தமிழ் இலக்கியத்தின் நவீன எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களுள் ஒருவரான எஸ்.ரா என்று அறியப்படும் எஸ்.ராமகிருஷ்ணன், தனது படைப்புகளுக்கென்று பிரத்யேக ஒரு இணையத்தளத்தை துவக்கியுள்ளார். அவரின் சிறுகதைகள், நேர்காணல்கள், உலக சினிமா கட்டுரைகள், அனுபவங்களைத் தவிர சமகால நிகழ்வுகளைப் பற்றிய அவரது கருத்துக்களும் உடனுக்குடன் வெளியாகும் என்று தெரிகிறது.
இணைய முகவரி: http://www.sramakrishnan.com
suresh kannan
3 comments:
தகவலுக்கு மிக்க நன்றி, ராமகிருஷ்ணனின் படைப்புக்களைத் தேடிப் படிக்கும் என்போன்றோருக்கு பேருதவி.
ம்... சுவையான ஆட்டம் தான்.ஜெயமோகன் தளத்துக்கு எதிர்வினையா? ஏற்கனவே எஸ்ரா இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தார் என்ற போதிலும் இந்த புதுப்பித்தல் ஜெயமோகன் தந்த உத்வேகம் போலும் :)
//ஏற்கனவே எஸ்ரா இணையத்தில் எழுதிக் கொண்டிருந்தார் என்ற போதிலும் இந்த புதுப்பித்தல் ஜெயமோகன் தந்த உத்வேகம் போலும் :)//
இதெல்லாம் ஓவராக இல்லை, இணையத்தில் எழுதிக்கிட்டு தானே இருந்தார், விட்டா யார் முன்ன வந்தாங்க இணையத்துக்கோ அவங்களை பார்த்து உத்வேகம் ஆகி தான் எல்லாம் வந்தாங்கனு சொல்விங்க போல.
பல நிகழ்வுகளும் தற்செயலாக சில நேரங்களில் அமையும், நமக்கு முன்னரே தெரிந்திருந்தாலும் செய்யாமால் விட்டுப்போய் இருப்போம். பின்னர் செய்யும் போது அடுத்தவர் செயலுடன் ஒத்துப்போய் அவரைப்பார்த்து செய்தது என்று , பொத்தாம் பொதுவாக சிலர் பாமரத்தனமாக சொல்ல இடம் வகுக்கும் என்பது தற்செயலின் விதி :-))
எஸ்.ரா , கொஞ்சம் நாடோடி டைப், சரியாக நியமித்துக்கொள்ள மாட்டார் தன் போக்கை என்று கேள்விப்பட்டேன்.
ஜெயமோகன், எப்படினு எனக்கு தெரியாது, ஆனால் அவர் செயல்களைப்பார்த்தால் முன்கூட்டியே இப்படிலாம் திட்டம் போடுவாரோனு தோணும்.
உ.ம். சுரா இறந்த சில நாட்களிலே சுரா மலர் ஒன்று போட்டு அதில் விரிவாக எழுதினார், ஜெயகாந்தன் கூட சுரா இறப்பதற்கு முன்னரே எழுதி வைத்திருந்தார் போலனு சொன்னார் :-))
Post a Comment