Thursday, July 28, 2011

மதிய நேர நாய் பிழைப்பு (DOG DAY AFTERNOON)



இந்தச் சுமாரான படத்தைப் பற்றி எழுத ஒரே ஒரு காரணம் - அல்பசினோ.

இரண்டு அமெச்சூர் குற்றவாளிகளால் 1972-ல் ப்ரூக்ளின் நகரில் நிகழ்ந்த வங்கிக் கொள்ளை முயற்சியான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமிது.

ஒரு மதிய நேரத்தின் சாவகாசமான காட்சிகளோடு துவங்குகிறது திரைப்படம். ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு தனது இரு நண்பர்களோடு நுழைகிறார் அல்பசினோ. (சன்னி). துவக்கத்திலேயே ஒருவன் பயந்து ஓடிவிட, அதீத பதட்டத்தோடு தனது சாகசத்தை தொடர்கிறார் அல்பசினோ. அதிலிருந்து படம் முழுவதும் அவர் ராஜ்ஜியம்தான். வங்கியில் பணமில்லாததைக் கண்டு எரிச்சலடைவதும் வங்கி ஊழியர்களை கருணையுடன் மிரட்டுவதும் (?!) அதீத ஜாக்கிரதையாய் இருந்தும் சில நிமிடங்களிலேயே காவல்துறை வங்கிக் கட்டிடத்தை சூழ்ந்து கொண்டதைக் கண்டு புரியாமல் பயப்படுவதும், எல்லாமே சொதப்பினாலும்.. ஏதோவொரு நம்பிக்கையில்அங்கிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளை தனது அரைகுறை நம்பிக்கைத் தோழனுடன் முயல்வதும்...



படம் முழுக்க தனது முத்திரையை அழுத்தமாக பதித்திருக்கிறார் அல்பசினோ. அவருக்கென்ற உருவாக்கப்பட்ட பாத்திரம் போல் கச்சிதமாக நிகழந்திருக்கிறது உண்மைச் சம்பவம். பிரதான பாத்திரத்தின் அக உணர்வுகளை துளிக்கூட குறையாமல் பார்வையாளர்களுக்கு கடத்த முயல்வது ஒரு சிறந்த கதைசொல்லியின் அடிப்படை தகுதி. நடிகரும் இயக்குநரும் கைகோர்த்துக் கொண்டு இதை சாதித்திருக்கிறார்கள்.

சீரியஸான பாவனையில் இயங்கும் இந்தப் படத்தை பல இடங்களில் சிரித்துக் கொண்டே பார்க்கலாம். அல்பசினோவின் பதட்டம் நமக்குச் சிரிப்பையும் பரிதாபத்தையும் ஒருசேர வழங்குகிறது. இந்த உணர்வையே வங்கி ஊழியர்களும் அடைந்திருக்கலாம். ஏனெனில் நம்பவே முடியாதபடி அந்த ஊழியர்களும் கொள்ளையர்களுடன்.. மன்னிக்க கொள்ளையடிக்க முயன்ற இந்தக் காமெடியர்களுடன் ஒத்துழைத்துச் செல்கிறார்கள். இது உண்மைச் சம்பவமாக இல்லாதிருந்தால்... 'என்னய்யா, லாஜிக்கே இல்லையே' என்று புறக்கணித்துச் சென்றிருக்கலாம். "I'm supposed to hate you guys [Wojtowicz/Naturile], but I've had more laughs tonight than I've had in weeks. We had a kind of camaraderie." என்கிறருக்கிறார் உண்மைச் சம்பவத்தை எதிர்கொண்ட வங்கியின் மேனேஜர். 12 ANGRY MEN போன்ற படத்தை இயக்கிய, Sidney Lumet இந்தப்படத்தை அதிக பட்ச நம்பகத்தன்மையுடன் உருவாக்கியிருக்கிறார். மதியத்தில் துவங்கி நள்ளிரவைக் கடந்து முடியும் இத்திரைப்படத்தின் இயங்கும் காலம் மிகச் சீராக பின்பற்றப்பட்டிருக்கிறது. ஒப்பனையும் கூட.

