சமயங்களில் ஒரு குறிப்பிட்ட திரையிசைப் பாடல் புயல் போல் நம்மை ஆக்ரமித்துக் கொள்ளும். நாள் முழுவதும் அதையே முணுமுணுத்துக் கொண்டிருப்போம். நாம் முணுமுணுப்பை நிறுத்தினால் கூட அது தொலைவில் எங்கோ ஒலித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றும். பொதுவாக இதில் மெல்லிசைப் பாடல்களே தன்னிச்சையாக தேர்வாகும் என்றாலும் சமயங்களில் வேகதாளயிசைப் பாடல்களும் சேர்வதுண்டு.
அவ்வகையில் மன்மதன் அம்பு' திரைப்படத்தின் WHO IS THE HERO பாடலை நாளெல்லாம் கேட்டுக் கொண்டும் முணுமுணுத்துக் கொண்டும் இருக்கிறேன். ஏன் இது இத்தனை தீவிரமாக எனக்குப் பிடித்துப் போனது என்பது எனக்கே விளங்கவில்லை. நான் இவ்வாறு துவக்கத்தில் விரும்பும் பாடல்கள் பொதுவில் நிச்சயம் ஹிட்டாகாது. பொதுவில் நன்றாக ஹிட்டான 'நாக்கு முக்கா' போன்றவற்றைகளைக் கேட்டால் எனக்கு கொலைவெறியே வரும். அப்படி ஒரு ராசி. 'சத்தம் போடாதே' படத்தில் சுதா ரகுநாதன் பாடிய இந்தப் பாடல் நிச்சயம் வெற்றி பெறும் என்று இங்கு எழுதியிருந்தேன். கர்நாடக இசையோடே பெரிதும் தொடர்புப்படுத்தி அறியப்பட்டிருந்த சுதா, அதிலிருந்து விலகி இந்த வேகதாளயிசைப் பாடலை பாடியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இன்றைக்கு இது எத்தனை பேருக்கு நினைவிருக்கும்?.
WHO IS THE HERO-வை நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா பாடியிருக்கிறார். இவர் ஒரு பாப் இசைப் பாடகி என்பதையும் முன்னமே சில திரையிசைப் பாடல்களை பாடியிருக்கிறார் என்பதை அறிந்திருந்தாலும் இதைக் கேட்ட பின்புதான் அவரைப் பொருட்படுத்தி கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
தமிழ்த்திரையில் ஒரு காலகட்டத்தில் பெரும்பாலும் பாலு - ஜானகி கூட்டணியே தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலை மாறி ரகுமானின் வருகைக்குப் பிறகுதான் கார்த்திக் உள்ளிட்ட பல புதிய இளம் பாடகர்களின் மீது வெளிச்சம் பரவியது. உதித் நாராயணன், சுக்விந்தர் சிங், ஷ்ரேயா கோஷல் என்று வடக்கிலிருந்தும் சிலர் இங்கு பாடுவது வழக்கமாக ஆனது. புதுக்குரல்களை தொடர்ந்து ரகுமான் முயன்று கொண்டேயிருக்கிறார். ரகுமானுக்குப் பிறகு இதை மற்ற இசையமைப்பாளர்களும் பின்பற்றி வருகின்றனர். இதிலுள்ள மிகப் பெரிய பிரச்சினை, அவர்களின் முறையற்ற தமிழ் உச்சரிப்புதான். பல இசையமைப்பாளர்கள் இதை கண்டு கொள்வதேயில்லை. அட்சரம் பிசகாமல் ஹிந்தி மொழியில் பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் போன்றவர்களால் பாட முடிந்தாலும் அங்குள்ள இனவாத அரசியல் அவர்களை அங்கு நீடிக்க விடாமல் துரத்தியது. ஆனால் இங்கு தமிழ்க் கொலை செய்யப்பட்டும் தொடர்ந்து அந்த பாடகர்களுக்கே வாய்ப்பு தரப்படுவது துரதிர்ஷ்டம்.
