Monday, July 13, 2009

அன்புள்ள ஜ்யோவ்ராம் சுந்தருக்கு.....


அன்புள்ள சுந்தர்,

நண்பர்கள் சிலர் உங்களின் இந்தப் பதிவை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வந்தனர். (இப்படி எழுதினாத்தானே ஒரு 'கெத்து' இருக்கும்.) :-) பின்னூட்டம் மிக நீண்டுவிட்டதால் இதை தனிப் பதிவாக இடுகிறேன்.

பைத்தியக்காரனின் சாரு குறித்த பதிவில் நீங்கள் இட்டிருந்த பின்னூட்டத்தையே உங்களுக்கும் சொல்லலாம் என்று முதலில் தோன்றியது. (இந்தப் பதிவு இப்போது இங்கே தேவையில்லாதது) எனவேதான் நீங்கள் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டிருந்த போதும் பதிலளிக்க ஆர்வம் தோன்றவில்லை. ஆனால் இந்தப் பதிவு அவசியம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கக்கூடிய அவசியத்தையும் மறுக்கவில்லை. மேலும் இம்மாதிரியான சர்ச்சைக்குரிய பதிவுகளிலிருந்து விலகியிருக்கலாம் என்று அலுப்பு பல சமயங்களில் ஏற்படுகிறது. (இதையேதான் பைத்தியக்காரனின் சாரு இடுகைக்கு பதிலாக நீங்கள் எழுதிய பதிவின் பின்னூட்டத்திலும் குறிப்பிட்டேன்). ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருந்த மற்றவர்களில் சிலர் பின்னூட்டமிட்டு விட்ட நிலையில் நான் மாத்திரம் அமைதி காத்தால் அது ஒருவேளை வேறு மாதிரி புரிந்து கொள்ளப்படலாம் என்று தோன்றியதால் இது.

(1) டிவிட்டரில் உரையாடின எல்லாப் பெயரையும் ஜாடியில் போட்டு ஒரே குலுக்காக குலுக்கி இட்டதை விட யார் என்ன உரையாடினார்கள் என்பதையும் உங்கள் பதிவில் அதை வாசிப்பவர்களுக்கு தெளிவாக்கியிருக்கிலாம். (அல்லது அதனுடைய சுட்டியை தந்திருந்தாலும் ஆர்வமுள்ளவர்கள் படித்திருந்திருப்பார்கள். ஆர்வமுள்ளவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதுதான் உங்கள் பதிவின் பின்னூட்டங்களை பார்த்தாலே தெரிகிறதே) :-)

(2) டிவிட்டரில் உரையாடினவர்கள் யாராவது பதிவில் இணைப்பு கொடுத்திருந்தால் உங்கள் தரப்பு விஷயங்களைச் சொல்லியிருக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். பொதுவாக இணையத்தில் பல்வேறு நபர்களைப் பற்றி அவர்களின் பல்வேறு பதிவுகளைப் பற்றி வேறு வேறு இடங்களில் குழுமங்களில் உரையாடுகிறார்கள்; விமர்சிக்கிறார்கள்; அவதூறு செய்கிறார்கள். யாரும் யாருக்கும் 'உங்களைப் பற்றி இப்படிப் பேசியிருக்கிறேன்' என்று தகவல் தருவதில்லை. சம்பந்தப்பட்டவரே அதை தாமாகவோ அல்லது நண்பர்கள் மூலமோ அறிந்து விருப்பமிருந்தால் அதைப் பற்றி தன்னுடைய தளத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட பதிவிலேயே சென்றோ தங்கள் தரப்பு வாதத்தை வைக்கிறார்கள். எனவே இணைப்பு தந்திருக்க வேண்டும் என்கிற உங்களின் எதிர்பார்ப்பு பொதுவாக நடைமுறையில் இல்லாதது என்பதை மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். (நீங்களே கூட இந்தப் பதிவில் என்னுடைய பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நானாகத்தான் அதை அறிந்து உங்களுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பி தெரிவித்திருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை).

