தமிழக அரசியல் களத்திற்கு இணையாக தமிழ் வலைப்பதிவு உலகிலும் சுவாரசியமான காட்சிகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அங்கே போட்டி போட்டுக் கொண்டு குப்பையை வாருகிறார்கள் என்றால், இங்கே போட்டி போட்டுக் கொண்டு குப்பையை கொட்டி வருகிறார்கள். குப்பை கொட்டுபவர்களை விரட்டும் பாவனையாக சிலர் கம்பும் கையுமாக கூக்குரலிட்டுக் கொண்டிருக்க, ... "நான் அப்போதிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். என் வீட்டு முன்னால தான் நெறைய குப்பை விழுது" என்று சிலர் போலியாக கூவிக் கொண்டு அபத்தமான முறையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்க, கவுன்சிலர்கள் மீட்டிங் மாதிரி இதன் மீதே குறைந்தது இதுவரை ஆயிரம் தீர்மானமாவது நிறைவேறியிருக்கும். ஆனால் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
போக்குவரத்து நிறைந்த சாலையில் செல்வதைப் போல, இணையமும் ஒரு திறந்த வெளிதான். போக்குவரத்து விதிகளை கவனமாக நிறைவேற்றுபவர்களும், சிவப்பு விழுவதற்குள் விரைந்துவிட வேண்டி அவசரமாக சென்று சிவப்பாக சிதறுபவர்களும், பின்னால் வருபவர்களைப் பற்றிய பிரக்ஞையேயின்றி "புளிச்'சென்று துப்புபவர்களுமாக...
நாம்தான் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. ஒழுங்கீனமாக நடப்பவர்களை ஒன்று சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும், அல்லது வேண்டுமென்றே சீண்டுபவர்களை நம் மெளனத்தால் புறக்கணித்தாலே போதும். பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். மாறாக சொறிய சுகமாக இருக்கிறதென்பதற்காக, இதையே செய்து கொண்டிருந்தால் வலைப்பதிவுக் களம் என்பதே ரணகளமான விஷயமாக மாறிவிடும்.........
என்று நண்பர் தொடர்ந்து பேசிக் கொண்டே போக, நான் இடைமறித்து "ஹலோ, இதைப் பற்றிப் பேச இது இடமல்ல. இதற்கென்றே வேறு நிறைய இடங்களும் ரசிகர் மன்றங்களும் இருக்கின்றன. அங்கே செல்லுங்கள். என்று இடை மறிக்க வேண்டிதாயிருந்தது. :-)
()
விஷயத்திற்கு வருவோம். கடந்த பதிவொன்றில் விளையாட்டாக ஒரு இலக்கியப் புதிரை போட்டு வைக்க, தொடரச் சொல்லி வந்த நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்கள் மூலமாக வெளிப்பட்ட அபரிதமான வரவேற்பு காரணமாக இன்னொன்றை இங்கே போட்டு வைக்கிறேன். அனைத்து சரியான விடைகளையும் முதலில் அளிக்கும் அதிர்ஷ்டசாலிகளுக்கு குலுக்கல் முறையில் அஜீர்ண மருந்து ஷாஷே ஒன்றும் யோகாசனங்கள் (பட விளக்கங்களுடன்) பற்றிய புத்தகம் ஒன்றும் கூரியரில் அனுப்பி வைக்கப்படும். (இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதீர்கள்). கூகுளிலும் விக்கிபீடியாவிலும் விடையை தேடுபவர்களுக்கு தண்டணைப் பரிசாக "வீராச்சாமி" படத்தின் dvd விரைவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
()
1) ஆண்டாள் எழுதிய திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
2) தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். சரி. இரண்டாவது நாவல் எது? எழுதியவர் யார்?
3) 'கல்மரம்' நாவலுக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்?
4) 'காக்காய் பார்லிமெண்ட்' எனும் தமிழின் முதல் அரசியல் சிறுகதையை எழுதியவர் யார்?
5) நோபல் பரிசுத் தொகைக்கான காசோலையை வங்கியின் பணமாக்காமல் கடைசிவரை புத்தக அடையாளமாய் பயன்படுத்திய எழுத்தாளர் யார்?
6) பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றுத் தந்த நாவல் எது?
7) " In Light of India" எனும் பிரபலமான கவிதையை எழுதிய லத்தீன் கவிஞர் யார்?
8) பொருனறாற்றுப் படை, பட்டினப்பாலை ஆகிய இரு பத்துப்பாட்டு நூல்களுக்கிடையேயான ஒற்றுமை என்ன?
9) மக்சீம் கார்க்கியின் "தாய்" நாவலுக்கு தமிழில் கவிதை வடிவம் தந்தவர்?
10) பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை இரண்டு முறை பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்?
(நன்றி: புத்தகம் பேசுது - ஜூலை 2007)
விடைகள் விரைவில்
11 comments:
1. did you mean thiruppaavai? theriyaathu :-)
2. sugunasundari
3. thilakavathi
4. bharathiyar
6. vaanam vasappadum
7. Octavia Paz
9. Kalaingar Mu.Karunanithi
//ஆண்டாள் எழுதிய திரைப்பாவையை//
//did you mean thiruppaavai?//
பிரகாஷ்,
பின்னூட்டத்திற்கும், எழுத்துப் பிழையை சுட்டிக் காட்டியதற்கும் நன்றி. (திருத்தி விட்டேன்)
8.கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளில் பாய்ச்சி செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக்கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.
