Monday, March 09, 2009

ரஹ்மானை பாராட்டிய இளையராஜாமிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடுதான் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடையே ரஹ்மான். புராணப்படங்களில் வருவது போல் முப்பெரும் கடவுள்களை ஒரே மேடையில் பார்த்தது போலிருந்தது. சற்று அதீதமாக இருந்தாலும் நான் அப்போது உணர்ந்ததை அதைத்தான். வர்ஜா வர்ஜயமில்லாமல் எல்லாவகை இசையையும் கேட்கிறவன்தான் என்றாலும் மனதிற்கு நெருக்கமாக இருப்பது இந்த மூன்று பேரும்தான். தமிழ்த் திரையிசைக் கலைஞர்களின் சங்கத்தின் சார்பில் ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மானுக்கு பாராட்டுவிழா நடைபெற்ற நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழச்சியது.

()

என்னுடைய பதின்ம வயதுகள் இளையராஜாவோடு மாத்திரமே கழிந்தது. இப்போது மாதிரி அல்லாமல் எம்.எஸ்.வி.யை கேட்க அப்போது சற்று சலிப்பாக இருக்கும். அதற்குப் பின் ரஹ்மான் புயலாக உள்ளே நுழைந்தவுடன் ராஜாவை சற்று நகர்த்தி வைத்து விட்டு அவரின் ரசிகராக மாறிப் போனேன். ஆனாலும் கேட்கிற போது உள்ளே மிக ஆழமாக இறங்கி அதிகம் சலனப்படுத்துவது யார் என்றால் அது ராஜாதான். இந்த மாதிரியான ஒப்பீடு அவசியமில்லாதது என்றாலும் கூட எப்படியோ இது நிகழ்ந்து விடுகிறது. (ரஹ்மான் கூட இதைப்பற்றி தன் உரையில் சொன்னார்). நண்பர்களுடனான அரட்டையின் போது இந்த தலைப்பு வரும் போது என்னுடைய கொச்சையான ஒப்பீடு இப்படியாக இருக்கும்.

'ராஜாவின் இசை தாயின் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் உணர்வை தருவது; ரஹ்மானின் இசை, மனைவியின் மடியில்'. அப்படியானால் தேவா? என்றான் ஒருவன். அதை பொதுவில் சொல்லவியலாது.

இசை பற்றிய அடிப்படை அறிவோ அதன் நுணுக்கங்களோ அறியேன் என்றாலும் என்னுடைய கேட்பனுபவத்தில் 'ராஜாவின் இசைக்கோர்வை மிலிட்டரி அணுவகுப்பு போல ஒரு தீர்மானமான கண்டிப்புடன் இருப்பதை கவனித்திருக்கிறேன். ஆனால் ரஹ்மானின் இசை அப்படியல்ல. திடீரென்று பல எதிர்பாராத ஆச்சரியங்களைக் தரக்கூடியது. (மணிரத்னத்தின் 'உயிரே' திரைப்படத்தின் ஸ்ரீனிவாசின் குரலில் 'என்னுயிரே' பாடலைக் கேட்டுப் பாருங்கள்). ரஹ்மான் தன்னுடைய பாடல்களில் தாளத்தை (rhythm) மிக வசீகரமாக அமைப்பதில் கவனமாக இருக்கிறார்.

இருவரும் பாடகர்கள் மற்றும் வாத்திய இசைக் கலைஞர்களிடம் வேலை வாங்குவதும் இதை எதிரொலிப்பதாகத்தான் இருக்கிறது என்பதை பலரின் நேர்காணல்களிலிருந்து உணர்ந்திருக்கிறேன். ராஜாவின் ஒலிப்பதிவில் அவர் என்ன நினைக்கிறாரோ, அல்லது இசைக்குறிப்புகள் எழுதியிருக்கிறாரோ, அவை அச்சுப் பிசகாமல் வர வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருக்கிறார். ஆனால் ரஹ்மான் பாடகர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார். அவர்களை வழக்கமான முறை தவிர அவர்களின் பிரத்யேக திறமையைப் பொறுத்து பல்வேறு வகையாக பாடச் சொல்லி பின்னர் அவற்றிலிருந்து பொருத்தமான சிறந்தவற்றை எடுத்து தன்னுடைய படைப்பை உருவாக்குகிறார். குறிப்பிட்ட பாடலின் இறுதி வடிவம் எப்படியிருக்குமென்று ரஹ்மானைத் தவிர யாருக்கும் தெரிவதில்லை.

