தொழில்நுட்பம் சம்பந்தமான உதவி நண்பர்களிடமிருந்து தேவைப்படுகிறது. எனது வலைப்பதிவில் நான் பதியும் பதிவுகள் இரண்டொரு நாட்களில் காணாமற் போகின்றன. தமிழ்மண இணைப்புகள் மூலமாக சென்றடைய இயலும் புதிய பதிவுகள், எனது வலைப்பதிவை நேரடியாக அணுகும் போது இல்லாமற் போகின்றன. மேலும் புதிய பதிவுகளில் பின்னூட்டம் அளிப்பதிலும் சிக்கல் நேர்கிறது. இதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?
'புதிய பதிவுகள் எதுவும் அனுப்பாமல் சும்மா இருந்தால் போதும்' என்பது மாதிரியான ஆக்கப்பூர்வமான யோசனைகள் சொல்ல விழைபவர்கள் முன்ஜாக்கிரதையுடன் கண்டிக்கப்படுகிறார்கள். இதோ, இந்தப் பதிவு காணாமற் போவதற்கு முன்னால் உதவவும்.
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
:-)
பின்குறிப்பு:
என் எழுத்துலக சாதனையை தடுக்கும் வெளிநாட்டு அல்லது உள்நாட்டு சதியாக இதை நான் கருதுவதால், interpol-ல் புகார் கொடுக்கவிருக்கிறேன் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.
பின்குறிப்புக்கு பின்னால் ஒரு குறிப்பு:
தமிழ்நாட்டில் இங்கே தேர்தல் சுரத்தில் அரசியல் தலைவர்கள் கொடுக்கும் அறிக்கையின் தலைப்புகளை மட்டும் படித்த எபக்ட்டுக்கே இவ்வாறெல்லாம் உளற நேர்கிறது. மன்னிக்கவும்.
9 comments:
ஐய்யா,
சொன்னா புரிஞ்சுக்கங்க..ஏற்கனவே நான் சொன்னேன். பதிவின் தலைப்பை சின்னதா வெக்க சொல்லி....
நான் ஒரு நீண்ட பின்னூட்டம் இட்டிருந்தேன்.கிடைச்சதா?
சுரேஷ், உங்களின் இந்தப் பிரச்சினை எனக்கும் இருந்தது. என்னுடைய இரண்டு வலைப் பதிவுகள் காணாமல் போய் விட்டன. இதற்குக் காரணம் (நான் ஊகித்தது): அந்த காணாமல் போன இரண்டினதும் தலைப்புகள் மிக நீண்டதாக அமைந்ததனால் தான். பின்பு அதே பதிப்புகளை தலைப்பை மட்டும் குறைத்து பதிந்தேன். இன்னமும் இருக்கின்றன. இது குறித்து எனது சோதனைப் பதிவின் பின்னூட்டங்களைப் பார்க்க:
srinoolakam.blogspot.com/2006/01/blog-post_28.html
இது தான் உங்கள் பிரச்சினையா?
suresh, keep the titles of your post, as short as possible.
that should solve the problem
you are selected for the valaipathivar's constituency. My vote is for you only. Congrats.
தமிழ் ஒழுங்குறி எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மூன்று byte எடுத்துக் கொள்வதாக அன்று காசி சொன்னார். ப்ளாக்கர் தலைப்புக்கு குறிப்பிட்ட இடமே ஒதுக்கியிருக்க கூடுமாதலால், குறைந்த தமிழ் தலைப்புக்கள் பிரச்னை கொடுப்பதில்லை. நீளமான ஆங்கில தலைப்புக்கள் காணாமல் போவதில்லை.
தமிழ்மண பதிவர்கள் கூட்டாக ப்ளாக்கருக்கு தலைப்புக்கு அதிக இடம் தர வேண்டி மனு செய்யலாம். யாரேனும் ஒருவர் template விண்ணப்பம் கொடுத்தால் அனைவரும் பின்பற்றலாம்.
அடடா! தவிச்ச வாய்க்கு தண்ணி ஊத்துற புண்ணியவானுங்க இன்னும் இந்த உலகத்துல இருக்கத்தான் செய்யறாங்க. நன்றி நண்பர்களே.
ஆக... நீலமாக எழுதுவதுதான் பிரச்சினை என்று பார்த்தால் நீளமாக எழுதுவதும் பிரச்சினையா? என்னே தமிழுக்கு வந்த சோதனை! சரி. இனி தலைப்பின் வாலை கத்தரித்து வைக்கிறேன். மறுபடியும் நன்றி.
//நான் ஒரு நீண்ட பின்னூட்டம் இட்டிருந்தேன்.கிடைச்சதா? //
இல்லை முத்து.
சுரேஷ்ஜி, பதிவு போட்டதும், தமிழ்மணத்தில் "அளி" என்று முகப்பில் தெரிகிறதே, அதில் உங்கள் உரலைக் கொடுங்கள்.
எனக்கு சொல்லப்பட்ட அறிவுரை இது, உங்களுக்கும் சொல்லிவிட்டேன், மற்றப்படி டெக்னிகல் சமாச்சாரங்கள் எனக்கு தெரியாது.
Post a Comment