Saturday, June 24, 2006

இரவிச்சந்திரன் - ஓர் அறிமுகம்

(மரத்தடி இணையக்குழுமத்தில் வெளியானது)

எழுத்தாளர் பெங்களுர் இரவிச்சந்திரனை பற்றி நான் முன்னம் ஒரு கட்டுரை எழுதினது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். 'மன்மத ராசா'க்கும் 'அப்படி போடு'க்கும் 'லஜ்ஜாவதியே'க்கும்நடுவில் இது ஞாபகம் இருந்தால் யதேஷ்டம்.

அவருடைய சிறுகதை ஒன்றை எடுத்துப் போடுவதாய் அப்போது எழுதியிருந்தேன். ஆனால் அலுவலக உணவு இடைவேளைகளில் கொஞ்சம் கொஞ்சமாய் தட்டச்சி, நடுவில் சம்பந்தப்பட்ட கோப்பு தொலைந்து போய், 'அடியைப் புடிடா பாரத பட்டா' என்று மறுபடியும் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்து............

இந்தக் கதைக்குள் தேடினால் இரவிச்சந்திரனின் வியர்வையுடன் என்னுடைய வியர்வையும் கொஞ்சம் கலந்திருக்கும்.

'இவ்வாறு அவர்கள் வாழ்கிறார்கள்' என்ற சிறுகதையைத்தான் முதலில் அனுப்பலாமென்றிருந்தேன். ஆனால் அதை அனுப்பினால் சில பெண் உறுப்பினர்கள் நேரடியாக என் மேல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போடும் அபாயமிருப்பதால், தவிர்த்து விட்டேன். அதிர்ஷடமிருப்பவர்கள், இரவிச்சந்திரனின் 'இனி ஒரு விதி செய்வோம்' என்கிற சிறுகதை தொகுப்பை தேடிப் பார்த்து படித்துக் கொள்ளுங்கள். (கலைஞன் பதிப்பகம், முதல் பதிப்பு ஜீலை 1985, விலை ரூ.12.50) பிளாட்பாரக் கடைகளில் கிடைக்கக்கூடிய சாத்தியங்கள் அதிகமில்லை.

இரவிச்சந்திரனின் கதைகளில் வரும் பெண்கள் அவ்வளவு சிலாக்கியமானவர்களாக இல்லை. 2 பக்கத்துக்கு ஒரு முறை சோரம் போகிறார்கள். காதலால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் கட்டாயம் இருக்கிறான். பெண்கள் மீதான வெறுப்பு அப்பட்டமாக தொ¢கிறது. ஆனால் அதே சமயத்தில் அவர்களின் மீது ஒரு உயர்வான பார்வையுமாக ஒரு love & hate relationship இருக்கிறது.

oOo

இரவிச்சந்திரன் இப்போது என்ன செய்கிறார்? என்று விசா¡¢த்த போது சின்னக் கண்ணன், 'அவர் தற்கொலை செய்து கொண்டதாக என்.சொக்கன் கூறினார்' என்ற வெடிகுண்டை தூக்கிப் போடுகிற தகவலை தொ¢வித்தார். அன்று இரவெல்லாம் எனக்கு மனசு என்னமோ போல் இருந்தது என்று கூறினால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?

பிறகு சொக்கனிடம் விசா¡¢த்த போது 'எனக்கும் யாரோ அப்படித்தான் சொன்னார்கள். உறுதியாகத் தொ¢யவில்லை. விசா¡¢க்கிறேன்.' என்றார். இரண்டு, மூன்று சிறுகதைத் தொகுதிகள், சில நாவல்கள் எழுதின ஒரு எழுத்தாளன், (இத்தனைக்கும் சுஜாதாவின் சிஷ்யர்) உயிருடன் இருக்கிறாரா, செத்தாரா என்று கூடத் தொ¢யாமல் இருக்கும் அநியாயம் அநேகமாக தமிழில்தான் நடக்கும் என்று நினைக்கிறேன்.

oOo

இந்த சிறுகதையை இணையத்தில் போடலாம் என்று யோசித்த போது யா¡¢டம் அனுமதி கேட்பதென்று புரியவில்லை. சா¢, ஒரு நல்ல எழுத்தை எடுத்துப் போடுவதன் மூலம் சிறை வாசம் கிடைக்குமென்றால் அதையும்தான் பார்த்து விடுவோமே என்றொரு அசட்டுத் ¨தா¢யத்துடன் இங்கே இட்டிருக்கிறேன். நீங்கள் யாராவது ஜாமீனில் எடுக்காமலா போய் விடுவீர்கள்?

இந்தக் கதையை பாதி பெக் விஸ்கியில் இருக்கும் போதோ, பால் குக்கரை அடுப்பில் வைத்து விட்டு அந்த இடைவெளியில் படிப்பதோ உசிதமில்லை. எல்லா லெளதீக விஷயங்களையும் முடித்துக் கொண்டு ஒரு சாவகாசமான மனநிலையில் படிக்க வேண்டுகிறேன்.

இனி கதை அடுத்த மடலில்.

2 comments:

Cable சங்கர் said...

இரவிச்சந்திரன் எழுதிய பெண்களூர் என்ற ஓரு கட்டுரை குங்குமத்தில் வந்ததாக ஞாபகம், உண்மையிலேயே ஓரு சிறந்த எழுத்தாளர். அவ்ர் இறந்துவிட்டார் என்பதை என்னால் நம்ப முடியவிலை

லேகா said...

அன்புள்ள சுரேஷ்,
உங்களின் வலைத்தளத்தை வெகுவாய் ரசித்து படிப்பேன்..அதற்கு முக்கிய காரணம் உங்களின் தமிழ் இலக்கிய ஆர்வம்..நான் அப்பொழுது தான் படித்து முடித்து இருப்பேன் ஒரு நாவலை அதை குறித்து அந்த வாரம் நீங்கள் எழுதி இருப்பீர்கள்..coincidence..நான் வித்யா,Times Now இலக்கிய இதழ்,காலச்சுவடின் கடைசி பக்கங்கள்..என சில உதாரணங்களை கூறலாம்..உங்களின் இலக்கிய ஆர்வம் மகிழ்வூட்டுவதாய் உள்ளது.எனக்கு வாழ்கை அனுபவத்தை விட வாசிப்பு அனுபவமே அதிகம்..(i am jus 22)..எனது வலைதள முகவரி : http://yalisai.blogspot.com/
இன்னும் சிறப்பாய் வலைத்தளம் உருவாக்க வழிமுறைகள் கூறவும்..