அதிகப் பிரசங்கித்தனத்தை இங்கேயே நிறுத்தி விட்டு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்தவற்றை சொல்கிறேன்.

()

டி.எம்.எஸ்., P.B.ஸ்ரீனிவாஸ், சித்ரா, எஸ்.ஜானகி, கங்கை அமரன், வித்யாசாகர், பரத்வாஜ் உட்பட பில பிரபலங்களை சபையில் காண முடிந்தது.

* ஏவிஎம் சரவணன் கையைக் கட்டாமல் பேசிய போது "எம்.எஸ்.வி, வாலி போன்ற பல வருடங்களாக பணியாற்றும் திறமைசாலிகளை அரசு கவுரவிக்காதது வருத்தமாக இருக்கிறது" என்றார்.

* தனக்கு அளிக்கப்பட்ட பொன்னாடையை தமாஷாக வேட்டி போல கட்டிக் கொண்டு பேசிய எம்.எஸ்.வி. "நான் விருது பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதனால் அது குறித்து யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. என்னுடைய பிள்ளைகள் விருது வாங்குவதைக் காண சந்தோஷமாக இருக்கிறது." (பின்பு உடல்நிலை சரியில்லாததாலோ என்னவோ நிகழ்ச்சியின் இடையிலேயே அப்போது பேசிக் கொண்டிருந்த ரஹ்மான் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சென்றார்).

* வழக்கமாக அளந்து பேசும் இளையராஜா அன்று மிக உற்சாகமாக பேசியதைக் காண ஆச்சரியமாக இருந்தது.

" ஜான் வில்லியம்ஸ் என்கிற மேற்கத்திய இசைக் கலைஞர் நான்கு ஆஸ்கர் வாங்கியிருக்கிறார். ஆனால் அவர் அதை சில வருட இடைவேளைகளில்தான் சாதிக்க முடிந்தது. ஆனால் நம்ம ஆள் போனார்... (சற்று இடைவெளி விட்டதில் சபை ஆர்ப்பரிக்கிறது). ரெண்டு விருதை தட்டிட்டு வந்துட்டார்."

"ரஹ்மானுக்கு எத்தனையோ பிரம்மாண்ட பாராட்டு விழா நடக்கலாம். ஆனா இந்த மாதிரி ஒரு மேடை எங்கேயும் கிடைக்காது."

"நம்ம கிட்ட எத்தனையோ இசை மேதைகள் இருந்திருக்காங்க. நெளஷத் அலி, மதன் மோகன், ரோஷன், எப்பேர்ப்பட்ட இசையமைப்பாளர்கள். நம்ம எம்.எஸ்.வி அண்ணா எத்தன படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. ஒருவேளை இந்த கம்போசர்ல்லாம் இல்லைன்னா.. இந்த விருதையெல்லாம் யாருக்கு கொடுப்பாங்க? கம்போசர்தான் முக்கியம். எல்லோரும் 12 Notes இருக்கும்பாங்க. நம்ம பாலமுரளி அண்ணா 27 சுருதியும் பாடிக் காட்டுவார். எனக்கு எப்ப இசையில் சந்தேகம் வந்தாலும் அவர்கிட்டதான் கேட்பேன். எந்த மேடையிலும் ஏறக்கூடிய தகுதி அவருக்கு இருக்கு."

