Saturday, September 19, 2009

அறிவுஜீவியும் பெனலோப் குருஸின் மார்பகங்களும்ஒரு மாறுதலுக்கு மொக்கையாகத் தோன்றியதொரு திரைப்படத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள உத்தேசம். 2008-ல் வெளிவந்த திரைப்படம் Elegy.

கல்லூரிப் பேராசிரியரும் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சிகளில் அடிக்கடி தோன்றுகிற அறிவுஜீவியான டேவிட், தம்மை மிகவும் கவர்கிற மாணவிகளை தேர்ந்தெடுத்து தனிமையில் வீழ்த்தி 'மேட்டர்' முடிந்தவுடன் மறந்துவிடுவதை பொழுதுபோக்காக கொண்டவர். சட்டத்தின் மீதுள்ள பயம் காரணமாக அவர்களின் மாணவப்பருவம் முடியும் வரை காத்திருந்து தம்முடைய வேலையை முடிக்குமளவிற்கு ஜாக்கிரதை உணாச்சி கொண்டவர். (Since they posted the sexual harassment hotline number down the hall from my office) தனிமை விரும்பி. மனைவியுடன் விவாகரத்து. இதனாலேயே கோபித்துக் கொண்டு அவருடன் விலகியிருக்கிற மகன்.

டேவிட் ஒரு மாதிரியான 'சினிக்'. சுயநலமி. அவருடைய பழைய மாணவி ஒருத்தி இன்னமும் தொலைவிலிருந்து பறந்து வந்து அவருடன் உறவு கொண்டவுடன் திரும்பி விடுகிற அளவிற்கு பெண்களைக் கவர்பவராக இருக்கிறார். இந்நிலையில் மேல்பட்டன் திறந்த நிலையில் அமர்ந்திருக்கிற ஸ்பானிய மாணவியான Consuelaவைக் கண்டவுடன் கட்டம் கட்டி விடுகிறார். அவளுடைய திறந்த மார்பகங்களை நேருக்கு நேராக சந்தித்து 'Work of Art' என்கிறார். இப்படி உடலை ஆராதிக்கிற மனிதரைக் கண்டவுடன் நெகிழ்ந்து போய் அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறாள் Consuela. ஒரு கட்டத்திற்குப் பிறகு அவளிடமிருந்து விலக முடியாமல் மலச்சிக்கல்காரன் போல் அவஸ்தைப்படுகிறார். என்றாலும் நண்பரின் தூண்டுதல் காரணமாக எப்படியோ இந்த தொடர்பு அறுபடுகிறது. பிரிவின் போதுதான் தாம் அவளை உண்மையாகவே காதலித்திருக்கிறோம் என்பதை உணர்கிறார். இரண்டு ஆண்டுகள் கழித்து Consuela பேராசிரியரை தொடர்பு கொள்கிறார். மார்பு புற்றுநோய் காரணமாக அவளுடைய இரண்டு மார்பகங்களும் அகற்றப்படவிருக்கின்றன என்பதை அறிந்து பேராசிரியர் துக்கப்படுகிறார். நினைவுச்சின்னமாக தம்முடைய மார்பகங்களை புகைப்படம் எடுத்துத் தரச்சொல்லி வேண்டுகோள் வைக்கிறாள் Consuela.

இப்படியாக போகிறது இந்த பாடாவதிப்படம். சுவாரசியமற்ற திரைக்கதை காரணமாக நத்தை வேகத்தில் செல்கிறது. டேவிட்டின் அரையிருட்டான வீட்டுக்குள்ளேயே பெரும்பாலும் காட்சிகள் இயங்குகிறது. என்றாலும் அற்புதமாக பதிவாகியிருக்கிற ஒளிப்பதிவிற்காக இதை சகித்துக் கொள்ளலாம்தான். டேவிட்டாக பென் கிங்க்ஸ்லி (ஆமாம். அவரேதான்) மிக அற்புதமாக நடித்திருக்கிறார். மிகவும் subtle ஆன திறமையான நடிப்பு மெதுவான திரைக்கதை ஓட்டத்தினால் வீணாகிப் போகிறது. அறிவுஜீவிப் பாத்திரம் அவருக்கு மிகப் பொருந்திப் போவது மட்டுமல்லாமல் அதற்காக தம்முடைய நியாயமான உழைப்பையும் தந்திருக்கிறார். Consuela-ஆக பெனலோப் குருஸ். இயல்பான நடிப்பு. இந்த மாதிரி வயசுப் பெண்கள் சமவயது ஆண்களை விட மாமா, தாத்தா வயது ஆண்களிடம் போய் எப்படி விழுகிறார்கள் என்பது ஆராயத்தக்கது. ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் பற்றின பிராய்ட்டின் கருத்தாக்கத்தில் இதற்கு விடை கிடைக்கலாம்.

