Saturday, July 15, 2006

பார்த்ததில்... கேட்டதில்.... படித்ததில்..

ஆனந்தவிகடன் வார இதழில் "பார்த்ததில்... கேட்டதில்.... படித்ததில்.. என்றொரு பகுதியில் இசை, புத்தகம், திரைப்படம் என்றும் சம்பந்தப்பட்ட துறைகளில் பிரபலமானவர்களை, அவர்களுக்கு பிடித்தமான படைப்புகளை வரிசைப்படுத்தச் சொல்லி வெளியிடுகிறார்கள். இவ்வாறு கேட்கப்படுகிறவர்களில் எத்தனை பேர் இயல்பாகவும், வெளிப்படையாகவும் தங்களின் பட்டியலை சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை. மற்றவர்களின் பார்வையில் தம்முடைய ரசனை உயர்வாக தெரிய வேண்டும் என்கிற ஆசையினால், விரும்பிப் படிப்பது "சரோஜாதேவி"யாக இருந்தாலும் (இந்தப் பெயரில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒவ்வொருவர் எழுதிக் கொண்டிருந்தார்கள்) ஷேக்ஸ்பியரின் காவியங்கள்தாம் விரும்பிப் படிப்பது என்று ஜீலியஸ் சீசர் போல் கம்பீரமாக சொல்லிக் கொள்வார்கள்.

அவ்வாறில்லாமல் வெளிப்படையாக, தன்னிச்சையாக ஒருவரின் ரசனை வெளிப்படும் தருணத்தில் அவருடைய மனப்பான்மையை நம்மால் ஒரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். இப்போதைய நடைமுறையில் சொன்னால் ஒருவர் தனது செல்போனின் Ring tone மற்றும் Hello tune ஆகியவற்றை எந்தப் பாடல்களைக் கொண்டு தேர்வு செய்கிறார் என்பதைப் பொறுத்து அவரின் குணாதியசத்தை ஒரளவு கணிக்க முடியும். அவருக்கு பிடித்த எத்தனையோ பாடல்கள் இருப்பினும், தன்னுடைய கருவியில் திரும்பத் திரும்ப ஒலிக்கப் போகிறது எனும் போது இன்னும் பிரத்யேகத்துடனும் சிரத்தையுடனும் தன்னுடைய தேர்வை கண்டடைவார்.
என்னுடைய நண்பரின் செல்போனில் வைத்துள்ள ஹலோ டியூனின் படி "Yes. Who is this?" என்றொரு கம்பீரமான ஆண் குரல் திரும்பத் திரும்ப ஒலிக்கும். அழைப்பவர் விழிப்பாக இல்லாவிட்டால், எதிர்முனையில் இருப்பவர்தான் பேசுகிறார் என்று நினைத்து "நான்தாங்க, கோயிஞ்சாமி பேசறேன்" என்று அவர் உண்மையாக பேசுவது வரை பொய்க்குரலுடன் மல்லாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

()

ஆனந்தவிகடன் தொடர் படி என்னுடைய விருப்பப் பட்டியலை எழுத முனைந்தால் எப்படியிருக்கும் என்ற ஆசை வந்ததால் இந்தப்பதிவு. கூடுமானவரை பிலிம் காட்டாமல் என்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன்.

படித்ததில்.......

சத்திய சோதனை - மோகன்தாஸ்.
மரப்பசு - தி.ஜானகிராமன்
ரத்தஉறவு - யூமா வாசுகி
ஆனந்தாயி - சிவகாமி
புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்
ஆனந்த வயல் - பாலகுமாரன்
சதுரங்க குதிரை - நாஞ்சில்நாடன்
காகித மலர்கள் - ஆதவன்
ஜெயந்தன் சிறுகதைகள்
ஏழாம் உலகம் - ஜெயமோகன்


கேட்டதில் .........
How to Name it மற்றும் 1980-ல் வெளிவந்த பாடல்கள் - இளையராஜா
Tere Kasam - Adnan Sami
1942 A Love Story - R.D.Burman
இருவர் - AR Rahman
Greatest Hits of Beethovan
Devotional Songs - Anuradha Potuwal
Taal - AR Rahman
Colonial cousins - ஹரிஹரன்
பி.சுசீலா ஹிட்ஸ்
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா - மலையாளம்


பார்த்ததில்........