அலபசினோவின் ரசிகர்கள் கொண்டாடும்/கொண்டாட வேண்டிய படமிது.


தொடர்புடைய பதிவுகள்:

பெண் (நறுமண) வாசனையும் அல்பசினோவும்


ஒரே அறையில் எடுக்கப்பட்ட முழுத் திரைப்படம்

suresh kannan

13 comments:

Raj Chandra said...

'Dog Day' என்பது பொதுவாக மிகக் கடுமையான கோடை நாள் என்பதற்கான slang. இந்தப் படம் அல் பாசினோவின் மிக முக்கியமான படங்களில் ஒன்று ( Sidney Lumet-ன் கூட)

Unknown said...

இந்தப்படத்தைப் பற்றி இன்னும் கூடச் சொல்லலாம். வங்கிக்கொள்ளையைக் கேள்விப்பட்டு வேடிக்கைப் பார்க்க கூடும் கூட்டத்திற்கு, அல்பசினோவின் மீது உருவாகும் கதாநாயக பிம்பமும் அவர்களின் ஆதரவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அதை தனக்கு சாதகமாக மாற்றும் அவரின் சாதூரியம், மிக மிக சுவாரசியமான இடங்களில் ஒன்று.

உண்மையில், நாமும் கூட அந்த வங்கிக் கொள்ளையில் பங்கு கொண்டதைப்போன்ற ஒரு நிலையை பார்வையாளனான நமக்கு ஏற்படுத்தி விடுகிறது இந்தப்படம். அதற்குகான காரணம் அல்பசினோவி நடிப்புதான். இந்தப்படத்தைப்பார்த்த பிறகு, நடிப்பு என்பது எவ்வளவு உண்ணதமானது, எவ்வளவு உயர்ந்த கலைத்திறமை என்பதை உணரமுடியும். எனக்கு கூட நடிக்கனும் என்னும் ஆசையை இந்தப்படம் தூண்டியது.(கவலைப்படாதீர்கள், அப்படியெல்லாம ஆகாது)

'The robbery should have taken 10 minutes. 4 hours later, the bank was like a circus sideshow. 8 hours later, it was the hottest thing on live T.V. 12 hours later, it was all history. And it's all true.' என்ற வரிகள் உண்மை என்பது படத்தைப்பார்த்தால் புரியும். பார்க்க வேண்டியப்படம்.

//பிரதான பாத்திரத்தின் அக உணர்வுகளை துளிக்கூட குறையாமல் பார்வையாளர்களுக்கு கடத்த முயல்வது ஒரு சிறந்த கதைசொல்லியின் அடிப்படை தகுதி. நடிகரும் இயக்குநரும் கைகோர்த்துக் கொண்டு இதை சாதித்திருக்கிறார்கள்.// உண்மைத்தான்

நன்றி நண்பரே.

Senthil said...

good review!!!!!!11

al pacino is a great actor.
thanks
senthil,doha

Anonymous said...

இது ஒரு சிறந்த திரைப்படம்.நேரம் போவதே தெரியாது.இதன் சரியான மொழிபெயர்ப்பு..உஷ்ணம் மிக்க மதியநேரம்!

ஒரு request sureshji.

நீங்க படத்த நல்லா ரசிசிருக்கீங்கன்னு உங்க பதிவு சொல்லுது..அப்புறம் எதற்கு அந்த முதல் வரி?எதோ குற்ற உணர்வை மறைப்பது போல!

pl.do not be a hypocrite!

பதிவிற்கு நன்றி

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி:

படத்தின் தலைப்பை அப்படியே மொழிபெயர்ப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?

குற்றவாளிகள்,காவல் அதிகாரிகள்,மாட்டிக் கொண்ட ஊழியர்கள் என அனைவருமே அந்த மதிய நேரத்தில் அவரவர் நோக்கில் அவதி்ப்படுவதால் தலைப்பிற்கு தொடர்பானதாக 'நாய் பிழைப்பு' என்று தோன்றியதை வைத்திருக்கிறேன். எழுதியிருப்பதை சற்று மாற்றியும் யோசித்துப் பாருங்கள்.

