குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள். மழலைச்சொல் கேளாதவர்' என்னும் வள்ளுவரின் வாக்கிற்கேற்ப.... என்று 1980-களின் பள்ளிக் கட்டுரை மாதிரி இதை ஆரம்பித்தால் நிச்சயம் நீங்கள் அடிக்க வருவீர்கள்.
குழந்தையின்மை ஒருவகை துன்பமெனில் நான்கு, ஐந்து வருடங்கள் கண் முன்னாலேயே தவழ்ந்து, உருண்டு, சிரித்து வளர்ந்த குழந்தையை இழந்து நிற்பது அதனினும் கொடுமை. திருமணமாகி ஒரு மாதத்திலேயே கணவனை இழந்தவளின் பாலுறவு சார்ந்த துன்பம் போல.
புலிட்சர் விருது பெற்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் உருவாக்கப்பட்ட திரைப்படம் 'Rabbit Hole'.
செயற்கையான உற்சாகத்துடன் ஆனால் உள்ளுக்குள் இயந்திரமாக வாழும் அந்தத் தம்பதியினரின் நான்கு வயது மகன் விபத்தொன்றில் இறந்து போனது சாவகாசமான திரைக்கதையின் மூலம் மெல்ல மெல்ல அவிழ்கிறது. அந்த இழப்பு தரும் துயரமும் வெறுமையும் தம்பதியினருக்குள் சண்டையை ஏற்படுத்துகிறது. இதே போல் தங்கள் குழந்தைகளை இழந்தவர்களின் குழும உரையாடலின் மூலம் துயரத்தை மழுப்பும் பாசாங்கான முயற்சிகள் அர்த்தமற்றதாகின்றன. உறவுகளின் மூலம் இந்த துயரம் தீர்வதில்லை ; மாறாக வளர்கிறது.
அந்தத் தாய், தன் சிறிய மகனின் மரணத்திற்குக் காரணமான பதின்ம வயது இளைஞனிடம் கருணையையும் மன்னிப்பையும் வழங்குவதின் மூலம் இந்த துயரத்திலிருந்து விலக முயற்சிக்கிறாள். தகப்பனோ தன் குழும நண்பி ஒருத்தியிடம் பழக முற்படுவதின் மூலம். சில சம்பவங்களுக்குப் பிறகு அவர்களுக்குள்ளான புரிதல் ஏற்பட்டவுடன், தங்களின் கசப்பை யதார்த்த்துடன் விழுங்கி ஏற்றுக் கொள்வதோடு படம் நிறைவடைகிறது.

நாடகத்திலிருந்து உருவாக்கப்பட்டதினாலோ என்னமோ, திரைப்படமும் அதே போன்று உரையாடல் சார்ந்த காட்சிகளின் மூலமே பெரிதும் நகர்கின்றது.
மகன் புழங்கிய பொருட்கள் ஏற்படுத்தும் நினைவின் வலியை பொறுக்க முடியாமல் அவற்றை ஒவ்வொன்றாக தாய் அப்புறப்படுத்த முயல, மகனின் மரணத்தை அவள் மறக்க முயல்கிறாள் என்பதாகப் புரிந்து கொண்டு அவன் கோபமடைகிறான்.மரணத்திற்கு காரணமான இளைஞனுடன் தன் மனைவி நட்புணர்வாக இருப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த இளைஞனுக்குள் இருக்கிற தனிமையையும் துயரத்தையும் அந்தத் தாயால்தான் புரிந்து கொள்ள முடிகிறது.

மகனின் இழப்பால் துயரரும் தாய் becca - வாக Nicole Kidman. பெரும்பான்மையான காட்சிகள் இவரைச் சுற்றியே நகர்கிறது. இதற்கும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்களுள் இவரும் ஒருவர் என்பதற்கும் தொடர்பிருக்காது என நம்புகிறேன். என்றாலும் மிக அற்புதமான நடிப்பு இவருடையது. இவருடைய தாயும் தன்னுடைய மகனின் மரணத்தால் துயருபவர்தான். ஆனால் இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுவதை பெக்கவால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. "போதை மருந்து உபயோகத்தால் இறந்து போனவனையும் நான்கு வயது குழந்தையையும் எப்படி ஒப்பிடலாம்?" என்று வெடிக்கிறாள். தாய், மகளாக இருந்தாலும் ஒவ்வொருவரும் தங்களின் துயரமே பிரதானமானது என்கிற மனநிலையின் நுட்பத்தை இந்தக் காட்சி வெளிப்படுத்துகிறது.
இவரின் கணவனாக Aaron Eckhart. படு ஸ்மார்ட்டாக இருக்கிறார். நிக்கோலுக்கு ஈடுகொடுத்து நடிக்கிறார். செல்போனிலிருந்த மகனின் வீடியோவை மனைவி தெரியாமல் அழித்து விட்டதை இன்னொரு கோணத்தில் புரிந்து கொண்டு போடுகிற சண்டையில் இவரின் நடிப்பு அற்புதம்.
மிக மெதுவாக நகரும் இத்திரைப்படத்தின் திரைக்கதையை சிலர் வெறுக்கக்கூடும். ஆனால் மெதுவாக நகர்ந்தாலும் நுட்பமாகவும் நுண்ணுணர்வுகள் கொண்ட காட்சிகளை ரசிக்கும் மனநிலை வாய்த்தவர்கள் இதைக் கொண்டாடலாம்.
இது போன்ற கதைக்கருக்களை தமிழில் அநேகமாக கே.ரங்கராஜ் போன்றவர்கள் இயக்க, சிவகுமார், லட்சுமி போன்றவர்கள் நடித்திருக்க பொதிகை தொலைக்காட்சியில் கொட்டாவிகளை மென்றுக் கொண்டே அரைத்தூக்கத்தில் உங்களில் அநேகர் பார்த்திருக்கக்கூடும்.
ஆனால் இது போன்ற கதையமைப்பில் நான் பரிந்துரைப்பது, ஈரானிய திரைப்படமான Leila. குழந்தையின்மையின் வெறுமையை மிக சுவாரசியமாகவும் மெல்லிய நகைச்சுவையுடனும் Leila Hatami-ன் அருமையான நடிப்பாலும் முன்வைத்த திரைப்படம்.
suresh kannan