(3) டிவிட்டரில் உரையாடியவர்கள் 'வெற்றிலை எச்சில்' தெறிக்க விவாதித்துக் கொண்டிருந்ததாக எழுதியிருந்தீர்கள். டிவிட்டரில் உரையாடினால் அது 'எச்சில்' என்றும் அதையே வலைப்பதிவுகளில் செய்தால் அது 'கங்கை நீர்' என்றும் உங்களுக்கு யார் சொன்னது என்று தெரியவில்லை. (அப்படியான நோக்கில் நான் எழுதவில்லை என்று நீங்கள் வாதிடக்கூடும் என்கிற புரிதலுடனேயே இதை எழுதுகிறேன்). வலைப்பதிவுகளில் யோசித்து நிதானமாக எழுதுவது மாதிரி அல்லாமல் டிவிட்டரில் உரையாடுவது என்பது அப்போதைக்கு அப்போது தோன்றுவதை தன்னிச்சையாக எழுதுவது. அவதூறு எங்கும் நிகழ்ந்தாலும் அது 'எச்சில்'தான். டிவிட்டரில் எழுதுவதை பொருட்படுத்தத் தேவையில்லை என்று சிலர் குறிப்பிடுவதாலேயே இதை எழுத வேண்டியிருக்கிறது.

(4) உங்கள் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த சர்ச்சைக்குரிய வார்த்தையில் தொடங்கின 'டிவிட்டர்' விவாதம் ஒரு நிலையில் பொதுவானதொரு திசையை நோக்கிப் பயணித்தது என்றுதான் நான் கருதுகிறேன். இம்மாதிரியான சர்ச்சைக்குரிய வார்த்தைகளை நாம் பேச்சு மொழியில் பயன்படுத்தும் போது யதார்த்த நோக்கில் அதையே எழுத்திலும் குறிப்பிடுவது தவறில்லை என்றுதான் நான் விவாதித்துக் கொண்டிருந்தேன். மேலும் நம்முடைய சங்க இலக்கியங்களிலேயே (நவீன இலக்கியத்திலும் கூட) இந்த வார்த்தை வேறு வேறு பெயர்களில் குறிப்பிடப்படும் போது அவை பெரிதும் சர்ச்சைக்குள்ளாவதில்லை;மாறாக இலக்கிய மதிப்பும் பெற்றுவிடுகிறது என்பதுதான் நான் குறிப்பிட்டது. சில நண்பர்கள் (பிகே சிவகுமார், டைனோபாய் உள்ளிட்டவர்கள்) அது குறித்தான தங்களின் மாற்றுக் கருத்துக்களை வைத்துக் கொண்டிருந்தனர். நடிகையின் பெயருக்கு பதிலாக குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தியிருக்கலாமே என்றதற்கும் அங்கேயே பதிலளித்திருக்கிறேன்.

வேறு ஏதாவது ஒரு பதிவைப் பற்றி விவாதித்திருக்கலாம் என்று நீங்களே அங்கலாய்த்திருக்கிறீர்கள். எனில் உங்களுடைய நோக்கில் சம்பந்தப்பட்ட பதிவு உங்களினாலேயே முக்கியமற்றதாய் நினைக்கப்படும் பட்சத்தில் அதை எழுதியதின் காரணம்தான் என்ன? வெறும் பரபரப்பை ஏற்படுத்துவதுதானா?

(5) உங்களுடைய இந்தப்பதிவில் கீழ்குறிப்பிட்டவாறு நான் பின்னூட்டமிட்ட போது மிக ஆபாசமான மொழியடங்கிய பின்னூட்டம் ஒன்று அழுகிப் போன வக்கிர மனம் ஒன்றிடமிருந்து என் பதிவிற்கு வந்தது.

சுந்தர்,

அப்படியே... பத்தாம் வகுப்பு,பன்னிரெண்டாம் வகுப்பு.. என்று ph.d வரைக்கும் போயிருக்கலாம். :-))

பொதுவாக நம்ம ஆட்களின் பாசாங்கை நினைத்தால் சிப்பு சிப்பாக வருகிறது. புண்டை என்ற வார்த்தையை கேட்டதில்லையா அல்லது சொன்னதில்லையா. எழுத்தில் பார்த்தால் ஏன் இப்படி பதறுகிறார்கள் என்று தெரியவில்லை.


நான் அந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை ஆதரித்து எழுதியதற்காக அந்த அழுகிய மனம் என்னை கண்டபடி திட்டியிருந்தது. இதிலுள்ள நகைமுரண் என்னவெனில் எந்த ஆபாச (?!) வார்த்தையை நான் ஆதரித்ததற்காக அந்த வசவுகள் எழுதப்பட்டிருந்ததோ, அந்தப் பின்னூட்டத்திலேயே அதைவிட அளவிற்கும் அதிகமான ஆபாசமும் வக்கிரமும் இருந்தது. இவ்வளவு வக்கிரத்தை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும் அந்த நபர், எப்படி ஒரு சர்ச்சைக்குரிய வார்த்தை பொதுத்தளத்தில் எழுதப்பட்டதற்காக ஆத்திரம் கொள்கிறார் என்கிற உளவியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. (இது பொதுவான தகவலுக்காக).

