Friday, June 03, 2011

குதிரை பார்த்த கதை



படபூஜை தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அந்தப் படத்தின் இயக்குநர் முதற்கொண்டு பூஜை அய்யர் வரை தவறாமல் ஒரு வாக்கியம் சொல்வார்கள். 'இது பாத்தீங்கன்னா.. வித்தியாசமானதொரு கதை'... இறுதியில் இன்னொன்றும் சொல்வார்கள். 'படத்தை திருட்டு விசிடில பார்க்காம தியேட்டர்ல போய்ப் பாருங்க". தமிழ் சினிமா நசிவடைந்து போவதற்கு பைரசி பிரதான காரணங்களில் ஒன்று என்றாலும், திரையரங்கின் நிர்வாகங்களும் இன்னொரு காரணம் என்று சொல்கிறேன். ஏன்..?

கோடை விடுமுறையில் இருந்த குழந்தைகள் நச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். "எங்காவது வெளில கூட்டிட்டுப் போங்க" குடும்ப அவை கூடி ஆலோசித்தில் சினிமாவிற்கு போவதென்று முடிவாயிற்று.

தமிழ் சினிமாவை திரையரங்கில் சென்று பார்ப்பது தொடர்பாக நான் ஒரு பாலிசி வைத்துள்ளேன். மாற்று முயற்சி என்று அறியப்படுகிற, கருதப்படுகிற திரைப்படங்களை அரங்கிலேயே சென்று அதற்கு தார்மீகமாக ஆதரவு தருவது. நல்ல சினிமா தமிழில் வரவேண்டுமென்று விரும்பியும் எழுதியும் வருகிற நானே அதற்கு ஒரு உதாரணமாய் இருக்க வேண்டுமென்று ஏற்படுத்திக் கொண்ட சுயக்கட்டுப்பாடு. இதுவே வணிகநோக்குப் படமாய் இருந்து ஏதாவது ஒரு வகையில் அதில் குறிப்பிடத்தகுந்ததாய் இருந்தால் மாத்திரம், எவ்வித குற்றவுணர்வுமின்றி இணையத்திலேயே தரவிறக்கம் செய்து பார்த்து விடுவது. அப்படியாவது அது போன்ற படங்கள் நஷ்டமடைந்து அது போன்ற படங்கள் உருவாக்கப்படுவது நிறுத்தப்படட்டும் என்கிற ராமாயணத்து அணில் முயற்சி. வணிக நோக்குப் படங்களின் பின்னாலும் நிறைய உழைப்பும் தொழிலாளர்களும் இருப்பார்களே என்கிற கேள்வி வரலாம. ஹிட்லர் செயல்படுத்திய வதைக்கூடங்களின் உருவாக்கத்திற்குப் பின்னால் கூட உழைப்பிருந்திருக்கும். உழைப்பு எந்த நோக்கத்திற்காக என்பதில்தான் அதன் மதிப்பு உள்ளது.

நல்ல முயற்சிகளை திரையரங்கில் சென்று பார்ப்பது என்கிற முடிவின்படி 'அழகர்சாமியின் குதிரை'யை முதல்நாளே திரையரங்கில் சென்று காண திட்டமிட்டிருந்தேன். ஆனால் சில காரணங்களால் அது முடியாமற் போயிற்று. (சக வலைப்பதிவரும் இயக்குநருமான சார்லஸ் இயக்கிய 'நஞ்சுபுரம்' திரைப்படத்தையும் இவ்வாறே பார்க்க முடியாமற் போய் விட்டது).