எப்படி இந்தப் பதிவைப் படித்தீர்களோ அதே போன்றதொரு வெட்டியான நேரத்தில் வேண்டுமானால் இந்தப் படத்தைப் பார்த்துத் தொலைக்கலாம்.

suresh kannan

11 comments:

Indian said...

//எப்படி இந்தப் பதிவைப் படித்தீர்களோ அதே போன்றதொரு வெட்டியான நேரத்தில் வேண்டுமானால் இந்தப் படத்தைப் பார்த்துத் தொலைக்கலாம்.//

:)

ஆளவந்தான் said...

தலைப்புக்காகவே பாத்துடலாம் போல இருக்கு :)

மொக்கையா இருந்தாலும்... நாங்களும் பாத்த்துட்டு கன்ஃபர்ம் ப்ண்ணுவோம்ல

உண்மைத்தமிழன் said...

பெனலப்புக்காக பார்ப்போம்ல..!

இளவட்டம் said...

மொக்க படத்தையும் நல்லாத்தான் விமர்சனம் பண்றீங்க.பெனலோப்காக பாக்க வேண்டியதுதான்!

PRABHU RAJADURAI said...

"இந்த மாதிரி வயசுப் பெண்கள் சமவயது ஆண்களை விட மாமா, தாத்தா வயது ஆண்களிடம் போய் எப்படி விழுகிறார்கள் என்பது ஆராயத்தக்கது"

அதை விட முக்கியமாக ஆராய வேண்டியது, ஒரு ஸீன் படம் எப்போது அறிவுஜீவிப் படமாகிறது என்பது:-)

சென்ஷி said...

/எப்படி இந்தப் பதிவைப் படித்தீர்களோ அதே போன்றதொரு வெட்டியான நேரத்தில் வேண்டுமானால் இந்தப் படத்தைப் பார்த்துத் தொலைக்கலாம். //

இதற்கும்..

//இந்த மாதிரி வயசுப் பெண்கள் சமவயது ஆண்களை விட மாமா, தாத்தா வயது ஆண்களிடம் போய் எப்படி விழுகிறார்கள் என்பது ஆராயத்த//

இதையும் சம்பந்தப்படுத்தி பார்க்கும்போது வயிற்றெரிச்சலின் உச்சத்தில் எழுதிய பதிவு போல தெரிகிறது :)

rajkumar said...

எப்போது உன்னைப் போல் ஒருவன் விமர்சனம்?

பிச்சைப்பாத்திரம் said...

நண்பர்களுக்கு நன்றி.

//எப்போது உன்னைப் போல் ஒருவன் விமர்சனம்?//

ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை இந்தப்படம் குறித்து இணையத்தில் வந்து விழும் விமர்சனங்களைக் கண்டாலே தலையைச் சுற்றுகிறது. இதில் என்னையும் கோதாவில் குதிக்கச் சொல்கிறீர்கள்.

btw மூலத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டதால் இதைப் பார்க்கும் ஆவல் தோன்றவில்லை. ஒருவேளை பின்னர் இதைப் பார்த்தாலும் எழுதத் தோன்றுமா எனவும் தெரியவில்லை. ஆனால் நீங்கள் எதற்காக இவ்வளவு ஆர்வமாக கேட்கிறீர்கள் என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது. :-)

Saravanan said...

I should have read your review before renting this movie, it sucked big time!!!

ஆளவந்தான் said...

பாத்தாச்சுங்கோ :) பெனலப்பு இன்னொரு டன்லப்பு “அந்த” விசயத்துல

J. Ramki said...

ஓ.. எழுதியிருக்கீங்களா? படிச்சுட்டு பார்த்திருககலாம். பெனலோப் நிஜமாவே ஆறுதல்தான். மிட்நைட்டில் படத்தை பார்த்திருககலாமோ?!

இந்தப்படத்துககு பென்கிங்லி தேவையில்லை என்பது அடியேனின் கருத்து. அவர் ரோலில் பூரணம் விஸ்வநாதன் நடிச்சுருந்தா எனக்கு வாந்தி, பேதியெல்லாம் வந்திருக்கும்!