நன்றி விக்கிப்பீடியா :-)
இந்தப் பதிவுக்கும் நமீதான்னு பதில் சொல்லலாமா? :)
என்னதிது? வெறும் இரண்டே இரண்டு பின்னூட்டங்கள்தானா? பதிவுலக சம்பிரதாயப்படி சம்பந்தமில்லாமல் ஒரு சர்ச்சையான தலைப்பை வேண்டுமென்றே வைத்தும் கூட இவ்வளவுதானா? ரொம்ப அநியாயமா இருக்கு. அடுத்த தலைப்பை இன்னமும் 'நச்'சென்று வைக்க வேண்டும் போல. :-)
கேள்விகளும் பிரகாஷின் பதில்களும் அருமை. (அதில் எவ்வளவு சரியானவை என்று தெரியாது). வீராச்சாமி dvd பரிசாகக் கிடைக்கப் போகும் (மேலே உள்ள) நபருக்கு எனது வாழ்த்துக்கள் :)
உங்கள் பதிவை கண்டதில் மகிழ்ச்சி. போலிகளை அவ்வளவு உடனடியாக எல்லாம் ஒழிக்க முடியாது. நாமாக அவர்களை விலக்கினால்தான் உண்டு. ஆர்வமூட்டும் உங்களது எழுத்துக்களை ஒன்றன்பின் ஒன்றாக வாசித்துக் கொண்டிருக்கிறேன். சிவாஜி குறித்த உங்கள் பார்வையிலும்.. திரைப்படங்கள் குறித்த உங்கள் அனுகுமுறையிலும் நான் முற்றிலுமாக உடன்படுகிறேன். மக்கள் ரசனை இதைதான் விரும்புகிறது. சந்தை நிலமையில் இப்படித்தான் படம் எடுப்போம் என்று சொல்வதெல்லாம்.. மக்களை ஏய்க்கும் வேளை. வெற்றிப்படங்களைத் தந்த இயக்குனர்களையோ அந்த நடிகர்களையோ இந்த முதலாளிகள் நாடுவதில்லை. இதில் வெற்றி மட்டும் நோக்கம் என்று கூறுவது சந்தேகத்திற்கு உரியதே.. மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் பண்பாட்டுச் சீரழிவும் அவர்களது நோக்கமாகும். சிவாஜி படம் ஏற்படுத்திய பரபரப்பில் பாதியைக்கூட அப்படமோ பாடல்களோ பெறவில்லை என்கிற யதார்த்தம் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டு இன்னும் அதனை ஊதிப் பெருக்குவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். காரணம் எந்த ஒரு நிகழ்வு குறித்தும் தரப்படும் புள்ளிவிபரங்கள்... சரியானதுதான் என்பதை ஆய்வு செய்து சரிபார்க்கும் சமூக அக்கறையுள்ள எந்த ஊடகமும் இல்லை என்பது நமது ஜனநாயகத்தின் ஒரு மிகப்பெரிய முரண்நகை.
போலிகளை ஒழிப்பதா? நெவர்!!!!
போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக்கணக்கு
புள்ளிராஜா
2). oru puLiya maraththin kathai
3). Thilagavathi
4) Annadurai
6) VAnam vasappadum
7). Octavia Paz
9). Mu.karunanidhi
10). Pirabanchan
பிரகாஷ்,
பாலராஜன் கீதா (உங்களுக்கு dvd விரைவில் அனுப்பி வைக்கப்படும். :-)
உற்சாகமாகவும் விரைவாகவும் பதில் தந்தமைக்கு பாராட்டுக்களும், நன்றியும்.
இலவசக் கொத்தனார், voice on wings, ஜமாலன், பாபு:
பின்னூட்டங்களுக்கு நன்றி.
விடைகள்
) ஆண்டாள் எழுதிய திரைப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
ஏ.கே. ராமானுஜம்
2) தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். சரி. இரண்டாவது நாவல் எது? எழுதியவர் யார்?
கமலாம்பாள் சரித்திரம், பி.ஆர்.ராஜம் அய்யர்
3) 'கல்மரம்' நாவலுக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்?
திலகவதி
4) 'காக்காய் பார்லிமெண்ட்' எனும் தமிழின் முதல் அரசியல் சிறுகதையை எழுதியவர் யார்?
சுப்பிரமணிய பாரதி
5) நோபல் பரிசுத் தொகைக்கான காசோலையை வங்கியின் பணமாக்காமல் கடைசிவரை புத்தக அடையாளமாய் பயன்படுத்திய எழுத்தாளர் யார்?
ஜார்ஜ் பெர்னாட்ஷா
6) பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றுத் தந்த நாவல் எது?
மானுடம் வெல்லும்
7) " In Light of India" எனும் பிரபலமான கவிதையை எழுதிய லத்தீன் கவிஞர் யார்?
ஆக்டோவியா பாஸ்
8) பொருனறாற்றுப் படை, பட்டினப்பாலை ஆகிய இரு பத்துப்பாட்டு நூல்களுக்கிடையேயான ஒற்றுமை என்ன?
இரண்டும் கரிகால் சோழனை புகழ்ந்து பாடி இயற்றப்பட்டவை
9) மக்சீம் கார்க்கியின் "தாய்" நாவலுக்கு தமிழில் கவிதை வடிவம் தந்தவர்?
மு.கருணாநிதி
10) பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை இரண்டு முறை பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்?
வே.ஸ்ரீராம்
//2) தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். சரி. இரண்டாவது நாவல் எது? எழுதியவர் யார்?
கமலாம்பாள் சரித்திரம், பி.ஆர்.ராஜம் அய்யர்
//
Are you sure? Is it usual ignorance (or arogance of ignoring)Tamil writings across the Palk Straight?
Sidhilevvai Maraicar wrote "AsanbEydaiya kathai" (circa 1885).
Post a Comment