ஜாஸ் இசை வகையில் அமைந்திருக்கும் இதை ஆண்ட்ரியா effortless ஆக அநாயசமாக தடங்கலில்லாமல் பாடியிருக்கிறார். இடையில் வரும் பேய்ச்சிரிப்பும் உற்சாகமாத்தான் இருக்கிறது. உச்சஸ்தாயியில் சுருதி விலகாமல் இவர் லாவகமாக பாடியதைக் கண்டு "என்னால் நிச்சயம் முடியாது" என்று கமல் வியந்ததாகக் கூறப்படும் ஒரு trivia உண்மையா என தெரியாது. "எம்.எஸ்.வி. இளையராஜா வரிசையில் தேவி ஸ்ரீ பிரசாத் வரக்கூடும் என்று இசை வெளியீ்ட்டு விழாவில் கமல் சொன்னது அதீதம் என்றாலும் இந்த வரிசையில் ரகுமானை வேண்டுமென்றே தவிர்த்ததில் என்ன அரசியலோ?.
தேவி ஸ்ரீ பிரசாத்தும் பாப் இசைக் கலைஞராகவே தன் பயணத்தை துவங்கியவர் என்றாலும் இங்கு அதிக வாய்ப்பில்லாத நிலையில் ஆந்திர திரைக்குச் சென்று அங்குள்ள கலாசாரத்திற்கேற்ப காரம் சாரமாக 'செம குத்துடன்' இசையமைத்து புகழின் உச்சிக்குச் சென்று விட்டார். ஏறக்குறைய எல்லாப்பாடல்களும் ஓரே மாதிரியான வேக தாளயிசையில் உருவாக்கப்படும் (உதா: 'குண்டுமாங்கா தோப்புக்குள்ளே) அவரது பாடல்களை பொதுவாக நான ரசிப்பதில்லை. ஆனால் மன்மதன் அம்பு அவரது வழக்கமான பாணியிலிருந்து விலகி ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளதிற்குக் காரணம் கமலாக இருக்கலாம். சுந்தர்.சி எடுத்த 'அன்பே சிவம்' போல. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இன்னொரு பரிமாணத்தை இந்த ஆல்பம் நம் முன் வைக்கிறது.
பெரும்பாலான பாடல்களை கமலே எழுதி பாடியும் இருக்கிறார். 'நீல......... வானம்' என்று அவர் இழுக்கும் இழுப்பில் அது 'நீள...' வானமாக மாறும் அதிசயமும் (?!) நிகழ்கிறது. கமல் கவிதையில் பச்சையான முற்போக்கு வாசனை. திரிஷா கவிதையை பள்ளிக்கூட மாணவி போல் ஒப்பித்தாலும் அவர் குரலிலுள்ள feminine என்னை வசீகரிக்கிறது.
இருந்தாலும் இந்த ஆல்பத்தில் என்னை அதிகம் கவர்ந்த பாடல் இதுதான். அக்கம் பக்கத்தில் சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லை என்று இந்தப் பாடலை உயர் டெசிபல் சத்தத்தில் கேட்டுப் பாருங்கள்.
suresh kannan
Saturday, December 18, 2010
SOUL KITCHEN (2009)
சென்னையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள முடியாதபடிக்கு சில பல பிரச்சினைகள்.தவிரவும்
1) வார நாட்களில் அலுவலக நுகத்தடியிலிருந்து விடுபட முடியாமலிருத்தல்.
2) திரையரங்களுக்கு இடையே பதட்டத்துடன் ஷட்டில் காக்காக ஓட வேண்டிய நிர்ப்பந்தம். போக்குவரத்திற்கு பேருந்து அல்லது ஆட்டோவை நம்பியிருக்கும் எனக்கு இது மிகக் கஷ்டம். வரும் வருடங்களில் நாலைந்து தியேட்டர்கள் ஒரேயிடத்தில் உள்ள காம்ப்ளெக்ஸை இதற்கு ஏற்பாடு செய்தால் நலமாக இருக்கும்.
