.

குமுதம்வோச்சரும் தேவைதான்.

Anonymous said...

//டெஃபானிர் இன்னும் வருகிறதா என்ன?//

பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை!

மதி.இண்டியா said...

தலை ,

இந்த சாரு பதிவை விட்டுத் தொலைங்களேன் , அந்தாளை பத்தி பேசவே பிடிக்கலை ,

அப்புறம் சந்தடி சாக்குல ஜெமோவை போட்டுட்டீங்களே சு.க , பதிவர்கள் பத்தி ஜெ எழுதியதை படிசீங்களா இல்லை குத்து மதிப்பா சொல்லிட்டீங்களா ?

இணைய உலகமும் நானும்
http://www.jeyamohan.in/?p=5362

Raj Chandra said...

>>'இதை எழுதியவர் சுந்தர ராமசாமியின் பேரன்'
- Charu actually 'parodied' this kavithai (I read that too and realized one more reason why I am not going to read Kavithai anymore)

- I think you're now becoming like Charu like he criticizes JeyaMohan without any stuff. Please concentrate your efforts on something useful. Charu is like a seasonal allergy. He will bother you occasionally but never leave any lasting impact (either positively or negatively).

வால்பையன் said...

இந்த வாரம் பெரிதாக மோசமில்லை என்பது என் கருத்து!

bandhu said...

நீங்கள் சாரு பற்றி எழுதாமல் இருப்பது நல்லது. உங்கள் மேலுள்ள நல்லெண்ணத்தை நீங்கள் சாரு மீது எழுதுவது கெடுக்கிறது.

Karthick Chidambaram said...

'இதை எழுதியவர் சுந்தர ராமசாமியின் பேரன்'

:)

Anonymous said...

see my blog http://thandapayal.blogspot.com/

if u like its template get its code here https://docs.google.com/document/edit?id=1MhobBFrAyBTaM2aFh0RKvrx7YX0r9qlvPaYCf2x0gfo&hl=en&pli=1#


to create an archive in a static page visit http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

R. Gopi said...

oh, no, not again. Don't you realise you are becoming like him, critising others all the time. In my opinion, its a sheer waste of time and energy.

Regards

R Gopi

Anonymous said...

நல்லா பொழப்பு போகுது போல இருக்கு?

rajkumar said...

போன வார விகடனில் செழியன் எழுதிய மிஸ்டர் மார்க் கதை அருமை. விகடல் இது போன்ற சிறுகதைகளை வெளியிடும் பட்சத்தில் அதை வாங்குவதைப் பற்றி கவலைப்பட மாட்டேன்

Eswari said...

// chinnasamy said...

சிங்கக்கறி மேட்டர் கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர்.//

Repeatuuu..