சமீபத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்களுடன் இணைய நண்பர்கள் நடத்திய கலந்துரையாடலைப் பற்றி, சுஜாதா தனது ஆனந்த விகடன் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டுள்ளார். சுஜாதா படைப்புகளின் தீவிர ரசிகரான இகாரஸ் பிரகாஷை ஸ்பெஷலாக குறிப்பிட்டுள்ள அவர் (அடப்பாவி! லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டியேய்யா) அவர் படைப்புகளின் மீதான ஆய்வுகளை அவ்வளவாக விரும்பவில்லை என்று தெரிகிறது. என்றாலும் அவரே மறந்து போன அவரின் படைப்புகளை வாசகர்கள் பரவசத்துடன் நினைவுகூர்வது குறித்து அவருக்கு மகிழ்ச்சியே என்று தோன்றுகிறது.
அவரின் சமீபத்திய கட்டுரை வெளியீட்டான 'கடவுள்களின் பள்ளத்தாக்கை' படித்துக் கொண்டிருக்கிறேன். என்ன ஒரு எழுத்து நடை ...... சான்ஸே இல்லை.
என்றாலும் சம்பந்தப்பட்ட பத்தியின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள "எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் குறைந்த பட்ச தூரமாவது தேவை என்பதுதான் அன்றைய பாடம்" என்னும் வரிகளைத்தான் ஜீரணிக்க இயலவில்லை.
suresh kannan
1 comment:
இப்பத்தான் தேசிகன் பதிவுல பின்னூட்டம் எழுதிவிட்டு வரேன். நீங்க எழுதிட்டீங்க.
வாசகர்களுக்கு 10 கட்டளைகள் என யாராவது பதிவு போட்டால் நன்றாக இருக்கும்.
Post a Comment