குடும்பத்துடன் திரைப்படம் காண முடிவு செய்தவுடன் கே.வி.ஆனந்தின்  'கோ' படத்தை அதற்காக தேர்வு செய்திருந்தேன். ஏனெனில் off -beat திரைப்படமான அ.சா.கு -வை குழந்தைகள் எந்தளவிற்கு விரும்புவார்கள் என்கிற சந்தேகம் இருந்தது. எனவே அதை தனியாக இன்னொரு நாள் பார்க்கலாம் என்றிருந்தேன். வணிக மசாலா என்றாலும் கோ படம் பார்க்க விரும்பியதற்கு காரணம் அதன் ஒளிப்பதிவு. 'நடுநிசி நாய்கள்' படம் காண சென்றிருந்த போது  இடைவேளையில் இதன் டிரைலரை அப்போது பார்த்தேன். 'கோ' ஒளிப்பதிவிலிருந்த பாணியில் ஒரு வசீகரம் இருந்ததை என்னால் உணர முடிந்தது.. கே.வி.ஆனந்திடமே உதவியாளராக இருந்த ரிச்சர்ட் நாதன் என்பவர்தான் ஒளிப்பதிவு என்று தெரிந்தது. இந்த வணிக மசாலாவைத்தான் குடும்பம் விரும்பலாம் என்று எண்ணியிருந்தேன். ஆச்சரியமாக எல்லோருமே 'அழகர்சாமியின் குதிரையை' தோவு செய்தார்கள். எனக்கும் அதில் மகிழ்ச்சியே.

சென்னை புரசைவாக்கத்திலிருந்த, திரையரங்கங்களும் பொழுதுபோக்கு விஷயங்களும் உணவகங்களும் ஒருங்கே அமைந்திருந்த ஒரு 'மால் -க்குச் சென்றோம். படம் வெளிவந்து சில நாட்கள் கடந்து விட்டதால் அனுமதிச் சீட்டின் விலை சற்று குறைந்திருக்கும் என எண்ணினேன். ஆனால் குறைந்தபட்ச அனுமதிச் சீட்டே ரூ.100-ல்தான் துவங்கியது. நான்கு வயது மகளுக்கும் ரூ.100 என்பது சற்று அதிகமாய்த் தோன்றினாலும் வாங்கி விட்டோம்.

அரங்கின் உள்ளே சென்றவுடன் சற்று திடுக்கிட்டேன். திரைக்கு முன்னால் இரண்டே இரண்டு வரிசையின் பின்னால் எங்கள் இருக்கைகள். இத்தனை நெருக்கத்தில் அமர்ந்து பார்த்தால் தலைவலி ஏற்படும் முன்அனுபவம் சங்கடத்தைத் தந்தது. ரூ.100 இருக்கைகளுக்கும் ரூ.120 இருக்கைகளுக்கும் இடையில் கிட்டத்தட்ட 15 - 20 வரிசைகள் இடைவெளி. ஒரு சீட்டிற்கு ரூ.20/- அதிகம் செலவிட்டிருந்தால் பின் வரிசைகளில் செளகரியமாக அமர்ந்திருக்கலாம். எல்லாவற்றையும் கணக்கு போடும் நடுத்தரவர்க்க மனது நிச்சயம் இதை அனுமதித்திருக்காது. ரூ.20/- என்றால் ஆறு பேருக்கு ரூ.120/- அதிகமாகும்.

திரையரங்கின் குளிர்பதன வசதி, இருக்கைகளின் சொகுசுத் தன்மை, திரையிடலின் தரம ஆகியவற்றைக் கருத்திக் கொண்டு அனுமதிச் சீட்டின் விலையைக் கூட சற்று சமாதானப்படுத்திக் கொள்ளலாம்.

இன்னொரு விஷயம்தான் ஆத்திரமூட்டியது. அரங்கின் உள்ளே நுழைவதற்கு முன்னால் நாங்கள் வெளியிலிருந்து வாங்கிய எந்த உணவுப் பொருட்களையும் வைத்திருக்கக்கூடாதாம். மனைவி வைத்திருந்த பையை இதற்காக சோதனையிட்டிருக்கிறார்கள். இது எனக்கு பின்னர்தான் தெரிய வந்தது. இல்லையெனில் நிர்வாகத்தினரிடம் இது குறித்து சண்டையிட்டிருப்பேன். நடு இரவில் கூட எழுந்து 'பசிக்குது' எனும் சிறிய மகளுக்காக, வெளியில் செல்லும் போதெல்லாம் நொறுக்குத் தீனிகளை எப்போதும் ஸ்டாக் வைத்திருப்போம். வெளியில் செல்லும் போதுதான் குழந்தைகளுக்கு அதிசயமாக பெரும்பசி எடுத்துவிடும். இதற்காக வைத்திருந்த உணவைத்தான் திரையரங்க ஊழியர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள்.