"சம காலத்துல இசையமைச்சிக்கிட்டு இருந்த மதன் மோகனும் ரோஷனும் ஒருத்தரையொருத்தர் சந்திச்சிக்கிட்டதே இல்ல. தீடீர்னு ரோஷன் செத்துப் போயிடறாரு. சின்ன வயசுதான். 32. அவர் வீட்டுக்குப் போன மதன் மோகன் ரோஷனோட உடலைப் பாத்து சொல்றாரு.. You fool! To whom i will answer hereafter?". அதாவது அவங்க சந்திக்கவே இல்லைன்னாலும் தங்களின் பாடல்களின் மூலமா உரையாடிக்கிட்டு இருந்திருக்காங்க. அவங்க சந்திக்கத்தான் வேண்டுமா, என்ன?"

"எம்.எஸ்.வி அண்ணாதான் இங்க ஆதார ஸ்ருதி. அதற்கு மேல நான் பஞ்சமம். ரஹ்மான் அதற்கு மேல சட்ஜமம்"

* பாடகி எஸ்.ஜானகி பேசும் போது ரஹ்மானின் தந்தையும் மலையாளத் திரைப்படங்களில் இசையமைப்பாளராக இருந்த சேகரை நினைவு கூர்ந்தார். "அவர் இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பாரு".

வழக்கமாக பொதுவில் தன்னுடைய உணர்ச்சியை சற்றும் வெளிப்படுத்தாத ரஹ்மான் அப்போது உணர்ச்சிப் பெருக்கில் வழிந்த கண்ணீரை இயல்பாக துடைத்துக் கொண்டதை காண ஆச்சரியமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அதிலிருந்து உடனே சற்று தன்னை மீட்டுக் கொள்ள அவர் வெளிப்படுத்திய உடல்மொழி பார்க்க அழகாக இருந்தது. மற்றவர்களின் அனுதாபங்களை ரஹ்மான் விரும்புவதில்லை. சில வருடங்களுக்கு முன் அவரின் தொலைக்காட்சி நேர்காணலில் அவருடைய இளமைப்பருவ வறுமையைப் பற்றிய கேள்விக்கு "ரொம்பக் கஷ்டப்பட்டோம்" என்று கூறியவர் உடனே சுதாரித்துக் கொண்டு "ரொம்ப டிராமாட்டிக்கா சொல்ல வேணாம்னு பாக்கறேன்" என்று அடுத்த கேள்விக்கு தாவி விட்டார்.

()

கே.பாலச்சந்தர், பாடகர் மனோ, பரத்வாஜ், வித்யாசாகர், தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட பலர் ரஹ்மானை வாழ்த்திப் பேசினர். ஹாரிஸ் ஜெயராஜ் பேசும் போது ரஹ்மானைப் பார்த்துதான் கீபோர்டை எடுத்ததாகவும் எப்போதும் அவர்தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷனாக இருப்பதைக் குறிப்பிட்டார். சங்கர்(கணேஷ்) நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசியது அதீதமாக இருந்தது.

எல்லாப் பாராட்டையும் புன்னகையால் மட்டுமே ஏற்றுக் கொண்ட ரஹ்மான் ஆஸ்கர் விருது பெறுவதற்கான முயற்சியின் நடைமுறைகளை சுருக்கமாக சொன்னார். "வெளிநாட்டுப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்கும் போது ஏன் நம்ம நெளஷத், இளையராஜா போன்றவங்களுக்கு கெடைக்கலைன்னு முன்ன நினைப்பேன். ஆனா அகாதமி உறுப்பினர்களுக்கு நம்ம அறிமுகம் தேவையாயிருக்கு. யாருன்னு தெரியாம ஒட்டுப் போட மாட்டாங்க. என்னோட ஏஜெண்ட் மூலமா இதைச் செஞ்சேன். ஆனால் ஸ்லம்டாக் மில்லியனருக்கு ஆஸ்கர் கிடைக்கும்னு யோசிச்சு இசையமைக்கலை. கிடைச்ச நேரத்துல வழக்கமாகத் தான் செஞ்சேன். இளையராஜா, எம்.எஸ்.வி பேசும் போதெல்லாம் உங்க பலத்த கைத்தட்டல பார்த்தேன். இதுதான் உண்மையான ஆஸ்கர்விருது. தயவுசெஞ்சு ஒருத்தர பாராட்டறதா நெனச்சிக்கிட்டு இன்னொருத்தர திட்டாதீங்க".