(இந்தப் பதிவை எந்தக் காரணத்தைக் கொண்டும் நீக்க மாட்டேன் என உறுதி தருகிறேன்) இது குசும்பருக்காக. :-)

என்னுடைய டிவிட்டர் முகவரி்: http://twitter.com/sureshkannan70


suresh kannan

20 comments:

நாமக்கல் சிபி said...

//
(இந்தப் பதிவை எந்தக் காரணத்தைக் கொண்டும் நீக்க மாட்டேன் என உறுதி தருகிறேன்) இது குசும்பருக்காக. :-)//

:)

மக்கள்ஸ்! தைரியமா இங்கே உங்க பின்னூட்ட விவாதங்களை வைக்கலாம்னு நினைக்கிறேன்!

நிகழ்காலத்தில்... said...

ஆரம்பிச்சாச்சா..

எல்லாம் நல்லபடியா நடக்க வாழ்த்துக்கள்

ILA (a) இளா said...

என்னை மாதிரி பொது ஜனங்களுக்கு இந்த மாதிரி பதிவுகள் தேவையே இல்லே. (அப்படி நீங்க எழுதியிருக்கலாம்- எச்சில் தெறிச்சாலும் பரவாயில்ல விடுங்க)

ஜோசப் பால்ராஜ் said...

எல்லாம் நாசமாப் போங்க

பதிவுலகம் போற போக்கு சரியில்ல. வெறுப்பா இருக்கு.
நீங்க என்ன சொல்லியிருக்கீங்கன்னு படிக்கவேயில்ல . ஏன்னா அந்தப் படம் தான் இந்தப் பதிவெல்லாம் படிக்க லாயக்கே இல்லன்னு சொல்லுதே?
என்னத்த சாதிக்க இப்டி எல்லாம் அடிச்சுக்குறீங்க?

போங்க ஐயா, போயி புள்ள குட்டிங்கள படிக்க வையிங்க.

இப்டியே போன பதிவுலகம் ரொம்ப சீக்கிரம் விளங்கிரும்.

இந்த கமெண்டப் படிச்சுட்டு திட்டணும்னு தோணுச்சுன்னா joseph.paulraj@gmail.com க்கும் ஒரு காப்பி அனுப்புங்க.

Athisha said...

டுவிட்டர்களை தாறுமாறாக திட்டிப்பதிவிட்ட ஜோவ்ராம்.. (ஆமா அது யாருங்க...?)

அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

Kumky said...

பின்னூட்டம்.
(நாமக்கல் சிபிக்காக)

Kumky said...

பதிவு பற்றிய கருத்து பின்னர்...

தமிழன்-கறுப்பி... said...

hoooooooooo :(

Unknown said...

பூஜ முடுஞ்சதும் .... எல்லாம் தட்டுல காணிக்க போடுங்கோ.....!!!!

பிச்சைப்பாத்திரம் said...

இடுகையின் தலைப்பில் சுந்தரின் பெயரை அவசரத்தில் தவறுதலாக எழுதிவிட்டதை அதிஷாவின் பின்னூட்டத்திற்குப் பின்புதான் கவனித்தேன். திருத்திவிட்டேன். நன்றி.

jothi said...

//மக்கள்ஸ்! தைரியமா இங்கே உங்க பின்னூட்ட விவாதங்களை வைக்கலாம்னு நினைக்கிறேன்!//

அவசியமே இல்லாதது. முந்தைய பதிவிற்கும் இப்பதிவிற்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்?

Venkat said...

Suresh,

I have been a regular visitor for your blog and am also following you in twitter. I really respect the way you have been blogging, writing movie reviews etc.

IMO, this post should have been avoided. There is nothing wrong in writing, but it is better to let postive energy to flow rather than something like this.

//You should never argue with fools because they will just drag you down to their level//

Just wanted to let you know of my thoughts.

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி.

இப்போது பார்க்கும் போது இந்தப் பதிவும் அபத்தமானதாகத்தான் தோன்றுகிறது. :-( அப்படியே விட்டிருக்கலாம்.