சிறுவயதுகளில் என் அம்மா திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லும் போதெல்லாம் வெளியில் எதுவும் வாங்கித்தராமல் வீட்டில் செய்த முறுக்கு, சீடை போன்றவற்றையே இடைவேளையில் தருவார். பக்கத்து இருக்கை சிறுவர்கள், பாப்கார்னும் கோன் ஐஸூம் சாப்பிட, வயிற்றெரிச்சலுடன் அதைப் பார்த்துக் கொண்டே அம்மாவை மனதிற்குள் திட்டுவோம். திரையரங்குகளில் விற்கப்படும் பொருட்களின் விலையைப் பார்க்கும் போது என் அம்மா செய்ததையே பின்பற்றலாம் என்று எனக்கு இப்போது தோன்றுமளவிற்கு உலகம் ஒரு முழு சுற்று வந்து விட்டது.  சிறிய காகிதக் கோப்பையில் தரப்பட்ட பாப்கார்ன் ரூ.30/- இதுவே சத்யம் தியேட்டர் போன்றவற்றில் ரூ.60/-  சோளத்தை விளைவிக்கிற  விவசாயக் கூலி எவராவது இதைக் காண நேர்ந்தால் இடைத்தரகர்களின் கொள்ளையை எண்ணி வயிறெரிந்து போவார்.

திரையரங்கில் வழக்கமான இன்னொரு பிரச்சினையையும் சந்தித்தேன். குடிமைப் பயிற்சி என்பதே அற்ற, பேசுவதில் பெருவிருப்பம் கொண்டிருக்கும் தமிழர்கள், திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போதும் அதைச் செய்வார்கள். எனக்கெல்லாம் படம் பார்க்கும் போது மயான அமைதியாக இருக்க வேண்டும். சிறிய சப்தம் இருந்தால் கூட கொலைவெறியாகி விடுவேன். வீட்டில் குழந்தைகளிடம் இதற்காகவே பல முறை சத்தமிட்டிருக்கிறேன். அல்லது எல்லோரும் உறங்கச் சென்ற பிறகுதான் படம் பார்க்க ஆரம்பிப்பேன். 

திரையரங்கில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது பக்கத்து இருக்கையிலிருந்தவர் "ஆமாண்ணே.. முடிச்சுடலாம்ணே... ஆமாண்ணே.. படம் பார்க்க வந்தேண்ணே... ஆமாண்ணே.. நாளைக்கு மொதோ வேலை உங்கள்துதான்.. சரிண்ணே.. ஆமாண்ணே... என்று தொணதொணத்துக் கொண்டிருந்தார். என் குணாதிசயம் பற்றி அறிந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் புன்னகையுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவரிடம் ஆட்சேபித்தால் சற்று அமைதியாயிருந்து விட்டு மறுபடியும் ஆரம்பித்து விடுவார்.

என்னடா இது தொல்லை ... அரங்கு காலியாய்தான் இருக்கிறதே என்று இரு வரிசைகள் பின்னால் தள்ளி சென்று அமர்ந்தேன். எங்கிருந்தோ உடனே வந்த அரங்க ஊழியர், அவ்வாறு தள்ளி அமரக்கூடாது' என்றார். அரங்கமே பெரும்பாலும் காலியாக இருக்கிறதே, என்று கேட்டுப் பார்த்தும் கூட உறுதியாக மறுத்து விட்டார். நிர்வாகத்தின் கடுமையான உத்தரவாம். அந்த எரிச்சலுடனேயே படம் பார்க்க வேண்டியிருந்தது.