()

கலைஞர்கள் தங்களின் மனமாச்சரியங்களை களைந்து வைத்து விட்டு இப்படியாக தங்களின் சமகால கலைஞர்களை வெளிப்படையாக பாராட்ட முன்வருவது பாராட்டத்தக்கதாக இருக்கிறது.


suresh kannan

28 comments:

பாலகிருஷ்ணா said...

ரஹ்மான் இசையமைக்கிறாரா ? என்ன கொடுமை

Karthikeyan G said...

அருமையான விழாவை மிக அருமையாக எழுத்தில் கொண்டுவந்துள்ளீர்கள்.

மேலும் ஒன்று.Rahman நிகழ்ச்சியின் போது யார் காலிலும் விழவில்லை சுயமரியாதைகாரர்!!

Anonymous said...

Yes I am observing many years that AR never fell on anybody feet and never get emotional too much. Very rare gem of a personality.

Sudharsan

தமிழ்ப்பதிவன் said...

சில பேருடைய இசையை; எழுத்தை; ஈவன் கிரிக்கெட் ஆட்டத்தைக்கூட மிகச்சில பேரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இங்கே முதல் கமெண்ற் போட்ட பாலகிருஷ்ணாவைப் போல. யார்மீது தவறு?

ரஹ்மான் இசையை ஊருலகம் தாண்டி வெளிநாடும் ஒத்துக்கொண்டு விருதுகள் அளித்த பிறகும் இப்படி இவர்கள் எழுத காரணம் என்னவாயிருக்கும்?

அது கிடக்கட்டும் க..

ரஹ்மான் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று சொல்கிறவர் சுயமரியாதையுடன் இருப்பதில் ஆச்சர்யமில்லை.

இந்தப்பதிவில் ராஜா, ரஹ்மான், எம்மெஸ்வீ என்று அனைவரும் உயர்குணத்தவர் என்பதை அறியமுடிகிறது. அது மேதைகளின் தன்மை.

புருனோ Bruno said...

//ரஹ்மான் இசையமைக்கிறாரா ? என்ன கொடுமை//

என்ன பண்ண

சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் இருக்கும் ஊரில் ரஹ்மான் இசையமைப்பது உங்களுக்கு கொடுமையாகத்தான் தெரியும்

yathra said...

//மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடுதான் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்//

உண்மையில் நானும் அப்படித்தான் பார்த்துக்கொண்டிருந்தேன்

Boston Bala said...

நான் எழுத நினைத்தேன். ரொம்ப அழகா நிகழ்ச்சியைக் குறித்து சொல்லிட்டீங்க!! நன்றிகள் பல

G.Ragavan said...

நானும் அந்த நிகழ்ச்சியை ஒருவித உணர்ச்சிப் பெருக்கோடதான் பார்த்தேன். நம்ப மாட்டீங்க... இவங்க மூனு பேரும் ஒன்னு சேந்து ஏதாச்சும் நிகழ்ச்சி நடக்காதான்னு ஏங்குனவங்கள்ள நானும் ஒருவன்.

இளையராஜாவை அம்மாவின் தாலாட்டுன்னு சொல்லீட்டீங்க. அப்ப மெல்லிசை மன்னரோட இசை? ;) பாட்டி சொல்ற கதையா? :)

ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலகட்டத்துல வந்தவங்க. வென்றவங்க. அதுனாலதான் இவங்க மூனு பேரும் ஒருத்தரையொருத்தர் மதிக்கிறாங்க. இளையராஜாவின் பேச்சு மிகப் பொருத்தம்.