இதைச் சுட்டிக் காட்டிய நண்பர்களுக்கு:

உருப்படியாக ஏதாவது எழுத முயன்றால் அதைச் செய்வது, மற்றபதிவுகளில் (குறிப்பாக சர்ச்சைக்குரிய பதிவுகளில்) பின்னூட்டமிடுவதை தவிர்ப்பது, மொக்கை பதிவுகள் எழுதி செயற்கையான உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளாமலிருப்பது போன்றவற்றை பின்பற்றலாம் என்றிருக்கிறேன். அப்படித்தான் இருந்தேன். நடுவில் ஏதோ கோளாறாகிவிட்டது. இனி என் பழைய format-க்கு திரும்பலாம் என்றிருக்கிறேன். சுட்டிக் காட்டி உணர்த்திய நண்பர்களுக்கு நன்றி.

குசும்பன் said...

சுரேஸ்கண்ணன் அண்ணாச்சி எதுக்காக வேண்டும் என்றாலும் சண்டைபோட்டுக்காலாம், சண்டை முடிஞ்ச பிறகு ஒரு கெத்தாக காலரை தூக்கிவிட்டுக்கிட்டு நாங்களும் ரவுடின்னு சொல்லிக்கலாம்... ஆனால் “.........”அதுக்காக சண்டை போட்டால் வெளியில் எப்படி சொல்லிக்கமுடியும்?

நாளை சுரேஸ்கண்ணனும் சுந்தரும் ஏன் சண்டை போட்டுக்கிட்டாங்க என்றால் எப்படி சொல்லமுடியும்?:) பிரச்சினை எதில் இருந்து ஆரம்பிச்சுது என்றால் என்ன சொல்வது?:)

அளவில்லா கவலையோடு
குசும்பன்

கடைசிவரியில் என்னையும் ஜீப்பில் எற்றிய உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை:)

வெண்பூ said...

சும்மா... பின்னூட்டங்களை மெயில்ல படிக்க...

Anonymous said...

//உருப்படியாக ஏதாவது எழுத முயன்றால் அதைச் செய்வது, மற்றபதிவுகளில் (குறிப்பாக சர்ச்சைக்குரிய பதிவுகளில்) பின்னூட்டமிடுவதை தவிர்ப்பது, மொக்கை பதிவுகள் எழுதி செயற்கையான உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளாமலிருப்பது போன்றவற்றை பின்பற்றலாம் என்றிருக்கிறேன். அப்படித்தான் இருந்தேன். நடுவில் ஏதோ கோளாறாகிவிட்டது. இனி என் பழைய format-க்கு திரும்பலாம் என்றிருக்கிறேன்//

நன்றி சுரேஷ். நமக்கு எது நன்றாக வருமோ அதைச் செய்வதுதான் நல்லது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

சுரேஷ் கண்ணன்,

1. எனக்கு டுவீட்டர் சரியாகப் புரியவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். சுட்டிகளில் போய்ப் பார்த்தால் வரிசையான இடுகைகளில் ஒன்றிரண்டில் பெயரே இல்லாமல் இருந்தன. அதில் ஒருவர் கூறியிருந்ததுதான் பதிவர்களின் குடும்பப் பெண்கள் விசயம்.

2. சுரேஷ் கண்ணன், இவன்சிவன், டைனோபாய், ரோசா இவர்களின் பல இடுகைகளைப் படித்தேன் (கிட்டத்தட்ட 30 இடுகைகள் ஒவ்வொருவருக்கும்). திண்ணைப் பேச்சுகள் என்றே எனக்கு மனப் பதிவு ஏற்பட்டது.

3. ஏன் அந்தப் பாட்டுகளைப் பதிந்தேன் என்பதற்கான காரணத்தை ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

4. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இங்கே இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். 200 இடுகைகளுக்கு மேலிருக்கும். அவற்றை ஒற்றைவரித் தீர்ப்பில் ரோசா வசந்த் போன்ற ஒருவர் புறந்தள்ளியிருந்தது சினத்தை ஏற்படுத்தியது. (இப்போது அப்படியில்லை, இரண்டு இடுகைகள் குறித்த விமர்சனம் அது எனச் சொல்லியிருக்கிறார்).

5. சண்டைப் பதிவென்றாலும், இலக்கியச் சண்டைதானே. இருந்துவிட்டுப் போகிறது :) இம்மாதிரியான பதிவுகளிலும், படிப்பவர்களுக்கு ஏதாவது உபயோகமாக இருக்கலாம் (உதா - என்னுடைய பதிவின் கடைசி பத்தியில் நான் உபயோகித்திருக்கும் உத்தி).

5. டூவீட்டரில் எழுதுபவர்கள் இங்கு பின்னூட்டத்தில் தெரிவித்தால் நலம். நான் ஏன் செய்யவில்லை என்றால், எனக்கு டுவீட்டர் கணக்கு இல்லை - அதனாலேயே தெரிவிக்க இயலவில்லை. ஆனால் பின்னூட்டங்களுக்கு அப்படியில்லையே. மற்றபடி, அவரவர் விருப்பம்.

