Tuesday, July 19, 2011

மானசரோவர் - அசோகமித்திரன் - கசப்பின் ருசி



மருத்துவக் காரணங்களுக்காகவோ, உடல் ஆரோக்கியத்திற்காகவோ வேப்பிலைக் கொழுந்து போன்ற கசப்பான வஸ்துவை சாப்பிட நேருபவர்களைக் கவனித்தால் முதலில் அந்த கசப்பை எண்ணி விகாரமாக முகஞ்சுளிப்பார்கள். நாக்கு அந்த கசப்பை அனுபவிப்பதற்கு முன்பே மனம் அனுபவித்து அதை நிராகரிக்கத் துடிக்கும். ஆனால் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு மென்று தின்ன ஆரம்பித்து பழகினவுடன நாளடைவில் அதே மனம் அந்த கசப்பின் ருசிக்காக ஏங்க ஆரம்பித்து விடும். உடல் மீது விழும் அடிகளினால் வலி தாங்காமல் அலறும் மனம், ஒரு கட்டத்தில் அடுத்த அடியை ஆவலுடன் எதிர்பார்க்கும் இச்சையை நோக்கி நகர்ந்து விடும். அசோகமித்திரனின் எழுத்து இம்மாதிரியான கசப்பின், வன்முறையின் ருசியைக் கொண்டிருக்கிறது. பொதுவாக அசோகமித்திரனின் எழுத்து மென்மையானதுதானே என்கிற கருத்தைக் கொண்டிருப்பவர்கள், அ.மி.யின் மானசரோவர் புதினத்தை வாசிக்க நேர்ந்தால் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நேரலாம். அந்தளவிற்கு ஒரே அமர்வில் வாசித்து முடிக்க முடியாத மனஉளைச்சலை தந்தது மானசரோவர். அப்படி எதற்கு வாசித்து தொலைய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்தப் பத்தியை முதலிலிருந்து மீண்டும் வாசிக்கவும்.

அ.மியின் 'கரைந்த நிழல்கள்' சினிமா உலகின், திரைக்குப் பின் இயங்கும் உலகத்தை பருந்துப் பார்வையில் சித்தரித்தது என்றால், மானசரோவர் ஒரு நடிகன் மற்றும் ஒரு கதாசிரியரின் அக உலகை, விநோதமான உறவை மிக நெருக்கமாக முன்வைக்கிறது. வடக்கில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் இந்தி நடிகன் சத்யன்குமார், தமிழகத் திரையில் சொற்ப ஊதியத்திற்கு மல்லுக்கட்டும் கதாசிரியன் கோபாலனுக்கு 'கூஜா தூக்கியாவது' பணிபுரிய விரும்புகிறான். இருவரின் பார்வையில் மாறி மாறிப் பயணம் செய்யும் புதினம், சுய விசாரணைகளின் மூலம் அவரவர்களின் அந்தரங்கங்களை ஆழமாக வாசகன் முன் வைக்கிறது. முள்கீரிடம் அணிந்திருக்கும் பிரபலங்களின் இருப்பியல் பிரச்சினைகளை சத்யன்குமாரின் பாத்திரம் அசலாக சித்தரிக்கிறது. ஆயிரம் நபர்களின் நடுவிலும் தனியனாய் உணரும் அவன், காரணமேயில்லாமல் கோபாலனை பார்த்த கணத்திலிருந்தே விசித்திரமான வசீகரத்தால் ஈர்க்கப்படுகிறான். சதய்ஜித்ராய் இயக்கி உத்தம் குமார் மிக அருமையாக நடித்த 'நாயக்' திரைப்படம் அடிக்கடி நினைவில் வந்து போனது.

மறுபுறம் ஒரு கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த கோபாலன், தன் வாழ்வின் அன்றாடச் சிக்கல்களோடும் தத்துவம் சார்ந்த சிந்தனைகளோடும் வாழ்கிறான். சமயங்களில் சத்யன்குமாரின் துரத்தல்கள் அவனுக்கு எரிச்சலாகவே தோன்றுகிறது. அகம் சார்ந்த விசாரணையும் ஆன்மீகம் என்கிற புள்ளியும் இருவரையும் இணைக்கிறது.

இந்தப் புதினம் இருவரின் பார்வையில் மாறி மாறி பயணித்தாலும் தொடர்ச்சியின் இழை எங்கும் அறுபடாமல் இயல்பாய் அமைக்கப்பட்டிருக்கிறது. சமயங்களில் வணிகத் தொடர்கதைகளின் 'சிறுதிடுக்கிடல்' பாணி கூட பின்பற்றப்பட்டிருக்கிறது. பின்னோக்கு சம்பவங்களில் கூட எவ்வித தருக்கப் பிழைகள் கூட அல்லாத பிரக்ஞையோடு எழுதப்பட்டிருக்கிறது. நடிகை ஜெயசந்திரிகாவின் அம்மா போன்ற சிறுபாத்திரங்களைக் கூட நுட்பமான விவரணைகளுடன் வாசகனுக்கு மிக கச்சிதமாக அறிமுகப்படுகிறார் ஆசிரியர்.