மெல்லிசை மன்னரின் உடல்நிலை அவ்வளவு சிறப்பாகத் தென்படவில்லை. வயதும் இருக்கிறது. அவர் ரகுமானைத் தொட்டுக் கொஞ்சியது ஒரு தாத்தா தன்னுடைய பேரனைக் கொஞ்சுவது போலவே இருந்தது. என்னுடைய தாத்தாவும் பாட்டியும் நினைவிற்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை.

நான் ஆதவன் said...

//மேலும் ஒன்று.Rahman நிகழ்ச்சியின் போது யார் காலிலும் விழவில்லை சுயமரியாதைகாரர்!!//

:))

malar said...

//இதுதான் உண்மையான ஆஸ்கர்விருது. தயவுசெஞ்சு ஒருத்தர பாராட்டறதா நெனச்சிக்கிட்டு இன்னொருத்தர திட்டாதீங்க".///

ரொம்ப அருமையாக சொன்னார் .இது எல்லாருக்கும் எல்லா காலங்களிலும் பொருத்தும் .இதையே எல்லோரும் பின்பற்றினால் பிரச்சனையே இல்லை .

செல்வமுரளி said...

நேரில் கண்ட உண்ர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் நண்பரே!

மிக்க நன்றி!

என்றும் அன்டன்
செல்வமுரளி
http://www.tamilvanigam.in

ஆ! இதழ்கள் said...

தங்களின் பாடல்களின் மூலமா உரையாடிக்கிட்டு இருந்திருக்காங்க. அவங்க சந்திக்கத்தான் வேண்டுமா, என்ன?"//

இதை சொல்லும் போதே ரஹ்மானுடன் பேசாமல் இருந்தாலும் தானும் ரசிப்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

மேலும் ஒன்று.Rahman நிகழ்ச்சியின் போது யார் காலிலும் விழவில்லை சுயமரியாதைகாரர்!!//

பார்த்த அனைவரும் உணர்ச்சி வெள்ளத்தில் இருந்த பொழுது அனைவருக்கும் இந்த எண்ணம் வந்துவிட்டது. அனைவரும் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம். மரியாதை நிமித்தமாக் செய்ய வேண்டியதை மேடையில் செய்ய வேண்டிய அவசியமில்லைதான்.

Nagaraj said...

அட.. இது என்ன பெருசா?

நேத்து நடந்த அடையாள உண்ணா விரதத்தை, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் கையில் பழ ரசம் கொடுத்து முடித்து வைத்த காட்சியை விடவா.. இது பெருந்தன்மை..

அரசியலில் நாம் ஜிம்பாப்வேயை நோக்கி போய்க்கொண்டிருக்கிறோம்..
சீக்கிரம் போய் சேர்ந்து விடுவோம்..

nTamil said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.

இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
nTamil குழுவிநர்

பிரபு . எம் said...

இந்நிக‌ழ்ச்சியை நேற்றுதான் ஓர் இணைய‌த்தில் பார்த்தேன்.... உங்க‌ளைப் போன்றே நானும் உண‌ச்சிம‌ய‌மாகிப் போனேன்! இன்று உங்க‌ள் எழுத்துக்க‌ளினூடே மீண்டும் காட்சிக‌ளைக் கொண்டுவ‌ந்து மீண்டும் க‌ண்டும‌கிழ்ந்தேன்... ந‌ன்றி :)