வீட்டிற்குத் திரும்பியவுடன் கணக்குப் போட்டுப் பார்த்ததில் அநாவசியமான செலவு  எதுவுமில்லாமலேயே  எல்லாம் சோத்து சுமார் ரூ.2000 செலவாகியிருந்தது. படமும் அதிக திருப்தியில்லாமற் போகவே, ஒரு அசலான நடுத்தர வர்க்க மனநிலை கொண்ட எனக்கு இந்தச் செலவு அதிகமாய்த் தோன்றியது.

எதற்காக இந்த தனிநபரின் அனுபவததை இத்தனை விஸ்தாரமாய்ச் சொல்கிறேன் என்றால், இது பல்லாயிரம் நபர்களின்  ஒரு பிரதிநிதித்துவக் குரலாக இருக்கக்கூடும். 'திரையரங்கில் சென்று படம் பாருங்கள்' என்று ஒவ்வொரு முறையும் பொதுமக்களுக்கு புத்தி சொல்லும் திரைத்துறையினர், நடைமுறையில் அதிலுள்ள யதார்த்தச் சிக்கல்களை களைவதற்கான, சுமைகளைக் குறைப்பதற்காக நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். படம் வெளிவந்த ஒரு மாதத்திலேயே ஒரிஜினல் டிவிடியை நியாயமான விலையில் வெளியிடுவதைப் பற்றியும் யோசிக்கலாம். அல்லது வேறு சாத்தியங்களையும்.

suresh kannan

20 comments:

  1. பல்லாயிரம் நபர்களின் ஒரு பிரதிநிதித்துவக் குரலாக இருக்கக்கூடும்..//

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. AnonymousJune 03, 2011

    Completely agree with you. The cost and traffic woes are the biggest boost factors for piracy.

    And the latest technology makes the distribution of pirated content very easy eg. net download.

    Only solution is releasing the original movie vcd/dvd as soon as the movie debuts.

    -Dhana
    Singapore

    ReplyDelete
  3. \\கோடை விடுமுறையில் இருந்த குழந்தைகள் நச்சரித்துக் கொண்டே இருந்தார்கள். "எங்காவது வெளில கூட்டிட்டுப் போங்க"\\

    விடுமுறையிலிருக்கும் குழந்தைகளை வேறெங்கும் அழைத்துச் செல்லாமல், தமிழ் சினிமாவிற்குக் கூட்டிச்சென்ற உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    ReplyDelete
  4. //வேறு சாத்தியங்களையும். /

    yes., this is the key solution..



    மத ரீதியான ஒரு விவாதத்துக்குரிய எனது இடுக்கையை பார்வை இட அழைக்கிறேன்

    ReplyDelete
  5. அழகர்சாமியின் குதிரை படம் உங்களுக்கு என் பிடிக்க வில்லை என இப்போது புரிகிறது. படத்திற்கு மட்டும் ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து திரைக்கு சில ரோக்கள் பின்னிருந்து பார்த்ததன் விளைவாகவும் இந்த படம் குறித்த உங்கள் பார்வை அமைந்து இருக்கலாம்

    ReplyDelete
  6. //அழகர்சாமியின் குதிரை படம் உங்களுக்கு என் பிடிக்க வில்லை என இப்போது புரிகிறது.//

    மோகன்குமார்:

    அந்தப் பின்னூட்டத்தை நகைச்சுவைக்காக இட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சீரியஸாகத்தான் என்றால் ... என்னை வேறு வகையில் அவமானப்படுத்தியிருக்கலாம்.

    ReplyDelete
  7. நீங்கள் சொல்வது அபிராமி திரையரங்குதானே. ஒரு காலத்தில் வசதிகள் குறைவாக இருந்தபோது சிறப்பாகச் செயல்பட்ட இத்திரையரங்கு இப்பொழுது மிகப் பெரிய சீர்கேட்டுக்கு உள்ளாகி இருக்கிறது.Mall தாண்டி உள்ளே செல்வதற்கு மிகுந்த நெரிசலுக்கிடையில் செல்ல வேண்டியுள்ளது. ஏதாவது தீ விபத்து நடந்தால் கூண்டோடு கைலாசம்தான்.