அசோகமித்திரனின் மிக முக்கியமான புதினங்களுள் ஒன்று 'மானசரோவர்'

suresh kannan

11 comments:

WordsBeyondBorders said...

அ.மி வீட்டு லாண்டரி சீட்டு கிடைத்தால் கூட படித்து விடுவேன், இருந்தும் ஆன்மிகம் சற்று வரும் அவரின் படைப்புக்கள் (ஹடயோகி பற்றிய ஒரு கதை ஞாபகம் வருகின்றது) ஏனோ அவருடைய மற்ற படைப்புக்கள் போல் என்னுள் பதியவில்லை. இந்த பதிவு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. நன்றி.
அஜய்

Simulation said...

அ.மியின் மானசரோவர் பற்றிய எனது விமர்சனம் இங்கே

http://simulationpadaippugal.blogspot.com/2011/01/blog-post_30.html

- சிமுலேஷன்

நரன் said...

எல்லா கட்டுரையுமே அருமை சார்.ஆனா ஒரு வேண்டுகோள்.தயவு செஞ்சி இந்த சுயசொரிதல்களை தவிருங்கள்.உதாரணம் எம்பொண்ணு போட்டியில் மொதல்ல வந்துட்ட(கலந்துக்கிடட்து ஒருத்தர் தானான்!!) இதை தவிருங்கள்,.நன்றி

senthilkumarraju said...

வெகு நாட்களுக்கு பிறகு இலக்கிய விமர்சனத்திற்கு மீண்டும் வந்தமைக்கு நன்றி. அசோகமித்திரனின் நாவல்களில் தனித்துவம் வாய்ந்தது மானசரோவர். கரைந்த நிழல்கள் மற்றும் தண்ணீர் நாவல்களில் வரும் கதாபாத்திரங்கள் வெளிப்படையானவை. லௌதீக வாழ்விற்கு தேவையானவற்றை அடைய பாடுபடும் கதாபாத்திரங்கள் அவை. மானசரோவரில், சத்யன் குமாருக்கு லௌதீக வாழ்விற்கு தேவையான அனைத்தும் இருந்தும் அவன் கோபாலனைத் தேடி போகிறான். கோபாலனோ வறுமை என்றாலும் வாழ்வின் முடிச்சை அவிழ்க்கப் போராடுகிறான். கோபாலனின் மனைவி சத்யன் குமாரிடம் நடந்து கொண்ட விதம் அதனால் ஏற்பட்ட குற்ற உணர்வால் கணவனிடம் எரிந்து விழுதல், அதனால் அவள் எடுத்த விபரீத முடிவு என வாசகனை அதிர வைக்கிறது இந்நாவல்.

அசோகமித்திரனின் மிக முக்கியமான புதினங்களுள் ஒன்று 'மானசரோவர்' - வழிமொழிகிறேன்.

namakkal senthil

Unknown said...

குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக்கொண்டு, மிகச் சிறப்பான முறையில், வலைப்பூ என்கிற இலவச நவீன வசதியைப் பயனுள்ள முறையில் தொடர்வது குறித்து மிக்க மகிழ்ச்சி. சிறந்த வலைப்பதிவர்கள் பட்டியலிட்டால் தங்களை யாரும் புறக்கணிக்க முடியாது.

Anonymous said...

http://manamplus.blogspot.com/

it is a useful blog...add it n google reader...I'm going to read about adobe photoshop in this...

Anonymous said...

In coimbatore there is a dvd shop. it sells all world movies for rupees 60...address:

hollywood dvd sshop
சாய்பாபாகாலனி NSR road, K.R பேக்கரிக்கு எதிர்ப்புறம், முதல்மாடியில் இருக்கிறது.

Jegadeesh Kumar said...

அன்புள்ள சுரேஷ் கண்ணன்,
செந்தில் குமார் ராஜு சொன்னதைப் போல் வெகு நாட்களுக்கு பிறகு இலக்கிய விமர்சனத்திற்கு மீண்டும் வந்தமைக்கு நன்றி. ஆனால் ரொம்பக் குறைவாக எழுதி ஏமாற்றி விட்டீர்கள்.

நானும் மானசரோவர் பற்றி எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் பார்க்கவும்.

http://jekay2ab.blogspot.com/2011/01/blog-post_19.html

Anonymous said...

