Wednesday, November 04, 2009

பரிந்துரை : சாருவின் கட்டுரை

உயிர்மை நவம்பர் 09 இதழி்ல் 'தமிழ் சினிமா பாடல்கள் - ஓரு பண்பாட்டு வீழ்ச்சியின் அடையாளம்' என்றொரு கட்டுரை சாரு நிவேதிதாவால் எழுதப்பட்டிருக்கிறது. தமிழச் சமூகம் தம்முடைய கலாச்சார அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து அம்மணமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் இக்கட்டுரை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை உங்களுக்கு பரிந்துரை செய்ய விரும்புகிறேன்.

வணிகச் சகதியில் அமிழ்ந்து கொண்டிருக்கும் தற்போதைய தமிழ்ச்சினிமாவில் 'பாடல்கள்' என்பதே அபத்தம் என்றாலும் அதுவும் அர்த்தமின்மையின் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கும் நிலையை தம்முடைய பிரத்யேகமான இரக்கமேயில்லாத பகடியான மொழியில் நம்முன் வைக்கிறார் சாரு. அதிலிருந்து சில பகுதிகளை மாத்திரம் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

... ஒட்டு மொத்தமான philistine சமூகச் சூழல். தமிழ்நாட்டில் மட்டுமே காணக்கூடிய இந்தச் சூழல் தனக்கு அறிமுகமாகும் எதையுமே வடிகட்டி அதன் நீர்த்துப் போன வடிவத்தையே தனக்கென்று எடுத்துக் கொள்கிறது....

...என்னதான் ஜனரஞ்சக பைங்கிளி கலாச்சாரமாக இருந்தாலும் அதில் கொஞ்சமாவது தமிழ் உணர்வும் தமிழ் வாழ்க்கையும் இருக்க வேண்டும்; தமிழ் வாழ்க்கையின் வேர் இருக்க வேண்டும்; தமிழ் நாட்டின் வெகுஜன கலாச்சாரத்தில் அப்படி இருக்கிறதா?


முழுக்கட்டுரையையும் உயிர்மை நவம்பர் 09 இதழிலோ அல்லது சாருவின் தளத்திலோ சென்று வாசியுங்கள்.

6 comments:

சென்ஷி said...

சாருவின் தளத்தில் குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கான உரலை தந்திருக்கலாமே சுரேஷ் கண்ணன்.

Anonymous said...

angke illaiyee

innum pathiverrap padavillai enru ninaikkiren

irunthaal, engke enru therivingkal

mankuthiray

சுரேஷ் கண்ணன் said...

சாருவின் தளத்தில் இந்தக் கட்டுரை இன்னு்ம் வலையேற்றம் செய்யப்படவில்லை. வழக்கமாக உயிர்மை இதழ் வெளியானவுடனேயே அங்கும் ஏற்றி விடுவார். இதனால் புத்தக விற்பனை பாதிக்கப்படுகிறது என்பதனால் சற்று தாமதமாக வலையேற்றுகிறார்.

Anonymous said...

' தமிழச் சமூகம் தம்முடைய கலாச்சார அடையாளங்களை மெல்ல மெல்ல இழந்து அம்மணமாகிக் கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் '
I dont understand this.
As a postmodernist he should welcome changes and new trends
instead of feeling sentimental about anything.Postmodernism
criticises the longing for bygone eras and nostalgias.It does not
offer value judgments between
yesterday and today.If songs and music is not to your liking you can say that.But why should that become a question of sentiments and longing for something else
in the past.What is all this bragging about tamil roots,
tamil culture etc.

சுரேஷ் கண்ணன் said...

அனானி நண்பருக்கு:

புதிய போக்குகளையும் மாற்றங்களையும் வரவேற்கத்தான் வேண்டும். அப்படி நாம் வரவேற்காவிட்டாலும் அது நிகழ்ந்துதான் தீரும். அதைத் தடுக்க முடியாது.

தற்போது பின்நவீன காலக்கட்டம் என்பதற்காக நம்முடைய மரபை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டியதில்லை. ஏற்கெனவே நிகழ்த்தப்பட்ட வடிவங்களிலிருந்து விலகி புதிய வடிவங்களை மரபின் தொடர்ச்சியின் அடையாளங்களோடு முயன்று பார்க்கலாம். சினிமா பாடல்களிலேயே உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் ரீமிக்ஸை சொல்லலாம். ஆனால் அவை பழைய பாடலின் ஆன்மாவை சிதைக்காத வகையில் மாற்றப்பட்டிருக்க வேண்டும். பின்நவீனக் காலக்கட்டம் தரும் செளகரியத்தை வைத்துக் கொண்டு இசையமைப்பாளரின் மெட்டுக்கேற்ப தொடர்பில்லாத வார்த்தைகளை அடுக்கி வைப்பது அதன் அழகியலை சிதைப்பது போன்றவை புறக்கணிக்க வேண்டியதே.

Anonymous said...

பின் நவீனத்துவம் ஆன்மா போன்றதையெல்லாம் ஏற்கிறதா?.சாருவோ அல்லது நீங்களோ செண்டிமெண்டலாக எழுதிவிட்டு அதற்கு பின் ந்வீனத்துவ முத்துரை குத்தாதீர்கள்.அன்று பாவாடை தாவணி இன்று சுடிதார்,ஸ்கர்ட் ஆகிவிட்டதே என்று புலம்புவது பின் நவீனத்துவமல்ல :).
சாரு இப்படியும் எழுதுவார் அப்புறம்
அந்த பாரில் பெண்கள் அப்படி வந்தார்களாம் அதை காணக் கொடுத்து வைக்கவில்லை என்று
புலம்புவார் :).கோடம்பாக்கத்தில் கேட்டால் மதுரை சம்பவம் போன்ற மண்வாசனைப் படங்களை நீங்கள்
பார்பதில்லையா என்று பதிலுக்கு கேட்பார்கள் :).