"ஒப்பீடு" எத‌ற்காக‌ பாஸ்?? அவ‌ர்க‌ளே ஆளுக்கொருவித‌மாய் ஏரியாக்க‌ளை வ‌குந்துகொண்டு சிக‌ர‌ங்க‌ளைத் தொட்டு இம‌ய‌ங்க‌ளாய் வீற்றிருக்கும் வேளையில் அவ‌ர்க‌ள் இசையால் ப‌ய‌ன்ப‌ட்டுப் போன‌ நாம் ஏன் அவ‌ர்க‌ளை ஒப்பிட்டுப் பார்க்க‌ வேண்டும்... அவ‌ர்க‌ளின் பாட‌ல்க‌ள் கேட்கும் வேளையில் நான் எம்.எஸ்.வி தான்... இல்லை இல்லை ராஜா போல் வ‌ருமா.... ர‌ஹ்மானின் உய‌ர‌ம் இன்னும் அதிக‌ம் என்றெல்லாம் எண்ணியிருக்கிறேன்.... இசையை அள‌க்க‌ அள‌வை இல்லை என்றுதான் நினைக்கிறேன்......

உங்க‌ளுடைய‌ இடுகையை மிக‌வும் ர‌சித்துப் ப‌டித்தேன்....வாழ்த்துக்க‌ள்....

Joe said...

அற்புதமான கட்டுரை.

//
//ரஹ்மான் இசையமைக்கிறாரா ? என்ன கொடுமை//
என்ன பண்ண சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் இருக்கும் ஊரில் ரஹ்மான் இசையமைப்பது உங்களுக்கு கொடுமையாகத்தான் தெரியும்//

புருனோவின் சவுக்கடியை பெரிதும் ரசித்தேன்.

எனது நண்பர் ஒருவர், ரஹ்மானுக்கு நோட்ஸ் எழுதவே தெரியாது என்றார். நான்கு வருடங்கள் வயோலின் பயின்ற எனக்கே நோட்ஸ் வாசிக்க தெரியும்போது, பல வருடங்கள் இசையை பயின்று வந்தவருக்கு ... ? சிலரிடம் விவாதித்து பிரயோஜனமில்லை என்பதால் விட்டு விட்டேன்.

புருனோ Bruno said...

//சிலரிடம் விவாதித்து பிரயோஜனமில்லை என்பதால் விட்டு விட்டேன்.//

நன்றி ஜோ.... ஆனால் என்னால் அப்படி விட முடிவதில்லை.... அதனால் இந்த விவாதம் http://surveysan.blogspot.com/2009/03/y-y-y-y.html தொடர்கிறது

வந்து ஒரு எட்டு பார்த்து விட்டு போங்கள் !!!

சாணக்கியன் said...

நான் இப்படிச் சொல்வதுண்டு.

“ரகுமான் மியூசிக் கோட்டு சூட்டு மாதிரி. பாக்க பதவிசா இருக்கும். ஆனா தினம் போட முடியாது. ராஜா இசை கதர் சட்டை மாதிரி. வெயில் , குளிர் எல்லா நேரத்துலயும் நம்மல சுகமா வெச்சுக்கும்.”

அதாவது ரகுமான் இசை fantasy. ராஜாவுடையது நம் வாழ்க்கையோடு வரும் இசை. கையை பிடித்து அழைத்துச் செல்லும் தகப்பனைப் போல !

அறிவன்#11802717200764379909 said...

>நேத்து நடந்த அடையாள உண்ணா விரதத்தை, இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வர் கையில் பழ ரசம் கொடுத்து முடித்து வைத்த காட்சியை விடவா.. இது பெருந்தன்மை..>>

இது என்ன கலாட்டா?

வைகோ எப்ப முதல்வரானார்?

enRenRum-anbudan.BALA said...

சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள், சுரேஷ் !

உங்களுக்கு நல்ல ஞாபக சக்தியும் கூட :)

இ.ராஜா மனதாரப் பாராட்டியதாகத் தான் எனக்கும் தோன்றியது. இந்த விழாவுக்கு முன்பு, எத்தனை சந்தேகங்கள் இணையத்தில் உலவின?

எ.அ.பாலா

Amal said...

//புருனோ Bruno said...
சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் இருக்கும் ஊரில் ரஹ்மான் இசையமைப்பது உங்களுக்கு கொடுமையாகத்தான் தெரியும்
//
புருனோ-விற்கான பதில் இங்கு உள்ளது.
http://webhome.idirect.com/~rlevy/current_question.html

Kannan said...