சாருலதா (வங்காளம்) - சத்யஜித்ரே
பதேர் பாஞ்சாலி (வங்காளம்) - சத்யஜித்ரே
அவள் அப்படித்தான் - ருத்ரைய்யா
உதிரிப்பூக்கள் - மகேந்திரன்
ஹே ராம் - கமல்ஹாசன்
Mrs. & Mr. Iyer - அபர்ணா சென்
உன்னால் முடியும் தம்பி - கே.பாலச்சந்தர்
குருதிப் புனல் - பி.சி.ஸ்ரீராம்
வீடு - பாலுமகேந்திரா
நாயகன் - மணிரத்னம்


விருப்பப்படும் நண்பர்கள் இதனை தொடரலாம்.

16 comments:

அருள் குமார் said...

//கூடுமானவரை பிலிம் காட்டாமல் என்னுடைய விருப்பத்தை வெளிப்படையாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறேன்.
//
நேர்மையான வாக்குமூலம் :)

//விருப்பப்படும் நண்பர்கள் இதனை தொடரலாம்.// இப்படி பொதுவாக சொன்னதைவிட நீங்கள் சிலரை குறிப்பிட்டு அழைத்திருக்கலாம். அது இதை தொடரச்செய்வதுடன், யார் யாரின் ரசனைகளைத் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற தேர்வினை நாங்கள் தெரிந்துகொள்லலாம் அல்லவா ;)

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய சுரேஷ்,

> படித்ததில்.......
> மரப்பசு - தி.ஜானகிராமன்
> புலிநகக்கொன்றை -
> பி.ஏ.கிருஷ்ணன்
> ஆனந்த வயல் - பாலகுமாரன்

இதெல்லாம் படித்தவை.

> கேட்டதில் .........
> How to Name it மற்றும் 1980-ல்
> வெளிவந்த பாடல்கள் -
> இளையராஜா
> 1942 A Love Story - R.D.Burman
> இருவர் - AR Rahman
> Taal - AR Rahman
> Colonial cousins - ஹரிஹரன்
> பி.சுசீலா ஹிட்ஸ்

இவையெல்லாம் கேட்டவை

> பார்த்ததில்........
> அவள் அப்படித்தான் - ருத்ரைய்யா
> உதிரிப்பூக்கள் - மகேந்திரன்
> ஹே ராம் - கமல்ஹாசன்
> Mrs. & Mr. Iyer - அபர்ணா சென்
> உன்னால் முடியும் தம்பி -
> கே.பாலச்சந்தர்
> குருதிப் புனல் - பி.சி.ஸ்ரீராம்
> வீடு - பாலுமகேந்திரா
> நாயகன் - மணிரத்னம்

இவையெல்லாம் பார்த்தவை.

ஆனால், பிடித்தவை ஈர்த்தவை என்றெல்லாம் பட்டியலிட்டால் அதனுள் இவை வருமா என்பது சந்தேகமே.

பட்டியலிடத் தோன்றவில்லை. ஏற்கெனவே ஒருமுறை இட்டுவிட்டதால் இப்போது இடத்தோன்றவில்லை.

அப்போது இட்ட பட்டியலில் பிடித்த திரைப்படங்கள்
1.ஆயிரத்தில் ஒருவன்
2.மொஹலே ஆஸம்
3.தென்றலே என்னைத் தொடு
4.நினைத்தாலே இனிக்கும்

(சகிக்கலல்ல)

அன்புடன்
ஆசாத்

ஈழநாதன்(Eelanathan) said...

வணக்கம் சுரேஷ் தமிழ் வலைப்பதிவுகளில் ஆறு விளையாட்டு விளையாடப்பட்டபோது இந்தப் பட்டியல் பற்றி மயூரன் பதிவில் சொல்லியிருந்தேன் ஒன்றிரண்டு பேரைத் தவிர்த்துப் பார்த்தால் மற்றவர்கள் அவர்களது துறை சார் அறிவோடும் நேர்மையோடும் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.அதற்காகவே விகடனின் அந்தப் பக்கத்தைச் சேமித்தும் வைத்திருக்கிறேன் சந்தர்ப்பம் கிடைத்தால் இன்னாரின் விருப்பப் பட்டியல் இது என்று வலைப்பதிவில் இடலாம்.