    இருக்கைகளின் உயரமும், அமைப்பும் மிகுந்த அசௌகர்யத்தை ஏற்படுத்துகிறது.

    மேலும் பார்க்கிங் செய்ய பதினைந்து நிமிடம் காத்திருக்க வேண்டியுள்ளது.

    Mall+theater எப்படி நடத்துவது என்று Citi Center பார்த்து அபிராமி ராமநாதன் கற்றுக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  8. AnonymousJune 03, 2011

    off-beat, கிளிஷேவ், ஜிம்மிக்ஸ் என்றெல்லாம் குறிப்பிடும் போது அவற்றிற்கான அர்த்தங்களை பிராக்கெட்டுக்குள் நீங்களே ஒவ்வொரு முறையும் குறிப்பிட்டு விடவும். அதே போல் சுப்ரமணியபுரம் பற்றிய ஒரு பதிவில் ரத்தமும் சதையுமாக என்ற வார்த்தையை உபயோகித்திருந்தீர். பலராலும் பலமுறை உபயோகப்படுத்தப்பட்டு புளித்துப் போன வார்த்தைகளை விட்டு விட்டு புதியதாய் முயலவும். அதே போல் அபத்தம் அபத்தம் என்று அதே வார்த்தையை அடிக்கடி சொல்கின்றீர்கள். அது உங்களுக்கு நன்றாய் தோன்றுகிறதோ? மேலும் நடுநிசி நாய்கள்---ஆழ்மனத்தின் குரைப்புகள் என்று தலைப்பிட்டு இருந்தீர்கள்....ஆழ்மனத்தைப் பற்றி தங்களுக்கு எவ்வளவு தெரியும் என்று எனக்கு தெரியவில்லை. ஏன் சொல்கிறேன் என்றால் வேலை வெட்டி இல்லாமல் மனதை தினமும் நோண்டிக் கொண்டிருக்கும் எனக்கு பிடிபடாத விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன‌. நனவு மனமான consciousயையே நம்மால் புரிந்து கொள்ள முடியாத போது நீங்கள் ஆழதுக்குள் குதித்து விட்டீர்கள்.

    மனவியலாளர்கள் பற்றிய அறிமுக கட்டுரைகளை இங்கு வாசிக்கவும்
    http://webspace.ship.edu/cgboer/perscontents.html

    ...d......

    ReplyDelete
  9. RavindranJune 03, 2011

    நான் கடந்த முறை இந்தியா வந்த போது எஸ் வீ சேகர் டிராமா வுக்கு சென்றிருந்தேன். பின் ரோ-வில்
    ஒருவர் தன் 10 வயது மகனுக்கு ஒவ்வொரு காட்சியையும் விரிவாக விளக்கி கொண்டிருந்தார்.
    இரண்டு முறை திரும்பி பார்த்தேன். கண்டு கொள்ளவே இல்லை.
    மற்றவர்களுக்கு இது ஒரு தொல்லை ஆகவும் இல்லை. சினிமா திடேர்களிலும் இது போன்ற அனுபவம் பல முறை (இந்தியாவில் தான் )

    நம்மை போன்றவர்களுக்கு வேறு வழியில்லை. சகித்து கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
  10. வெளிநாட்டில் வாழ்வதில் ஒரு பெரிய வசதி, இது போன்ற கொடுமைகளை அனுபவிப்பதில்லை! என்ன.. எல்லா படங்களும் வருவதில்லை. நீங்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு, அது பரவாயில்லை என்றே தோன்றுகிறது!

    ReplyDelete
  11. AnonymousJune 04, 2011

    ஒரு சின்ன கதை இந்த அளவு அழகா சொல்லப்பட்டிருக்குன்னு சந்தோஷப்படாம ,இவ்வளவு குறை கண்டு பிடிச்சி இருக்கீங்க.உங்களை மாதிரி போலி அறிவுஜீவிகளை திருப்தி படுத்தவே முடியாது.

    ReplyDelete
  12. AnonymousJune 04, 2011

    how to add particular label feed only in google reader

    https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US

    please forward this to others...d..

