"இந்நாவலின் (அசடன் - idiot) கருத்து எனக்கு மிகவும் பிடித்தமான பழைய கருத்து. ஆனால் அது சிக்கலானதால் நீண்ட காலமாக நான் தொடவில்லை ; இப்போது அதனைத் தொட்டிருக்கிறேன் என்றால் மிகவும் மோசமான நிலைமையில் என்னைக் காண்பதாலேயே. நாவலின் பிரதான கருத்தாக்கம் நேரியலான நல்லவனை படைப்பதே. உலகத்தில் வேறெதுவும் அவ்வளவு சிரமமானதல்ல, குறிப்பாக தற்போதைய கால கட்டத்தில் நேரிய நல்லவனை படைக்க முயன்ற எல்லா எழுத்தாளர்களும் நமது எழுத்தாளர்கள் மட்டுமல்லாது அய்ரோப்பிய எழுத்தாளர்களும் எல்லாத் தடவைகளிலும் தோற்றுப் போயினர். அது ஒரு வரம்பற்ற காரியம். நல்லது என்பது ஒரு இலட்சியம் ; நம்முடையதும் பண்பாடடைந்த அய்ரோப்பாவினுடையதுமான அந்த இலட்சியம் இன்னும் ஈடேறவில்லை. உலகமெங்கிலும் ஒரே ஒரு நேரிய மனிதன் தான் இருக்கிறான். கிறிஸ்து... கிறித்துவ இலக்கியத்தில் உள்ள நல்லவகை மாதிரிகளில் மிகவும் பூரணமானது டான்க்விஜோட். ஆனால் அவன் அசட்டுத்தனமாக இருப்பதாலேயே நல்லவனாக இருக்க முடிகிறது. இதன் காரணமாகவே வெற்றி பெறுகிறது. தனது மதிப்பை உணராத நல்லவன் முட்டாளாக்கப் படுகையில் கருணையுணர்வு உண்டாகிறது. அதன் காரணமாக வாசகனிடம் இரக்கம் பிறக்கிறது. இந்தக் கருணை எழுவதே நகைச்சுவையின் இரகசியம். ஜீன்பால்ஜீனும் சக்திமிக்க முயற்சியே ; அவனது துரதிருஷ்டத்தின் அளவாலும் சமூகம் அவன் பால் காட்டும் அநீதியாலும் அவன் இரக்கத்தை உண்டு பண்ணுகிறான். எனது நாவலில் இந்த மாதிரி எதுவுமில்லை, ஒன்றுமில்லை, எனக்கே அது முழுத் தோல்வியாகிவிடுமோ என மிகவும் அஞ்சுகிறேன்.
- 'The Idiot' நாவலின் கருத்தாக்கம் குறித்து, ஒரு கடிதத்தில் தாஸ்தாயெவஸ்கி.
[நன்றி: தாஸ்தாயெவ்ஸ்கி - ஒரு தொகுப்பு - கோணங்கி - கல்குதிரை வெளியீடு - 1991)
3 comments:
ஹிஹி.. என் கேர்ள் ப்ரெண்டு 'ஸ்ஸdயூpid' என்றே சொல்லுவாள். அவள் stupid ன்னு சொல்லற அழகுக்காகவே இடியட்டா இருக்கலாம்ன்னு தோணும்...
பாத்தீங்களா தஸ்தாவஸ்கி, கல்குதிரை, கோணங்கி இப்படி எதுவும் யான் பேசல :)
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களும் சமீபத்தில் தன்னுடைய பதிவில் தஸ்தாவஸ்கியின் ஒரு novel குறித்து எழுதியிருக்கிறார். வெண்ணிற இரவுகள் என்று ஞாபகம்.
அன்பின் சுரேஷ் கண்ணன்,
தஸ்தயேவ்ஸ்கியின் இடியட் நாவல் அசடன் என்னும் தலைப்பில் என்னால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு மிக விரைவில் வெளி வர இருப்பதை அறிந்திருப்பீர்கள்.
http://www.masusila.com/2011/07/blog-post_04.html
http://www.masusila.com/2011/04/blog-post.html
இடியட் குறித்த உங்கள் இந்தப் பதிவையும் ,அகிரா குரோசாவா படம் பற்றிய பதிவையும் படித்தது மகிழ்ச்சியளித்தது.நாவலை இது வரை படித்ததில்லை என்று நீங்கள் சொன்னதால் என் மொழிபெயர்ப்பில் அதை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும்,அது பற்றியும் உங்கள் வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது என் அன்புக் கோரிக்கை.ஜெயமோகன் அதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார்.
குரோசாவாவின் இடியட் படம் டிவிடியில் கிடைக்கிறதா?தெரிந்தால் சொல்லுங்கள்.
எம்.ஏ.சுசீலா
Post a Comment