நான் சமீபத்தில் எங்கள் கணினியில் Firefox 1.0.3 இணைய உலாவியை நிறுவினேன். அதில் திண்ணை, திசைகள், தமிழ்மண தமிழ் வலைப்பதிவுகள் ஆகிய எதையும் படிக்க முடியாதபடி எழுத்துருக்கள் குழம்பித் தெரிகின்றன. இதை சரிசெய்ய எந்தமாதிரியாக font settings-களை மாற்றுவது?
Proportional என்கிற மெனுவில் Serif மற்றும் Sans Serif ஆகிய இரண்டு எழுத்துருக்கள் மட்டுமே தெரிகின்றன.
நண்பர்கள் உதவ வேண்டுகிறேன். My Advance Thanks.
வலைப்பதிவு மன்றத்தில் இந்த பிரச்சினையை தொடர்பான கேள்வி பதிலை தேடிப் பார்த்து காணாததால் இந்தக் கேள்வியை இங்கே வைக்கிறேன்.
suresh kannan
4 comments:
மன்றத்தில் யாரும் கேக்கலை சுரேஷ். எல்லாரும் இப்படித்தான் அவரவர் வலைப்பதிவுகளில் கேட்கிறார்கள். சமீபத்தில் அருண் கேட்டார். இப்ப நீங்க. மன்றத்தில் ஒருவர் கேட்டால், தொடர்ந்து வருபவர்களுக்கு அங்கேயே பதில் இருக்குமே.
நீங்களாவது இந்த சந்தேகத்தையும் ஏனையவற்றையும் அங்கேயே கேளுங்கள். முடிந்தவரை சொல்கிறேன். அல்லது விஷயம் தெரிந்தவர்கள் சொல்வார்கள்.
காசி சொல்லிச் சொல்லி அலுத்துவிட்டார் என்று நினைக்கிறேன்
-மதி
அன்பு மதி,
காசியை தொந்தரவு செய்ய வேண்டாமே என்றுதான் என் சந்தேகத்தை மற்ற நண்பர்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு இங்கே எழுப்பினேன். அங்கே எழுப்பினால் எல்லோருக்கும் பயனிருக்கும் என்றால் அங்கேயும் கேட்கிறேன். சமீபத்தில் நடந்த வலைப்பதிவு கூட்டத்தில் பெரும்பான்மையோர் Audio and Video blogs குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது, எனக்கு இந்த மாதிரியான ஆதிகாலத்து பிரச்சினையுடன் கூடிய பாமரத்தனமான கேள்வியை கேட்க சங்கடமாக இருந்தது. என்னைப் போலவே சில பாமரர்களும் இருக்கிறார்கள் என்றறிய மகிழ்ச்சி. :-)
Suresh Kannan
Hi Suresh Kannan,
Pls follow the instructions in this page:
http://www.iyarpiyal.org/wiki/doku.php?id=font_help
(especially those under 'Setting up System Language options')
Once you are done, you should be able to view in Firexfox properly.
மாத்தன் அவர்களூக்கு
//அது தவிர யாகூ குறூப்சில் டஸ்கி எழுத்திருவில் உள்ள மடல்களை படிக்க முடியவில்லை. முன்பு முரசு அஞ்சலை இயக்கினால் படிக்க கூடியதாக இருந்தது. தற்போது யாகூ குறூப்ஸ் வடிவைப்பை மாற்றிய பின்பு படிக்க முடியவில்லை. என்ன செய்ய வேண்டும் அதற்கு?//
தீர்வை இங்கு காண்க:
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/31675
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/31701
By: ismail kani
Post a Comment