3) பொது இடத்தில் சினிமா பார்க்கும் போது ஏற்படும் சில அசெளகரியங்கள். உலக சினிமா பரிச்சயமுள்ள பார்வையாளர்களின் இடையில் கூட திரையிடலின் போது சளசளவென பேசிக் கொண்டும், குறுக்கே நடந்து கொண்டும், தொலைபேசி உபயோகித்துக் கொண்டும் இடையூறு செய்யும் ஆசாமிகள் மீது கொலைவெறி வரும். ('மேட்டர்' காட்சிகளில் மாத்திரம் இவர்கள் படு அமைதியாகி விடுவார்கள்).
4) என்னதான் சினிமா மீது பிரேமையிருந்து தினசரி ஒன்று பார்க்கும் வழக்கமிருந்தாலும் ஒரே நாளில் நாலைந்து சினிமாவாக அதுவும் தொடர்ந்து ஒரு வாரம் பார்த்தால் மண்டைக்குள் போலிஷ், செக், ஸ்பானிஷ் என்று விதவிதமான ஒலிகள் சடுகுடு ஆடி பேஸ்து அடித்துவிடும். (தினசரி சீரியல் பார்க்கும் வழக்கமுள்ளவர்கள் (பெண்கள் என எழுத நினைத்து சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டேன்) அரை மணி நேர இடைவெளிகளில் அடுத்தடுத்த தொடர்களுக்குள் தம்மை இயல்பாக பொருத்திக் கொள்வதை பார்க்கும் போது நெஞ்சுருக அவர்களை வணங்கவே தோன்றுகிறது).
இப்படி நிறைய நொட்ஸ் & நொள்ளைஸ் சொன்னாலும், திருவிழாவில் கலந்து கொண்டு கும்பலில் ஐக்கியமாகி கொண்டாடுவது என்பதும் வாழ்க்கையின் பிரத்யேக ருசிதான்; உன்னத அனுபவம்தான்.
சென்னை சர்வதேச திரைவிழாவின் துவக்க நாளின் திரையிடலாக ஜெர்மனி திரைப்படமான SOUL KITCHEN தேர்வு செய்யப்பட்டிருந்தமையால் ஆர்வத்துடன் அதை இணையத்தில் தேடிப் பார்த்தேன்.
அயல் சினிமாக்களில் என்னை குழப்பும் பல விஷயங்களில் ஒன்று, எப்படி ஒரு சினிமாவை 'காமெடி' என்ற வகைமையில் சேர்க்கிறார்கள் என்பது. 'அண்டா தலையா, மாங்கொட்டை தலையா' என்றே அதிரடியாக பார்த்துப் பழகின எனக்கு மொத்தப்படத்திலும் இரண்டே இரண்டு இடத்தில் மாத்திரம் புன்னகை பூக்க வைக்கிற சினிமாவை காமெடி என்று ஒப்புக் கொள்வது சங்கடமாக இருக்கிறது. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் சாப்ளின் வகை ஸ்லாப்ஸ்டிக் காமெடி, பிளாக் காமெடி, டயலாக் காமெடி,செக்ஸ் காமெடி என்பதெல்லாம் வேறு. படம் முழுக்க அடிநாதமாக மெலிதாக நகைச்சுவை இழையோடும் படங்களும் வேறு. நகைச்சுவைக்கான தடயங்களே இல்லாத ஒன்றை எப்படி காமெடி என்று அழைக்கிறார்கள் என்பதில்தான் குழப்பம்.
இத்திரைப்படத்தையும் காமெடி என்றே நினைத்து பார்க்க அமர்ந்தால் ஒரே ஒரு இடத்தில் மாத்திரம் நான் சிரித்தேன், இல்லை புன்னகைத்தேன். அவ்வளவுதான்.