Unknown said...

இந்தப் பதிவுக்கு சம்பந்தம் இல்லாததாக தோன்றினாலும் மனதில் தோன்றியதைச் சொல்லிவிடுகிறேன். சுந்தர் அந்தப் பதிவில் மூன்றாம் வகுப்பில் பாடிய பாடலையும் ஏழாம் வகுப்பில் பாடிய பாடலையும் குறிப்பிட்டு இருந்தார். அதுவும் ஏழாம் வகுப்பில் பாடிய பாடலில் ஒரு பத்தியை மட்டுமே குறிப்பிட்டு இருந்தார் (சுந்தர், இதைப் படிச்சிட்டு முழு பாடலையும் போடுங்க, இல்லைன்னா பத்தாம் வகுப்பில் இதே பாடலைப் பாடிய குசும்பன் போட்டுடுவார்). நானும் உங்களுடைய பின்னூட்டத்தை வழிமொழிந்து கூடவே முழுப்பாடலையும் போட சொல்லலாம் என்று எண்ணினேன். ஆனால், என் டேமேஜர் அந்த நேரத்தில் வேறு வேலை கொடுக்க, பின்னூட்டம் இட மறந்துவிட்டேன்.

இந்தப் பாடல்களை சுந்தர் எழுதவில்லை, பல வருடங்களாக பள்ளியிலும் கல்லூரியிலும் மாணவர்கள் பாடிவரும் பாட்டு தான். அதை பரிமாண வளர்ச்சியை சுட்டிக்காட்டும் விதமாக சுந்தர் சொல்லி இருந்தார். அதற்கு இந்தக் கலாசாரக் காவலர்கள் கொடிபிடித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அது போலவே சுந்தரும் ஒரு ஜாடியில் பல டிவிட்டர்களைப் போட்டு குலுக்கி இருக்க வேண்டாம். டிவிட்டர் பற்றி இன்னமும் புரியாத என்னைப் போன்றவர்களுக்கு அங்கேயும் இப்படி குழுமமாகச் சேர்ந்து அரட்டை அடிக்கிறார்களோ என்ற கற்பிதம் வர வாய்ப்பு இருக்கிறது. அது போல, ரோஸாவை குறித்தும் யாரோ ஒரு மூன்றாவது நபர் சொன்னதாக குறி பதிவை குறிப்பிட்டு இருக்கவேண்டாம். ஒரு வேளை, சுந்தர் ரோஸாவின் அந்தப் பதிவைப் படித்தால் குறிப்பிட்டு இருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன் (முன்னரே படித்திருந்தால் மீள்வாசிப்பு செய்யலாம்).

ஆமா, இதையெல்லாம் ஏன் நான் இங்கே சொல்கிறேன்? ரெண்டு நாளா டேமேஜர் லீவ்வ்வ்வ்வ்வ்வ்.

உண்மைத்தமிழன் said...

///டிவிட்டரில் உரையாடியவர்கள் 'வெற்றிலை எச்சில்' தெறிக்க விவாதித்துக் கொண்டிருந்ததாக எழுதியிருந்தீர்கள். டிவிட்டரில் உரையாடினால் அது 'எச்சில்' என்றும் அதையே வலைப்பதிவுகளில் செய்தால் அது 'கங்கை நீர்' என்றும் உங்களுக்கு யார் சொன்னது என்று தெரியவில்லை. (அப்படியான நோக்கில் நான் எழுதவில்லை என்று நீங்கள் வாதிடக்கூடும் என்கிற புரிதலுடனேயே இதை எழுதுகிறேன்).///

ட்விட்டரின் ஆதரவாளர்கள் ஏன் இது குறித்து இன்னும் ஒரு எதிர்ப்புக் குரல்கூட எழுப்பவில்லை.!!

ட்விட்டரில் ஒத்துமை இல்லையோ..?

சுரேஷ் ஸார்..

வழக்கம்போல இந்தச் சண்டையும் சப்புன்னு முடிஞ்சதால எனக்கு கொள்ள வருத்தம்..!

என்னமோ போங்க..!

பதிவை நீக்க மாட்டேன் என்று உறுதி மொழி தந்ததற்காக உங்களுக்கு எனது நன்றிகள்..!

PRABHU RAJADURAI said...

முதலில் இந்த டிவிட்டர் என்றால் என்ன? யாஹூ மெசேஜ் மாதிரியா?