உண்மையான வாக்குமூலமாக இந்தப் பட்டியல் அமைந்தால் அதை வைத்துக்கொண்டே ஒருவரின் குணாதிசயங்களை கண்டறியலாம்.உதாரணமாக அனேகமானோர் ஜானகிராமன் படைப்புகளில் பிடித்தது மோகமுள் அல்லது அம்மா வந்தாள் என்பார்கள் நீங்கள் மரப்பசு என்கிறீர்கள் அதை வைத்து ரசனையைக் கணிப்பிட முடியும்

ஈழநாதன்(Eelanathan) said...

நிவேதா நிகரி திரைப்பட வட்டத்தில் திரையிடப்படும் படங்களை எங்களுக்கும் அறிமுகப்படுத்துவதற்கு நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.பிரெஞ்ச்,ஜேர்மன்,ரஷ்யன் கலாச்சார மையங்களுக்குச் சென்று படம் பார்ப்பதுண்டா?அவை பற்றியும் எழுதலாமே

ஈழநாதன்(Eelanathan) said...

மன்னிக்கவும் இரண்டாவது பின்னூட்டம் நிவேதாவுக்கு எழுதியது மறதியாய் இங்கே போட்டுவிட்டேன் அழித்துவிடவும் நன்றி

கானா பிரபா said...

வணக்கம் சுரேஷ் கண்ணன்

உங்களுக்குப் பிடித்த இசையில் ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவையும் குறிப்பிட்டிருந்தது கண்டு மகிழ்கின்றேன். அந்தப் படப்பாடல்களில் ஒன்றான ப்ரமதவனம் வீண்டும் என்ற பாடலை மிகவும் ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். என் விருப்பதேர்வுகளில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும் பாடல் சக வலைப்பதிவாளர் யாரையவதி ஈர்த்திருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தேன், இன்று உங்களைக் கண்டேன்:-)

பிரதீப் said...

ungakitta pather panjaali DVD irukka suresh? enakku antha padam pathe aaganum! pls...

பிச்சைப்பாத்திரம் said...

Pradeep,

I have seen "Pather Panchali" in film festivals only. If i get the dvd, i will inform you definitely.

கார்த்திக் பிரபு said...

sir neengal sollum indha thodaril last week ;gangai amaran; kettadhil ilaya raja padalgal ondari kuda solla villaye kavanitheergala?

adhu sari sollanumnu enna kattayama?
illai avargalukulum prichanaya?

pls reply me via one click or post comments in my blog ..thanks

பிச்சைப்பாத்திரம் said...

கார்த்திக்,

நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தை நானும் கவனித்தேன். இசையைப் பற்றி பேசும் போது இளையராஜாவை தவிர்த்து விட்டு எந்த தமிழராலும் பேச முடியுமா என்று தெரியவில்லை. அவர் வேண்டுமென்றே இதை தவிர்த்திருப்பதாக நான் நினைக்கிறேன். என்றாலும் இது ஒன்றும் முக்கியமான விஷயமில்லை. இந்தப் பதிவை உங்களின் பார்வையில் தொடருங்களேன்.

கார்த்திக் பிரபு said...

//இந்தப் பதிவை உங்களின் பார்வையில் தொடருங்களேன். //

kanidipaaga.nandri

கார்த்திக் பிரபு said...

nan indha vaaram indha thodari thodara arambikirane..marakkama vandhu paarunga..nandri

Anonymous said...

that was a good one sir.......

கார்த்திக் பிரபு said...

sir pls read my this week post

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல ரசனை. குறிப்பா இசை. எனக்கும் ரெம்ப பிடித்த தொகுப்புக்கள்.
பட்வால், பீத்தோவன் தவிர.

வாழ்த்துக்கள்.
:))

லேகா said...

சிறந்த இலக்கியத்தையும்,இசையையும்,திரைப்படங்களையும் சுட்டிகாட்டி உள்ளீர்கள் suresh......தி.ஜாவின் மரபசு,ரேயின் பதேர் பாஞ்சாலி,ராஜாவின் இசை...இவை யாவும் எனக்கு பிடித்ததில் அடங்கும்..வாழ்த்துக்கள்

பிரியமுடன்
லேகா
http://yalisai.blogspot.com/