முதுகுவலியால் தொடர்ந்து அவதிப்படும் ஜினோஸ், ஒரு பெண் பிசியோதெரப்பிஸ்டிடம் போகிறான். அண்டர்வேர் தவிர மற்றவற்றை உருவி அவனை மேஜையில் மல்லாக்க படுக்க வைத்து இடுப்புப் பகுதியில் தசைகளை உருவி மெல்ல விடுகிறாள். சங்கடத்தால் நெளியும் ஜினோஸ், நான் வேறு வேண்டுமானால் திரும்பி படுத்துக் கொள்ளவா? என்று கேட்கிறான். "இங்கே மசாஜ் செய்வது மிக அவசியமானது" என்கிறாள். "மன்னிக்கவும். தவிர்க்க முடியவில்லை. எனக்கு சங்கடமாக இருக்கிறது" என்கிறான்.
அடுத்த காட்சி இரண்டு பேரையும் மிட்-ஷாட்டில் காண்பிக்கிற போதுதான் தெரிகிறது, அவனின் குறி விரைப்படைந்து நெட்டுக்குத்தலாக நிற்கிறது. "இதற்காக நீ மகிழ்ச்சியடையவே வேண்டும். ஆரோக்கியமாக இருக்கிறாய் என்று அர்த்தம்".
இதைத் தவிரை மருந்திற்குக் கூட நான் வேறெங்கும் நான் புன்னகைக்கவில்லை.
சரி. பரவாயில்லை. இனி திரைப்படத்தினுள் நுழைவோம். ஆகோ ஓகோவென்று புகழ வேண்டிய படமில்லை இது. அதே சமயத்தில் மோசமானதாக நொந்து போகச் செய்யும் உருவாக்கமும் அல்ல.
தன் வாழ்வின் பெரும்பாலான தருணங்களில் தோல்வியையும் துரோகத்தையும் ஏமாற்றத்தையும் சந்திக்கும் ஒருவன் எப்படி அதிலிருந்து மீள்கிறான் என்பது இப்படத்தின் மையம். அதற்காக 'வெற்றி நிச்சயம்' என்று ஒரே பாடலில் எல்லா வேலைகளையும் செய்து செல்வந்தனாக ஆகும் அபத்தமாக இதைப் புரிந்து கொள்ளக்கூடாது. படம் ஒரு நதி போல இயல்பாக அதன் போக்கில் ஓடுகிறது. படத்தின் இறுதியில் வரும் ஏலக்காட்சியின் நாடகத்தனத்தைத் தவிர வேறெங்கும் தர்ககப் பிழைகளே இல்லை.
ஜெர்மனியில் குடியேறியிருக்கும் கிரேக்க வம்சாவளியான ஜினோஸ், ஒரு பழைய தொழிற்சாலையை உணவகமாக மாற்றி சிரமத்தில் நடத்திக் கொண்டு வருகிறான். வரி பாக்கிக்காக அவனைத் துரத்தும் அரசு அதிகாரிகள், உணவக நிலத்தை அவனிடமிருந்து பிடுங்குவதற்காக தொடர்ந்து சதி செய்யும் பால்ய நண்பன், சிறையிலிருந்து பரோலில் வரும் பெர்றுப்பில்லாத சகோதரன், வேற்று நாட்டில் சீனக்காரனை தேடிக் கொள்ளும் காதலி, படத்தின் பெரும்பாலும் துரத்தும் முதுகு வலி போன்ற துயரங்கள் அவனைச் சூழ்கின்றன.
இதிலிருந்து மெல்ல மெல்ல அவன் விடுபடுவதை மீதிப்படம் காட்டுகிறது.