    ReplyDelete
  13. குதிரை பார்த்த கழுதை என்றே படித்தேன் முதலில்... (உங்களது போன தலைப்பின் பாதிப்பாக இருக்கலாம்)

    :)

    ReplyDelete
  14. AnonymousJune 05, 2011

    சுரேஷ் கண்ணன் என்பவரின் பிச்சைபாத்திரம் என்ற பிளாக் எனக்கு பிடித்தமானது. அவருடைய அயல் சினிமா பற்றிய கட்டுரைகளை அவருடைய பிளாகிலேயே ஒவ்வொரு தலைப்பாக காண்பது சிரமம். ஆக அவருடைய அயல் சினிமா என்ற கேட்டகரிக்கான label feed urlல்லை கீழே தந்திருக்கிறேன். அதை உங்கள் கூகிள் ரீடரில் ஆட் செய்து கொள்ள்ளுங்கள்.

    go to reader.google.com
    see the button called add a subscription at left side top.
    within it paste the following label feed url


    http://pitchaipathiram.blogspot.com/feeds/posts/default/-/அயல்சினிமா?max-results=500



    (note: அயல்சினிமா என்பது labelname . அந்த பெயர் சேர்ந்து இருக்கிறது. அதனால் அதை அப்படியே விட்டு விட்டேன். ஆனால் அதுவே அயல் சினிமா என்று space விட்டு பிரிந்து இரண்டு வார்த்தையாக இருந்திருக்கும் என்றால் நான் அயல் சினிமா என்ற இரு வார்த்தைக்கு இடையே உள்ள spaceற்கு பதிலாக %20 என்பதை சேர்த்திருப்பேன்.)....d..

    y dont u tell this to your readers in a blog post? i mean tell them about adding a label feed url in google reader...

    https://docs.google.com/document/d/167ezQpRodFd6Mlsf6u5GqC3w56Sl6_DUJzoRGPVuNJE/edit?hl=en_US

    ReplyDelete
  15. AnonymousJune 06, 2011

    ஊர்சுற்றுவது எப்படி? 16 வழிக‌ள்‏

    https://docs.google.com/document/d/1QI6g_IMGU2XMaj-i-BKZWFK1FfJ0c24nn9DV7YSDero/edit?hl=en_US

    please forward this to others.... i want all to become a oorsutrigal...d...

    ReplyDelete
  16. useful and timely article. Why don,t You enable face book and twitter recommendation links so that we can recommend.

    ReplyDelete
  17. AnonymousJune 10, 2011

    ஹாய் சார் youtube videoவை இணையத்தில் இருந்து அப்படியே மிக நேரடியாக(வெறும் video urlஐ காப்பி செய்து download செய்யும் வகை) செய்ய உதவும் ஒரு தளத்தை எனக்கு சொல்லவும்.d.

    ReplyDelete
  18. AnonymousJune 10, 2011

    dont miss to hear these

    hear these songs...they r my favorites...you see them in youtube...if u like them u can download their mp3 format from these sites

    http://www.mp3raid.com/ and
    http://beemp3.com/


    sadho re by agnee

    http://www.youtube.com/watch?v=U5Gek6mspGk

    kehn de ne naina by devika

    http://www.youtube.com/watch?v=iK2eFmBvGpI


    sagari rayn by rageshwari
    http://www.youtube.com/watch?v=1NOGkFB-VoE

    gracia la vida by violeta pera
    http://www.youtube.com/watch?v=UW3IgDs-NnA


    oul tani kda by nancy ajram

    http://www.youtube.com/watch?v=4fIz87YX97w


    in the mood for love movie- yumeji's theme
    http://www.youtube.com/watch?v=23oBMOvt85o

    toss the feathers by the corrs group
    http://www.youtube.com/watch?v=KEJa_VgpIAc


    lemon tree by fools garden
    http://www.youtube.com/watch?v=uG0h1SrNKZ8

    The Whisper Song by ying yang twins
    http://www.youtube.com/watch?v=nYYjZeErFks

    ReplyDelete
  19. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

    ReplyDelete