Wednesday, February 09, 2011

கிழக்கு நூல்கள் - மிகக் குறைந்த விலையில்



STOCK CLEARANCE SALE  - எனும் வகையில் கிழக்குப் பதிப்பகம் மிகக் குறைந்த விலையில் தங்களின் நூல்களை விற்கும் சலுகைத் திட்டத்தை அறிவித்துள்ளது. விவரங்களுக்கு இங்கு பார்க்கவும். பொதுநலன் கருதி நண்பர்களுக்காக அதை இங்கு பகிர விரும்புகிறேன்.

மயிலாப்பூர் குளம் எதிரே அமைந்திருந்த கிழக்கின் தற்காலிக கடைக்கு நேற்று சென்றிருந்தேன். ரூ.250·- மதிப்புள்ள நூல்கள் கூட ரூ.25, ரூ.30/- க்குக் கிடைக்கின்றன. ரூ.25·- மதிப்புள்ள சிறு அறிமுக நூல்கள் வெறும் ரூ.5/-க்கு கிடைக்கின்றன.  நண்பர்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசளிக்க மிகவும் ஏற்றது. வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்ற நூல்களில் எனக்கு அதிக விருப்பமில்லை. நான் வாங்க விரும்பியது, கிழக்கின் இலக்கிய நூல்கள்.

அவ்வகையில் நான் வாங்கிய பல புத்தகங்களில் முக்கியமான சிலவற்றின்  விவரங்கள்.

யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள் தொகுப்பு - ரூ. 75. (அசல் விலை ரூ.350)
அரசூர் வம்சம் - இரா. முருகன் - நாவல் - ரூ.25. (அசல் விலை ரூ.175)
சுப்ரமண்ய ராஜூ கதைகள் தொகுப்பு - ரூ.50 (அசல் விலை ரூ.200)
இரவுக்கு முன்பு வருவது மாலை  - ஆதவன் - ரூ.20  (அசல் விலை ரூ.120)
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர·பின் சுயசரிதை - ரூ.30 (அசல் விலை ரூ.250)
எமர்ஜென்ஸி : ஜே.பி.யின் ஜெயில் வாசம் - ரூ.40 (அசல் விலை ரூ.150)

இது போல் இந்திரா பார்த்தசாரதியின் சில நாவல்கள், குறிப்பாக அசோகமித்திரனின் மிக முக்கியமான நாவலான 'கரைந்த நிழல்கள்' போன்றவை ரூ.15-க்கும் ரூ.20-க்கும் கிடைக்கின்றன.ஹாய் மதன் பதில்கள், மதியின் கார்ட்டூன்கள் (அடடே!) போன்றவையும் குறைந்த விலையில். சில நூல்கள் என்னிடம் ஏற்கெனவே இருந்தாலும் நண்பர்களுக்கு பரிசளிப்பதற்கென்றே அவற்றை அதிக காப்பிகள் வாங்கினேன். இது தவிர, பொதுத் தலைப்பில் சில நல்ல நூல்கள், பா.ராகவனின் அரசியல் புத்தகங்கள் போன்றவை குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. அட்டைகளின், காகிதங்களின் நிறம் மங்கியுள்ளவை தவிர, நூல்களில் கண்டுபிடிக்குமளவிற்கு பெரிதாக சேதாரமில்லை. சில புத்தகங்கள் புத்தம் புதிதாக உள்ளன.

கடந்த சனி, ஞாயிறு அன்று பல வாசகர்கள் வந்திருந்து நூற்களை அள்ளிச் சென்றதாக விற்பனையாளர் தெரிவித்தார். அசோகமித்திரனின் 'மானசரோவர்' நாவல் அவரது மேஜையின் பின்புறமிருந்தது. விருப்பத்துடன் கேட்டேன். யாரோ சொல்லி வைத்திருக்கிறார்களாம். அன்புடன் மறுத்து விட்டார். அது போல நான் எதிர்பார்த்து சென்றிருந்த, ஆதவன் கதைகளின் தொகுப்பு, அசோக மித்திரனின் கட்டுரைகள் தொகுப்பு போன்றவையும் இல்லை.

விருப்பமுள்ள நண்பர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன். இந்தத் திட்டம் பிப் 13-ம் தேதி வரையே உள்ளதாக தெரிகிறது.

 suresh kannan

12 comments:

WordsBeyondBorders said...

//யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள் தொகுப்பு - ரூ. 75. (அசல் விலை ரூ.350)//

//அசோகமித்திரனின் மிக முக்கியமான நாவலான 'கரைந்த நிழல்கள்' போன்றவை ரூ.15-க்கும் ரூ.20-க்கும் கிடைக்கின்றன.//

Great Buys
Ajay

Dr.Rudhran said...

இதில் எழுதப்பட்டிருப்பது அரசியல் மட்டுமல்ல என்பதால் இங்கே சுட்டி தருகிறேன்.
இதை நீங்கள் நீக்கினாலும் எனக்கு சரிதான்.
http://www.facebook.com/note.php?note_id=10150176835761124&id=554902511

Mahesh said...