இதில் செஃப் ஆக வரும் சாய்ன் ஒரு சுவாரசியமான கதாபாத்திரம். மாற்றங்களை விரும்பாமல் ஒரே மாதிரியான உணவு உண்பவர்களை, Taste Fascists என திட்டுகிறான். உணவு தயாரிப்பை அழகியலோடு இணைத்து சிந்திக்கும் இவன் தன் பிடிவாதத்திற்காக பணியை இழக்க நேரிடுகிறது. அமிதாப் பச்சனின் சீனி கம்'மை நினைவுப்படுத்துவது போல் ஒரு காட்சி வருகிறது.
ஸ்பானிய உணவை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர் ஒருவர், அது சூடாக பரிமாறப்பட வேண்டும் என விரும்புகிறார். வெளியே வந்து அவருடன் விவாதிக்கும் அவன் பாரம்பரிய முறைப்படி அது குளிர்ச்சியாகத்தான் பரிமாறப்பட வேண்டும் என்கிறான். 'இதை சூடாக்கித் தருவதில் உனக்கென்ன பிரச்சினை?' என்று கேட்கும் வாடிக்கையாளரிடம் "எப்பவாவது நான் உங்கள் பணியில் வந்து ஆலோசனை சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?" என்கிறான். விவாதத்தின் உச்சமாக சமையல் கத்தியை நடு மேஜையில் ஓங்கி குத்தி விட்டு "வேண்டுமானால் என் விந்தை அதில் விடுகிறேன். சூடாகட்டும்' என்று சத்தமிட்டு பணியை இழக்கிறான். இவனை தன்னுடைய உணவகத்தில் பணியில் அமர்த்திக் கொள்ளும் ஜினோஸ், மரபான வாடிக்கையாளர்களிடம் முதலில் தோல்வியைச் சந்தித்தாலும் புதிய வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுகிறான்.
இத் திரைப்படத்தின் இயக்குநர் Fatih Akın. துருக்கி வம்சாவளியைச் சேர்ந்த இவர் ஜெர்மனியில் பிறந்தவர். அயல்தேசத்தில் குடியேறியவர்களின் கலாசார முரண்கள், அடையாள குழப்பங்கள், சிக்கல்கள், விரோதங்கள் போன்றவை இவர் படங்களின் அடிநாதமாக இருக்கும்.
இவரின் முந்தைய படமான The Edge of Heaven (2007) திரைப்படத்தைப் பற்றி முன்பு இங்கு எழுதியிருக்கிறேன். Head-on (2004)-ம் முக்கியமான திரைப்படம்.
SOUL KITCHEN திரைப்படத்தில் இசை ஒரு முக்கியமான பணியை வகிக்கிறது. இவனது உணவகத்தை இசைக்குழு ஒன்று தங்களது பயிற்சிக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுவே உணவகத்தின் வெற்றிக்கு பின்னர் அடித்தளமாக அமைகிறது. இத்திரைப்படத்தின் இசைக்காக இரண்டு வருடங்களை செலவழித்திருக்கிறார் இயக்குநர். புலம்பெயர்ந்தவர்களின் துயரங்களைச் சொல்லும் பாடல்களை தேடி அதிக பொருள் செலவில் உரிமை பெற்று பின்னர் ஒவ்வொரு பாடலையும் பலமுறை கேட்டு அதற்கேற்ப திரைக்கதை அமைத்திருக்கிறார். சீரியஸான படங்களை இயக்கி விட்டு 'ஓர் ஆறுதலுக்காக' இந்த நகைச்சுவைப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இவருடன் இணைந்து திரைக்கதையை எழுதின Adam Bousdoukos-ன் உண்மையான உணவக அனுபவங்களைக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
வெனிஸ் திரைப்பட விழாவில் விருது பெற்ற இத்திரைப்படத்தை அதன் சிறப்பான திரைக்கதைக்காகவும் இசைக்காகவும் நிச்சயம் பார்க்கலாம்.

Subscribe to:
Posts (Atom)