அனானி நண்பரே: படம் மிகவும் பிடித்திருந்தால் அதை வெளிப்படுத்துவதில் ஏன் எனக்கு தயக்கமிருக்கப் போகிறது? அல்பசினோவின் நடிப்பைத் தவிர இயக்குநர் காட்சிகளை சுவாரசியமாக முன்னெடுத்துச் சென்றதையும் தவிர இந்தப் படத்தில் வேறு ஒன்றும் முக்கியமானதில்லை என்பது என் அவதானிப்பு. எனவேதான் 'சுமாரான' என்று எழுதியிருக்கிறேன். இதில் என்ன பாசாங்கு?

Anonymous said...

http://www.imdb.com/title/tt0397101/

i wathed skeletong key movie...interesting..thriller

Anonymous said...

The Heat -
An action movie with the deadly combination of Al Pacino + Robert DeNiro in the opposite sides...
நீங்கள் பார்த்து ரசித்து, அதைப்பற்றி எழுதி இருப்பீர்கள் என நினைத்தேன்.
check it out.

Puduvai siva.

Jegadeesh Kumar said...

அன்புள்ள சுரேஷ் கண்ணன்,

என் நினைவு சரியாக இருந்தால், நீங்கள் கொடுத்த ஒரு வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை என்று நினைக்கிறேன்.

அதாவது In the mood for love பற்றி ஒரு பகுதி மட்டும் தான் எழுதியுள்ளீர்கள். நான் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, நீங்கள் என்ன எழுதப் போகிறீர்கள் என்று ரொம்ப நாள் காத்துக் கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில் கெய்ஷாவின் நினைவுகள் (memories of a geisha) என்ற நாவலை வாசித்தேன்.
http://jekay2ab.blogspot.com/2011/07/blog-post_31.html
அது திரைப்படமாகவும் வந்திருக்கிறதாம். நீங்கள் பார்த்து விட்டீர்களா?

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள ஜெகதீஷ்குமார்:

you made my day. அதை யாராவது நினைவுகூர்ந்து கேட்பார்களா என்று நானும் எதிர்பார்த்திருந்து பின்னர் நானே மறந்து போயிருந்த சமயத்தில் உங்கள் பின்னூட்டம். மகிழ்ச்சி. மீண்டுமொருமுறை பார்த்து விட்டு எழுதுகிறேன் நன்றி.

memories of a geisha பார்க்க வேண்டிய திரைப்படங்களின் வரிசையில் உள்ளது.

Anonymous said...

3 important essays about director stanley kubrick...

http://worldmoviesintamil.blogspot.com/2010/04/stanley-kubrick.html

http://worldmoviesintamil.blogspot.com/2010/04/1999-18-eyes-wide-shut.html

http://worldmoviesintamil.blogspot.com/2010/05/eyes-wide-shut-18-2.html

viki said...

அழ பசிநோவி வெறித்தனமான ரசிகர்களில் ஒருவன்.காட்பாதர் 1&2 இதுவரை பத்து முறையாவது பாத்திருப்பேன்.இந்த படம் அழ பசிநோவுக்காக பாக்கலாம்.john cazale பத்தியும் சொல்லியே ஆகணும்.நல்ல திறமைசாலி.காட்பாதரில் நடு சகோதரராக வருவார்.இதற்க்கப்புரம் Deer hunter இல நடித்து அதன் பின் புற்று நோயால் மாண்டு போனது வருத்ததிற்குரியது!

பிரசன்னா கண்ணன் said...

எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று "DOG DAY AFTERNOON".. நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் பார்த்தது..

Its a pure ONE MAN SHOW by "Al Pacino".. Especially, I loved the way he delivers the word "Attica" in front of the huge crowd & Asking the Police In Charge - Officer to kiss him..

என்ன, முழுக்க ரொம்ப விறுவிறுப்பா போற படம், கடைசி 3-4 நிமிஷத்துல டக்குன்னு முடிஞ்சு போய்ட்ட மாதிரி எனக்கு தோணிச்சு..

பிரசன்னா கண்ணன் said...

அப்படியே, SCARFACE பத்தியும் முடிஞ்சா எழுதுங்க தல.. Thats said to be the best Al Pacinio movie till date.. I ve seen it quite few times for his performance..