மிகைபடுத்துதல் ஏன்?

http://denimmohan.blogspot.com/2011/05/insidious-2010.html

இதில் இன்சிடியஸ் என்ற பேய் படம் மிரட்டலானது என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த பட டிவிடியை ஏற்கனவே பர்மா பசாரில் பார்த்திருக்கிறேன். ஆனாலும் அறுவையாக இருக்குமோ என்று நினைத்து வாங்கவில்லை. ஆனால் மேலே உள்ள பதிவில் இப்படம் மிரட்டலானது என்று சொல்லப்பட்டிருப்பதால் இதன் டிவிடியை வாங்கி பார்த்தேன்.(20ரூபாய்க்குதான்.)..படம் சுமார்தான். ஒருமுறை பார்க்கலாம். அவ்வளவே. பேய் படங்களான ring போலவோ, dark water போலவோ இது மிரட்டலானதோ த்ரில் ஆனதோ இல்லை. மேலே உள்ள பதிவில் அந்த பிளாகின் ஆசிரியர் இப்படத்தை exaggerate செய்திருக்கிறார். ஏன்?

காரணம் இதுவே.

கல்லூரியில் என் கிளாஸ் பெண் ஒருத்தி அசிங்கமாய் இருப்பாள். ஒருமுறை அவளுக்கு நான் கால் செய்து பேசிய போது அசால்ட்டாக பேசினாள். அவளைப் பற்றி சிங்காரம் என்பவனிடம் பிற்பாடு நான் சொன்னேன். "ஊரிலேயே கேவலமான மூஞ்சி; அதுக்கே எவ்வளவு திமிர் பாரு" என்றேன் சிங்காரத்திடம் நான். இதை சொல்லிய போதே எனக்கு பிரஞ்ஞை வந்து விட்டது. அவள் ஒன்றும் ஊரிலேயே கேவலமான மூஞ்சியை உடையவள் அல்ல. அவளை விடவும் கேவலமான முகம் உடைய பல பெண்கள் உண்டு. பின் ஏன் அவளது அசிங்கமான முகத்தை ரொம்பவே exaggerate செய்து நான் பேசினேன்? ஏன் என்றால் அப்படி அழுத்தம் கொடுத்து exaggerate செய்தால் தான் சிங்காரத்திடம் என் கருத்து அழுத்தமாய் போய் சேரும். அவனிடம் என் கருத்து அழுத்தமாய் போய்ச் சேர்ந்தால்தான் என்னை அவன் சாதாரணமாய் நினைக்க மாட்டான்.

நம்மை மற்றவர்கள் சாதாரணமாய் நினைக்கக் கூடாது என்று விரும்புகிறோம். அதனால் நாம் ஒரு விஷயமோ ஒரு மனிதரோ சற்று உயர்வாய் தெரிந்தாலே அதையும் அவரையும் ரொம்பவும் exaggerate செய்து ரொம்ப பிரமாதம் என்கிறோம். அதே போல் ஒரு விஷயமோ மனிதரோ கேவலமாய் பட்டால் அதையும் அவரையும் exaggerate செய்து ரொம்பவே மட்டம் தட்டி படு கேவலமாய் அழுத்தம் கொடுத்து பேசுகிறோம்.


நம்மை சாதாரணமாய் மற்றவர்கள் நினைத்து விடக் கூடாதென்பதற்காக நாம் எதை குறித்து பேசுகிறோமோ அதை சாதாரணமாய் நாம் பேசுவதில்லை.

நமக்கு ஒரு விஷயம் தெரிவதில்லை. 'இயல்பே மேஜிக்' என்ற நகுலனின் மேற்கோள் சொல்லும் உண்மைதான் அது. தி அமெரிக்கன் என்ற படத்தின் கிளைமாக்சை ஒருமுறை பார்த்தால் இயல்பே முழுமையான மேஜிக் என்பதை உணர்வோம். மிகை படுத்த மாட்டோம்....d...

Anonymous said...

http://www.imdb.com/title/tt0838247/

i saw d movie after life...நமக்கு துர் கனவு வரும். கொஞ்ச நேரம் கழித்து சட்டென்று முழிப்போம். அப்பாடா நல்லவேளை இது வெறும் கனவுதான் என்று நினைத்து பெருமூச்சு விடுவோம். எனக்கு இந்த படம்(after life) ஒரு துர் கனவு போன்று இருந்தது. எப்படியாவது பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் பெண் கடைசியில் தப்பித்து விடுவாள் என்ற நம்பிக்கையில் கடைசி வரை திகில் குறையாமல் பார்த்தேன்.d

குமரன் said...

இணையம் அருமையாக உள்ளது. நட்பு (natpu.in) இணையத்தின் முகப்பில் பார்த்து இங்கு வந்தேன். மிகவும் பிடித்துள்ளது. தொடர்க உமது பணி...
[http://www.natpu.in/?p=12377]