Tuesday, April 15, 2008

Vantage Point - அசர வைத்த திரில்லர்

பொதுவாக எனக்கு ஆக்ஷன் படங்கள் பார்க்கப் பிடிக்கும். அதிலும் சுவாரசியமான, வேகமான திரைக்கதை என்றால் கதை பெரிதாக இல்லாததைதையும் மெலிதான லாஜிக் மீறல்களையும் கூட மன்னித்து பார்த்து மகிழ்வேன். ஷகிலா படமென்றாலும் கூட திரைக்கதை சுவாரசியமாக இல்லை என்றால் பிட்டுக்காக காத்திருக்காமல் எழுந்து சென்று விடுவேன். :-)


vantage point-ன் குறுந்தகடு சரியாக இருக்கிறதா என்று சோதிப்பதற்காக பா¡க்க ஆரம்பித்தவன் படம் முடியும் வரை என்னால் தொலைக்காட்சியின் இயக்கத்தை நிறுத்தத் தோன்றவில்லை. அப்படி ஒரு வேகமான படமாக இருந்தது vantage point.

vantage point


வி.ஐ.பி ஒருவரை கொல்வதற்கான (வேறு யார்.. அமெரிக்க அதிபர்தான்) முயற்சி நடக்கிறது. ஸ்பெயினில் நடக்கும் தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அமெரிக்க அதிபர் உரையாட ஆரம்பிப்பதற்கு முன் சுடப்படுகிறார். கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் செய்தி தொலைக்காட்சி நிறுவனத்தின் (GNN) பரபரப்பான இயக்கங்களோடு தொடங்கும் இத்திரைப்படம், சம்பவம் நடப்பதற்கு சரியாக 23 நிமிடங்களுக்கு முன்பான நிகழ்வை, சம்பந்தப்பட்ட சுமார் எட்டு பேரின் flash back பார்வைகளில; சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்கிறது.

இந்தப்படத்தின் பெரிய பலம் படுவேகமான திரைக்கதையும், அதை சாத்தியமாக்கின ஒளிப்பதிவும், எடிட்டிங்கும்தான். ஒருவரின் பார்வையில் 23 நிமிடங்களுக்கான முன்பாக தொடங்கி சுமார் பத்து நிமிடம் வரை கொலைச்சம்பவம் சொல்லி முடிக்கப்பட்டவுடன் வேகமாக காட்சிகள் பின்னகர்ந்து இன்னொருவரின் பார்வையில் ஆரம்பிப்பது அட்டகாசமாக இருக்கிறது. (இதே உத்தியை மணிரத்னம் ஆய்த எழுத்துவில் சாவகாசமாக பயன்படுத்தியும் மீண்டும் மீண்டும் காட்டப்பட்ட சம்பவம் ஆயாசத்தையே அளித்தது.)

கூட்டத்தை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பெண்மணி குண்டு வெடிப்பில் கலங்கிப் போய் அழும் போது, அவருக்கு கட்டளைகள் வழங்கிக் கொண்டிருக்கும் பெண்மணி 'live ஆக ஓடிக் கொண்டிருக்கிறது... அழுகையை நிறுத்திவிட்டு சம்பவத்தைச் சொல்.." என்று கண்டிப்பான குரலில் கூறும் போது பரபரப்பான செய்திகளை வழங்கும் நிறுவனங்கள் மனிதத்தன்மையை இழந்து செயல்படுகின்றன என்பது ஒரு கீற்றாக வெளிப்படுகிறது.

சுடப்பட்டது அமெரிக்க அதிபரே அல்ல என்பது பெரிதும் ஆச்சரியத்தை தரவில்லையென்றாலும், நிஜமான அதிபர் காப்பாற்றப்படுவது பத்து வயது சிறுமி ஒருத்தியால் என்பது ஆச்சரியமாக இருந்தது. எப்படி என்று படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

suresh kannan

7 comments:

மயிலாடுதுறை சிவா said...

சுரேஷ் கண்ணன்

பார்த்துவிட்டு சொல்லுகிறேன்...

மயிலாடுதுறை சிவா...

பிரேம்ஜி said...

உண்மையில் அசர வைத்த த்ரில்லர். படத்தில் கிளைமாக்ஸ் இருக்கும். இது கிளைமாக்ஸ் சீனே படமான மாதிரி இருக்கு.

நந்தா said...

அப்படியே குறுந்தகட்டை ஒரு பார்சல் அனுப்புங்களேன்...

http://blog.nandhaonline.com

வால்பையன் said...

//உண்மையில் அசர வைத்த த்ரில்லர். படத்தில் கிளைமாக்ஸ் இருக்கும். இது கிளைமாக்ஸ் சீனே படமான மாதிரி இருக்கு.//

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது
தீவிரவாதிகளே தனக்கு துணை போனவர்களை கொள்வது

வால்பையன்

Anonymous said...

சுரேஷ்,

இதே உத்தி பழைய 'அந்த நாள்' என்ற சிவாஜி, பண்டரிபாய் நடித்த திரைப்படத்திலும் கையாளப்பட்டது. இயக்கம் S பாலசந்தர் (வீணை) என்று ஞாபகம். அதிலும், ஒரு கொலையை மூன்று நான்கு கோணங்களில் flash back மூலம் காண்பிப்பார்கள். Original style வேறு எதாவது மேலை நாட்டு படமாக இருக்கலாம்.

பிச்சைப்பாத்திரம் said...

//Original style வேறு எதாவது மேலை நாட்டு படமாக இருக்கலாம்.//

ராஜா,

அரதப்பழசான தகவல்தான். உங்களுக்கும் தெரிந்திருக்கும். இது ஜப்பானிய இயக்குநர் அகிரா குரோசாவின் 'ரஷோமான்' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட உத்திதான். விருமாண்டியிலும் பயன்படுத்தப்பட்டது.

அதே உத்தியை இன்னும் பார்வையின் கோணங்களை அதிகமாக்கி விறுவிறுப்பான திரைக்கதையாக்கி தனித்தன்மையுடன் தந்துள்ளனர் என்பதே இப்படத்தின் சிறப்பு.

Anonymous said...

My View on "Vantage Point" - The movie did not impress me as much as it did to you. My reason is after two times of going back and showing the bombing, it kinda struck me, oh no, the director is going to do this the whole movie through and sure enough he did, at one point I was so tired of it when he went back to the bombing and it was pretty much easier to guess what was coming next - all we had to do was expect everyone to be a bad person and bingo you were rite!!! Also the actual final(!) scene - what a coincidence everything happening at the same point right under the bridge!

I would say even "Die Hard" was a better choice than "Vantage Point" - just my opinion.