120ரூபாய் புத்தகத்தை 20 ரூபாய்க்குத் த‌ருகிறார்கள் என்றால் இவ்வளவு நாட்கள் நம்மளை எவ்வளவு முட்டாளக்கிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக விகடன்(கொள்ளை விலை),உயிர்மை,கிழக்கு,காலச்சுவடு அநியாய விலை.

பிச்சைப்பாத்திரம் said...

மகேஷ்: நீங்கள் எழுதியிருப்பதை வாசித்ததும் எப்பவோ ஒரு நகைச்சுவைத் துணுக்கு ஞாபகத்திற்கு வந்தது. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். just for fun

விளம்பரம்: ஹார்லிக்ஸில் இப்போது கூடுதல் சக்தி.

வாடிக்கையாளர் குரல்: "அடப்பாவிகளா?, அப்படின்னா இத்தனை நாளா கம்மியாவா குடுத்துட்டிருந்தீங்க?"

மாரிமுத்து said...

முக்கிய தகவலுக்கு நன்றி!. நானும் நான்கு புத்தகங்கள் வாங்க உதவியாக இருந்தது

iniyavan said...

சுரேஷ் கண்ணன்,

//வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்ற நூல்களில் எனக்கு அதிக விருப்பமில்லை.//

//பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷர·பின் சுயசரிதை - ரூ.30 (அசல் விலை ரூ.250)//

இது வாழ்க்கை வரலாறு நூல் இல்லையா?

Simulation said...

கிழக்கு அதிரடித் திருவிழாவில் நானும் புத்தகங்கள் வாங்கி விட்டேன். நான் வாங்கிய புத்தகங்களின் விலையும் அவற்றின் உண்மையான விலையும்:-

1 - இந்திரா பார்த்தசாரதி நாடகங்கள் - இந்திரா பார்த்தசாரதி - Rs 75 - (Rs 400 )
2 - யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - யுவன் சந்திரசேகர் - Rs 75 - (Rs 400 )
3 - சுதந்திர பூமி - - இந்திரா பார்த்தசாரதி - Rs 25 - (Rs 100 )
4 - ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்தசாரதி - Rs 15 - (Rs 90 )
5 - ஜனகனமன - மாலன் - Rs 10 - (Rs 50 )
6 - கிருஷ்ண கிருஷ்ணா (ஆங்கிலம்) - இந்திரா பார்த்தசாரதி - Rs 25 - (Rs 200 )
7 - ஜெய தேவரின் அஷ்டபதி கீத கோவிந்தம் - இலந்தை சு.இராமசாமி - Rs 20 - (Rs 80 )
8 - ரகுவம்சம் - அ.வெ.சுப்பிரமணியன் - Rs 20 - (Rs 60 )
9 - அள்ளி அளிக்கும் நவராத்திரி; சொல்லி உயர்த்தும் சிவராத்திரி - Rs 10 - (Rs 50 )
10 - ஸ்ரீ வேதாந்த தேசிகர் - வேணு ஸ்ரீனிவாசன் - Rs 5 - (Rs 20 )
11 - கூரத்தழ்வார் - வேணு ஸ்ரீனிவாசன் - Rs 5 - (Rs 20 )

- சிமுலேஷன்

Anonymous said...

Hey,

I would like to email some of your posts to my friends then and then without leaving your blog...so, u just check mark 'email post link' option. go to layout. click edit at the bottom of blog posts. then check mark email post link...okay?

If u like u can place 'tell a friend' sharing button too at the end of every post...use this http://tellafriend.socialtwist.com/products/taf-for-free

for demo of that sharing button see at the end of every post in this blog http://mayadevar.blogspot.com/

...d....

Anonymous said...

Hey,

I would like to email some of your posts to my friends then and then without leaving your blog...so, u just check mark 'email post link' option. go to layout. click edit at the bottom of blog posts. then check mark email post link...okay?

If u like u can place 'tell a friend' sharing button too at the end of every post...use this http://tellafriend.socialtwist.com/products/taf-for-free

for demo of that sharing button see at the end of every post in this blog http://mayadevar.blogspot.com/

...d....

Anonymous said...

subject: உங்கள் பிளாகின் புதிய பதிவுகள் வாசகர்களுக்கு போய்ச் சேர image icon வடிவ subscribe செய்யும் optionஐ உருவாக்குங்கள்.

http://mayadevar.blogspot.com/

இந்த பிளாகின் மேற்புறத்தில் உள்ள image icon வடிவ subscribe செய்து கொள்ளும் optionஐ பாருங்கள். அது மிகவும் user friendlyயானது. Spaceஐ அதிகம் எடுத்துக் கொள்ளாதது. வாசகர்கள் கண்ணில் எழிதில் படும். கூகிள் ரீடரை இதுவரை அறியாத வாசகர்கள் கூட எளிதில் கூகிள் ரீடரில் உங்கள் பிளாகை subscribe செய்து கொண்டு google readerஐ அறிய முடியும்.

if u want to create such a subscribe option for your blog read this post

http://subscribeoptioninimageformat.blogspot.com/2011/02/how-to-create-subscribe-option-in-image.html

Anonymous said...

check mark email post link in blog posts...

மாரிமுத்து said...

இந்தத் திட்டம் பிப் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.