பொதுவாக மரணச் செய்திகளை இயல்பு குலையாத நிலையுடனேயே எதிர்கொள்ளும் மனத்திறம் என்னுடைய பதின்ம வயதிலிருந்தே ஏனோ எனக்கு வாய்த்திருந்தது. யாருடைய மரணமும் என்னை முற்றிலுமாக தடுமாறவைக்கவில்லை, என் தந்தையின் மரணம் உட்பட. ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுதான் என்றாலும் எழுத்தாளர் சுஜாதாவின் மரணம் குறித்த பிரசன்னாவின் குறுஞ்செய்தி வந்த போது பாசாங்கின்றி உண்மையிலேயே வருத்தமாக இருந்தது.
வெகுஜன பத்திரிகைகளிலேயே வெகுகாலம் முதிர்ச்சியின்றி உழன்று கொண்டு நேரத்தில் உன்னத இலக்கியத்தின் பால் என்னைத் திருப்பி விட்ட அவரது இலக்கிய அறிமுகக் கட்டுரைகளை நன்றியோடு இந்தச் சமயத்தில் நினைவு கூர்கிறேன். எழுதுவதற்கான ஆர்வமிருந்தும் தயக்கம் காரணமாக தள்ளி நின்ற நேரத்தில் அவரின் பல கட்டுரைகள் எனக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தன. என்னைப் போலவே பல நண்பர்களும் இதே திசையில் பயணித்தார்கள் என்று அறிந்த போது நெகிழ்ச்சி ஏற்பட்டது. பிற்பாடு எனக்கு அவரின் மீதான பல்வேறு விமர்சனங்களைத் தாண்டியும் மரியாதையும் அன்பும் நீடித்தது. தேசிகனின் முயற்சியில் அவரை நேரில் சந்தித்த தருணம் இந்தச் சமயத்தில் நிறைவை தருகிறது. அது நிகழாமல் போயிருந்தால் ஒரு குறையாக இருந்திருக்கும்.
"மரணம் உனது இடது கைக்கு அருகிலேயே இருக்கிறது" என்று யாருடைய மேற்கோளையோ குறிப்பிட்டு கணையாழியில் அவர் எழுதிய கட்டுரைதான் நினைவுக்கு வருகிறது.
'கண்கள் பனித்தன' 'நா தழுதழுத்தது' என்றெல்லாம் cliche-வான வாக்கியங்களை எழுதினால் அவரின் ஆன்மா கூட மன்னிக்காது என்பதால்.....
Good-bye ஆசானே.
suresh kannan
12 comments:
//கண்கள் பனித்தன' 'நா தழுதழுத்தது' என்றெல்லாம் cliche-வான வாக்கியங்களை எழுதினால் அவரின் ஆன்மா கூட மன்னிக்காது என்பதால்.....
//
எனக்கும் அப்படியே , ஆழ்ந்த வருத்தங்களுடன், அஞ்சலிகள்!
படிக்க முடியாமல் கண்ணில் நீர். என்றென்றும் மறக்க முடியாதவர்.
என்றும் இளமையான எழுத்து அவருடையது.
Good-bye, Sujatha!
செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.
அஞ்சலிகள்!
தேசிகனின் மூலம் சுஜாதாவை நேரில் சந்தித்து உரையாடின அந்த இனிமையான தருணத்தை இந்தச் சுட்டியின் வழியாக நினைவு கூர்கிறேன்.
http://www.desikan.com/blogcms/?item=0-2-80&category=sujatha
செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய விசிறிகளுக்கும்
மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்
ஆழ்ந்த அனுதாபங்கள் சுரேஷ் கண்ணன்...
மயிலாடுதுறை சிவா...
////'கண்கள் பனித்தன' 'நா தழுதழுத்தது' என்றெல்லாம் cliche-வான வாக்கியங்களை எழுதினால் அவரின் ஆன்மா கூட மன்னிக்காது என்பதால்.....
Good-bye ஆசானே. ////////
உண்மை, ஐந்து கோடித் தமிழர்களில் தமிழில் எழுதும் சுமார் இரண்டு கோடிப் பேருக்காவது அவர் மானசீகமான ஆசானே...
அவரை நிரம்பவும் தொலைத்திருக்கிறோம் !!!!!
Good-bye ஆசானே என்பது மட்டுமே இப்போது சொல்லத்தோன்றுகிறது.
நமது தலைமுறைக்கு அவரின் எழுத்து ஒரு "டிரென்ட் செட்டர்" தான்!.
அவருக்கு நமது அஞ்சலிகள்!
தென்றல் இதழில் உங்கள் அஞ்சலியும் வந்திருக்கு...வாழ்த்துக்கள்!
Post a Comment