It is great to see MSV, IR and ARR together and even more gratifying to hear they talk highly of each other. IR’s speech was so complete. He brought a lot of perspective to the occasion by remembering the glory of the past MDs not just in Tamil but Indian Cinema in general. Paid respects to Balamurali(27 சுருதி) and MSV (ஆதார ஸ்ருதி). Praised ARR (அதற்கு மேல சட்ஜமம்) without lowering himself. Answered a lot of questions in people’s mind about the IR-ARR relationship by recounting the musical relationship between Madan Mohan and Roshan. And, all this done in a very interesting and flowing speech and makes me want to hear the speech a few more times. So well structured, like his songs. I am sure this speech will be remembered for a long time.

Now I hope the fans of both MDs emulate their respective heroes. Unfortunately, the erring fans list includes a couple of famous writers. Also I wish it would be really great to see the political leaders in Tamilnadu take this as an example. While they are competitors in their professional life, they don’t need to hate each other as persons. In many western countries politics is as tough as in Tamilnadu but the leaders can be seen in public together and seen complementing each other on special occasions. I think even some north Indian leaders have done this bridging. In Tamilnadu we have been carrying this too far and it is time some balance prevails. Too much to hope for? Not really. In fullness of time, every possibility happens.

கோபிநாத் said...

கலக்கல் பதிவுங்க...வீடியோவை இறக்கியாச்சி இன்னிக்கு தான் பார்க்கானும் ;))

சுரேஷ் கண்ணன் said...

திரு.மலேசியன் அவர்களிடமிருந்து வந்த பின்வரும் கமெண்ட் தனிநபர் தாக்குதல் அடங்கிய வாசகங்களினால் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. ஆபாச வார்த்தையினால் திட்டப்பட்டிருந்த இன்னொரு பின்னூட்டம் நீக்கப்பட்டுவிட்டது.

நண்பர்கள் ஆரோக்கியமான விவாதங்களினால் இதை தொடர வேண்டுகிறேன்.

Malaysian has left a new comment on your post


Bruno..

Dont think that you are so brilliant being a medical doctor. You know nothing about music.. read the reply from John Scott on his page about IR's symphony. Publishing a work is every indivudual's personal issue. As such the recorded symphony exists with Royal Philharmonic Orchestra London and not released due to IR's personal issues with them. Understand that and comment accordingly. If you dont like IR, this is not the place to express. ************...*********** You dont even have the respect that ARR has on IR..

சுரேஷ் கண்ணன் said...

//ஆபாச வார்த்தையினால் திட்டப்பட்டிருந்த //

அது வேறொரு நபரால் அனுப்பப்பட்டிருந்த பின்னூட்டம்.

சுரேஷ் கண்ணன் said...

Malaysian has left a new comment on your post

Thanks Suresh for posting my comments.. We in Malaysia regard MSV, IR and ARR as 3 great acheivers of Tamil film music. ARR has done much beyond Tamil Language..Writing a Symphony is not a joke. You must know how each instrument sounds and write scoring accordingly considering which instrument should sound at what time to form a musical colour.. I think Bruno doesnt know these intricacies behind that.. Being one of the conductors (tamil born) of Malayan Philharmonic Orchestra and having conducted so many shows around the world, one must leard from other Music composers.. In that sense We have great regards on IR and ARR. Bruno's words are hurting us like anything..."*********************"

-- Dr.Paulraj

(The above comment has been edited. / Suresh Kannan)

காமவெறியன் said...

இளையராஜாவோட இசை பவர்புல்லான காலத்தால் அழியாத பொக்கிஷம்.

- இது மறுக்க முடியாத ஒன்று

காமவெறியன் said...

please publish my comments.

thanks & Regards,
naankaamaveriyan

naankaamaveriyan@gmail.com